கமல்ஹாசனா இப்படி செய்து விட்டார்?


 இரண்டு நாட்களாக முகப்புத்தகத்தில் ஒரு நிலைத்தகவல் அடிக்கடி பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஒரு எழுத்தாளர் காலமாகி விட்டார்.அடப்பாவமே ரக செய்திதான்.'திறமையில் வாழ்ந்தவர்' என்று ஒரு நாளிதழ் கட்டம் கட்டி செய்தித்தாளுக்குள் அவரை சமாதியாக்கியிருக்கிறது.இந்த செய்தியை சற்று அருகாமையில் சென்று பார்த்தால் வேறு விஷயங்கள்தான் எனக்குத் தெரிகிறது.ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.
அந்த எழுத்தாளர் ஒரு அரசாங்க வங்கியில் அதிகாரியாக இருந்திருக்கிறார்.எந்தக் காலத்திலும் வங்கியில் வேலை கிடைப்பது அரிதான விஷயம்.அப்படிப்பட்ட ஒரு பத்திரமான ஸ்திரமான வேலையில் இருந்திருக்கிறார் என்பது ஒரு மனினுக்கு மிகப் பெரிய விஷயம்.அடுத்ததாக அந்த எழுத்தாளர் இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார்.இதுவூம் அரிதான விஷயம்.நான் நேரில் சந்திக்க(சும்மா சந்திக்கத்தான்.வேறு காரணம் இல்லை) ஆசைப்பட்ட சில மனிதர்களில் இவரும் ஒருவர்.எனது "நான்குமுடிச்சு" ஷார்ட் ஃபிலிம் ஸ்கிரிப்ட்டில் கேபியை ஒரு கதாபாத்திரமாக (அதாவது கேபியாகவே) மூன்று முடிச்சு படத்தையே வேறு கோணத்தில் எழுதியிருக்கிறேன்.அந்த ஸ்கிரிப்ட்டை அவரிடம் நேரில் காட்ட ஆசைப்பட்டேன்.லீவிட்.விஷயத்திற்கு வருகிறேன்.கேபியிடம் இருந்த இந்த எழுத்தாளரின் கதை 13 வார சீரியலாக துரர்தர்ஷனில் வருகிறது.இதுவூம் வியப்பான அரிதான விஷயம்.டிவியில் கதைகள் வருவது அந்தக் காலத்தில் மிகவூம் கடினம்.நான் கல்லுரரி மாணவனாக இருந்தபோது துரர்தர்ஷனுக்கு ஒரு மணி நேர நாடகம் (செவ்வாய்ககிழமைககளில் ஆட்டை அறுப்பது போல மொன்னைக் கத்தியால் அறுப்பார்கள்) எழுதியனுப்பி அது குப்பைக்குப்போனபோது அகிலஇந்தியரீதியில் முயற்சியெல்லாம் எடுத்து எழுத்தாளர் சங்கத்தலைவர் விக்கிரமன் பெருமுயற்சி எடுத்து அந்த எனது நாடகத்தை டிடியில் வெளியாக வைத்தார்.கடைசியில் அந்த எனது நாடகத்தை தயாரித்தவர் எம்எஸ்பெருமாள்.அவர்தான் அவள் ஒரு தொடர்கதை படத்திற்கு கதை எழுதியவர்.எங்கு சுற்றினாலும் கேபி வருகிறார் பாருங்கள்.
 அப்புறம் கேபியிடம் கோபித்துக் கொண்டு வந்த எழுத்தாளருக்கு கமல்ஹாசன் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.கமலின் தேவர்மகன் படத்திற்கு இவர் வசனம் எழுதியதை கமல் இருட்டடிப்பு செய்து விட்டார் என்பது பற்றிய விவாதத்திற்கு நான் வரவில்லை.கமலும், சிம்புவூம் சினிமாவை உண்டு, சினிமாவை உடுத்தி, சினிமாவை சுவாசித்து ,சினிமாவிலேயே வாழ்ந்தவர்கள்.விஷயத்தை நேரில் பார்க்காமல் இது பற்றி எழுதக் கூடாது.அப்புறம் இந்த எழுத்தாளர் சொந்தமாக தானே ஹீரோவாக நடித்து வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்து கடனை அடைக்க விஆர்எஸ் வாங்க வங்கி வேலையை விட்டு விட படமும் போய் பணமும் போய் தற்போது திடீரென தன் ஐம்பதுகளில் செத்துப் போய் செய்தியாகியிருக்கிறார்.
 இந்த பதிவூ அந்த எழுத்தாளருக்கு எதிரானதோ அவரை புண்படுத்தும் எண்ணமோ கொண்ட பதிவூ இல்லை.எழுத்தாளர்கள் ஏன் சினிமாவில் தோற்றுப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்பவர்களுக்கு பதில் சொல்லும் பதிவூ இது.
 இருபது ஆண்டு காலமாக நண்பராக இருந்தார் ஒரு எழுத்தாளர்.இடையில் பத்தாண்டுகளாக இடைவெளி விழுந்து விட்டது.தொடர்பில்லை.அவரை சகோதரன் போலவே அப்போதெல்லாம் நினைத்ததுண்டு.பின் நமது நண்ப-எழுத்தாளரின் கதை ஒரு எந்திரமயமான படத்தில் கையாளப்பட்டு விட்டது.கேஸ் எல்லாம் போட்டுப் பார்த்தார்.ஒன்றும் கதையாகவில்லை.இதிலிருந்து நண்பரே எந்திரமாகி விட்டார்.இந்த முறை நவம்பர் மாதம் இவரது பிறந்தநாளுக்காக வாழ்த்த செ.பேசியில் தொடர்பு கொண்டபோது எனக்கு அவருக்கும் பல லட்சக்காணக்கான கிலோமீட்டர்கள் இடைவெளி இருப்பதை புரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் செல்பேசியை வைத்தேன்.
 இப்போது செத்துப்போன எழுத்தாளருக்கு வரலாம்.
 நம்ம ஊரில் மட்டுமல்ல.வெளிநாட்டிலும் சுயமுன்னேற்ற நுரல்கள் 30நாட்களில் முன்னேற உதவூம் நுரல்கள் எல்லாம் வெற்றி பெற்ற ஆட்களை மட்டுமே உதாரணமாகக் காட்டுகின்றன.தோற்றுப்போனவர்களைக் குறிப்பிட்டு இன்ன மாதிரி செய்யாததன் காரணத்தால்தான் இவர் தோற்றுப்போனார்(சம்பந்தப்பட்டவர்களின் நபர்கள் கேஸ்போடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் சொல்கிறேன்) என்று எழுதி வெற்றி பெற நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று யாரும் எழுதுவதில்லை.
 தபார்த்தியா.அவன் அப்படி செய்தான்.அமேஸான் இப்படி செய்தான்.அதான் வந்தது சக்ஸஸ் என்று படங்களை ரீமேக் செய்யூம் ஆசாமிகள் போலத்தான் எழுதுகிறார்கள்.
 எது செய்தாலும் இந்தக் காலத்தில் (உப்பிற்கே பிரான்ட் கொண்டு வரப்பட்டது தெரிந்ததுதானே) தண்ணீருக்கே பிரான்ட் இருக்கிறது என்பதை உணர்ந்து பிரான்டிங் செய்வதும் அதனை சரியாக மார்க்கெட் செய்வதும் நெட்வொர்க்கைப் பிடித்துக் கொள்ளவிட்டால் எத்தனை திறமை இருந்தாலும் மண்ணைக் கவ்வப்போவது உறுதி.
 திருவள்ளுவர் நல்லகாலம் இப்போது வாழவில்லை.இல்லையென்றால் அவரும் பிரான்டிங் செய்தாகவே வேண்டும்.செய்யாவிட்டால் பேருந்துகளில் அவரது குறளை எழுதியிருக்க மாட்டார்கள்.அவரே சுவற்றில் சாலைகளில் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.இதைச் சொன்னதும் திருவள்ளுவரை அவமதித்து விட்டான் என்று என் மேல் பாயாதீர்கள்.
பிரான்டிங்
பிரமோஷன்
நெட்வொர்க்கிங்
இது இல்லாத எதுவூம் போணியாகாது என்று சொல்வதற்கே இந்த பதிவூ.
அந்த எழுத்தாளருக்கு அனுதாபங்களுடன் கூடிய வருத்தங்கள்.
அதனால்தான் நான் என் வகுப்புகளில் அடிக்கடி சொல்வதுண்டு.
'Branding is breathing.Don't stop it until you stop breathing.'
Previous
Next Post »