மாறுங்கப்பா ப்ளீஸ்...



  நேற்று குமுதம் வாரஇதழ் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.குட்டியாக ஒரு காரணம் இருக்கிறது.குமுதம் பத்திரிகையில் 'படைப்புகளை தபால் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும்' என்று போட்டிருப்பதோடு அவர்களது மின்னஞ்சல் முகவரியையூம் கொடுத்திருப்பார்கள்.படைப்புகளை தபால்வழியா அனுப்புவதில் சிரமம் இருக்கிறது.காரணம் எங்கள் பகுதியில் உள்ள தபால்பெட்டிகளை எடுத்துச் சென்று விட்டார்கள்.இப்பொழுதெல்லாம் தபால்பெட்டிகள் தபால் அலுவலக வாசல்களில் மட்டுமே சிவப்பு நிறத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
 குமுதத்திற்கு மி.அ.வில் அனுப்பலாமா வேண்டாமா? என்று புரியவில்லை.சரி குமுதம்காரர்கள் க்ளவூடு 9க்கு மேலே அமர்ந்திருந்தாலும் ஆனது ஆச்சு.ஒரு வார்த்தை கேட்டு விடுவோம் என்று ஃபோன் போட்டேன்.
 முதலில் சந்தாதாரர் பிசியாக இருக்கிறார் பிறகு முயற்சிக்கவூம் என்றது கணினிப் பெண் குரல்.அதன்படியே பிறகு முயற்சித்தபோது பதினோரு மணிக்கு மேலே அழையூங்கள்.அப்போதுதான் வருவார்கள் என்றார் ஒரு பெண்.இவரிடம் கேட்கலமா வேண்டாமா?
 கேட்டேன்.
 தாராளமாக மி.அ.வில் அனுப்பலாம் என்றார்.
 எனினும் சந்தேகத்துக்கு சாம்பாராக எதையூம் இன்னொரு முறை கேட்டுக் கொள்வது திருச்சிக்காரர்களின் வழக்கம்.அதனால் பதினோரு மணிக்கு தொலைபேசியில் குமுதம் எடிட்டோரியலில் ஒருவர் அகப்பட்டார்.
 மின்னஞ்சலில் எல்லாம் அனுப்ப வேண்டாம்.நீங்கதான் ஏற்கனவே மாலைமதியில் எல்லாம் எழுதியிருக்கீங்களே.உங்களுக்கு தெரியாததா?தபால்லயே அனுப்புங்க என்றார்.
 தபால்பெட்டி சிரமத்தைச் சொன்னேன்.
 அவர் அவர்களது நடைமுறை சிரமத்தை தெரிவித்தார்.
 கதைகள் அனுப்பினால் அந்த கதைகளுக்கான ஓவியத்தை வரையக் கூடிய  ஓவியர்களுக்கு மின்னஞ்சல் பார்க்கும் வழக்கமில்லாததால் தபால்ல அனுப்பறதே பெட்;டர்!
 யப்பா!ஓவியக்காரர்களே.கொஞ்சம் மாறுங்கப்பா.
 தபால்பெட்டியில் கொண்டு போய் கதைகளை போடும்போது இருபது வருடத்திற்கு முந்தைய ஃப்ளாஷ்பேக்கில் இருக்கிறேனோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது.
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
September 17, 2015 at 12:02 PM ×

சந்தேகத்துக்கு சாம்பாராக எதையூம் இன்னொரு முறை கேட்டுக் கொள்வது திருச்சிக்காரர்களின் வழக்கம்.
யப்பா!ஓவியக்காரர்களே.கொஞ்சம் மாறுங்கப்பா.,,,,,அசத்தல்

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar