அரசியல்...



  ஒன்றிரண்டு நாட்களாக வெர்னாகுலர் பத்திரிகைகளில் வெவ்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து தொண்டர்களும் முக்கியப் புள்ளிகளும் வெளியேறி தங்களது அரசியல் கட்சியில் வந்திணைவதாக புளகாங்கிதம் அடைந்த புன்னகையோடு கேமராக்களுக்கு தலைவர்கள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  எது இவ்விதம் நீண்டகாலம் ஒரு கட்சியில் இருந்தவர்களை சட்டென்று வெளியே வர வைக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது செவன் இயர்ஸ் இட்ச் என்ற ஒன்று.
இரண்டாவது சர்வைவலுக்கான கட்டாயம்.

 ஏழுவருடங்கள் ஒரே இடத்தில் இருந்தால் மெல்ல மெல்ல அங்கே பிடித்தம், வசீகரம், அன்பு, இன்னபிற இத்யாதிகள் எல்லாம் காலாவதியாகிப் போய் ஒரு வெறுப்பும் வெற்றாக ஒரு இடமும் தோன்ற ஆரம்பித்து விடும்.முதலில் இது போன்ற விஷயங்கள் குடும்ப வாழ்க்கையில்தான் இருந்தது.இதே காரணத்தால்தான் தான் பணியாற்றும் கம்பெனியிலிருந்து அடுத்த கம்பெனிக்கு தாவூகிற தன்மை கார்ப்பரேட் சூழல்களில் ஏற்பட்டிருந்தது.கடவூள்களைக் கூட சிலர் திடீரென்று மாற்றி விடுவார்கள்.சத்யசாய்பாபா, சீரடிசாய்பாபா, அமிர்தானந்தமயி என்று ஒரு ரவூன்ட் கட்சி மாறுபவர்கள் கூட இருக்கிறார்கள்.

 இப்போது அரசியலில் இது காணப்படுகிறது.

அடுத்தது சர்வைவல் பிரச்சனை.இது எல்லோருக்கும் இருக்கிறது.இன்று கூட பிராய்லர் கோழிக்கடையில் செம கூட்டமாக இருந்தது.சர்ரக் சர்ரக் என்று கோழிகளை வெட்டி வட்ட வடிவ டின்னில் சுற்றவிட்டு இறக்கைகளைப் பிய்த்து சுடுதண்ணீரில் முக்கி வெட்டிப் பிதுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கோழிக்கடைக்காரர் எப்படியூம் மாதம் இரண்டு லட்சமாவது லாபம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்.பக்கத்துக் கடையில் மட்டன் வாங்க நின்றிருந்த என்னிடம் தொழில் அவ்வளவூ சுகப்படலை.மாறிடலாம்னு யோசனையா இருக்கு என்றார்.

 விலைவாசி எல்லாரையூம் சகட்டு மேனிக்கு தண்ணீரில் முக்கி தோலை உரித்துக் கொண்டிருக்கிறது.ச்சே.பிராய்லர்! சாதாரண கட்டிடத் தொழிலாளியின் ஒரு நாள் வருமானம் கூட ஆயிரம் ரூபாயைத் தொட்டு விட்டாலும் அந்த ஆயிரம் ரூபாய்க்கும் செலவூகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

 அரசியல்வாதிக்கு கேட்கவே வேண்டாம்.அவர்கள் புழங்கும் இடம் பெரியது.சாதாரணமாக கூட்டத்தில் கரைந்து போகக் கூடிய பொதுஜன நபரையே விலைவாசி பதம் பார்க்கிறபோது அரசியல்வாதிகளின் சர்வைவலுக்கான செலவினங்கள் மிகப் பெரியதாகத்தான் இருக்கும்.அதன் பயனாகத்தான் வந்து சேருகிறார்கள்.வந்து சேருகிறபோது பெருமிதமாகத்தான் இருக்கும்.வந்து சேர்கிறவர்கள் அஸட்டா அல்லது லையபிளிட்டியா என்று தெரியூம்போதுதான் தங்களுக்கும் பெரிய செலவினம் வந்து காத்திருக்கிறது என்று உணர்வார்கள்.அதன் பயன் எல்லமே பெரிதாகப் போகும்.
    ஷங்கர் படத்து பிரம்மாண்டத்தை விட சாதா மனிதனின் வாழ்க்கை இனி பிரம்மாண்டமாக ஆகி விடும் அபாயம் இருக்கிறது.
 அப்போது எல்லாமே திணற ஆரம்பிக்கும்.
Previous
Next Post »

2 comments

Click here for comments