சிறுகதை: "தலை..." –விஜயநிலா


அந்த பிரதேசத்தில் அவளை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.ஒல்லியாக உயரமாக ஐரிஷ்காரி போல தெரிந்தாள்.புரொபசர் முருகனின் அபார்மன்ட் செல்லும் வழியில் என் ஹாட்ச்பேக் நின்று போனதால் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வேபர் லாக்(vapor lock) அல்லது க்ளோஸ்டு லுரப்(closed loop) இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் ஓடிக்கொண்டிருக்கும் கார் திடீரென நின்று போவதற்கு.வேபர் லாக் என்றால் பெட்ரோலை அனுப்பிக்கொண்டிருக்கும் மெல்லிய டியூபில் சூட்டின் காரணமாக ஆவியாகிவிட்டிருக்கும் ஃப்யூயல் அங்கே அடைத்துக் கொண்டிருக்கும்.க்ளோஸ்டு லுரப் என்றால்ஃப்யூயல் டெலிவரியில்தான் தகறாறு என்று அர்த்தம்.இரண்டையூம் என்னால் சரிபார்த்து விட முடியூம்.ஆனால் எதையூம் தொடாதே என்பது புரொபசர் முருகனின் உத்தரவூ.ஆகவே நடக்க ஆரம்பித்தேன்  அப்போதுதான் அவளைப் பார்த்த்த்த்தேன்.


     என்னை அவள் கவனிக்காதவள் போல நடக்க ஆரம்பித்தாள்.எனக்கு அவள் பின்னால் தொடர்ந்து செல்ல வேண்டும் போல தோன்றியது.அவளின் அசையூம் பின்புறங்கள் என்னை விசிலடிக்க வைத்தன. அவளது அசையூம் முன்புறங்கள் என்னை யூகிக்க வைத்தன.

     அவள் அருகே சென்றேன்.அதே பெண்டுலம் போல அசையூம் பின்புறங்கள்.அவளிடம் பேசலாமா என்று யோசிப்பதற்குள் அவள் மறைந்து விட்டாள். எங்கே போனாள் என்று தெரியவில்லை.மறுபடியூம் காற்றில் அங்கும் இங்கும் அலைந்தபோது அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன்பின் ஏமாற்றமாக என் வசிப்பிடம் வந்ததும் அவளது முகமும்,அந்த பெண்டுலமும் என்னை இம்சித்துக் கொண்டே இருந்தன.
 மறுநாள் வரை நான் துhங்காமலிருந்து விட்டு தாமதமாக எழுந்து நிஸான் மைக்ரா ஓட்டும் ரன்பீன்கப்பூர் போல 'செந்தாழம்பூவில்..' பாடாமல் உற்சாகமாக புறப்பட்டு புரொபசர் முருகனின் அலுவலம் வந்தபோது முறைத்தார்.
ஆள் கலைச்சிப் போட்ட மாதிரி இருக்கே.கண்ல உற்சாகம் தெரியூதே.நைட் ஏதும் தப்பாட்டமா?”
நேத்து வர்ற வழியில ஒரு பொண்ணைப் பார்த்தேன்.என்ன ஒரு க்யூட் தெரியூமா . அது ஏன்  புரொபசர்.பெண்டுலம் மாதிரி ஆடுது
கெட்ட வார்த்தை பேசாத.
தேவதை மாதிரி இருந்தா
ரெக்கை எல்லாம் இருந்ததா ரெண்டு பக்கமும்
ரெண்டு பக்கமும் நான் பார்த்தது வேற
உதைபடுவ.
ஆனா அந்த முகத்தை என்னால மறக்க முடியலை.அலுக்கவே அலுக்காத முகம்.அத்தனை க்யூட்டான முகம்.டாவின்சி பார்த்தா நிச்சயம் 'தி வர்ஜின் அன்ட் தி சைல்ட் வித் stஆன்னி' மாதிரி  வரையாம விடமாட்டான்.அவ பின்னாடியே நான் போயிருக்க வேண்டியவன்.அவ மேல எனக்கு ஏன் அப்படி ஒரு ஈர்ப்பு வருது
தெரியலைடா.உன்னை பிரிச்சிப் பார்த்திரலாமா?உன்ன மைக்ரோ சிப் ஏதும் வைச்சிருக்கியா
போங்க புரொபசர்என்று நழுவினேன்.
இன்னொரு முறை சிட்டி சென்டர்  பக்கமாக போனபோது ஒரு பிட்னஸ் சென்டரில் இரண்டு கைகளால் இரண்டு கால்களையூம் மாறி மாறி தொட்டுக் கொண்டிருந்தாள்.இன்னொரு நாள் சத்யம் தியேட்டர் அருகே அவளைப் பார்த்தபோது சொன்னேன்.
என்னை தெரியூதா.நாம திடீர் திடீர்னு அந்த காலத்து கமல்ஹாசன் படங்கள்ல வர்ற மாதிரி சந்திச்சிக்கிட்டே இருக்கம்.நான் சற்றேறக்குறைய உன்னை தப்புக் காரியம் ஐ மீன் லவ்  காரியம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
ஸாரிப்பா.யார் நீ.ஏதாவது வெத்து வேட்டு ஐடி கம்பெனியில மவூசாட்டிட்டு இருக்கியா.பைஎன்று வழக்கம் போல மறைந்து போனாள்.
புரொபசர் முருகன் ஒருநாள் என்னிடம் காபி கோப்பையை கொடுத்து விட்டு பேசத் துவங்கினார்.
பையா.உனக்காக அவளைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன்.அவள் பெயர் யாழினியாம்.வேளச்சரியில இருக்காளாம்.போதுமா
புரொபசர்.அவள் மேல் எனக்கு..எனக்கு..ஒரு தலையாக காதல் வந்து விட்டது.கவித கூட எழுதி வைச்சிருக்கேன்
"கவிதையா.இப்பெல்லாம் சுவத்துல முச்சா போற  மாதிரி கண்டவங்களும் அனத்தறாப்ல எழுதித் தள்ளறாங்களே.நீயூமா"
ஆமா கவிததான் தபாருங்க டேப்லட்ல தட்டி வைச்சிருக்கேன்.
'உன்னையூம் என்னையூம்
படைத்தவன்
ஒருவனே என்றால்
உறவூமுறை தப்பாகிறதே
உன்னைப் படைத்தது
கடவூளாகவூம்
என்னைப் படைத்தது
பிசாசாகவூம்
இருந்து விட்டுப் போகட்டுமே
என்ன இப்போ'
ஆமா.காதல்தான்
அதெல்லாம் வரக்கூடாது பையா.உனக்கு காதல் எல்லாம் கிடையாதுஎன்று சிரித்தார்.
ஏன்
அதுவூம் அந்த யாழினி மீது உனக்கு காதல் வரவே கூடாது
இது மற்றொரு ஏன்
ஏனென்றாள் அந்த யாழினி ஒரு பெண் அல்ல.அவள் ஒரு இயந்திரம்.
இயந்திரத்தை காதலிக்கக் கூடாதா
கூடாது.அதுவூம் ஒரு இயந்திரம் இன்னொரு இயந்திரத்தைக் காதலிக்கவே கூடாதுஎன்று சொல்லிக்கொண்டே ரிமோட் பயன்படுத்தி என்னை செயலிழக்க வைத்து என் தலையை தனியாக துண்டிக்க ஆரம்பித்தார் புரொபசர் முருகன்.

கதை இப்போது இன்னொரு இடத்திலிருந்து தொடர்கிறது:
                 __         __            __
 யாழினி கால்ஃப் மைதானத்தில் குனிந்து ஆடிக்கொண்டிருந்தாள்.பச்சைப் புல்வெளியில் பந்தை கவனமாக அடித்தாள்.நான் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்.அப்புறம் யாழினி வெளியே வந்து விட்டாள்.நீச்சல் குளத்தின் அருகில் சாய்வூ நாற்காலியில் படுத்துக் கொண்டிருந்தாள்.
 நான் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்.அதன்பின் யாழினி பெயின்டிங் ஷோவில் மாட்டப்ப்பட்டிருந்த ஓவியங்களை (ஜிம் வாரன்)உணர்ச்சியற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.யூவ்ஸ்க்ளென் அருகில் மட்டும் சற்று தயங்கி நின்று நகன்றாள்.மெலிதான புன்னகை அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.
 நான் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன்.இன்னொரு தினம்.என்னை நேராகப் பார்த்து விட்டாள்.அருகில் வந்தாள்.
யார் நீங்கள்.விடாது என்னை அடைகாக்கிறிர்கள்என்றாள் வாசனையாக.
நா..நான் அது ..வந்து..
இதற்கு முன்னால் நான் உங்களை பார்த்ததே இல்லையேஎன்றாள் மறுபடியூம்.
தெரியவில்லை கெட்ட தேவதையே அல்லது நல்ல பிசாசே உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது
கெட் லாஸ்ட்
 முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விட்டு விலகி விட்டாள்.இப்படியே ஒரு மாதம் காணாமல் போனது.அவளை விடாது துரத்தினேன்.இன்னொரு தினம் வெளியே மழை நசநசத்துக் கொண்டிருக்க என் அருகில் வந்தாள்.
ஒழிந்து போ.தொலைந்து போ.போனால் போகிறதென்று நானும் உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வாய்என்றாள்.
நிசம்மாவா..என்று எஸ்.ஜே.சூர்யா போல பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு கத்தினேன்.
தலையசைத்தாள்.வெயிட் எ மினிட்.இவள் யார்.நான் ஏன் இவள் பின்னால் அலைகிறேன்.எதற்காக இவளை காதலித்தே ஆகவேண்டுமென்று திரிகிறேன்.யாழினி சொன்னது வேறு.
  முதலில் நான் யார்.தியேட்டர் காம்ப்ளக்ஸில் முதலில் ஒரு படத்திலிருந்து இன்டர்வெல்லில் வெளியே வந்து விட்டு அப்புறம் தியேட்டர் மாறி இன்னொரு படத்திற்கு சென்று விட்ட மாதிரி உணர்ந்தேன்.நான்  ஏதாவது லிங்குசாமி படத்தில் இருக்கிறேனா.
இப்படித்தான் முதலில் ஒருத்தன் என்னை துரத்தினான்,காதல் காதல் என்று என் பின்புறங்களையே பார்த்துக் கொண்டு அலைந்தான்.ஆனால் என்ன ஆச்சோ என்று தெரியவில்லை.அவனது தலை ஒரு பாலத்தருகே துண்டிக்கப்பட்டு கிடந்தது
 என் இருப்பிடத்திற்கு வந்தேன்.உள்ளே புரொபசர் முருகன் இருக்கிறார்.விஞ்ஞானி.எம்படட்,ப்ளுடூத் என்று கம்ப்யூட்டரை கள்ளக்காதலி போல எப்போதும் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பார்.
உள்ளே போனேன்.
வாடா வா.என்ன இத்தனை நேரம்.வெளியில எல்லாம் சுத்தறியாமே
சேசே.பாலத்துக்கு அருகே சும்மா காத்து வாங்கலரம்னு போயிட்டு வந்தேன்
புரியலை.என்னடா நீ தமிழ் பேசற.என்ன ஆச்சு உனக்கு
அதுக்காக நான் சிட்டி ரோபோ மாதிரி சிலப்பதிகாரம் தொல்காப்பியம்னு என்னு தமிழறிவை ஷங்கர்தனமா நிரூபிக்க மாட்டேன்.artificial intelligence”என்றேன்
என்ன..என்னஎன்றார் முருகன் வினோதமா பார்த்தபடி.
புரொபசர்.இப்ப எனக்கு கிடைச்சிருக்கறது உயிர் வாழறதுக்கு இன்னொரு சான்ஸ்.அதாவது மறுபிறவி.அப்ப என்னோட முந்தைய மெமரியில நான் யாழினியை லவ் பண்ணியிருக்கேன்.நீங்க என்னோட தலையை துண்டிச்சி,என்னோட ரிட் ஒன்லி மெமரியை(read only memory) அதோட பதிவூகளை ஈப்ரோம்(Eprom) பண்ணி அழிச்சிட்டு என்னை இன்னொரு ரோபோவூக்குள்ள வைச்சிட்டாலும் மின்கிளர்ச்சி ஏற்படும்போது எனக்கு பழைய அழிந்த நினைவூகள் வந்திருச்சி.எனவே யாழினியை தேடிப்போய் என் காதலைப் புதுப்பிச்சிக்கிட்டேன்.இந்த முறை நானும் என் காதலும் தப்பிக்கனும்னா என்ன பண்ணனும்னு புரிஞ்சி போச்சி
எ..என்ன பண்ணப் போறஎன்று தடுமாறினார் மு.
துண்டிக்கனும்.அதாவது தலையை தனியாக துண்டிக்கனும்என்று அவரது தலையை சுலபமாக துண்டிக்க ஆரம்பித்தேன்.
                  --------------------------


பின்குறிப்பு: கதையின் தலைப்பு 'தல' என்பதால் அஜீத் ரசிகர்களோ அல்லது வெங்கட்பிரபு வகையறாக்களோ இந்த கதையை படமாக்க வந்தால் தாராளமாக படமாக்கலாம்.பட் வித் ஒன் கண்டிஷன்.'தல"-க்கு வில்லனாக நான்தான் நடிப்பேன்! 
Previous
Next Post »

2 comments

Click here for comments