"அப்புறம்..." --விஜயநிலா

  ஷார்ட் ஃபிலிமிற்கான கதை திரைக்கதை வசனம்:
                                                               

  
                                                   காட்சி -1

(காமரா கடற்கரை மணலில் மெல்ல நகர்கிறது.சற்றே எழும் அலைகளில் அங்கிதாவின் முகம் தெரிகிறது.அவளது கண்கள் சிரிக்கின்றன.அந்த உதட்டுச் சுழிப்பைக் காட்டும்போது பைக்கில் சட்டை அணியாமல் ஜீன்ஸ் அணிந்து விர்ர்ர்ரென வருகிறான் வருண்.அவனையூம் அவளையூம் முகத்தை மட்டும் மாற்றி மாற்றிக் காட்டிய காமரா அதன்பின் ஒரு அபார்ட்மன்ட்டினுள் நுழைகிறது)
அங்கிதா கீழே சிதறிக் கிடக்கிற தன் துணிகளை எடுக்கிறாள்.படுக்கையறை கலைந்து கிடக்கிறது.அதில் அவர்களது வெட்டிங் ஃபோட்டோவூம் தலைகீழாகக் கிடக்கிறது.முணுமுணுக்கிறாள்.
அங்:ச்சே.எல்லாம் மூணே வருஷத்துல கலைஞ்சிடுச்சி.இனி வருண் முகத்துலயே முழிக்கக் கூடாது.
(வருண் சிட் அவூட்டில் அமர்ந்து எலக்ட்ரிக் ரேஷரை முகத்தில் ஓட்டிக்கொண்டிருக்கிறான்.அவன் முகத்திலும் கோபம் கலந்த வெறுப்பு)
வரு:என்ன ஒரு கெட்ட கனவூ மாதிரி நடந்தது எல்லாம்.நான் போய் இவளை லவ் பண்ணினேனே.இவள்தான் இனி எல்லாம்னு முட்டாள் சினிமா கதாநாயகர்கள் மாதிரி கிடார் வாசிச்சிட்டு இவள் பின்னாடி சுத்தினேனே.ரெண்டு பிள்ளைங்க பிறந்ததும் மாறிடுவாளா.திமிர்.அடிப்படையிலேயே அவ ஜீன்லயே திமிர் இருக்கு.அதான்அடங்க மாட்டேங்கறா.
அங்:(தன் பெட்டியில் உடைகளை அடுக்கிக் கொண்டிருக்கும்போது சின்னவள் யட்ஷா வருகிறாள்.இரண்டு வயது சிறுமி.இரட்டைக் குழந்தையரில் ஒருத்தி.இன்னொருத்தி மிட்ஷா எப்போதும் பென்சில் எடுத்து வரைந்து கொண்டே இருப்பாள்) என்னடி.நாம போகப் போறம்.அதுவூம் சுதந்தரமா.அந்தாளை விட்டுட்டு..
யட்:அப்ப டாடி.?
அங்:அந்தாள் என்னை முதல்ல ஏமாத்தினான்.இப்ப உன்னையூம் ஏமாத்திடுவான்.நாம போலாம்.எங்க அப்பா வீட்டுக்கு..
யட்:நீ மட்டும் உங்க அப்பா வீட்டுக்குப் போவ.நான் எங்க அப்பா வீட்டுல இருந்தா என்ன.வாட்ஸ்அப் மம்மி..எனி ப்ராப்ளம்
அங்:போடி.கிழவி மாதிரி சட்டம் பேசறா.வர்றதானா வா.இல்லைன்னா அந்தாள் உன்னை ஒரு ஷாம்ப்பேயின் பாட்டிலுக்கு வித்துருவான்
யட்:ஹூஸ் 'அந்தாள்' மம்மி..யூ மீன் டாடி.ஹீஸ் சச் எ நைஸ்மேன் தெரியூமா..
அங்:தெரியூம் தெரியூம்.அப்படி நினைச்சித்தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு லவ் பண்ணி மாட்னேன்.இனி அந்தாளை நம்பறதா இல்லை.போ உன் டிரஸ் எல்லாம் எடுத்து வை(யட்ஷா முகத்தை தோளில் இடித்துக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டே போகிறாள்)
அங்:முணுமுணுக்காத எத்தினி தடவை சொல்லியிருக்கேன்.அப்படியே அந்தாள் மாதிரி பேச்சு மானரிசம் எல்லாம்.போய் ஒழிங்க..

                                                       


                                                              காட்சி-2

(வருண் ஷவரில் ஆசை தீர குளிக்கிறான்.அப்போது காட்சிகள் சட்சட் என்று மாறி அவனும் அவளும் அதே ஷவரில் முன்பெல்லாம் குளித்தது இருவரது முகங்கள் மட்டும் தெரிகிறாற்போல தோன்றுகிறது.தலை துவட்டிக் கொண்டு வெளியே வந்து சிகரட் பற்ற வைக்கிறான்.அவன் கண்களில் டேபிளில் மேல் உள்ள எரிக் ஸீகலின் 'லவ் ஸ்டோரி' புத்தகம் கண்ணில் படுகிறது.எடுக்கிறான்)
வரு:இந்த புத்தகம்தானே முதன் முதல்ல அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்தது.திமிர் பிடிச்ச தேவதைன்னு நினைப்பு அவளுக்கு.கதை எழுதியிருக்கான் பாரு இந்தாள்.லவ் ஸ்டோரியாம்..(என்று சிகரட் எடுத்து அந்த புத்தகத்தின் அட்டையில் அங்கிதா ராட்சசி என்று ஓட்டை வருமாறு சுடுகிறான்.அப்போது அவனது செல் ஒலிக்கிறது.ரிங்டோனில்  பாடல் ஒலிக்கிறது.எடுக்கிறான்)
வரு:யா..வருண் ஹ்யர்..யாரு.. பாலு..க்ரேட்.நான் உன்னைத்தான் நினைச்சிட்டு இருந்தேன்.நம்ம நட்பு வட்டத்துல ஒரு அட்வகேட் இருக்கறது நல்லதா போச்சு.நான் முடிவூ பண்ணிட்டேன்.நீ பேப்பர்ஸ் ரெடி பண்ணு மியூச்சுவல் கன்சன்ட்டோட இலை அசங்காத பிரிஞ்சுர்றதுன்னு.குட்பை டு அங்கிதா.ஆமாம்பா.காதல்தான்.லவ்தான்.ஆனா சுயமரியாதைன்னு ஒண்ணு இருக்கில்ல.நான் குடிச்சிட்டு என் ஆபீஸ் ஸ்டாஃப் நிஷாவோட அபார்ட்மன்ட்டுக்கு போயிட்டேன்.லேசாதான்அவளை வாசனை பார்த்தேன்.இல்லை.அடல்ட்ரி எல்லாம் இல்லை.அதுக்குள்ள அங்க இவ மோப்பம் பிடிச்சி வந்துட்டா.அது என்ன சொல்வாங்க தமிழ்ல..ம்..துரோகம்.நான் அவளுக்கு துரோகம் பண்ணிட்டேனாம்.நானென்ன அந்த நிஷாவை திறந்து உள்ள ராக்கெட்ட விட்டுட்டனா..சே..நான் ஆபாசமா பேசலைடா.அவ பேச வைக்கறா.ராட்சசி.பிரிஞ்சிர்றதுதான் சரி.இவ சரிப்பட்டு வரமாட்டா.உன்னால முடியலைன்னா சொல்லு ஐல் ஹயர் சம் அதர் லீகல் பர்சன்..(போனை வைத்து விட்டு உள்ளே வருகிறான்)
அங்:டிபன் டேபிள்மேல இருக்கு
வரு:ஓ..லாஸ்ட் சப்பர் மாதிரி லாஸ்ட் டிபன் ஃப்ரம் தி ஸோ கால்டு ஃவொய்ப்..தாங்க்ஸ் அங்கிதா
அங்:யாரவ..இனி அந்த நிஷா ரெடியா இருப்பாளே ராக்கெட் விடறதுக்கு..அதான் போன்ல பேசினிங்களே.ச்சே.என்ன ஒரு வக்கிரமான திங்க்கிங்.காட்.நான் தப்பிச்சேன்..நானும் என் பொண்ணுங்களும் போறம்
வரு:(சிரிக்கிறான்)உன் பொண்ணுங்களா..நீயே மான்யூபேக்சரிங் பண்ணினியா உன் பொண்ணுங்களை.அதுவூம் ரெட்டையா..
அங்:இந்த காலத்துல பிள்ளைங்க எப்படி பிறக்கறாங்கன்னு ஹாஸ்பிடல்ல புதுசா பிறந்த குழந்தைக்கு கூட தெரியூம்.நீங்க ஒண்ணும் செக்ஸை கொச்சைப்படுத்த வேணாம்.உங்களோட எங்களால மாரடிக்க முடியாது.போறம்.ஒன்ஸ் ஃபர் ஆல் குட்பை
வரு:போனப்பின்னாடி வருத்தப்பட்டு வரு..வரு டார்லிங்னு ஓடி வர மாட்டியே
அங்:நெவர்.ஒரு தடவை தப்பு பண்ணவ மறுபடி அந்த தப்பை பண்ணமாட்டா
வரு:(செல்பேசி எடுத்து)ஹாய் நிஷா.ஹவாயூ.ஒரு தடவை தப்பு பண்ணினா மறுபடி தப்பு பண்ணமாட்டாளாமே பொண்ணு.அப்படியா.இங்க ஒரு தத்துவஞானி சொல்றா..என்ன அப்படியா..
நிஷா:அதெப்படி.ஒரு தடவை தப்பு பண்ணினா அடுத்தது எப்ப எப்பன்னுதானே எல்லாரும் கேட்பம்.நீதான் பாதியில டக் அவூட் ஆகி ஃபெவிலியனுக்கு திரும்பிட்ட.படவா மறுபடி வராமலா போயிருவ.வராத.பசியோட இருக்கேன்.அப்படியே தின்னுருவேன்(போனை வைத்து விட்டு ஹாஹாஹா என்று சிரிக்கிறான்.கிடார் எடுத்து வாசிக்கிறான்
அங்:காட்..டோட்டலி இன்ஹ்யூமன்(என்று உள்ளே போகிறாள்.யட்ஷா தன் அப்பா வருணின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஸோபாவில் படுத்துக் கொண்டு வருணை காகிதத்தில் வரைந்து கொண்டிருக்கிறாள் இன்னொரு பெண்ணான மிட்ஷா)





                                                              காட்சி -3

(அட்வகேட் பாலுவின் அலுவலகம்.அங்கே வருகிறான் வருண்.பாலு இளைத்துப் போன எஸ்.பி.பி.சரண் போல இருக்கிறான்.சட்டபுத்தகத்தினுள் முகத்தைப் பதுக்கிக் கொண்டிருக்கிறான்.அவன் முதுகில் தட்டியபடி எதிரே நாற்காலியில் அமர்கிறான் வருண்)
பாலு:வாப்பா.என்ன முடிவூ பண்ணினே.பிரியறது ரொம்ப ஈசி.மறுபடி அங்கிதா மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்கமாட்டா.கன்சிடர் பண்ணேன்.
வரு:வீ பிரிஃபர் டிவோர்ஸ்.அவ கூட வாழ முடியலை.கழுத்துல ஏறி உட்கார்ந்துக்கிட்டு நெறிக்கறா
பாலு:அது பொசசிவ்நஸ்ஸா கூட இருக்கலாம்.பொறுத்துக்கயேன்.எனக்கு தெரிஞ்சவரை ஷீஸ் எ நைஸ் பர்சன்.
வரு:அது உன் ஒப்பினியன் பாலு.வெளியில இருந்து பார்க்கறதுக்கு எல்லா நந்தவனத்துலயூம் பூக்கள்தான் தெரியூம்.முள்ளுகுத்தி வலிக்கறவனுக்குத்தான் வலி தெரியூம்.உன் தியரி எல்லாம் வேணாம்.மியூச்சுவல் கன்சன்ட்.டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துடு.எங்க அபார்ட்மன்ட் பார்க்கிங்ல உனக்கு ஒரு சிலை வச்சி வழிபடறேன்
பாலு:(சிரிக்கறான்.பிளாஸ்க் திறந்து காபி எடுத்து நீட்டுகிறான்) ஓயெஸ்.பார்க்கலாம்.நான் எந்த கேசுக்குமே ஒன் வீக் டயம் எடுத்துக்குவேன்.இப்ப க்ளையன்ட் கொடுக்கற தகவல்களை வைச்சி ஸ்ட்ரைட்டா நான் யோசிப்பேன்.ஒரு வாரத்துக்குள்ள அதே விஷயங்களை லாட்டரலா மறுபடி யோசிச்சிப் பார்த்துதான் ஒரு முடிவூக்கு வருவேன்.கொஞ்சம் பொறுமையா இரு
வரு:ஆல்ரைட்.நான் வரேன்.ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.
(வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.அதன் பின் காட்சி மாறுகிறது)
                                                   
                                                                காட்சி - 3

(காரை பார்க்கிங் ஏரியாவில் விட்டு விட்டு லிப்ட்டிற்கு வரும்போது மிகச்சரியாக உள்ளே நுழைகிறாள் நிஷா.அவள் மார்புகளை பார்க்காமல் இருக்க கண்களை கட்டுப்படுத்தி தோற்கிறான்.அவள் சிரிக்கிறாள்.சிரிப்பில் சற்று செடேஷன் இருக்கிறது)
நிஷா:வருண்..வீட்ல என்ன ப்ராப்ளம் வெடிக்குதா.என்னாலதான.அன்னிக்கே நீ காரியத்தை முடிச்சிட்டுப் போயிருக்கனும்.பாதியில விட்டுட்டுப் போனதாலதான் நீ என்னை அனுபவிக்க முடியாமப் போயிருச்சேங்கற கோபத்தை உன் மனைவி மேல காட்டற
வரு:டோன்ட் பி சில்லி.அவ உண்மையிலேயே ராட்சசி
நிஷா:யூர் கரெக்ட்.அவ ராட்சசிதான்.அதனாலதான் எந்தப் பொண்ணுங்ககிட்டயூம் மடங்காத உன்னை இழுத்து வைச்சி லவ் பண்ணி ஆசை ஆசையா ரெட்டையா ரெண்டு பொண்ணுங்களைப் பெத்துக்கிட்டா.எனக்கு அவ மேல பொறாமையா இருக்கு வருண்.
வரு:வாட் யூ மீன் நிஷா..நீ அவளை திட்டறியா பாராட்டறியா..
நிஷா:கொஞ்சம் ஸ்ட்ரைட்டா ஒண்ண சொல்லட்டுமா.என் மாதிரி பொண்ணுங்களை மார்பையூம்மத்த இடங்களையூம் பார்த்தாதான் உனக்கு ஹார்மோன் கிளம்பும்.ஆனா அங்கிதா மாதிரி பொண்ணை முகத்தை அதுவூம் அவளோட கண்களைப் பார்த்தாலே நுரறு வருஷம் பழகின மாதிரி இழுத்து அணைச்சிக்கத் தோணும்.அந்த அணைப்புல லவ்தான் இருக்கும்.செக்ஸ் இருக்காது
வரு:நிஷா..யூர் ட்ரையிங் டு ப்ரீச் மி..டோன்ட் டு தட்..(தலையைக் குனிந்து கொள்கிறான்)
நிஷா: ஒரு வித்தியாசத்தை புரிஞ்சிக்க வருண்.செக்ஸ்ல லவ் வரவே வராது.ஆனா லவ்ல செக்ஸ் இருக்காது.அங்க செக்ஸ்ங்கறது ஒரு சைடு எஃபக்ட்டா வம்சவிருத்திக்காக மட்டும்தான் வரும்.லவ் பண்ற ரெண்டு பேரு எத்தனை யூகங்கள் வேணும்னாலும் கட்டிப்பிடிச்சிட்டு அப்படியே கிடக்க முடியூம்.ஆனா செக்ஸ் வைச்சிக்கற ரெண்டு பேரு காரியம் ஆனதும் எப்படா நகர்ந்து படுப்போம்னுதான் தோணும்.அதை நீ முதல்ல புரிஞ்சிக்க.அங்கிதா உன் மனைவி மட்டுமல்ல.அவ உன் காதலி..
வரு:தாங்க்ஸ் ஃபார் யூர் கவூன்சலிங்.ஆனா நான் மனசு மாற மாட்டேன்.வீஆர் கோயிங் டு கெட் டிவோர்ஸ் ஸூன்(லிப்ட் திறக்க அவரவர் கேபினுக்குப் போகிறார்கள்.போகிற வழியில் அங்குள்ள பெண்கள் அவனை ஏக்கமாகவூம் பிரமிப்பாகவூம் பார்க்கிறார்கள்.சட்டென்று அந்த எல்லா பெண்களாகவூமாக அங்கிதாவே அமர்ந்திருப்பது மாதிரி பிரமை.வெறுப்பாக தன் அறைக்கு வருகிறான்.அப்போது இன்டர்காமில் நிஷா அழைக்கிறாள்.)
வரு:என்ன நிஷா.இப்பதான ஆத்து ஆத்துன்னு ஆத்தின உபதேசம்.மறுபடி என்ன
நிஷா:ஒரே ஒரு பன்ச் டயலாக் சொல்லிர்றேன் வருண்.ஹீரோக்கள்தான் பன்ச் டயலாக் சொல்லனுமா.நான் சொல்றேனே
வரு:சொல்லித் தொலை..
நிஷா:உன் மனைவியை வேணும்னா நீ டிவோர்ஸ் பண்ணலாம்.ஆனா உன் காதலியை ஒருபோதும் டிவோர்ஸ் பண்ண முடியாது.அங்கிதா உனக்கு மனைவி மட்டுமல்ல.காதலியூம் கூட.கொஞ்சம் யோசனை பண்ணி முடிவெடு.டிவோர்ஸ்தான் உன் முடிவூன்னு உறுதியா இருந்தா என் அப்ளிகேஷனை முத ஆளா ஏத்துக்கா.அங்கிதா தராததை எல்லாம் நான் தருவேன்.ராக்கெட் விஷயம் உட்பட..(என்று சிரிக்கிறாள்)
                                                              
                                                           
                                                              காட்சி -4

(தன் அப்பாவின் வீட்டுக்கு இரண்டு பெண்குழந்தைகளுடன் காரில் வந்து இறங்கும் அங்கிதாவூக்கு வருணின் ஞாபகம் போகவில்லை.இதே போல்தான் பைக்கில் வந்து இறங்கினாள்.
ஐம் வருண்.நான் உங்க பொண்ணை விரும்பறேன்.விரும்பறேன் ஆகாசம் அளவூக்கு கடல் ஆழத்துக்குன்னு பொய் சொல்ல விரும்பலை.ஷீஸ் டிஸ்டர்பிங் மி இன் எவ்ரி மினிட்ஸ்.நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியா வரும்னு தோணுது.ஹவ் எபவூட் யூ அங்க்கிள்-என்று அவன் அன்று சொன்ன காட்சிகள் புலப்படுகின்றன.
உள்ளே போகிறாள்.மிட்ஷா அங்கிருந்த டெலிபோன் டைரக்டரி எடுத்து அதன் மேல் ஒரு தாளை எடுத்து வைத்துக் கொண்டு அங்கிதா-வருண் இருவரும் அணைத்துக் கொண்டு இருப்பது மாதிரி வரையத் தொடங்குகிறாள்.அவளருகில் வருகிறாள் யட்ஷா_
யட்:மம்மி இவ வரையறதைப்ப பாரு.படத்துல டாடி உன்னை கட்டிக்கிட்டு இருக்காரு.படத்துலயே உன்னை முத்தா கொடுத்துருவாரு போல.ரொம்ப கெட்ட டாடி.இத்தனை இறுக்கிப் பிடிச்சிருக்காரே.உனக்கு வலிக்கலையா மம்மி..
அங்:(அந்த தாளை வாங்கி கிழித்துப் போட விரும்பி) வேண்டாம்.நீ வரை.உன் கற்பனையை நான் கெடுக்கலை(என்று மிட்ஷாவிடம் தாளை திருப்பித் தருகிறாள்)
(அம்மா உள்ளேயிருந்து வருகிறாள்.அவள் முகத்தில் கவலை.கேட்கிறாள்)
அம்:என்ன பிரச்சனை பெரிசாம்மா அங்கிதா.நாங்க வேணும்னா வருண்கிட்ட பேசலாமா.
அங்:நோவே.நானே பிரியலாம்னுதான்நினைக்கறேன்.
அம்:ஏன்
அங்:ஐ நீட் ஃப்ரீடம் அன்ட் பீஸ்.எனக்கு நிம்மதி வேணும்
அம்:பிரிஞ்சிட்டா அது கிடைச்சிடுமா
அங்:கிடைக்காம போனாலும் போகலாம்.ஆனா வேற வழியில்ல.தினம் தினம் அந்தாள் கேலியான முகத்தோட என்கிட்ட வர்றான்.அவன் பாடிலாங்வேஜே என்னை கேலி பண்ற மாதிரி இருக்கு.நான் சம்பாதிக்கறேன்.ஐ ந்நோ எனக்கு என்ன பண்ணனும்னு தெரியூம்.வருண் மாதிரி ஆளுங்க எல்லாம் தனியா அவஸ்தை படட்டும்
அம்:ஆம்பிளைங்க அவஸ்தைப்பட மாட்டாங்கம்மா.இப்பவே அவனுக்கு பொண்ணுங்க க்யூவில நிப்பாளுங்க.
அங்:நிக்கட்டும்.ஐ டோன்ட் கேர்.இன்ஃபாக்ட் அவன் இன்னொரு கல்யாணம் பண்ணினா நான்தான் முத ஆளா போய் வாழ்த்துவேன்.அவனைப் போலவே அதே கேலியான முகத்தோடப் போய் நிப்பேன்.
அம்:சரி உன்னிஷ்டம்.நீ கவூன்சலிங் பண்ணற கட்டத்தை எல்லாம் தாண்டிட்டே.குழந்தைங்க ஏங்கிப்போயிடாம பார்த்துக்க.(என்று உள்ளே போகிறாள்)

                                                                   

                                                                        காட்சி-5

(அலுவலகத்தில் இருக்கும் வருண் தொலைபேசியை எடுக்கிறான்
யாரிடமோ பேசுகிறான்.அவன் முகம் மெல்ல மாறுகிறது.எழுகிறான்.விறுவிறுவென்று லிப்ட் நோக்கி நடக்கிறான்.வழியில் தென்பட்ட நிஷாவை அலட்சியப்படுத்தி நடக்கிறான்.லிப்ட் அவனை வாயைத் திறந்து விழுங்கிக் கொள்கிறது)

                                                       

                                                    காட்சி - 5

(வீட்டில் லானில் விளையாடிக் கொண்டிருந்த யட்ஷா மிட்ஷா இருவரையூம் அள்ளிக் கொள்கிறாள் அங்கிதா)
அங்:வாங்க போகலாம்
யட்:எங்கம்மா.ஷாப்பிங்கா?எனக்கு பார்பி வாங்கனும்.அப்படியே ஒருமேக்அப் கிட்
மிட்;எனக்கு க்ரையான்ஸ் கிட்
அங்:இல்லை.வீட்டுக்குப் போறம்.
யட்:(குறும்பாகப் பார்த்தபடி மிட்ஷாவிடம் கண்ணடித்தபடி) யூமீன்
அந்தாள்கிட்ட..
அங்:ஆமாண்டி.கேலி பண்ணுங்க.அந்தாள்கிட்டதான்.அந்த வருண் தடியன்கிட்டதான்.
(அவர்களை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு வேகமாக காரை ஓட்டுகிறாள்.ஒரு இடத்தில் டிராபிக் விதிகளை மீறிக் கொண்டு வேகமாக விரட்டுகிறாள்.ஆனால் எந்த சார்ஜன்ட்டும் அவள் மீது ஆக்க்ஷன் எடுக்கவில்லை)
                                                                  

                                                               காட்சி - 6

(கார் அபார்மன்ட் பார்க்கிங்கில் நிற்கிறது.நிசப்தம்.அங்கே யாரும் இல்லை.மேலே பார்க்கிறாள்.ஏழாவது மாடியில் சிட்அவூட்டில் வருண் நிற்கிறான்.சிரிக்கிறான் மென்மையாக.முகத்தில் கேலி இல்லை.உண்மையான அன்பு தெரிகிறது.லிப்டில் ஏறிகிறார்கள்.
அதே லிப்டில் அவனே அவர்களை அழைத்துப் போக வந்திருக்கிறான்.வீட்டினுள் அவர்களை அணைத்தபடி அழைத்துச் செல்கிறான்.
யட்:ஏயப்பா.ஸினேரியோ தப்பா இருக்கே.உடனேவா ரெண்டு பேரும் திருந்திட்டிங்க.இல்லை மறுபடி சண்டை போடறதுக்கான ப்ளானா..மம்மி க்ரான்ட்மா அட்வைஸ் பண்ணாங்களா.
வரு:இவ யார் அட்வைசையூம் கேட்கமாட்டா.எல்லாரும் எதிர்க்க எதிர்க்க என்னை பிடிவாதாமா கல்யாணம் பண்ணினவ.எனக்கும் யாரும் அட்வைஸ் பண்ணினா பிடிக்காது.
அங்:இந்த பெரிய மனுஷி மாதிரி பேசறதை முதல்ல விடுடி
யட்:அப்ப நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை போடறதை முதல்ல விடுங்க பார்ப்பம்
அங்:சரி க்ரான்ட்மா.
வரு:ஓயெஸ் ஓல்டு லேடி..(அனைவரும் சிரிக்கிறார்கள்.மெல்லிய பாடல் ஒலிக்கிறது.கிடார் எடுத்து வைத்துக் கொண்டு அதை ட்யூன் செய்து கொண்டிருக்கிறான் வருண்.அப்போது தொலைபேசி ஒலிக்கிறது)
வரு:என்ன பாலு.தெரியூம்.ஐ ந்நோ.நாங்க சமாதானமெல்லாம் ஆகலை.இது வேற ஒரு விஷயத்துக்காக
பாலு:நீ வரலையா
வரு:வரலை.அங்கிதா இப்ப இங்கதான் இருக்கா.அவ அம்மா வீட்ல இருந்து வந்துட்டா.நாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடப்Nபுhறம்.லாஸ்ட் சப்பர்போல(சிரிக்கிறான்.அங்கிதா அவனை கவலையூடன் பார்க்கிறாள்)
அப்புறம்...
(சேர்ந்து சாப்பிடுகிறார்கள்.சிரிக்கிறார்கள்.யட்ஷாவையூம் மிட்ஷாவையூம் துரக்கிப் போட்டுப் பிடிக்கிறான் வருண்.அங்கிதாவை இறுக அணைத்துக் கொண்டு("பசங்களா கண்ணை மூடிக்கங்க.நான் இந்த ராட்சசியை கிஸ் பண்ணப் போறேன்என்கிறான";)
அப்புறம்...
(படுக்கையறைக்கு வருகிறார்கள்.லிரில் சோப் விளம்பரம் போல அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் பட்டுக் கொண்டு அணைத்துக் கொண்டு உருண்டு புரள்கிறார்கள்.வருண் அவர்களை இறுக அணைத்துக் கொள்கிறான்.அங்கிதா படுக்கையிலிருந்த டிவி ரிமோட்டை எடுத்து டிவியை உயிர்ப்பிக்கிறாள்)
டிவியில் ஸ்க்ரோளிங் ஓடுகிறது.


-அரசாங்கம் எமர்ஜென்சி அறிக்கையை வெளியிட்டு விட்டது.தற்போது ஏற்பட்ட சுனாமியால் இரண்டு அணுமின்உலைகள் தாக்குதலுக்குள்ளாகி ரேடியேஷன் கசிவூ ஏற்பட்டு விட்டதை தடுக்க முடியவில்லை.நகரமே காலியாகிக் கொண்டிருக்கிறது.அனைவரும் இன்னும் சில மணிநேரத்தில்அணுக்கதிர்வீச்சில் தாக்குதலால் தப்பிக்கவே முடியாமல்  இறந்து போவார்கள் என்பதை வருத்தத்துடன் பிரதமர் அறிவிக்கிறார்...
வரு:எதுக்கு தனித்தனியா சாகனும்..வா.இன்னும் பக்கத்துல அணைச்சாப்ல உட்கார்ந்துக்க.(அங்கிதா அவனை கண்ணீர் துளிர்க்க அணைத்துக் கொள்கிறாள்.யட்ஷாவூம் மிட்ஷாவூம் தத்தமது பார்பி பொம்மைகளை நெஞ்சோடு அணைத்துக் கொள்கின்றன)

                                                             (முற்றும்)
Previous
Next Post »