'சாவியை
எங்கே வைத்தேனென்று
மறந்து போனது
கூகுளில் தேடிப்பார்க்க
விரல்கள் பரபரத்தன'

'கல்லோ மண்ணோ
கழுதையோ குதிரையோ
எதையாவது
விற்றுக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
பொய்யூம் புரட்டும்
கார்ப்பரேட் குணாதிசயம்
என்றாகி விட்டது
துல்லியமான
அன்பும் நேசமும் அரிதாகிவிட்டது
எங்காவது தொலைதுரரத்தில்
கொஞ்சம் மழை கொஞ்சம் காற்று
கொஞ்சம் பூக்கள் கொஞ்சம் நிழல்
கொஞ்சமே கொஞ்சம்
மனிதர்கள்
என்றே தேடத் தொடங்குகிறது
மனம்
தேடுதலைத் தொடர்வதற்குள்
இந்த காலாண்டிற்கான
பிசினஸ் டார்கெட்
கணினியில் சிரிக்கிறது
புத்தனாவதற்கு கூட
விதியிருந்தால்தான்
முடியூமோ?'
Previous
Next Post »