மினி நாவல்: 'அஜீத் ஆட்டம்' --விஜயநிலா


                          (1)


   லிஸா என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்களுக்குள் உற்றுப் பார்த்தாள்.மெல்லமாய் கன்னப்பகுதியில் கடித்தாள். என் மனதை இவளால் படித்திருக்க முடியாது. நான் இப்பொழுது காதல் செய்யூம் மூடில் இல்லை. தொலைவில் தெரிந்த கடற்கரையை வெறித்தேன்.துhரத்தில் அலைகள் மறுபடி மறுபடி வந்த கரையை முத்தமிட்டன.
  இப்போது என்னைப் பற்றி. நானொரு ஆரோக்கியமான போதிதர்மாவோ அல்லது போதிசத்துவரோ போன்ற கேரக்டரில் நடிப்பதற்கேற்ற கட்டுமஸ்தான இளைஞன். எப்போதாவது ஜிமி ஹென்ட்ரிக்ஸ் போல கிடார் வாசிப்பேன்.. ஆங்கிலத்தில் கவிதை எழுதிக் கிழித்துப் போடுவேன். உலகின் மிகப் பெரிய வங்கியில் அதிகாரியாக இருக்கிறேன். முழுக்க குளிரூட்டப்பட்ட வசதியான கேபினில் பெரும்பாலும்  படம் பார்ப்பதுதான் என் வேலை.ஆன்லைன் செக்யூரிட்டி எனது பணி.
இணையம் வழியாக யாரும் தப்பு தண்டா செய்து விடாதபடி குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டு வங்கியைப் பாதுகாப்பதற்காக எனக்கு சம்பளமாக பணத்தை அள்ளித் தருகிறார்கள்.இல்லை அப்படி இல்லை.ஒரு .படத்தில் பிரசன்னாவூம் சிபியூம் சேஸ்தனமான குற்றம் புரிந்து மாட்டிக்கொள்வார்களே அப்படி ஏதும் இந்த திரைக்கதையில் கிடையாது.இது ஒரிஜினலான என்னுடைய சொந்த ப்ளான்.முந்தைய காலத்து ஜாவாவூம்,ஏடிஎம்மும் படித்து வைத்தது இப்போது சோறு போடுகிறது.
  லிஸா என்னுடைய எத்தனையாவது காதலி என்று தெரியாது.நான் எந்த ஊருக்குச்சென்றாலும் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் போர்ட்டார்கள் காத்துக் கொண்டிருப்பது போல எனக்காக யாராவது ஒரு பெண்இபக்கத்து அபார்ட்மன்டிலோ,பில்லியர்ட்ஸ் க்ளப்பிலோ,அல்லது பாங்க்கிலோ காதலுடன் இன்ஸ்டன்ட்டாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.லீவிட்.நான் எபிசோட் மாறுகிறேன் என்று நினைக்கிறேன்.
 எனக்கு சில மாதங்களாகத்தான் அந்த அவஸ்தை.அதுவூம் வங்கியில் நுழைந்து செர்வரில் அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்போது மனசு குறுகுறு என்கிறது.அருகில் கோக் கப்புடன் வந்த சம்யூக்தாவிடம் சொன்னபோது"என்னது குறுகுறுங்குதா.அப்டின்னா அதுதான்"என்றாள் 'ப்யா'த்தனமாக.
"எது சம்யூ"
"நீ இதுவரைக்கும் தப்பு தண்டாவே பண்ணலையா?"
"இல்லை"
"நீ பொறந்ததே வேஸ்ட்.சீக்கிரம் திருநெல்வேலி இல்லைன்னா திருத்துறைப்பூண்டி பக்கம் போய் பொண் பாத்து கல்யாணம் பண்ணிக்கப்பா.அங்கதான் மஞ்சள் பூசின புடவை கட்டின பொண்ணுங்க கிடைக்கறாங்களாம்",என்றாள்.
"டு ஹெல் "என்றேன்.
  என் பிரச்சனை என்னவென்று சொன்னால் உங்களுக்குப் புரியூமா என்று தெரியவில்லை.அப்புறம் சொல்கிறேன்.அதற்கு முன் லிஸாவை கட் செய்து விட்டு நான் போய் ராவ்வை பார்க்க வேண்டும்.ராவ் ஒரு சைக்யாட்ரிஸ்ட்.இல்லை அப்படிப் பார்க்காதீர்கள்.நானொன்றும் தண்ணியடித்து விட்டு வரும்போது தள்ளிக்கொண்டு வந்திருப்பது ஆணா பெண்ணா என்று கூட தெரியாமல் தலையைப்பிடித்துக் கொண்டு ஹேங்ஓவரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்போர்டு வில்லன் அல்ல.
"லிஸா"
"என்ன செய்யனும் சொல் படவா.முத்தம் தரனுமா.இல்லை என்னை முழுசும் தரனுமா"
"சேசே.நான் கிளம்பனும்.ஒரு வேலை இருக்கு"
"என்ன வேலை.நானும் வரேனே.வீட்ல யாரும் இல்லை.உன் க்ரே ஹேரைப் பார்த்தாலே நமநமங்குது.உனக்கும் 40 வயசாச்சா.நான் மட்டும் தனியா வீட்ல இருக்க போரடிக்கும்"
"பயப்படாத.உன் அப்பாவை கார்ல இருந்து தள்ளி விடவெல்லாம் மாட்டேன். கிளம்பறேன்.ராவ் காத்துகிட்டிருப்பார்"
"ராவ்?"
"ஆமா.நரசிம்மராவ்",என்று அவளைப் புறக்கணித்தேன்.

                         (2)

 ஹார்லே டேவிட்ஸனில் கிளம்பினேன். கிளம்பினேன். திருடிக் கொண்டு விரைந்தது.ராஜா அண்ணாமலை புரத்தில் டாக்டர் ப்ரசாத்ராவ் இருக்கிறார்.அவரை நீங்கள் டிவியில் எல்லாம் பார்த்திருக்க முடியாது. அவரது கிளினிக்கில் கூட்டம் இல்லை.ரிசப்ஷனில் இருந்த பெண் மட்டும் இன்றைக்கே காதலிக்கத் துவங்கலாம் போல என்னைப் பார்த்தாள்.
என் பெயரைச் சொன்னேன்.
". ராவ் காத்துகிட்டிருக்கார்.போய் பாருங்க.இன்னும் ஒன் அவர்ல டாக்டர் வெளியில
கிளம்பிடுவார்"
"தாங்க்ஸ்."என்றேன்.அவள் அப்படியே டேபிள் மேல் உருகி வழிய ஆரம்பித்தாள்.நான் புறக்கணித்து உள்ளே சென்றேன்.
"வாப்பா உட்காரு",என்றார் ராவ்.மிக இளமையாக இருந்தார்.அறுபது வயது.ஐம்பத்தொன்பது போல தெரிந்தார்.தன்னுடைய செல்போனை அணைத்து விட்டார்.முதல் பார்வையில் 'பவர்ஸ்டார்' சீனிவாசன் போல பயமுறுத்தலாக இருந்த டாக்டர் அதன்பின் மெல்லிய புன்னகையூடன் பேசினார்.
"சொல்லு.இன்னும் அந்த நினைப்புதான் வருதா"
"அதிகமா வருது டாக்டர்.ஏன் அப்படி வருது"
"ப்ரொபஷனல் இச்"என்றார்.
"நான் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடம் கூட ஆகவில்லையே.அதற்குள்ளாகவா எனக்கு
வேலை அலுத்து விட்டது என்று சொல்கிறீர்கள்"
"இருக்கலாம்.நீ அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்திருக்கலாம்.உனக்கு இன்னும் கல்யா
ணம் ஆகவில்லையா"
"இல்லை"
"செக்ஸ் அனுபவம்"
"இல்லை"
"அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.எதற்கும் சரியான அளவில் சரியான தருணத்தில் வாழ்க்கையில் ஒரு வடிகால் அவசியம் பையா.நீ பேசாமல் கல்யாணம் செய்துக்கோயேன்.வெளியே என் செகரட்டரியை பாத்தியா.அவளைப் பாத்ததும் உன் மனதில் என்ன தோன்றியது"
"டாக்டர் நான் இப்போது லிஸா என்று ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.செக்ஸ் அல்ல என் பிரச்சனை"
  இப்போது உங்களுக்கும் என்னுடைய பிரச்சனை பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.வங்கியில் ஆன்லைன் செக்யூரிட்டி அதிகாரியாக நான் பணியாற்றுகிறேன் என்று.என்னுடைய வங்கி அகில உலக அளவில் பெரியது. ஒரு ட்ரோஜன் கூட உள்ளே நுழைய முடியாது. அதுதான் எங்களது வங்கியின் வசீகரம்.ஆனால் இப்போதெல்லாம் பணத்தைப் பாக்கிற போது,இன்டர்நெட்டில் பாஸ்வர்ட் கேட்கும் தகவல் பக்கத்தைப் பார்க்கும்போது,ஏடிஎம் பொம்மைகளைப்  பார்க்கிறபோது எனக்கு திருட வேண்டும் போல ஆசை வருகிறது.பேசாமல் எல்லாவற்றையூம் கலைத்துப் போட்டு விட்டு கல்கத்தாவில் போய் டாக்ஸி ஓட்டலாமா இல்லை சென்னையில் போய் ஆட்டோ ஓட்டலாமா?ஆனால் படிக்க வைக்க காலேஜில் சீட்டு கேட்க தங்கச்சியோ தம்பியோ இல்லையே எனக்கு! அப்படித்தானே சினிமாவில் எல்லாம் காட்டுகிறார்கள்.ஆனால் எனக்கு  மங்காத்தா அஜீத் போல திருடவேண்டுமென்ற ஆசை வருகிறது.

     ஐ ரிபீட் திருட வேண்டும் பேல ஆசை வருகிறது.என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா உங்களுக்கு?

                      (3)

  ஒரு பாதுகாப்பு அதிகாரியான எனக்கு திருட வேண்டும் என்று மனதில் ஆசை வருவதற்கு காரணம் என்ன.யாராவது சூனியம்,கீனியம் வைத்து விட்டாh;களா இல்லை என்னை என் பாங்கிற்கு வருகிற யாராவது ஹிப்னடைஸ் செய்து விட்டாரகளா என்று புரியாமல் குழம்பிப் போயிருந்த நான் டாக்டர் ராவ் பற்றி ஒரு ரோட்டரி க்ளப் மீட்டிங்கில் கேள்விப்பட்டு,வந்து பார்த்ததும் என்னை ஹிப்னடைஸ் செய்து என் மனதை துல்லியமாகப் படித்து விட்டார்.
"என் பாங்க்கின் செக்யூரிட்டி விஷயங்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி டாக்டர்.என்னை இப்போது யாராவது வந்து வர்றியா தம்பி திருடலாம் என்றால் பூச்சாண்டி பின்னால் செல்லும் சிறுவூன் போல சென்று விடுவேன் என்று தோன்றுகிறது.பேசாம  வேலையை ரிசைன் செய்து விட்டு ஹரேராமா ஹரே கிருஷ்ணா என்று இஸ்கான் போல எதிலாவது சேர்ந்து விடட்டுமா டாக்டர்"
"வேண்டாம்.அங்கேயூம் போய் திருடி விட்டு மாட்டிக் கொள்வாய்"
"எனக்கு பயமாக இருக்கிறது.டாக்டர் என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் மேசை மேலிருந்த லாப்டாப்பை நான் கிளம்பும்போது கிளப்பிக் கொண்டு சென்று விடுவேனோ என்று பயமாக இருக்கிறது"
ராவ் சப்தமாக சிரித்தார.பின் அதே சிரிப்புடன்,"ஊர்மிளா"என்றார்.வெளியே ரிசப்ஷனில் என்னை லவ்வடித்த ஊர்மிளா உள்ளே எட்டிப் பார்த்து விட்டு இரண்டு கோப்பைகளில் சுத்தமான காபி கொண்டு வந்து வைத்தாள்.வைத்து விட்டு செல்லும்போது ஏஞ்சலினா ஜோன்ஸ் போல கண்களைச் சுழற்றி என்னை துடைத்து விட்டுச் சென்றாள்.
"டாக்டர் என்ன செய்யலாம்"
"காபி குடிக்கலாம்"
"டாக்டர்"
"கொள்ளை அடிக்கலாம்"
"பார்டன் மீ"
"பாங்க்கை நீ கொள்ளையடிக்கலாம்.கொள்ளையடித்தால் உனது மனதிலிருக்கும் இந்த அரிப்பு தீர்ந்து விடும்.பழையபடி நல்லப்பிள்ளை போல பாங்க் சென்று விட்டு சாயங்தரங்களில் லிஸாவோ யாரோ சொன்னாயே அவளது பின்னங்கழுத்தில் முத்தமிட்டு காதல்பாடத்தைத்துவங்கலாம்"
"என்னை திருடச் சொல்கிறீர்களா டாக்டர்.நான் ஒரு பாதுகாப்பு அதிகாரி"
"அதனால்தான் சொல்கிறேன்."
"திருடி மாட்டிக் கொண்டு விட்டால் என்ன தண்டணை கிடைக்கும் தெரியூமா.தண்டணை இருக்கட்டும்.என் பெயர் என்னாவது.என்னை ஏழாவது மாடியிலிருந்து அப்படியே  எறிந்து விடுவார்கள்."
"பொறு.நான் அட்டகாசமாக ஒரு திட்டம் வகுத்திருக்கிறேன்.நீ திருடத்தான் போகிறாய்.ஆனால் திருடிய பணத்தை மறுபடியூம் நீயே கொண்டு போய் வைத்து விட்டு வரத்தான் போகிறாய்.பணம் வெளியே போனால்தானே அது திருட்டு ஆகும்.நீதான் திருடிய பணத்தை ஒரு பைசா குறையாமல் கொண்டு போய் வைத்து விடப் போகிறாயே"
"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை டாக்டர்.பயமாக இருக்கிறது."
"பயப்படாதே.நாம் கொள்ளையடிக்கலாம் உன்னுடைய வங்கியை",என்றார்.

                    (4)
"எப்படி டாக்டர்",என்றேன்.
"சரி கிளம்பு.நாம் வெளியே போய் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்.நம் பூர்வாங்க திட்டம் அவரிடம்தான் இருக்கிறது.",என்று எழுந்தார் ராவ்.
 நான் எழுந்தேன்.வெளியே நின்றிருந்த ஊர்மிளா,"நான் லிப்ரா.நீ?"என்றாள் டாக்டருக்கு கேட்காத மெலிதான குரலில்.
"நான் ஸ்கார்ப்பியன்"என்றேன்.
"அது தெரியூம் பையா எனக்கு.ஸ்கார்ப்பியன்களிடம்தான் இப்படி பதுங்கு குணமும்,குழப்பமும் இருக்கும்.வா நாம் போய் ரவிசங்கரைப் பார்த்து விட்டு வருவம்"
"யார் சிதார் வாசிப்பவரா"
"இல்லை.உன் பாங்க்கின் போர்டு டைரக்டர்களில் ஒருத்தார்"
"மைகாட்.அந்த ரவி..சங்கரா.அவரை எதற்காகப் போய் பார்க்க வேண்டும்.என்னை மாட்டி
விடப் போகிறீர்களா டாக்டர்"
"இல்லை.பேசாமல்வந்துவேடிக்கைபார்"
     
                     
                       (5)

   டாக்டர் அடையாறில் ரவிசங்கர் பஙூகளாவில் இருந்தோம். அந்த பிரதேசமே மிக அமைதியாக இருந்தது.ரவிசங்கர் மாடியறையில் தனியாக இருந்தார்.சுவற்றில் சிசிடி காமரா இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது.சப்தமே இல்லாத ஏசி.என்னைப் பார்த்ததும் அஜித்குமார் சாயலில் இருந்த ரவிசங்கர் மெல்லப் புன்னகைத்தார்.வாயில் உயர்ரக சுருட்டு இருந்தது.
"வாங்க மிஸ்டர் ராவ். வாப்பா.உன்னைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.பாங்க்ல உனக்கு தெரியாம யாரும் உள்ள ஊடுருவ முடியாதாமே"
சிரிப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை.ராவ் தன்னிச்சையாக டீபாய் மேலிருந்த தங்க திரவம் எடுத்து தனக்கொரு கோப்பையில் வார்த்துக் கொண்டார்.மெல்லிய வெளிச்சம். மேற்கத்திய இசை.ஒலியில்லாமல் டிவியில் லில்லிஆலன் ஆடிக் கொண்டிருந்தாள்.கார்ப்பெட்டில் காஷ்மீரோ,ராஜஸ்தானோ இருந்தது.
"ரவி.பையன் கொஞ்சம் பயப்படறான்.நாம கொஞ்சம் பேசிடலாம்னு நினைக்கறேன்.என்ன நான் சொல்றது"
"என்ன அப்படி முதலிரவூக்கு உள்ள வந்த பொண்ணு மாதிரி இருக்கே. இதை எடுத்து உள்ள ஊத்திக்க.மேற்கத்திய சாராயம்.வழுக்கிகிட்டு உள்ள போவூம்.நானும் ராவ்வூம் சின்ன வயசில இருந்தே நண்பர்கள்.உன்னோட பிரச்சனையை ராவ் சொன்னதுமே எனக்கு இதில இன்ரஸ்ட் வந்திருச்சு. நீ தாராளமா கொள்ளயடிக்கலாம்.போலீஸ்ல எல்லாம் மாட்டிக்காம பார்த்துக்கறேன்.ஆனா திருடின பணத்தை திரும்ப கொண்டு போய் உள்ள வைச்சிரனும்."
"வெயிட் மினிட் மிஸ்டர் ரவிசங்கர்.உங்களோட பாங்க்கை கொள்ளயடிக்க நீங்களே எதுக்காக விரும்பறிங்க"
"இதில ஏதும் சூழ்ச்சி இருக்கும்னு நினைக்கறியா.நான் கொஞ்சம் விளையாட்டுப் பிரியன்.அதிலேயூம் ஆபத்தான விளையாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும்"
"நீ ஒண்ணும் பயப்பட வேணாம்.நீ பத்திரமா கொள்ளையடிக்க ரவி உனக்கு உதவூவாரு.இன்ஃபாக்ட் உன்னோட டிபார்ட்மென்ட்டே இந்த ரவியோட மூளையில உதிச்சதுதான்.பாங்க்ல செக்யூரிட்டி அமைப்புகளை வலுவாக்கனும்னு  மீட்டிங்ல ஒவ்வொரு தடவையூம் சொல்லிட்டு இருந்தவரு.அதனால தன்னால உருவாக்கப்பட்ட அமைப்பை கொஞ்சம் போல சீண்டிப் பாக்கனும்னு விரும்பறாரு"
"நாம கட்டின சீட்டுக்கட்டு கோபுரத்தை ப்பூன்னு ஊதிட்டு திரும்ப நாம்பளே கட்டி வைச்சிடறௌம்ல..பயப்படாத.ஒத்துக்க.இதனால உன்னோட மனசில இருக்கற 'திருடனும்கற' நினைப்பும் மறைஞ்சிரும்"என்றார ரவி.
    நான் ஒப்புக் கொண்டேன்-திருடுவதற்கு.

                       
                      (6)

    திட்டம் தயாரானது.நாள் குறித்தோம்.மாண்டியத் சாலையில் இருக்கிற எங்களது வங்கியை நான் உள்ளே புகுந்து திருடப் போகிறேன்.எனக்கு ஆன்லைன் திருட்டு பிடிக்கவில்லை.வெறும் நெட் வழியாகப் புகுந்து டிஜிடல் எண்களைத் திருடுவதற்கு பதிலாக நேரடியாகவே போய் மணமணக்கும் கரன்சிகளை அள்ளிக் கொண்டு வர விரும்புகிறேன்.
   எங்கள் வங்கியில் வெளியே ஏடிஎம் அருகில் மட்டும்தான் ஒரு காவலாளி உண்டு.உள்ளே போவதற்கெல்லாம் தானியங்கி செக்யூரிட்டி அமைப்புதான்.எல்லாம் எலக்ட் ரானிக் சாதனங்கள்.ஸ்கானர்கள்,சிசிடிக்கள்,லேசர் கதிர்கள்,வாய்ஸ் பிரின்ட்,ஸ்மெல்பிரின்ட் என்று சிக்கலான சாதனங்கள்.அனைத்தையூம் என்னால் ஏமாற்ற முடியூம்.
   நான் பணத்தோடு வெளியே வந்தால் சாலையின் எதிரில் ஒரு க்வாலிஸ் வேனில் ரவிசங்கரும்,ராவ்வூம் காத்திருப்பார்கள்.பணத்தை ரவி பார்த்ததும் திரும்ப கொண்டு போய் வைத்து விட்டு வந்து விடுவேன்.அதன்பின் போய்  குளித்து விட்டு திருப்தியாக ஒரு துhக்கம்.என்னுடைய திருட வேண்டும் என்ற இச்சை என் மனதிலிருந்து துல்லியமாக துடைத்து எறியப்பட்டு விடும்.
  மறுபடி மறுபடி திட்டமிட்டேன்.ப்ளோ சார்ட் போல எழுதி வைத்துக் கொண்டேன்.எங்கெங்கே தவறும் நிகழும் என எதிர்பார்த்தேன்.மறுபடி திட்டத்தை சரிபார்த்து விட்டு ராவ்விடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.
  நாங்கள் மூவரும் வேனிலிருந்தோம்.
"ஆல் தி பெஸ்ட் பையா"என்றார் ரவி.
"குட்.முதலும் கடைசியூமான திருட்டு"என்றார் ராவ்.
  நான் விலகினேன்.குளிரடித்தது.சாலையில் சோடியம் வேபர் பூக்கள்.நள்ளிரவூ இரண்டு மணி.பனி ஐஸாகப் படர்ந்திருந்தது.நான் விலகினேன்.

                    (7)

இப்போது ராவ்வூம்,ரவிசங்கரும் பேசினார்கள்:

"ராவ் நிசமாகவே திருடப் போறான் பாரு.திருடிட்டு பணத்தோட வருவான்.மில்லியன் டாலர்
திருட்டு.பணத்துடன் வந்ததும் என்ன பண்ணலாம்"
"திரும்ப கொண்டு போய் வைக்கச் சொல்றதுக்கு நாம என்ன முட்டாளா.அவன் பணத்தை
கொண்டு வந்து கொடுத்ததும் சுடுவோம்.அர்ஜூன்-அஜீத் ஸ்டைல்ல காரியம் பண்ணுவம்.இதப் பாரு பெரட்டா.இத்தாலியன்.
.22 துப்பாக்கி.சுடுவோம்.விலகுவோம்"

                        (8)

  நான் திட்டமிட்டபடி திருடினேன்.எந்த இடையூறுமில்லை.பணத்தை  அள்ளிக் கொண்டேன்.வெளியே வந்தேன்.வேனின் அருகே வந்தேன்.வேன் கதவூ திறந்தது. சிரித்தேன்.திருட வேண்டுமென்ற என் இச்சை ஒழிந்தது.ரவியூம்,ராவ்வூம் சிரிக்கவில்லை.
"ஆஹா.இத்தனை நாள் என் மனதை அரித்துக் கொண்டிருந்த இச்சை ஒழிந்தது.வாவ்!"
 யா..யார் பேசியது.நான் பேசவில்லையே.என் பின்னால் 'அவன்' நின்றிருந்தான்.
ரவியூம்,ராவ்வூம் துப்பாக்கியை உயர்த்திய தருணத்தில்
"இத்தனை நான் நானொரு புரொபஷனல் திருடனாக இருந்தேன்.ஒரு திருட்டு நிகழாமல் தடுக்க வேண்டும் என்று என் மனதை அரித்துக் கொண்டிருந்த எண்ணத்திற்கு வடிகாலாக இந்த திருட்டை தடுத்து விட்டேன்.மன்னித்து விடுங்கள் பங்காளிகளே"என்று தன்னுடைய துப்பாக்கியை உயர்த்தினான் அவன்.

                      (9)

 சுழன்று திரும்பி எங்களைச் சரியாக சுட்டான்.

 மூன்று தோட்டாக்கள் மிகச்சரியாக எங்கள் நடு மார்பில் பாய சரிந்தோம்.
Previous
Next Post »

2 comments

Click here for comments
June 2, 2016 at 5:00 PM ×

அனாமிகா என்றால் ஆபத்து, உன்னிடத்தில் என்னைத் தொலைத்தேன் இரண்டும் படித்திருக்கிறேன்; இரண்டு புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன. அனாமிகா மாதரி புதிய நாவல் எழுதலாமே. தோற்றத்தை வர்ணிக்க எப்போது பார்த்தாலும் சினிமா நடிகர்களைக் குறிப்படுவது அலுப்பாக இருக்கிறது. 1995ல் சரவணன், இன்று அஜித், பவர் ஸ்டார் என்று அதையே தொடர்கிறீர்கள். மேலும் பல வாக்கியங்கள் 80-களில் எழுதப்பட்ட பாணியிலேயே தொடர்கின்றன. உதாரணம்- 'ரிசப்ஷனில் இருந்த பெண் மட்டும் இன்றைக்கே காதலிக்கத் துவங்கலாம் போல என்னைப் பார்த்தாள்.' {கிளினிக்குக்கு வரும் அரைக் கிறுக்கனைப் போயா அவள் காதலிப்பாள்?} ஆனாலும் நீங்கள் த்ரில்லர் நாவல் எழுதினால் படித்துப் பார்க்கிறேன்.

Reply
avatar
June 2, 2016 at 8:25 PM ×

நன்றி சரவணன்.தங்களது வாசிப்பிற்கும் அன்பிற்கும் மீண்டும் நன்றி.இனி வர்ணனைகளை மாற்றிக் கொள்கிறேன்.பொதுவாகவே எழுதுவதில் ஆர்வம் குறைகிறது.அதை விட விசுவல் மீடியத்தில் கதை சொல்லவே விரும்புகிறேன்.அதற்கு சரியான களம் சினிமாதான் என்பதால் அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

Reply
avatar