கண்ணா புட்டு திங்க ஆசையா...


ஷார்ட் ஃபிலிமிற்கான கதை திரைக்கதை வசனம்: விஜயநிலா

                                                            காட்சி -1


(ஐடி துறையில் வேலையிழந்த நண்பர்கள் பவரு, சொம்பு, சாம்பிராணி ஆகியோர் பீச்சில் கடலை வாங்கக் கூட காசு இல்லாமல் கடலை வெறிக்கிறார்கள்.)
செத்துப் போன நாய் கூட நடக்காத அவர்களது தெருவில் புதிதாய் ஒரு ஊட்டி ப்ளம்ஸ்..ச்சே ஒரு பெண் தாவணி அணிந்து சொம்புவின் வீட்டிற்கு எதிர்வீட்டில் குடி வருகிறாள்.இந்த சேதி அறிந்த மற்ற இருவரும் அந்த பெண்ணின் வீட்டிற்குப் போய்...ச்சே.வேண்டாம்.இந்த கதையை எழுதினாலோ படமாக எடுத்தாலோ காப்பி என்று சொல்லி விடுவார்கள்.அதனால் கதை வேறு தினுசாகப் போகிறது.

முதலில் பெயர்க்காரணங்கள்:பத்மநாபன் எப்போதுமே குளிக்கவூம் துவைக்கவூம் பவர் டிடெர்ஜென்ட் சோப் போட்டுக் கொள்வதால் பவரு ஆனான் ஆனால் ஆள் பக்கா யூத்.டான்ஸ் ஆடினால் ரோட்டில் போகிற பிணம் கூட எழுந்து ஆடும்.ஆனால் பிணம் பெண்ணாக இருக்க வேண்டுமென்பான்..சாம்பசிவம் குற்றாலத்திற்கே போனாலும் சொம்பு சொம்பாக தண்ணீர் ஊற்றித்தான் குளிப்பான் என்பதால் சொம்பு!சேவக்கொடி செந்திலை எல்லாம் துரக்கி சாப்பிட்டு விடுவான் சங்கர்.அறை முழுக்க ஃபயர் சர்வீசை கூப்பிடலாம்போல சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுக் கொண்டே இருப்பான்.அதனால் சாம்பிராணி.இந்த கதை எதிர்வீட்டு ஃபிகரை டாவூ கட்டும் கதை இல்லை என்பதை சந்தேகத்துக்கு சாம்பாராக மீண்டும் ஒரு முறை  லவூட்ஸ்பீக்கர் வைத்து உரக்க சொல்லிக் கொள்கிறௌம்.

பவரு:ச்சே.அப்பவே அப்பா வயித்தெரிச்சல்ல தங்கச்சிங்களை அடைகாக்கிற சந்தானம் மாதிரி சொன்னார்டா.இதெல்லாம் நிலைக்காது.நான் வாங்கற அரைக்காசானாலும் கெவர்மென்ட்டு காசுன்னு.
சொம்பு:டேய் இந்த அப்பாக்களே இப்படித்தான்டா டெல்லி கணேஷ் மாதிரி புலம்புவாங்க.இப்படி பண்ணிட்டாய்ங்களே.அடுத்த மாசம் சம்பளம் வராதுன்னப்பவே வீராப்பா ரிசைன் பண்ணியிருக்கனும்.
சாம்பிராணி:எச்.ஆர் மாமாவே கேட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்தாரே.நீ யார்கிட்ட ராஜினாமா கொடுப்பே
பவரு: அந்தாளை மொத்தனும்டா முதல்ல.வேணும்னா கார்த்தி மாதிரி பறந்து வந்து நானுரறு ஐநுரறு பேரை ரயிலுக்கு மேல பறக்கற மாதிரி அடிச்சிட்டு வரலாமா
சொம்பு:சத்தாய்க்காதடா.அப்புறம் உன் ரசிகனுங்கன்னு பத்தாயிரம் பேரு பத்துரூபா தாளை வாங்கிட்டு வந்து விசிலடிப்பானுங்க.நாங்க பார்த்து வயிறெரியனுமா.
பவரு: ப்ரியாகிட்ட குடுத்திருக்கலாம்.ஒரு தடவை லிப்ட்ல தனியா மாட்டினா
சாம்பிராணி:பார்த்துரா உடனே கல்யாணம் பண்ணி தவணையில சாமான்களை வாங்கி உன்னை கடங்காரனாக்கியிருப்பா அவ.நல்ல வேளை தப்பிச்ச.
சொம்பு:இப்ப என்னடா பண்றது.டை கட்டிட்டு நேத்து தெருவி நைட் போனா  ஆட்டோக்காரன் வந்து வாங்க கமல்ங்கறான்.ரஜினி படத்தை வேற ஆட்டோல ஒட்டி வைச்சிருக்கான்
பவரு:ஒரு சேஞ்சுக்காக நாம ஏதாவது பிக்னிக் போவம்டா.அடர்ந்த காட்டுப் பிரதேசமா இருந்தா நல்லது.
சாம்பிராணி:பார்த்துடா.அங்க எவனாவது மோசடி சாப்ட்வர்காரன் ஒளிஞ்சிருக்கப் போறான்.(கலைகிறார்கள்)



                                                             காட்சி -2



 (சில மர்மமான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த டாப்ஸ்,ஜீன்ஸை கழட்டி விட்டு இலை,தழைகளை ஆடையாக அணிய முற்படுகின்றனர்)
லதா: சீக்கிரம் டிரஸ்ஸை மாட்டுங்கடி.இன்னிக்கி அமாவாசை.முப்பாத்தம்மன் கோவிலுக்கு நேர்ந்துக்கனும்
ஒருத்தி:ஏன்டி லதா.நம்ம செட்டுல நானும் உங்க டைப்னு எப்படி கண்டுபிடிச்சே.
லதா:கனவில ஆத்தா வந்து சொன்னா.எக்ஸ்மன் படம் பார்த்தில்ல.அதுல விஷேச சக்தியூள்ள மனுஷங்களை அதே போன்ற மனுஷங்க வந்து தொடர்பு கொள்வாங்க இல்ல..அது போல நம்மைப் போன்ற மனுஷங்க இப்ப நாகரிக யூகத்துல கணினி நிறுவனத்துல பணிபுரிஞ்சாலும் நாம ஒருத்தொருக்கொருத்தர் தொடர்பு கொள்ளனுமாம்.முப்பாத்தா சொன்னா
இன்னொருத்தி:அதுக்காக இப்படி இலைதழைகளையா டிரஸ்ஸா போட்டுக்கனும்.இதுவூம் முப்பாத்தம்மன் சொன்னதுதானா.கதை விடறயா
லதா:நான் கதை விடலை.இது பரவாயில்லை.பௌணர்மியன்னிக்கி நாம முழுநிர்வாணமாக வனத்துல திரியனும்.அது தெரியூமா
அவர்கள் இருவரும்:என்னடி இவ இப்படி சொல்றா.யாராவது பார்த்துட்டா?
லதா:இந்த அடர்காட்டுல யாரு வரப்போறா.வந்தா காட்டு மிருகங்கள் இருக்கும்னு உள்ள வரமாட்டாங்க(ஹேஹோ ஹேஹோ என்று கத்தியபடி உள்ளே போகிறார்கள்)


                                                              காட்சி 3
  
 (ஐடி நண்பர்கள் குழு அந்த காட்டிற்கு வருகிறது.ஒரு மாதம் அங்கேயே டேரா.இயற்கை வாழ்க்கை லத்திக ஆன்மீக சொர்க்கம்னு ஒரு பழைய புஸ்தக கடையில பார்த்தேன்டா என்று தத்துவம் பேசுகிறான் பவரு)
சாம்பிராணி:என்னடா இயற்கை வாழ்க்கை.ஐடி கம்பெனியில ஓசியில சொகுசா சாப்பிட்டுட்டு இங்க தேன் தினைமாவூன்னு சாப்பிட சொல்றியா
சொம்பு:உடும்பு அடிச்சி சாப்பிடலாம்டா.பலான விஷயத்துக்கு அது நல்லது.அம்மா,கும்மா செம ஸ்ட்ராங்கா இருக்கும்
பவரு:ஒரு மாசத்துக்கு வேண்டிய சமையல் பொருட்கள் கொண்டு வந்துட்டேன்.கோக்,பெப்சி எல்லாம் கூட இருக்கு.இத்தனை நாள் இருந்த டார்ச்சர் இனி கிடையாது. பொழுது போகலைன்னா சொல்லு.என் ரசிகர்களை வரச்சொல்றேன்.அப்படியே ஸன்னி லியோனை வரச்சொல்லி ஒரு டான்ஸ் பண்ணிர்றேன்.ஆனந்தமா இருக்கும்.
சாம்பிராணி:சரிடா ஒரு சந்தேகம்
சொம்பு:என்னடா தண்ணி கிண்ணி வேணுமா.அதையூம்  கொண்டு வந்திருப்பான்.என்னடா?
சாம்பிராணி:அதில்லைடா.சம்பளம் வராம ஐடியில வேலை செய்தாலும் குளுகுளுன்னு கவர்ச்சி தேவதைகள் எல்லாம் இருந்தாங்க.சைட் அடிச்சாலோ லேசா அத்து மீறினாலோ எவனும் கண்டுக்க மாட்டான்.இந்த அத்துவான காட்டுல அதுக்கு என்னடா பண்றது.
பவரு:அதெல்லாம் நெட்ல மேய்ஞ்சுட்டேன்டா.இந்த வனப்பகுதியில கொஞ்சம் ஆதிவாசிங்க  இருக்காங்களாம்.அதுல பெண்கள் கூட்டம் தனியாகவூம்,ஆண்கள் கூட்டம் தனியாகவூம் இருக்குதாம்.பெண்கள் கூட்டத்துல யாருமே டிரஸ் போடறதில்லையாம்.
(சொம்பு நண்பேன்டா(என்று ஆர்யா ஆன்ட்ரியாவை கட்டிப்பிடிக்கற மாதிரி அவனை கட்டிப் பிடித்துக் கொள்கிறான்)
சொம்பு:டேய்.பார்க்கறதோட சரியா இல்லை சான்ஸ் கிடைச்சா தொட்டுக்கலாமா?
பவரு:உங்க சாமர்த்தியம்.அதுங்க எல்லாம் நாட்டுக்கட்டைங்க.குளிக்குங்களோ என்னவோ,இன்பெக்க்ஷன் ஆயிரப்போகுது.எதுக்கும் இருக்கட்டும்னு பெனிசிலினும் கொண்டு வந்திருக்கேன்.மளிகை சாமான் வாங்கற ஷாப்பிங் மால்ல இலவசமா கான்டம் வேற கொடுத்தானுங்க
சொம்பு:சூப்பர்டா மச்சி.நமக்கு எங்கயோ மச்சம் இருக்கு.பின்னால இருக்குமோ(சிரிக்கிறார்கள்.காட்டுக்கு உள்ளே வந்து விட்டார்கள்.தொலைவில் இருட்டில் யாரோ பெண்கள் இலைஇதழை உடுத்தி நடப்பது தெரிய விசிலடித்து விடுகிறான் சொம்பு)



                                                             காட்சி -4


 (லதாவூம் தோழியரும் திரும்பிப் பார்த்து விட்டு கூச்சலிட பவரு நண்பர்களை அதட்டுகிறான்)
பவரு:ஸாரிங்க.நாங்க தெரியாம..ஸாரி நாங்க ஏதும் பார்க்கலை.இருட்டு வேற..இலை,தழைங்க வேற..ஸாரி.(அவர்கள் அருகில் வருகிறார்கள்)
லதா:நாங்களும் பட்டணத்து ஆளுங்கதான்.சாப்ட்வர் இன்ஜினியர்ஸ்.கம்பெனியில நிதி நிலைமை சரியில்லை.புதுசா ப்ராஜக்ட் வரலை.அதான் சும்மா டூர் கிளம்பிட்டம்.நீங்க
பவரு:ஹிஹி.நாங்களும் ஐடிதான்.ஆனா வேலையில இல்லை.சத்யமா சொல்றௌம்.மோசடி சாப்ட்வர் கம்பெனியில வேலை செஞ்சிட்டு இருந்தம்.
சொம்பு:ஒரு மாசம் இங்கதான் டேரா.
லதா:வாங்களேன்.எங்க டென்ட்லயே தங்கிக்கலாம்.
சாம்பிராணி:ஆஹா..இந்த ஒரு வார்த்தைக்காகவே சொம்புவை பழனியில மொட்டை போடச் சொல்லிரலாம்.என்ன ஒரு அதிர்ஷ்டம்
ஒருத்தி:அது எங்க பாக்கியம்
சாம்பிராணி:யாரு அந்த பொண்ணு பேரு பாக்கியமா.அறுத பழசு பேரானாலும் மத்ததெல்லாம்புதுசா இருக்கே பை த பை என்ன சாப்பிடறிங்க மிஸ்பாக்கியம்.அம்மா,கும்மா செம ஸ்ட்ராங்கா..
அவள்:சீய்ய். என் பேரு ரேக்கா.நான் நுடுல்ஸ்தான் சாப்பிடுவேன்.
சொம்பு:ஆஹா..ரெண்டே நிமிஷத்துல மடிச்சிடலாம் போல.வாங்களேன் பார்த்துகிட்டே போலாம்.ஸாரி பேசிக்கிட்டே போலாம்
லதா:நிறைய லக்கேஜ் இருக்கு போல
பவரு:ஆமா.எல்லாம் சமையல் சாமான்.இந்த பயலுக சாப்பிட்டுதான் கம்பெனியே திவால் ஆச்சு
லதா:எங்களுக்கு சமைக்க வேண்டிய வேலையே இல்லை
சொம்பு:பச்சைக் காய் கனிகள் சாப்பிட்டு பொழுதைக் கழிச்சிருவிங்களா.எங்களுக்கும் கனிகள்ன்னா ரொம்பப் பிடிக்கும்.
கோண்டு:ரெட்டை அர்த்தம் பேசாதடா
லதா:ஏன்.பேசட்டுமே.இலக்கியத்துல இல்லாத செக்ஸா நாம பேசிடப் போறம்.
சொம்பு:உங்களுக்க பழந்தமிழ் இலக்கியம் தெரியூமா
பவரு:உங்களை சைட் அடிக்கறதுக்காக பசங்க சும்மா உடான்ஸ் விடறாங்க.பிட்டுப் படத்துக்கு மேல எந்த இலக்கியமும் தெரியாது
லதா:இந்த இடம் எங்க பூர்வீக இடம்.நாங்க இன்னிக்கி அமாவாசைன்னுதான் இலை,தழைகளை அணிந்திருக்கம்.
சாம்பிராணி:அப்ப பௌணர்மி வந்தா
ரேக்கா:டிரஸ்ஸே போட மாட்டம்.உடைகள் என்பது மானுட சுமைகள்னு இங்க உள்ள ஒரு சித்தர் சொல்லியிருக்கார்.மானுட உடலே முதற்கண் ஒரு அழியக் கூடிய உடைன்னும் சொல்லியிருக்கார்.அதனால பௌர்ணமியானா நாங்க டிரஸ் போட மாட்டம்.
(பவரு நண்பர்களிடம்):டேய்.சரியான இடத்துக்குதான்டா வந்திருக்கம்.இந்த பௌர்ணமிதான் நம்ம வாழ்க்கையில பொன்னான நாள். இனிமே நமக்கு கிடைக்கப் போறது ஆனந்தத் தொல்லைடா..ஆனந்தத் தொல்லை..
                                                        

                                                          காட்சி 5
  
( தேனும்,தினைமாவூம்,சுறாப்புட்டும் கொடுக்கிறார்கள் அந்த பெண்கள்.லதாவை சைட் அடித்தபடியே கேட்கிறான் பவரு.)
பவரு: நீங்க சாப்பிடலையா
லதா:முதல்ல விருந்தாளிகள் சாப்பிடனும்.அப்புறம்தான் நாங்க.அதுதானே பண்பாடு
பவரு:ஓ..(அந்த ரேக்கா சொம்புவை காண்பித்து என்னவோ சொல்வதை கவனித்து விட்டு கேட்கிறான்)என்ன சொல்கிறார் அந்த மங்கை
லதா:ஓ..அதுவா மிஸ்டர் சொம்பு இனி அவளுக்காம்.அது போலவே மிஸ்டர் சாம்பிராணி இவளுக்காம்
பவரு:அப்ப நான் உனக்கா.நல்ல காம்பினேஷன்.இன்றைக்கே பௌர்ணமி வந்து விடாதா என்று ஏக்கமாக இருக்கிறது லதா
லதா:ஏன் என்னை முழுதாய் பார்க்க வேண்டுமென்றா.நீங்கள் விரும்பினால் நான் இலை,தழைகளை களையத் தயார்
பவரு:அய்யோ வேண்டாம்.இந்தப் பயலுக ரொம்ப கெட்டவனுங்க.கம்பெனியில பாதி நேரம் சாப்ட்வர் தயாரிக்கறேன்னு பலான படம் பார்த்தே பொழுதை ஓட்டினானுங்க
(அந்த பெண்கள் சிரிக்கிறார்கள்.அவர்களும் சிரிக்கிறார்கள்.அந்த பெண்கள் மீண்டும் சிரிக்கிறார்கள்)
பவரு:ஏன் சிரிக்கறிங்க. நான் நிசமாகவே யூத்னு உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா..
லதா:எங்களுக்கு ஆண்கள்னா ரொம்பப் பிடிக்கும்.
சொம்பு:பார்றா..அப்பறம்
ரேக்கா:எங்க இனத்துல மத்தவங்க எல்லாத்தையூம் சாப்பிடுவாங்க..
சாம்பிராணி:நீங்க என்ன பண்ணுவிங்களாம்.
லதா:நாங்க ஆண்களைத்தான் சாப்பிடுவம்.ஆண்களோட கறிதான் நல்லா உரமேறி கெட்டியா இருக்கும்.
சொம்பு:எ..என்ன சொல்றிங்க காட்டு மேடம்ஸ்...
ரேக்கா: உண்மையைச் சொன்னா நாங்க கடல்கடந்து போன சோழமன்னனோட நாட்டுல உள்ள மக்கள் இல்லே பயப்படாதிங்க.நாங்க வேற்றுகிரகவாசிகள்.ஆல்ஃபா-2ங்கறதுதான் எங்க ப்ளானட்டோட பேரு. மாசத்துல ஒருநாள்,ரெண்டு நாள் இப்படி வந்துருவம்.வர்றபோதெல்லாம் யாராவது மனுஷப்பயலுக வந்து மாட்டிட்டே இருக்கானுங்க.இந்த தரம்தான் சாப்ட்வர் ஆளுங்க வந்து மாட்டினாங்க.
பவரு:சாப்பாட்டுல எதையாவது கலந்து கொடுத்திங்களா..
லதா:அதெல்லாம் பழைய டெக்னிக்.நீங்க வர்றபோதே உங்க பின்பாகத்துல காட்டு முள்ளால ஒரு குத்து குத்தினமே அதுல மயக்க மருந்து இருக்கு.
சொம்பு:அடிப்பாவிகளா.இஷ்டப்பட்டுதான் என்னை அந்த இடத்துல கிள்ளினிங்கன்னு கிளுகிளுப்பா இல்ல நினைச்சிட்டு வந்தேன்(என்று மயங்கிச் சாய அவர்கள் மீதேறி அமர்ந்து கொண்ட அந்த பெண்கள்,ஹைய்யா சாப்பாடு கிடைச்சாச்சு என்று கத்துகிறார்கள்.)
நம்ம ஹீரோ பவரு மட்டும் எப்படியோ தப்பி சற்று தொலைவில் அவர்கள் வந்திறங்கியிருந்த பறக்கும் தட்டில் போய் ஏறினால் உள்ளே ஆயிரக்கணக்கான பெண்கள்.அயிட்டம் சாங் பாட ரெடியாக இருக்கிறார்கள்.அவர்களுடன் ஆடிக்கொண்டே "கண்ணா புட்டு திங்க ஆசையா" என்று பாடுகிறார்.


                                                                திரை.
Previous
Next Post »