"வலை...: விஜயநிலா





உள்ளே போவதற்கு முன்:என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.என் பெயர் கூகுளன். அதற்காக 'ட்விட்டி' என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்டுள்ள பெண்கள் யாரும் என்னை சைட் அடிக்க வேண்டாம்.பெயர் புதிதாக இல்லை?நானும் புதிதானவன்தான்.நான் செய்து வைத்திருக்கிற காரியம் யாரும் யோசிக்காதது.நான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கு காரணம் இருக்கிறது.இந்த உலகத்தில் யாரும் யாருடனும் மனம் விட்டுப் பேச முடிவதில்லை.அப்படியே ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களுக்குச் சென்றாலும் ஷோபாசக்தி-தமிழச்சி இல்லையென்றால் புத்தகவிழாக்கள் நடத்திக்கொள்கிற எழுத்தாளர்கள் போன்ற சிலர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”................” போன்ற சில நல்ல நண்பர்கள் கூட அவர்களுக்கு பிடிக்காததை எழுதினால் 'அன்ஃப்ரன்ட்' செய்து விடுவேன் என்று மிரட்டல் அடி விடுக்கிறார்கள்.அதனால்தான் நான் அதை தொடங்கினேன்.அது என்ன என்பதை நீங்களே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.நான் இப்போது விலகிக் கொள்கிறேன்.ஆனால் கதையின் கடைசியில் கௌரவவேடத்தில் நடிக்கும் கமல்ஹாசன் போல மறுபடி வருவேன்.அப்போது உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.
                    ---------------------


நித்யா அழகாக இருந்தால் என்றால் நான் உலகமகா பொய் சொல்கிறேன் என்று அர்த்தம்.அவள் உலகமகா அழகாக இருந்தால்.சற்றே செக்ஸியாகவூம்.அந்த கண்களை சற்று நேரம் பார்த்தீர்களால் உங்களுக்குக் கூட ஹார்மோன்கள் துடிக்க ஆரம்பித்து விடும்.ஒரு பன்னாட்டு வங்கியில் கம்ப்யூட்டர்களை கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறாள்.ஃபங்கஷனல் மேனேஜர் என்று பெயர்.ஆனால் எல்லா வேலைகளையூம் செய்ய வேண்டும்.வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்து கண்களை மூடினால் கம்ப்யூட்டர் எழுத்துக்களாக தெரிகின்றன.பக்கத்தில் படுத்திருக்கும் வீராவை காணாமல் பல இரவூகளில் எழுந்து போய் பார்த்தால் சிட்அவூட்டில் அமர்ந்து சிகரட் பிடித்துக் கொண்டிருப்பான்.இல்லையென்றால் மைக்கல்க்ரைக்டனை படித்துக் கொண்டிருப்பான்.அவன் அருகே போய் ஒரு முறை கேட்டிருக்கிறாள்.
"வீரா.யூ ஸ்டில் லவ்மி"
"ஏன் சந்தேகம் நித்யா.இன்னைக்கு குறைவா முத்தம் தந்துட்டேனா"
"சே.அதில்லைப்பா.எதுக்காக இப்படி கழுத்து சுளுக்கின வான்கோழி மாதிரி சிட்அவூட்ல வந்து உட்கார்ந்துக்கற.ஆபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமா"
"ப்ராப்ளமா.ஹ.அதுக்கெல்லாம் தீர்த்து வைக்க தர்ட்பார்ட்டி எக்ஸ்பர்ட் இருக்காங்க.எனக்கொன்னும் இல்லை.ஐம் ஆல்ரைட்.நீ போய் துரங்கு.இல்ல உனக்கு இப்ப வேணுமா"
"ச்சே.ஸாரி.மறந்துட்டேன்.பொதுவா இதுக்கு ச்சீய்னுதானே சொல்லனும்.அதான தமிழ்ப்பண்பாடு.குட்நைட் வீரா.நான் துரங்கப்போறேன்.வந்து படு சீக்கிரம்"என்றிருக்கிறாள்.
ஆனால் வீரா என்ற வீரராகவன் முன்பு போல இல்லை என்று தெரிந்தது.
 இதற்கு சம்பந்தமில்லாத பெங்களுருவில் இன்னோர் இடம்.அங்கே ஒரு காபிஷாப்பில் அமர்ந்திருந்த ஆத்மா தன் லாப்டாப் திறந்து பார்த்து விட்டு புன்னகைத்தான்.
"குட்.இந்த வெப்சைட் நல்லா இருக்கு.எத்தினி நாளைக்குத்தான் வெறும ஃபேஸ்புக்லயூம் டிவிட்டர்லயூம் நோண்டிட்டு இருக்கறது.ஐ மஸ்ட் ஜாய்ன் டு திஸ் சைட் பேபி"என்றான் சப்தமாக.
சீருடை அணிந்து அருகே வந்து காப்புசீனோ வைத்து விட்டு அகன்ற பெண் பெரிய கண்களால் அவளை பெரிதாகப் பார்த்து விட்டு சைட் அடிக்கலாமா என்று யோசித்து சட்டென்று அங்கே உள்ளே வந்த கல்லுரரி மாணவர்கள் கூட்டத்தைப் பார்த்ததும் ஆத்மாவை நிராகரித்து விட்டு அவர்களிடம் சென்றாள்.
ஆத்மா இன்னும் வந்த வலைமனையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"கூகுளம்-இது உங்கள் இல்லம்"என்றிருந்தது வெளுப்பான திரையில்.
அதிக கிராஃபிக்ஸ் இல்லாமல் சன்னமான எழுத்துக்களில் வா வா என்று வரவேற்றது.
'கூகுளம் உங்களை வரவேற்கிறது.
நீங்கள் விரும்பினால்
புதிதாக
ஒரு 'விர்ச்சுவல் இல்லம் அமைத்துக் கொள்ளலாம்.கணவனாகவோ மனைவியாகவோ குழந்தையாகவோ முதியவராகவோ யார் வேண்டுமானாலும்இங்கே சேரலாம்.நீங்கள் ஆணாக இருந்தால் உங்களை கணவன் என்று அறிவித்து இணைந்து கொண்டால் உங்களுக்கு மனைவி குழந்தைகள் அப்பா அம்மா மாமனார் மாமியார் தேவை என்று அறிவிப்போம்.அதைப் பார்த்து யாராவது வந்து அந்தந்த ரோல்களில் இணைவார்கள்.அவர்களிடம் நீங்கள் கம்ப்யூட்டர் திரைவாயிலாக 'விர்ச்சுவலாக' குடும்பம் நடத்தலாம்.
கவனியூங்கள் மறுபடி.எல்லாமே 'விர்ச்சுவலாகத்தான்'.எதுவூம் நிஜமாக கிடையாது.
நீங்கள் உங்கள் விர்ச்சுவல் மனைவியையோ விர்ச்சுவல் கணவனையோ அல்லது உங்களது விர்ச்சுவல் குடும்ப உறுப்பினரையோ எக்காரணம் கொண்டும் நேரில் சந்திக்க கூடாது.
நீங்கள் அனுப்பும் ஃப்ரொபைல் படத்தில் உள்ள உங்களது கண்களை மட்டும் நிசமாக வைத்துக் கொண்டு உங்களது முகத்தை அப்படியே மாற்றி விட்டுத்தான் வெளியிடுவோம்.அதனால் உங்களை யாருக்கும்அடையாளம் தெரியாது.நீங்களும் யாரையூம் அடையாளம் காண முயற்சிக்கக் கூடாது.
அப்படி நீங்கள் யாரையூம் நேரிலோ மின்னஞ்சல் வாயிலாகவோ வேறு முறையிலோ தொடர்பு கொள்ள முயன்றால் உங்களது விர்ச்சுவல் இல்லத்திலிருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள்.எப்படி ஒரு வீட்டில் நீங்கள் குடும்பம் நடத்த விரும்புகிறீர்களோ அது போல நீங்கள் வாழப் பிடிக்காமல் இறந்து போக விரும்பினாலும் 'விர்ச்சுவலாக' இறந்தும் போகலாம்.உங்களுக்கான மரண அறிவிப்பை விர்ச்சுவல் உலகில் அறிவிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலியூம் அறிவிப்போம்.ஆக நீங்கள் உயிரோடு இருந்து கொண்டே விர்ச்சுவல் உலகில் இறந்து போகலாம்.இதனால் தற்கொலைகள் உலகில் தடுக்கப்படும்.விர்ச்சுவல் குடும்ப உறவால் அடல்ட்ரி போன்ற சமாச்சாரங்களும் தடுக்கப்படுவதால் நீங்கள் இந்த விர்ச்சுவல் உலகை நிறையவே விரும்புவீர்கள் என்று "கூகுளத்தில்" அறிவிக்கப்பட்டிருந்தது.
 அதைப் பார்த்த ஆத்மா மறுபடி விசிலடித்தான்.
காரணம் அவனது விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவனுக்கு தொல்காப்பியன் என்ற பெயர் சூட்டப்பட்டு விர்ச்சுல் உலகில் ஒரு குடும்பம் தயாரிக்கப்பட்டிருந்தது.தஅவனுக்கான விர்ச்சுவல் மனைவி தேவை என்றும் அந்த கூகுளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தொல்காப்பியன். 

என்ன ஒரு பெயர்.அப்படியானால் எனக்கு வரப்போகிற மனைவியின் பெயரென்ன கோப்பெருந்தேவி என்று இருக்குமா என்று விசிலடித்தான்.
காபிஷாப் பெண் அருகே வந்து பெரிய கண்களால் முறைத்து விட்டு கேட்டாள்.
"இன்னொரு கோப்பை வேணுமா.என்ன சொன்னீர்கள் சார்"
"சார் என்று சொல்லாதே.எனக்கு வயசான மாதிரி இருக்கு.நான் குடும்பம் நடத்த..ஸாரி கல்யாணத்துக்கு பொண் தேடிட்டு இருக்கேன்.உன்னை மாதிரி பெரிசா இருக்கற..ஐமீன் கண்ணை சொன்னேன்.பொண்ணு கிடைச்சா கிளிமஞ்சாரோ பாடலாம்"என்று எழுந்து விசிலடித்தபடி வந்தான் தொல்காப்பியன்.
 மொபைல் போன் வழியாக கூகுளம் வலைத்தளத்திற்கு வந்திருந்தாள் நித்யா.
அங்கே தொல்காப்பியனின் வீட்டில் மனைவிக்கான இடம் காலியாக இருப்பதைப் பார்த்தாள்.தன்னுடைய விபரங்களையூம் புகைப்படத்தையூம் அனுப்பினாள்.உடனே இன்பாக்சிற்கு பதில் வந்து விட்டது,'வணக்கம்.உங்களுக்கு எழிலரசி என்று பெயர் சூட்டியிருக்கிறௌம்.இப்போதிலிருந்து நீங்கள் திரு.தொல்காப்பியனின் விர்ச்சுவல் மனைவி.நீங்கள்உங்களது விர்ச்சுவல் கணவரை இந்த பிரத்தேய சாட் வழியாக தொடர்பு கொள்ளலாம்.ஆனால் நிஜமான எந்த விபரங்களையூம் கொடுக்கக் கூடாது.கொடுத்தால் நீங்கள் விர்ச்சுவல் இல்லத்திற்கு மறுபடி வர முடியாது.'
நித்யா என்ற எழிலரசி ஆர்வமானாள்.
தொல்காப்பியனை தொடர்பு கொண்டாள்.
'இட்ஸ் ஜஸ்ட் அமேஸிங் எழில்.எனக்கு அழகான புரிதலுள்ள மனைவி கிடைத்திருக்கிறாள்.இந்த நாள் இனியதுதான் போலும்"
'வணக்கம் கணவா.ஐ லவ்யூ'
'நீ எங்கே இருக்கிறாய் எழில்"
"ஏன் இந்த பிரபஞ்சத்தில்தான்'
"அது தெரியூம்.ஒரு குறிப்பு கொடுக்கக் கூடாதா"
"வேண்டாம்.நம் உரையாடல்கள் கூகுளத்தால் கவனிக்கப்படுகிறது'
'சரி ஒரு கவிதை சொல்'என்றதும் புரிந்து கொண்டாள் நித்யா.அவன் சங்கேதமாக சொல்லச் சொல்கிறான்.எதிர்மறையாகவே தகவல்களை அனுப்புவோம் என்று முடிவூ செய்தாள்.
 'அடுக்கு மாடியில்
சொடுக்கு போட்டாலும்
ஆள் வராத தனிமை
கொல்கிறது
என்னை
ஆறு மனமே ஆறு
அடையாத காதல்
கிராமத்தை எதிர்க்காதே
காந்திக்கும் பிடிக்காது
மூன்றையூம் ஐந்தையூம்
எந்நாளும் கூட்டாதே
தனிமை
மிகக்கொடுமை
அதுவூம்
பகல்நேரத்து தனிமை
மிக மிக கொடுமை'-
என்று ஒரு கவிதையை அடித்து அவனுக்கு அனுப்பிளாள் எழிலரசி.
அதைப் படித்த தொல்காப்பியன் பதிலுக்கு ஒரு கவிதையை அவளது சுவற்றில் வால்போஸ்ட் செய்தான்.


'பூமிக்கு வந்த
புதிய மனைவியே
முத்தங்கள் ஆயிரம்
எந்நாளும் வரமாட்டேன்
உன்னைத் தேடி
நாளைக்கும் வரமாட்டேன்
எதிர்பார்க்காதே
வரவே மாட்டேன்
வேலை
என்னை தின்கிறது
வேறென்ன சொல்ல
இப்படியே
விர்ச்சுவலாக
குடும்பம் நடத்துவோம்'என்று கவிதை அடித்திருந்தான்.
அதன்பின் தொல்காப்பியன் அவள் அனுப்பிய கவிதை டிகோட் செய்யூம் நோக்கில் ஆராய்ந்தான்.எதிர்மறையாகவே தனது முகவரியை அவள் தந்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
ஆறு மனமே ஆறு.அதன் அடுத்த வரி அடையாத காதல்.
அப்படியென்றால் அந்த ஏரியாவின் பெயர் 'அடையாறு'
க்ரேட்.அடுத்து என்ன எழுதியிருக்கிறாள்?
கிராமத்தைப் எதிர்க்காதே
 என்றால் கிராமத்திற்கு எதிர்ப்பதம் நகர்.அப்படியானால் அங்கே அடையாறில் ஏதோ ஒரு நகரில் இருக்கிறாள்.காந்திக்குப் பிடிக்காத என்று ஏன் அவரை வம்புக்கு இழுக்கிறாள்.காந்தியிடம் என்ன இருக்கிறது.உப்பு சத்தியாகிரகம்.ராட்டை.அப்புறம் அவர் மனைவி?கரெக்ட்.அதுதான் அங்கேதான் க்ளு இருக்கிறது.அவர் மனைவியின் பெயர் கஸ்துரரிபாய்.அதாவது இந்த எழிலரசி கஸ்துhரிபாய்நகரில் அடையாறில் இருக்கிறாள்.
அங்கே ஏதோ ஒரு அபார்மன்ட்டாக இருக்கலாம்.எதற்காக 3ஐயூம் 5ஐயூம் கூட்டாதே என்கிறாள்.அப்படியானால் அது 4வது ப்ளோராக இருக்கலாம்.ஆனால் எந்த அபார்ட்மன்ட் என்று சொல்லாமல் விட்டு விட்டாளே.எப்படி அவளிடம் கேட்பது.நம் சாட் உரையாடலை கூகுளம் கவனிக்குமே.
அன்றிரவூ முழுக்க துரக்கமில்லாமல் தவித்தான்.பக்கத்தில் படுத்திருந்த மனைவியை பார்த்தான்.இவளுக்குத் தெரியூமா எனக்கு 'புதிதாக கல்யாணமாகியிருக்கிறது'என்று?
எழுந்தான்.
ஒரு குளியல் போட்டு விட்டு வரலாம் என்று ஷவரை திருகினான்.
குளித்து விட்டு வந்து லாப்டாப் திறந்தான்.
'ஏனென்று தெரியவில்லை.எதுவூம் புரியவில்லை.என்ன வாழ்க்கையோ"என்று தகவல் அனுப்பினான் எழிலரசிக்கு.அவன் தவித்துக் கொண்டிருக்கிறான் என்று சிரித்துக் கொண்டிருந்த அவள்
"என்கு இந்த பாடல் மிகவூம் பிடிக்கும்"என்று அடித்தாள்.
"எந்த பாடல் எழில்"
"வெள்ளிக் கொலுசு மணி"


"எனக்கும்"என்று லாப்டாப்பை மூடிவைத்த தொல்காப்பியன் புன்னகைத்துக் கொண்டான்.அந்த வெள்ளிக்கொலுசில்தான் இருக்கிறது மேட்டர்.



அடையாறில் கஸ்துhரிபா நகரில் சில்வர் என்ற பெயரில் ஏதாவது அபார்ட்மன்ட் இருக்கிறதா என்று தேடினான்.
சில்வர் கேஸில் என்றொரு அபார்ட்மன்ட் இருந்தது.
கரெக்ட்.
அதுதான் அந்த எழிலரசியின் இடம்.
மறுபடி செய்தி அடித்து அனுப்பினான்.
'எனக்குள் எதுவூமில்லை.உனக்குள் என்னை புதைத்து விடவா"
"வேண்டாம்.நான் காத்திருக்க மாட்டேன்"
"அனலாக தவிப்பாக இருக்கிறது"
"அதனால் என்ன.உன்னிடத்திலேயே இரு."
"ஒருநாள்?'
"ஒருநாளுமில்லை.குட்பை"என்று இணைப்பைத் துண்டித்தாள்.
எழிலரசி எப்போதுமே எதிர்மறையாகத்தானே பேசுவாள்.அதனால் காத்திருக்கிறாள்.அவளுக்கும் தவிப்பாக அனலாக இருக்கிறது.ஒருநாள்வா.வந்து என்னுடன் காமம் வைத்துக் கொள் என்று அனுமதி கொடுக்கிறாள் என்பது புரிய நெட் வழியாக ஜெட்ஏர்வேஸில் பெங்களுருவிலிருந்து சென்னைக்கு டிக்கெட் புக் செய்தான்.
மறுநாள் ஆபீஸ் வேலை என்று மனைவியிடம் புளுகி அழுத்தமாய் முத்தமிட்டு விட்டு கிளம்பினான்ஆத்மா என்ற தொல்காப்பியன்.
"இன்னிக்கா கான்ஸ்பரன்ஸ் பெங்களுர்ல.அவசியம் போகனுமா வீரா"என்ற நித்யா அவனை முத்தமிட்டு அனுப்பினாள்.
கதவை தாழிட்டாள்.
தொல்காப்பியன் வரப்போகிறான்.


என் விர்ச்சுவல் கணவன்.
இன்றைக்கு எங்களது முதல் உறவூ.முதலிரவூ.சே.இது பகல்.எதுவாய் இருந்தால் என்ன.ஐ நீட் எக்ஸ்ட்ரா கிக்.
வா மன்மதா வா.
கதவில் அழைப்புமணி ஒலித்தது.
கதவூ திறந்த நித்யா என்ற எழிலரசி இன்பமாக அதிர்ந்தாள்.
வெளியே ஆத்மா என்ற தொல்காப்பியன் நின்றிருந்தான்.
"வாங்க.வாங்க.ஐம் ஜஸ்ட் த்ரில்டு..கம்..திஸ் இஸ் யூவர் ஃவொய்ப்.என்ன சாப்பிடறிங்க"
"உன்னை"என்றான்.
"அது அப்புறம்.நானே தர்றேன்.இப்ப ஹாட் ஆர் கோல்ட்.எது வேணும்"
'எப்பவூமே ஹாட்தான்.எ கப் ஆஃப் காபி இஸ் எ குட் மேட்"
காபி கலந்து கொண்டு வந்தபோது அவளை தொட்டான்.
"வாங்க பெட்ரூமுக்குப் போயிரலாம்"
"நீ நிசமாவே எழிலரசியா"
'உங்க பேரென்ன தொல்காப்பியன்னு.கூகுளத்துல வைச்சி விட்டாங்களா.சகிக்கலை பேரு."
"இரு சொல்றேன்"என்பதற்குள் கதவூ தட்டப்பட எழுந்தாள்.
"கொரியர் எவனாவதா இருக்கும்"
கதவூ திறந்த எழிலரசி திகைத்துப் போய் நின்றாள்.
உள்ளே வந்த அவன் ஒடிசலாய் கோணலாய் சிரித்தபடி நின்றான்.
"ஹாய் நான்தான் கூகுளன்.சொன்னபடி வந்துட்டேன்ல.உட்கார்ந்து பேசுவமா"
"யா..யாரு நீ..இது ஏதாவது ஜேம்ஸ்ஹாட்லிசேஸ்தனமா?நான் ஏதாவது ட்ராப்ல இருக்கேனா..தொல்காப்பியன்உன்ஆளா"
"சே.சே.ரொம்ப மலிவா யோசிக்காத.கூகுளத்தை ஒரு உன்னதமான நோக்கத்தோட உருவாக்கினேன்.அதோட நோக்கமே தனிமையை தவிர்த்தல்.கள்ள உறவூகளை தடுத்தல்.குடும்ப அமைப்பை நேசிக்கற தன்மை உருவாக்கறதுன்னு.ஆனா இதிலயூம் சிலபேரு அடல்ட்ரி பண்ணறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு தெரியூம்.அப்படி யாரும் செஞ்சா அவங்களை எலிமினேட் செய்யனும்னும் தெரியூம் எனக்கு"
"எ..எப்படி தெரியூம் நாங்க சந்திக்கறது"
"யூந்நோ.என்னோட பலமே கீவர்ட்ஸ்ங்கற குறிச்சொற்கள்தான்.அதை வைச்சித்தான் நானும் என் வலைத்தளமும் பிரபலமாச்சு.நீங்க அனுப்பின கவிதைகளை அக்கக்கா பிரிச்சி கீவர்ட்ஸ் இருக்கான்னு டிகோட் பண்ண என்கிட்ட சாப்ட்வேர் இருக்கு.அது காட்டிக்கொடுத்துடுச்சி"
'எ.என்ன பண்ணப் போற"
"இது எலிமினேஷன் ரவூண்டு.இப்ப உங்க ரெண்டு பேரோட மரணஅறிவிப்பை கூகுளத்துல போடனும்"
"விர்ச்சுவலாதான.நாங்க விலகிக்கறம் கூகுளத்துல இருந்து"
"ஸாரி.சில சமயங்கள்ல விர்ச்சுவலா இல்லாம நிஜமாதான் செய்ய வேண்டியிருக்கு"என்று துப்பாக்கியை உயர்த்தினான் அவன்.

                                                -----------------------
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
September 17, 2015 at 11:40 AM ×

இன்னொரு சுஜாதாவா?...

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar