சிறுகதை: "சாவி" -விஜயநிலா



  குனிந்து நிமிர்ந்து ஏரோபிக்ஸ் செய்து கொண்டிருந்த யவனா திரும்பினாள்.திரும்பின வேகத்தில் லேசாக குலுங்கினாள்.அலட்சியப்படுத்தி அந்த இடத்தை விட்டு ஆதித் நகரும் முன்பாக அழைத்தாள்.

"யூ கம்மான் மேன்.உன்னை எனக்குத் தெரியூம்"என்ற யவனா அழகாக இருந்தாள் என்று சொன்னால் அது பொய்.அந்த நிமிடமே அவளை கடத்திக் கொண்டு போய் விடலாம் போல கண்களையூம் இதயத்தையூம் ஹார்மோன்களையூம் பாதித்தாள்.கீழுதட்டைக் கடித்தவாறு அவள் பேசும்போது சற்றே அடல்ஸ் ஒன்லித்தனமாக யோசிக்கத் தோன்றியது.வெள்ளை நிற டிஷர்ட் அந்த ஏசியிலும் லேசாக வியர்த்து அபாயம்.ஆபத்தான வளைவூகள் என்று கோடிட்டிருந்தது.

"கம்.அப்படி உட்காருவம்.யூ வான்ட் எ கோக்"என்றாள்.
ஆதித் தடுமாற்றமாகப் பார்த்தான்.இளைஞன்.இன்ஜினியரிங் படித்தவன்.ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியில் டிரெய்னியாக இருக்கிறான்.
"நீ என்னை வேவூ பார்க்க வந்தவன்தானே.நான் யாருடன் ரகசியமாக பழகுகிறேன் என்று பார்ப்பதற்காக என்னுடைய கணவர் பாலச்சந்தர் உன்னை பணியில் அமர்த்தியிருக்கிறார்.ஆம் ஐ ரைட்"என்றாள்.
"ரைட்.ஆனால் அது எப்படி உங்களுக்கு தெரியூம் மேடம்"என்று எச்சில் விழுங்கினான்.விழுங்கியதற்கு காரணங்கள் இரண்டு.
"நாம கொஞ்சம் நேரடியாகவே பேசிரலாம்னு நினைக்கறேன்.பிசினஸ் பேசுவமா.எத்தனை நாளைக்குத்தான் தொத்தல் ஸ்பெலன்டர் பைக்ல துப்பறிவாளனாகவே வாழ்க்கையை ஓட்டுவ.நிறைய பணம் வேணுமா.பணம் மட்டுமில்ல.போனசா ஒரு நாள் என்கூட நீ டேட்டிங் பண்ணலாம்.டேட்டிங்னா எல்லாமே.யூ ந்நோ.நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு.ரொம்ப லைக் பண்ணித்தான் நான் பாலச்சந்தரை மாரேஜ் பண்ணிக்கிட்டேன்.ஆனா இப்ப ஆள் என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாருன்னு நினைக்கறேன்.

"எப்படி சொல்றிங்க மேடம்"
"மறுபடியூம் மேடமா.கடாசு அதை. கால்மி யவனா அல்லது யவன்.நீ பாலச்சந்தரை பார்சல் பண்ணனும்.முடியூமா"
"அதெப்படி.அவர் சிட்டியிலயே பெரிய பிசினஸ்மேன்னு சொல்றிங்க.ஆள் பலம் அதிகம் இருக்குமே"
"முட்டாள்.என்ன டிடெக்டிவ்யா நீ.ஆள் பலம் அதிகம் வைச்சிருக்கறவன்தான் தன்னோட பலத்தை பத்தி பெருமையா நினைச்சிக்கிட்டு அலட்சியமா இருப்பான்.பாலச்சந்தரை போடறது ஈசி.நான் நேரடியா ஈடுபட முடியாது"
"ஏன்"
"என் வலது தொடையைப் பார்க்கறியா.வெண்ணெய் போல வழுக்கினாப்ல இருக்கும்"
"யவனா.."என்று எச்சில் கூட்டி விழுங்கினான்.
"கற்பனையை உதறு.நானொன்னும் தமிழ்ப்படத்துல வர்ற பாம்பேகாரப் பொண்ணு இல்லை.என் வலது தொடையில ஒரு ஆபரேஷன் நடத்தினார் பாலச்சந்தர்.என் தொடைக்குள்ள ஒரு மைக்ரோசிப்பை வைச்சி தைச்சிருக்கார்.நான் எங்க போறேன்.யார் கூட இருக்கேன்னு அது காட்டிக் கொடுத்திடும்"
"அப்ப நாம இப்ப பேசிட்டு இருக்கறது கூட அந்த சிப் பதிவூ பண்ணி அனுப்பிட்டு இருக்குமே.என்ன செய்விங்க யவனா"
"தெரியூம் எனக்கு.ஆனா நான் யார் கூடயாவது பேசறப்பா ஒரு ஸ்க்ராப்ளர் என் கைப்பையில வைச்சிருப்பேன்.இந்த ஸ்க்ராப்ளர் நான் யார் கூட பேசினாலும் அதை பதிவூ செய்து அனுப்பறதை தடுத்திடும்"
"அப்ப நான் கிட்ட வந்து முத்தமிட்டா"
"அதையெல்லாம் கரெக்ட்டா அனுப்பிடும்"என்று சிரித்தாள்.
"அப்புறம் எப்படி யவனா..என்னை டேட்டிங் வரச்சொல்லி கூப்பிட்டே.இந்த மைக்ரோசிப் காட்டிக் கொடுத்திடாதா"
சிரித்தாள்.
"சிரிக்காத யவனா..அப்படியே சிரித்தாலும் உடம்பு அதிராம சிரி.எனக்கு காய்ச்சல் வருது பாரு"என்றான்.
"பாலச்சந்தர் ஒரு ஆசையில என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரே தவிர அவரால எதுவூம் முடியாது.ஆனா நான் யாரை வேணும்னாலும் டேட்டிங் அழைச்சுக்கலாம்.ஏன் செக்ஸ் கூட வைச்சிக்கலாம்னு அனுமதி கொடுத்திருக்கார் என் நவீனயூக புருஷன்.ஸோ காரியத்தை கச்சிதமா முடி.உனக்கு செம ட்ரீட் காத்திருக்கு"
"ஓகே.நான் யோசிக்கனும்.பாலச்சந்தரைப் பத்தின தகவல்களை சேகரிக்கனும்"
"தேவையில்லை.அவர் பத்தின கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் இந்த பென் டிரைவ்ல இருக்கு.வைச்சிக்கோ"
"இருந்தாலும் நானே தகவல் சேகரிச்சாதான் நாளைக்கு அந்தாளை போட்டுத் தள்ளறப்ப திட்டத்துல ஓட்டை ஏதும் இல்லாம இருக்கும்"
.
தன்னுடைய அபார்ட்மன்ட்டிற்கு வந்தான்.எக்ஸ்பிரஸ்ஸோவில் காபி போட்டு சாப்பிட்டான்.டிவியில் ஆடின பிரிட்டினி ஸ்பியர்ஸூக்கு வயதான மாதிரி தெரிந்தது.லாப்டாப் திறந்து பென்டிரைவ்வை செருகினான்.பாலச்சந்தர் பற்றி ஒரு ஷார்ட் ஃபிலிம் அளவூக்கு தகவல்களை தொகுத்திருந்தாள் யவனா.இதை வைத்துக் கொண்டு நாம் தனியாக தகவல்களைத் திரட்டலாம் என்று யோசித்தான்.அப்புறம் துரங்கிப்போனான்.

மறுநாள்-

அவனது மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.மிகவூம் டீசன்ட்டான ஆங்கிலத்தில் இரண்டே வரிகள்.
'எங்கே என்னை முடிந்தால் கொலை செய் பார்ப்போம்.இப்படிக்கு பாலச்சந்தர்' என்று முடிந்திருந்தது.அந்த மெயில் ஐடியை வைத்து எங்கிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்று கண்டறிய முயன்றான்.அந்த ஐடி அதற்குள் அழிக்கப்பட்டிருந்தது.
ஸோ நாம் இந்த வேலையில் ஈடுபடுவது அந்த பாலச்சந்தருக்கு தெரிந்திருக்கிறது.அப்படியானால் நம் அசைவை அந்த பாலச்சந்தர் ஆள் வைத்து கண்காணித்துக் கொண்டிருக்கலாம்.ஒரு வேளை பாலச்சந்தரும் யவனாவூமே சேர்ந்து ஏன் இந்த விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கக் கூடாது.
பணக்காரர்களுக்கு பொழுது போகாவிட்டால் இது போல ஏதாவது அட்வன்சர் என்ற பெயரில் அடாசு கேம் ஆடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான்.சட்டென்று போய் யவனாவைப் பார்த்தால் என்ன?
கிளம்பினான்.


யவனா அவளது அபார்ட்மன்ட்டில் இல்லை.அவன் கதவில் கை வைத்ததும் திறந்து கொண்டது.உள்ளே ஏதும் செத்து கிடப்பாளா.அப்படித்தானே கதைகளில் எல்லாம் காட்டுகிறார்கள்.இல்லை.அவள் அங்கு இல்லை.அவளது படுக்கையறைக்குள் ஏதாவது தடயம் கிடைக்குமா?
உள்ளே சென்றாள்.சரியான பெண்ணின் அறை.உள்ளே நுழைந்ததும் பர்ஃப்யூம் வாசனை வீசியது.வார்ட்ரோபில் புத்தம்புது உடைகள்.ப்ளோஅப்பில் பழைய பீட்டில்ஸ் டீம்.டீபாயின் மேல் ஒரு மினிலாப்டாப் இருந்தது.அதை திறந்தான்.பாஸ்வர்டு ஏதும் கேட்கவில்லை.விண்டோஸ் தானாகவே இன்டர்நெட்டிற்கு சென்றது.யவனா தனது ஹோம் பேஜாக ஃபேஸ்புக்கை வைத்திருந்தாள்.அதில் தனது சுவரில் பெரும்பாலும் காதல்கவிதைகளாக எழுதியிருந்தாள்.புகைப்படங்களில் கேமரூன் டயஸ் போல சிரித்துக் கொண்டிருந்தாள்.ஒரு கவிதை அவனை இழுந்தது.


'அவன்
 என்னை விரும்பினான்
 மணந்தும் கொண்டான்
 பின் ஏன் என்னை
 புத்தம் புதிதாக
 அப்படியே வைத்திருக்கிறான்
 நானென்ன 
 பழைய வொயின் பாட்டிலா?
 யாராவது
 திறப்பார்களா என்னை என
 காத்திருக்கிறேன்'

 சரியான அடாசு கவிதை என்று அடுத்த பக்கத்திற்கு தாவூம் முன்பு அடுத்து அவள் பதிப்பத்திருந்த கவிதை அவனை இழுத்தது.

'என்னவோ 
ரகசியமாம்
யாருக்கும் தெரியாதாம்
பா
தன் ரகசியத்தை
தனக்கு நெருங்கிய இடத்தில்
வைத்திருக்கிறானாம்
பா..அவன்தான் பா...
என்னைப் பாடாய் படுத்தும்
பா'
அப்படியானால் வெறும் கொலை மட்டும் அவள் நோக்கமல்ல.பாலச்சந்தர் அவளுக்குத் தெரியாமல் எதையோ மறைத்து வைத்திருக்கிறார்.அதுவூம் தனக்கு நெருங்கிய இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார்.
கேட்டு விடலாமா யவனாவிடம்?
"ஹலோ.நான்தான் யவனா.என்கிட்ட ஸினேரியோவை முழுசா சொல்லாம விட்டுட்டியே.உன் புருஷன் பாலச்சந்தரை வெறும் கொலை மட்டும் செஞ்சா போதுமா இல்லே அவன்கிட்டயிருந்து எதையாவது எடுக்கனுமா"
"குட்.கண்டுபிடிச்சிட்டியே.இதுக்கே உனக்கு ஒரு பக்கத்தை தரலாம்.அந்தாள் லாக்கர் சாவியை எங்கேயோ மறைச்சி வைச்சிருக்கான்.எங்கேன்னு தெரியலை.தனக்கு நெருங்கின இடத்துலதான் வைச்சிருப்பான்னு ஒரு கெஸ் எனக்கு"
"அதைக் கண்டுபிடிக்கறதும் என் அசைன்ட்மன்ட்ல இருக்கு.அப்படித்தானே.."
"குட்.புரிஞ்சிக்கிட்டியே.இப்ப இன்னொரு பக்கமும் தரலாம்.ஏதாவது தப்பிதமா கற்பனை பண்ணிக்காத.நான் கன்னத்தைச் சொன்னேன்.லேசா மீசை குத்தாம முத்தம் கொடுத்துக்கலாம் நீ."
"இது ஒரு கேசா.லாக்கருக்கு வேற சாவி தயார் பண்ண முடியாதா"
"முடியாது.அது ஃபாரின் பாங்க்.சாவிங்கறது நாம பயன்படுத்தற மாதிரியான சாவி இல்லை.அது ஒரு ஈப்ரோம் எழுதின மைக்ரோசிப்."
"காட் இட்"என்றேன்"
"என்ன"
"கண்டுபிடிச்சாச்சு"
"எப்படி"
"சுசிகணேசனுக்கு பேனர் வைக்கனும்"
"என்ன சொல்ற"
"கந்தசாமியில காண்பிச்சிருப்பாரே.அந்த வில்லன் தன்னோட பஸ்ல அதாவது தன்கிட்டத்தானே அத்தனை டாகுமன்ட்டையூம் மறைச்சி வைச்சிருப்பான்.அது போல உன் கணவன் பாலச்சந்தரும் தன்கிட்டதான் மைக்ரோசிப்பை மறைச்சி வைச்சிருப்பான்"
"குட்..ரெண்டையூம் கொடுக்கலாம்னு சொன்னேன்.இப்ப முழுசா என்கிட்ட இருக்கற இருக்கற எல்லாத்தையூம் உனக்கு தந்திரலாம்.காரியத்தை முடிச்சிட்டு வா.லெட்ஸ் என்ஜாய்"என்று சிரித்தாள் யவனா.
 பழைய கால ஸூன்கானரி மாதிரி கருப்பு உடையில் பாலச்சந்தரின் மலையூச்சி பங்களவிற்குள் வந்தான்.வெளியில் அடர் இருட்டு.பாலச்சந்தர் அந்த இரவில் வெள்ளை நிற உடையில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டிருந்தார்.
அவர் எதிரே போய் பிஸ்டல் எடுத்தான்.
சுட்டான்.
"செத்துப்போ "பா".நீதானே கவிதையில் இருந்த "பா"."என்றதும் மார்பில் இரத்தப் பொத்தல்களுடன் பாலச்சந்தர் சரிந்து விழுந்தபோது கை தட்டல் கேட்டது.
திரும்பினான்.
பின்னே பாலச்சந்தர் நின்று கொண்டிருந்தார்.

அப்படியானால் இது?
"முட்டாள் எல்லா கதையிலயூம் ஹீரோ ஜெயிக்கனும்னு ஏதாவது தம்ப்-ரூல்இருக்கா என்ன? ஒரு சாவி வைச்சிருந்தா எல்லாரும் அதுக்கு ஒரு டூப்ளிகேட் சாவி வைச்சிருப்பாங்க.ஆனா நான் சாவிக்கு பதிலா எனக்கே ஒரு டூப்ளிகேட் ஆள் ரெடி பண்ணி வைச்சிருந்தேன்.அது நல்லதா போச்சு.நீ நினைச்ச மாதிரி அந்த டூப் ஆள் உடம்பிலதான்அந்த மைக்ரோசிப் இருக்கு.ஆனா சாவி ஒரிஜினல்.ஆள்தான் டூப்.இப்ப நீ மேல போகனும்.போறியா"
"வே..வேணாம்.."
"மேல உனக்காக யவனா காத்துகிட்டிருக்காப்பா.இப்பதான் அவளை மேல அனுப்பினேன்.விஷ்க்.போயிட்டா.நீயூம் போ.உனக்கு ரெண்டும் தருவா.."என்று பாலச்சந்தர் சத்யராஜ்தனமாக(அதான் இப்ப பழையபடி தகடு தகடு ஆகிவிட்டாரே) துப்பாக்கியை உயர்த்த தோட்டாக்கள் என்னை நோக்கி புறப்பட்டு வந்தன.
          
Previous
Next Post »