நாலரை லட்சம் கோடி!



 எப்போது யார் எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் நம் நாட்டில் ஒரு அவநம்பிக்கையூம் பரிகாசமும் பாசாங்குத்தனத்துடன் கூடிய விமர்சனங்களும் வந்து போகும்.இப்போது ஆள் ஆளுக்கு மெசேஜ் தட்டி விட வாட்ஸ்அப் போன்ற சிறுநீர்கழிப்பிட சுவர்கள் எளிதாகக் கிடைப்பதால் தாங்கள் நினைப்பதை கிறுக்கி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

 மோடியின் தற்போதைய கனவான டிஜிட்டல் இந்தியா பற்றியூம் இப்படித்தான்  கேலி கிண்டல் அவநம்பிக்கை ஆங்காங்கே தொணிக்கிறது.விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.விலைவாசி செவ்வாய்கிரகத்தைத் தொட்டு விடுகிறது.வேலையின்மையூம் வேலை செய்ய விருப்பமின்மையூம் எல்லா இடத்திலும் விரவிக்கிடக்கின்றன என்று போட்டுத் தாக்குகிறார்கள்.மோடி உள்நாட்டில் இருக்கிற நாட்களை விட வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிற நாட்கள்தான் அதிகம் என்று எழுதுகிறார்கள்.

 இது ஒரு எதிர்மனநிலை.

 யார் எந்த நல்ல காரியத்தைச் செய்தாலும் இது போன்ற அபிப்ராயங்கள் வரத்தான் செய்யூம்.கடந்த காலத்திலும் வந்திருக்கிறது.முதன்முதலாக கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியபோது வங்கியில் பணிபுரிந்தவர்கள் ரயில்வேயில் பணிபுரிந்தவர்களும் கம்ப்யூட்டரை அலுவலகங்களில் புகுத்தினால் நிறைய பேருக்கு வேலை போகும் என்று ஸ்ட்ரைக் செய்தார்கள்.அப்புறம் அவர்களே கம்ப்யூட்டர் டிரையினிங் எடுப்பதற்கும் உப சம்பளம் வாங்கிக்கொண்டும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு உபரியாக இன்சன்ட்டிவ் இன்க்ரிமன்ட்டும் வாங்கிக் கொண்டார்கள்.

 மூகாம்பிகைப் பொறியியற் கல்லுரரியில் அப்போது பணிபுரிந்தபோது கம்ப்யூட்டர்கள் பற்றி அதிகம் பத்திரிகைகளில் நான் எழுதியதுண்டு.அப்போது  தமிழ் மன்ற மாணவர்கள் ஆர்வமாக கணினித் தமிழகராதி என்ற ஒன்றை உருவாக்க முனைந்தார்கள்.அப்போது என் மாணவர் ஜான்ஸன்ராஜ் அடிக்கடி கேட்பார்.விண்டோஸ்னு ஏதோ வரப்போகுதாமே சார் என்று.

 அது 'டாஸ்" காலம்!
 ஆமாம்பா.கம்ப்யூட்டருக்கு வால் முளைக்கப்போகுது என்பேன்.
 புரியாமல் பார்ப்பார்.

 கம்ப்யூட்டருடன் மவூஸ் என்ற ஒன்று வரப்போகிறது என்பதே அப்போது ஆச்சர்யமாக இருக்கும்.விண்டோஸ் என்றால் கம்ப்யூட்டர் திரையை பார்ட் பார்ட்டாக பிரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறேன்.மல்டி டாஸ்க்கிங் என்பதைத்தான் அப்போது அப்படி புரிந்து வைத்திருந்தோம்.

 மோடி மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு இதுதான்.
 நம் நாடு விவசாயா நாடு.விவசாயத்தை கவனிப்பதை விட்டு விட்டு டிஜிட்டல் இந்தியா துரய்மை இந்தியா என்ற கோஷங்களுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு வரச்சொல்லி தொழில் துவங்கச் சொல்கிறார்.விவசாயம் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான்.

 விளைநிலங்கள் ப்ளாட் போடப்படுவதை எதிர்க்காத பொதுஜனங்கள் நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் மீது எதற்காக அவநம்பிக்கை கொள்ள வேண்டும்.அத்தனை அக்கறை இருந்தால் ஒரு சின்னக் குழுக்களாகத் திரண்டு ஏதாவது நிலத்தை வாங்கி வாரஇறுதியிலும் விடுமுறை நாட்களிலும் விவசாயம் செய்து பார்க்கலாமே.விவேக் போன்ற நடிகர்கள் மரம் நட முயற்சிக்கும் பணியில் இறங்கியபோது எத்தனை பேர்கள் அதில் கை கொடுத்திருக்கிறார்கள்.அட அட்லீஸ்ட் வீட்டுக்கு அருகே உள்ள மரம் செடி கொடிகளுக்கு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றியிருப்பார்களா?

 டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நாலரை லட்சம் கோடி செலவூ செய்யப்பட இருக்கிறது என்பதுதான் இந்த நாட்டின் நலம்விரும்பிகளின் வயிற்றுப்பொருமல்களுக்குக் காரணம்

 டிஜிட்டல் இந்தியா என்றால் அரசின் செயல்பாடுகளும் திட்டங்களும் மக்களுக்கான பயன்களும் எலக்ட்ரானிக் வடிவில் கிடைக்;கும்.ஒரளவிற்கு வெளிப்படையாக இருக்கும்.சான்றிதழ் வாங்குவதற்கெல்லாம் விஏஓ தாசில்தார்  ஆபீசிற்கு இனி நடையாய் நடக்க வேண்டியதில்லை.இதன் முதல்படிதான் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தொகை பயனாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது.இதையூம் அரைகுறையான பார்வையூடன் விமர்சிக்கவூம் குறை கூறவூம் செய்தார்கள்தான்.

 விவசாயத்தை கவனிக்கவில்லை என்பது உண்மைதான்.விவசாயம் நதிநீர் இணைப்பெல்லாம் காலத்தின் கட்டாயமாக வந்து ஆட்சியாளர்களை அதன் தொடர்பாக சில திட்டங்களை உருவாக்க வைக்கலாம்.

 இப்போதைக்கு இந்த திட்டம் வெற்றியடையட்டும்.அப்படி வெற்றியடைந்தால்  இடைத்தரகர்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்.உடனுக்குடன் தகவல்கள் உங்களுக்கு மொபைலில் வந்து விடும்.லஞ்சம் தர நீங்களே விரும்பினாலும் லஞ்சம் என்பது தேவைப்படாது.
 பார்க்கலாம் டிஜிட்டல் இந்தியா எப்படி இருக்கப்போகிறது என்று.
Previous
Next Post »

3 comments

Click here for comments
October 1, 2015 at 8:23 AM ×

அவநம்பிக்கை வரக் காரணம் தப்பும் தவறுமாய் குழப்படியாய் திட்டங்களை செயலாக்கம் செய்வதுதான்.

Reply
avatar
October 1, 2015 at 9:14 AM ×

off course you are right Thamarai Selvan

Reply
avatar
Unknown
admin
October 2, 2015 at 6:57 AM ×

தங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளது.

Reply
avatar