இந்தியான்னா நேரு.அது யாரு?


  ஒரு பொருளை முதன்முதலாக லான்ச் செய்வதைக் காட்டிலும் அதனை மார்க்கெட்டில் ரீபொசிஷன் செய்வது கடினம்.முந்தைய லான்ச்சில் பெரிதாக அள்ளி விட்டு அதைப் பயன்படுத்துபவர்களுக்கு அப்படி ஏதும் இல்லையே என்ற எண்ணம் வந்திருக்கலாம்.அல்லது போட்டியாக வேறு பொருட்கள் உள்ளுரிலேயே கிடைத்திருக்கலாம்.அதனால் பொருளை ரீபொசிஷன் செய்ய முனையூம்போது கவனமாக இருப்பது அவசியம்.அநேகமாக போக்ஸ்வேகனுக்கும் ஆடி கார்களுக்கும் இனி ரீபொசிஷன் தேவைப்படும் சமீபத்திய போக்ஸ்வேகனின் புகை சமாச்சாரத்தால்.

 முற்றிலும் புதிய மிக நவீனமான புத்தம் புதிய கண்கவர் பாக்கிங்கில் அதிக மேம்பட்டத் திறனுடன் ஆல்நியூ என்றெல்லாம் டேக் இணைத்து பொருளை மார்க்கெட்டில் விட்டாலும் அதனை சீண்டுவார் கிடையாது.பழைய மாடலே கிடைக்குமா என்றுதான் பார்க்கத் தோன்றும்.அது மனதின் இயல்பு.கடந்து விட்ட காலங்களையூம் பயன்படுத்திய பொருளையையூம் இழக்க விரும்பாத நாஸ்டால்ஜியத்தனமான மனம்.

 ரீபொசிஷனிங்கில் அரசியல் கட்சிகள் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட்டு வருகின்றன.நடைவீரரையே மிஞ்சும் விதத்தில் (நடைவீரர் என்றால் யார் என்று அறிவீர்கள்தானே) மற்ற கட்சித் தலைவர்கள் ஊர் ஊராக சென்று நடக்கிறார்கள்.நடந்து கொண்டே பேசுகிறார்கள்.செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.இதில் ஊடாக மறைந்திருக்கிற விஷயம் தங்களது பிராண்டின் தோற்றத்தை மெலிதாக மாற்ற முயல்கிறார்கள் என்று புரிகிறது.

 ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இந்தியா என்றால் நேரு என்பார்கள்.நேரு மட்டும்தான் வெளிநாடுகளுக்கு அதிகம் சுற்றியவர்.அதிகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டவர்.அப்புறம் இந்தியா என்றால் இந்திரா ஆகிற்று.தற்போது இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக மோடி உருவாகி விட்டார் என்றே தோன்றுகிறது.வேண்டுமானால் பிஜேபி என்று சொல்லிப் பாருங்கள்.உங்களது மனதில் சட்டென்று வாஜ்பாயோ அத்வானியோ தோன்றுகிறார்களா என்று பாருங்கள்.நிச்சயம் இல்லை.மோடிதான் தெரிவார்.அது போலத்தான் வெளிநாட்டிவர்களுக்கு இந்தியா என்றால் மோடி.

 இரு ஒரு வகை ஒபாமாத்தனமான ஸ்ட்ராட்டஜி என்றாலும் கை கொடுக்கிறது.சிறிது காலம் உள்ளுரரில் ராகுல்காந்தி முயன்று பார்த்தார்.பத்திரிகைகளிலும் சமூகவலைத்தளங்களிலும் போட்டு அவரை அடித்து விட்டார்கள்.மாற்றம் -- முன்னேற்றம் என்பது பழைசை மறக்கடிக்கும் புதிய பிராண்டிற்கான சுருக்கு வழி என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.இதையே லோக்கல் தலைவர்களும் வட்டம் மாவட்டங்களும் செய்தால் எப்படி இருக்கும் பாருங்கள்.அதை விட அபார்ட்மன்ட் அசோசியேஷன்களில் உள்ள தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்களும் சின்னச் சின்ன பொதுநல அமைப்புகளிலும் இது போன்ற மாற்றம் -- முன்னேற்றம் பாணியிலான பிராண்டிங்கும் நடை பயணங்களும் வந்தால் எப்படியிருக்கும்.பேஸ்புக் போன்ற சாதனங்களில் ஆளுக்கு ஆள் ஒரு பக்கம் துவங்கி வைத்துக் கொள்ளலாம்.கேப்ஷன் போட்டுக் கொள்ளலாம்.இப்போதெல்லாம் வேலை நிமித்தமாக யாரையூம் நீங்கள் சந்தித்தீர்களானால் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்கப்பட்டிருக்கலாம்.

வாட்ஸ் யூவர் போர்ட்ஃபோலியோ?

அதாவது உங்களுக்கு எந்தெந்த டொமைன் சப்டொமைன்களில் பரிச்சயம்.எதெதில்லாம் திறன் அதிகம் என்பதன் பொருள்தான் அந்த கேள்வி.
அநேகமாக இனி எச்ஆர் நேர்முகங்களில் பின்வருமாறு கேட்டாலும் கேட்பார்கள்.அதே கேள்விiயே நானும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

வாட்ஸ் யூவர் பிரான்ட்?

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களின் பிரான்ட் பற்றி கேட்கவில்லை.நீங்களேதான் இனி ஒரு பிரான்ட்.அது என்ன மாதிரியான பிரான்ட் என்று கேட்கிறேன்.
யோசியூங்கள்.
உங்களது பிரான்ட் எது என்று தெரியூம்.
Previous
Next Post »