மாற்று சினிமாவூம் ஏமாற்று சினிமாவூம்...



   விஜய் டிவியில் இந்த தரம் தீபாவளிக்கு "மாரிமாரி" (அதாவது இரண்டு தரம் வி.டி.யில் மாரி படம் போட்டார்கள்) பார்த்தபோது இது என்ன மாதிரியான படம் என்று விமர்சகர்கள் வரையறுப்பார்கள் என்ற சந்தேகம் வந்தது.நல்ல படம் என்றால் படம் முழுக்க அழுக்கானவர்களைக் காட்ட வேண்டும்.குப்பமோ சேரியோ டெம்ப்ளேட்டாக இருந்தாக வேண்டும்.கதாநாயகன் (அ) ள் தோற்றுப் போனவராக இருந்தாக வேண்டும்.படம் முழுக்க காட்டடி வயலன்ஸ் இருக்க வேண்டும்.மொடாக்குடியர்களும் சாராயக்கடைகளும் வலிந்து இடம் பெற வேண்டும்.இவைதான் ஒரு நல்ல படத்திற்கு அடையாளம் என்று வரையறுத்து விட்டார்கள்.இதை விட நாட்டை நல்ல விதமாக காட்டிக் கொண்டிருந்த கதிர் எடுக்கும் ரொமான்ஸ் படங்கள் தேவலாம்.மாற்று சினிமாக்கள் ஒரு ஓரம் என்றால் கமர்ஷியல் என்கிற ஏமாற்று சினிமாக்கள் இன்னொரு ஓரம் இருக்கிறது.
 படிக்கிற காலத்தில் இன்ஜனியரிங் மெக்கானிக்ஸை ஒழுங்காகப் படித்திருந்தால் நானும் ஒரு ஹீரோ ஆகியிருக்கலாம் என்பது சன்லைஃப்பில் பார்த்த ராமராஜன் படத்தில் புரிந்தது.
 எம்ஜியார் கூட ஒரு சமயத்தில் ஒரு பெண்ணைத்தான் கற்பழிப்பிழிருந்து காப்பாற்றுவார்.இதில் ரா.ரா. ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை அட் எ டைம் கற்பழிப்பிலிருந்து காப்பாற்றுகிறார்.
 எப்படி என்று பார்த்தால் நீங்கள் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும்.
 துறைமுகப்பகுதியில் ஒரு ஏரியா.அதில் கன்டெய்னர்கள் இருக்கும் பகுதியில் இரண்டு வில்லர்கள் ஆளுக்கு ஒரு அபலைப் பெண்களை எதிரெதிரே இருக்கிற கன்டெய்னர்களின் உள்ளே இழுத்து சரசரவென்று உடைகளை பிடுங்க எறிய இருக்கும்போது ரா.ரா வருகிறார்.
 சப்தம் கேட்கிறது.
 ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை.ஒரு நீண்ட தாம்புக் கயிற்றை எடுத்து அதனை இரண்டு எதிரெதிர் கன்டெய்னர்களின் கதவூகளில் கட்டுகிறார்.எத்தனை மாடுகளை இழுத்துக் கட்டியிருந்திருப்பார்.அனுபவம்!அதன்பின் தொம்மென்று கயிற்றின் நடுவே விழுகிறார்.அந்த இம்பாக்ட் தாங்காமல் ஒரு இம்பல்ஸில் கயிறு இழுபட இரண்டு கன்டெய்னர் கதவூகளும் திறந்து கொள்ள டிஷ்ஷூம் தொடர்கிறது.
 வென் த ஃபோர்ஸ் இஸ் ஆக்டிங் அப்பான் தி மிடில் ஆஃப் த பீம் என்று இன்ஜினியரிங் மெக்கானிக்ஸில் புரொபசர்கள் பாடம் எடுக்கும்போது சன்னல் வழியே கதை கவித என்று பராக்கு பார்க்காமல் இருந்திருந்தால் இந்த கற்பழிப்பிலிருந்து காப்பாற்றும் இன்ஜினியரிங் நுட்பம் புரிந்து நானும் ஹீரோ ஆகியிருந்திருப்பேன்.
 டூ லேட்!
 கமர்ஷியல் படங்களை எடுப்பவர்கள் ஆங்கிலப்படங்களை ஜெராக்ஸ் செய்வதெல்லாம் ஓல்டு பேஷன்.இப்போதெல்லாம் ஏய்!(புரிகிறதா?) என்பதற்குள் சுட்டு முருங்கை மரத்தில் ஏற்றி விட்டு விடுகிறார்கள்.தலையில் தாடி முளைத்த ஹீரோக்களை விட கமர்ஷியல் படங்களில் பின் வரிசைகளில் கச்சை கட்டி ஆடும் பெண்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள்.ஸ்பெக்டரில் கூட ஜேம்ஸ்பான்ட்டிற்கு துப்பாக்கி சுடும் வேலை தவிர காதல் செய்வதுதான் பிரதான வேலையாக இருக்கும் போலிருக்கிறது.கடைசியில் துப்பாக்கியையூம் கடாசி விட்டு காதலிக்கும் பெண்ணை பின்தொடர்ந்து சென்று விடுகிறானாம்.பார்த்துக் கொண்டே இருங்கள்.இதே போன்ற ஒரு கடைசிக் காட்சி கூடிய சீக்கிரம் தமிழ்ப்படம் எதிலாவது வந்து தொலைக்கும்.
 இப்போதெல்லாம் எந்த குறும்படத்தைப் பார்த்தாலும் இதை யாராவது முழுநீள திரைப்படமாக எடுக்காமல் இருக்க வேண்டுமே என்று பதைபதைப்பாக இருக்கிறது.ஒரு கரன்டி மாவில் ஒரு சின்ன தோசைதான் ஊற்ற முடியூம்.அதையே இழுத்து இழுத்து பெரிதாக ஊற்றினால் கதை பிய்ந்து போகும்.
 கொஞ்சநாளைக்கு தமிழ்படத்திற்கு லீவூ விட்டு விட்டு தெலுங்குப்படங்கள் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.அதில்தான் ஒவ்வொரு சீனுமே க்ளைமாக்ஸ் அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது.

Previous
Next Post »