சிறுகதை: ' கண்மணி உன் காதலி..." ---விஜயநிலா


   “நாம் நண்பர்களாகப் பிரிந்து விடுவோம் கண்மணி.நமக்குள் இந்த பந்தம் வேண்டாம்.உன்னோட என்னால் ஒத்துப் போக முடியவில்லைஎன்றான் காமராஜ்.
 மூன்று வருட திருமணவாழ்வூ முடிவூக்கு வந்து விட்டது புரிந்து போனது கண்மணிக்கு.காதல் திருமணம்தான்.பெற்றவர்களை மீறி செய்து கொண்ட திருமணம்.இத்தனை நாள் தாக்குபிடித்ததே அதிசயம்.காரணம் அவனது முன்கோபம்.சுள்ளென்று தாக்குவான்.சிலமணிநேரம் கழித்து சாரி என்பான்.முகத்தைக் கிழித்துப் போட்டது போல பேசி விட்டு எப்படித்தான் இவனால் மறுபடி வந்து சிரித்துப் பேச முடிகிறதோ.
 வேலைக்கு போனது போதும் கூட மாட வந்து பிசினசை கவனித்துக் கொள் என்றான்.அவனது நிறுவனத்தில் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வந்தாள்.நிறுவனத்துடன் தொடர்பு கொள்பவர்கள் மெல்ல காமராஜைப் புறக்கணித்து கண்மணியை பேசச் சொல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தபோது அவனுக்குள் மறைவாக இருந்த தாழ்வூ மனப்பான்மை மிருகமாக எழுந்தது.
"இத்தனை நாள் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு.எதுக்கு சாப்ட்வேர் ஆட்களை மாத்தற"என்றான் ஒரு நாள் மீட்டிங் ஹாலில் அத்தனை பேர் முன்பாகவூம்.கண்மணி அமையாகச் சொன்னாள்.
"ஆரக்கிள் பயன்படுத்தறதெல்லாம் பழைய காலம்.சாப் வைச்சு சும்மா நாம ஜல்லியடிக்க முடியாது.ஆட்டோமேஷன் வேணும்"
"என்ன ஆட்டோமேஷன்.எவனாவது புது சாப்ட்வேர் கம்பெனிகாரன் வந்து டெமோ காண்பிக்கறேன்னு இளிச்சானா"என்றான் அத்தனை பேர் முன்பாகவூம்.நிறுவனத்திலிருந்தவர்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு தர்மசங்கடத்தை தவிர்க்க விரும்பினர்.
"இல்லை.நான் சொல்ற ஆட்டோமேஷன் மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன்."
"அப்படின்னா.சும்மா கதை விடாத"
"கதை விடல.இதுதான் இப்ப லேட்டஸ்ட்.இந்த மாதிரி சாப்ட்வேர்களே டிஜிட்;டலான மார்க்கெட்டிங் கேம்பைன் நடத்திரும்.க்யூஆர் கோடு டிஜிட்டல் பேனர்கள் எல்லாம் அதுவே அப்பப்ப சூழ்நிலைக்கேற்ப மாத்தி மாத்தி பண்ணிரும்.சோஷியல்மீடியாவில அதுவே கன்டன்ட் பண்ண உதவிடும்.மொபைல் ஆஃப்ஸையூம் காலத்துக்கு ஏற்ப மாத்திரலாம்"
"சரி அதுக்கு என்ன பண்ணனும்"
"நம்ம ஸ்டாஃப்க்கு டிரையினிங் தரலாம்.இல்லைன்னா வெளியில இருந்து அவூட்சோர்ஸிங் பண்ணிக்கலாம்"
"சரி என்னமோ பண்ணு"
அடுத்த வந்த காலாண்டில் கம்பெனி அடிவாங்கியது.டிஜிட்டல்மார்க்கெட்டிங்கை டீலர்கள்கள் எதிர்த்தார்கள்.உங்கள் பொருள் வேண்டாம் என்று போட்டியாளர்களிடம் போய் விழுந்தார்கள்.எதற்கும் கவலைப்பட வேண்டாம்.சாப்ட்வேர் காப்பாற்றும் என்றாள் கண்மணி.வெறுப்பாக தலையசைத்தான்.அடுத்து வந்த காலாண்டும் ஒன்றும் தேறவில்லை.இவளை முதலில் கம்பெனியை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தபோதே ஆர்டர்கள் தானாக இணையம் வாயிலாக வர ஆரம்பித்தன.வாடிக்கையாளர்களின் விசாரிப்புகளுக்கான பதில்களை தானாக சாப்ட்வேர் தொகுப்பே அனுப்பி வைக்க ஆரம்பித்தது.விடியோ கான்ஃபரன்சிங்கில் டீலர் மீட்டிங்கை நடத்தி முடிந்தவூடனேயே ரிப்போர்;ட் துல்லியமாக வந்தது.ஒவ்வொரு தினமும் நடக்கும் ஒவ்வொரு சேல்ஸ் ரிப்போர்ட்டும் பக்காவான பின்னணியூடனும் தவற விட்ட சேல்ஸை முறைப்படுத்தி விட்டதைப் பிடிப்பதற்கான வழிமுறைகளுக்கான வழிகளும் கிடைக்க ஆர்டர்கள் சென்னை வெள்ளம் போல வந்து குவிய ஆரம்பித்ததும் கம்பெனியில் இருந்த மற்ற சீனியர் அதிகாரிகள் அவளை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக பார்வையிலும் உடல்மொழியிலும் மரியாதை செலுத்தத் துவங்க துவண்டு போனான் காமராஜ்.
நீ என்ன பரிய பிசினஸ் மேக்னட்டா.உன்னால்தான் இந்த கம்பெனி வளர்ந்ததுன்னு கர்வமா
இல்லிங்க.நான் என் வேலையைத்தான் செய்தேன்
அடக்கமா பேசறதா நினைப்பா.சுருக்கமா பேசி என்னை கத்தாpக்கிறியா?”
சே.நானா இந்த வேலைக்கு வந்தேன்.நீங்கதான வரச்சொன்னிங்க
அப்ப நீ என்னைக் குற்றவாளியாக்க நினைக்கற.என் மேல பழியைத் துரக்கிப் போட நினைக்கற நீ நாளைக்கு என் மேல கல்லைத் துரக்கி போட மாட்டேன்னு என்ன நிச்சயம்
ஏன் இப்படி பேசறிங்க
பேச வைக்கற.கம்பெனியில நீதான் நம்பர் ஒன்னாமே.நம்ம கோயமுத்துர் டீலர் சொல்றான்.அப்ப நானென்ன கூஜாவா.சேலம் டீலர் உன்கிட்ட போன்லயே வழியறானே.நீ சேலத்துக்கு வந்தா ஏற்காடுக்கு போகலாம்னு சொன்னானாமே.போவியா.தனியா போவியா இல்லை அவனோட போவியா
ச்சீ என்றானது அவளுக்கு.வீட்டிலேயே இருந்திருக்கலாம்.பெண்ணை ஜெயிக்க முடியாத ஆண்கள் இரண்டு வழிகளில் அவளை அடிமைப்படுத்துகிறாகள்.நடத்தையை கொச்சைப்படுத்துவது.இல்லையென்றால் அவளுக்கு வரும் சாதாரண உடல் அசௌகர்யங்களை பெரிய வியாதியாக பூதாகரமாக்கி விடுவது.
 தன் கணவனும் விதிவிலக்கல்ல என்று புரிந்ததும் தான் இனி கம்பெனிக்கு வருவதில்லை என்று சொன்னாள் கண்மணி.அடுத்த கேள்வியில் அசிங்கத்தை தடவினான்.
அப்ப வீட்லயே இருக்கப் போற.நான் ஆபீஸ்ல இருக்கறப்ப நீ வீட்டுல.தனியா.நல்ல வசதியாப் போச்சுரா.நீ விரும்பினபடியெல்லாம்வீட்ல இருக்கலாம்.அதான் செய்தித்தாள்ல விதம் விதமா போடறானே.எதுக்கு அதெல்லாம் நாம பிரிஞ்சிடுவமே
 வக்கீலைப் போய் பார்த்தபோது அவர் வெடிகுண்டைத் துர்க்கிப் போட்டார்.அவனாக அவளை விவாகரத்து செய்தால் அவளுக்கு மாதாமாதம் ஜீவனாம்சம் தரவேண்டும்.அது மட்டுமில்லாமல் அவனது கம்பெனியில் அவள் வந்து வேலை செய்திருக்கிறாள்.நிர்வாகப்பூர்வமான முடிவூகளை எடுத்திருக்கிறாள்.அதனால் லாபத்தில் பங்கு தருவது மட்டுமில்லாமல்அவளை இனி ஸ்லீப்பிங் பார்ட்னராகப் போட்டு வருடாவருடம் லாபத்தில் பங்கு தந்துதான் ஆக வேண்டும்.பெண் என்பதால் சட்டமும் அவளை அனுதாபத்தோடுதான் பார்க்கும்.
 அதனால் மியூச்சுவல் கன்சன்ட் விவாகரத்துக்கு கையெழுத்து வாங்கி வாருங்கள் என்றார்.
 கையெழுத்து கேட்டபடி நின்றான் காமராஜ்.
எதில வேணும்னாலும் கையெழுத்துப் போடறேன்.நீங்க நல்லா இருந்தா போதும்
உனக்கு ஜீவனாம்சம்னு எதுவூம் வேணாமா
வேணாம்
அப்ப பணம் தர்றதுக்கு எவனாவது ரெடியா இருக்கானா மேடம்?”
இல்லை.பணம் சம்பாதிக்கறதுக்கு மனசில தன்னம்பிக்கை இருக்கு.உழைக்க உடல்ல வலு இருக்கு.அது போதும்
பெரிய புரட்சிக்காரின்னு நினைப்பு.ம்..
எந்தப் பொண்ணும் இதுவரைக்கும் புரட்சிக்காரியா ஆனதுல்ல.அப்படி ஆனா ஆண்களால தாங்க முடியாது.என்னை நீங்க எத்தனை இழிவா பேசினாலும் நான் உங்களை புரிஞ்சுக்கறேன்.ஏன் தெரியூமா காதலோட இன்னொரு  பெயர் புரிந்து கொள்ளுதல்.நீங்க என்னை விட்டு விலகினாலும் உங்களோட பிசினசுக்கு நான் மனப்பூர்வமா உதவத் தயார்.பிசினசுக்கு மட்டுமில்லே உங்களுக்கும் நான் உதவத் தயார்
அட இதபாறா.நாளைக்கே நான் வந்து போனாகூட நீ அனுமதிப்பே போலருக்கே முன்னாள் கணவன்கற முறையில எனக்கு வரிசையில முன்னுரிமை கூட தருவே போலருக்கேஎன்று கை தட்டினான்.
 அவன் அசிங்கமாகப் பேசினாலும் பொறுமையாக இருப்பது என்று முடிவூ செய்தாள்.அவன் நீட்டிய பேப்பர்களில் கையெழுத்துப் போட்டாள்.வாங்கிக் கொண்டு அவன் பார்த்த பார்வை இன்னும் எதற்காக என் வீட்டில் இருக்கிறய் என்பது போல தெரியவே சொன்னாள்.
ஒரு வாரம் டைம் கொடுங்க.நான் ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்ல இடம் கிடைச்சதும் வெளிய போயிர்றேன்.
பார்றா.அப்பவூம் உன் பெத்தவங்களோட சேர மாட்டே.தனியா சுதந்தரமாஇருக்கனும்கற.சரி உன்னிஷ்டம்என்று கொக்கரித்து விட்டு வெளியே போனவனை யார் சபித்தார்களோ தெரியாது அவன் கார் டயர் வெடிக்க,நிலைகுலைந்து ஒரு டாங்கர் லாரியில் மோதியபோது ஏறக்குறைய பாதி செத்திருந்தான்.
 தொலைபேசி வந்ததும் பதறாமல் எழுந்தாள்.
 மருத்துவமனைக்குச் சென்றதும் ஐசியூவில் படுக்க வைத்திருந்தார்கள்.நிறைய இரத்த சேதம்.தலைமுழுக்க கட்டு போட்டிருந்தார்கள்.விண்வெளிக்கு செல்லும் வீரன் போல உடல் முழுதும் வெள்ளையாக துணி சுற்றப்பட்டிருக்க அவனைப் பார்த்ததும் ஏனோ சிரிப்பு வந்தது.
 டாக்டர் அழைத்தாள்.
ஆபரேஷன் பண்ணனும்.இந்த பேப்பர்ல எல்லாம் நீங்க கையெழுத்துப் போடனும்
நிமிர்ந்து பார்த்தாள்.
என்ன பார்க்கறிங்க? நீங்க அவர் மனைவிதானே
ஆமா.என்ன கேட்டிங்க.மனைவி! நான் அவரோட எக்ஸிட் ஃவொய்ப்
பார்டன்.என்ன சொல்றிங்க
மனமொத்த விவாகரத்துக்கு மனுவில இன்னிக்கு காலைலதான் கையெழுத்துப் போட்டேன் டாக்டர்.என்ன முரண்பாடான வார்த்தை பாருங்க.மனமொத்தவிவாகரத்து.நீங்க ஆபரேஷனை தொடருங்க.என்ன கையெழுத்து வேணும்னாலும் போடறேன்.எத்தனை பணம் வேணும்னாலும் கட்டறேன்.கூட இருந்து பார்த்துக்கறேன்
ஸாரிம்மா.இந்த பாவியை எதுக்கு காப்பாத்தனும்.நான் ஆபரேஷன் பண்ண மாட்டேன்.வேற யாராவது பண்ணட்டும்
இல்லை டாக்டர்.இவரை ஏன் ஒரு பாவியா பார்க்கறிங்க.ஒரு மனித உடலாகப் பாருங்களேன்.நானே வருத்தப்படலை.இவர் இங்க படுத்துட்டதால கம்பெனி வேலைகளையூம் நான் டெம்பரவரியா பார்த்துதான் ஆகனும்
விடுங்க மேடம்.கம்பெனி நாசமாகட்டும்.இந்தாள் நஷ்டத்துல கிடக்கட்டும்
கம்பெனிங்கறது இவர் மட்டும் இல்லை டாக்டர்.அங்க வேலை பார்க்கற பலபேரோட குடும்பத்தையூம் அது பாதிக்கும்.நான் போறேன்.தேவைன்னா கூப்பிடுங்க.சாயந்தரம் வர்றேன்.நைட் இங்கதான் இருப்பேன்
வெளியே வந்தாள்.அலுவலகத்தில் பரபரப்பாக கிளம்பினார்கள்.
யாரும் போய் பாக்க வேண்டாம்.வேலையை சரியா செய்தா போதும்.அதுவே உங்க முதலாளியைக் காப்பாத்தும்என்றதும் தன்னை ஒரு ராட்சசி மாதிரி பார்த்து விட்டு சென்றார்கள்.காது படவே பேசினார்கள்.
இந்த பொம்பளைக்கு காசு,பணம்தான் முக்கியம்.அதனால்தான் பாஸ் இவளை கழட்டிவிடப் போகிறார் என்றார்கள்.
சிரித்துக் கொண்டாள்.
டிபிஐ என்றார்கள்.ட்ரமாடிக் ப்ரைன் இன்ஜூரி.காரின் டேஷ்போர்டில் தலை சுத்தமாக மோதியிருக்கிறது.சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருந்தால் ஏர்பேக் விரிந்து கொண்டு முட்டுக் கொடுத்திருந்திருக்கும்.காமராஜ் சீட்பெல்ட் போட மாட்டான்.பொதுவாக எந்த விதியையூமே மீறுவதற்கு விரும்புவான்.இனி இவனால் சரிவர யோசிக்க முடியாமல் காக்னிடிவ் டிஃபிசிடிஸ் வரலாம்.ஏன் இனி ஆணவத்தோடு திட்ட முடியாமல் அஃபாஷியா கூட வரலாம்.இனி இவன் வார்த்தைகளில் அமிலம் தெறிக்காது போகலாம்.நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தாள்.எஸ்எல்பியை பார்க்க வேண்டியிருக்கும் என்றார்கள் மருத்துவமனையில்.ஸ்பீச் லாங்வேஜ் பதாலஜிஸ்ட்.ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் பிழைத்துக் கொண்டான் காமராஜ்.நல்லவர்கள்தான் சட்டென்று போய் விடுகிறார்கள்.கடவூள் எதற்கு இவன் போன்றவர்களுக்கெல்லாம் தன் மிராக்கிளை வீணடிக்கிறார் என்று தோன்றியது.
நாற்பத்திரெண்டு நாட்கள் படுக்கையில் கிடந்தான்.கண்விழித்துப் பார்த்து தலையை கவிழ்த்துக் கொண்டான்.
என்னை மன்னிச்சிடு கண்மணி.நான் செய்த தவறுக்கு தகுந்த தண்டனை கிடைச்சிருச்சி
இல்லைங்க.கார்ல டயர்ல உள்ள காற்றழுத்தத்தை சரிவர கவனிக்காதது நீங்க செய்த தவறு.சீட் பெல்ட் போட்டிருந்திருக்கலாம்.அதுக்கு எப்படி யாரு தண்டனை கொடுக்க முடியூம்
நான் உன்னை உதாசினப்படுத்தினது.உன்னை விவாகரத்து பண்ணியே ஆகனும்னு அடம் பிடிச்சது.கையெழுத்து வாங்கினது
அதெல்லாம் உங்க விருப்பம்
எப்படி இருந்தாலும் தப்புதான்.டிஸ்சார்ஜ் ஆகி என்னை நீதான் வீட்டுக்கு கூட்டிகிட்டுப் போகனும்
சரிஎன்றாள்.
 பத்து நாட்களில் அவனை விடுவித்தார்கள்.கார்ல் அமர வைத்து டிரைவ் செய்தாள்.வீட்டிற்கு வந்ததும் கூசிப்போய் அமர்ந்திருந்தான்.குளிர்பானமும்,கேக்கும் கொண்டு வந்து வைத்தாள்.
சாப்பிடுங்க.நான் கிளம்பனும்
எங்க கண்மணி
என்னோட இடத்துக்கு.நான் இன்னம் சரியா சம்பாதிக்கலை.புதுசா ஒரு பிசினஸ் யோசிச்சி வைச்சிருக்கேன்.அதில பணம் சேர்ந்ததும் ஒரு அபரர்ட்மன்ட் வாங்கனும்.அது வரை ஹாஸ்டல்தான்
என்ன சொல்ற கண்மணி.நீதானே என்னை இத்தனை நாள் கண்ணும் கருத்துமா பர்த்துகிட்டே
ஆமாம்
நீதானே என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே
ஆமா
இப்ப போறேங்கறியே.இரு நான் அந்த விடுதலைப்பத்திரத்தை எடுத்துட்டு வந்து கிழிச்சிப் போட்டுர்றேன்
உணார்ச்சி வசப்படாம யோசிங்க.நீங்க கேட்டபடி நான் எப்ப கையெழுத்துப் போட்டேனோ அப்பவே நம்மளோட திருமண உறவூ முறிஞ்சாச்சு.ஆனா கையெழுத்துப் போடறப்ப நீங்க ஒண்ணு சொன்னிங்களே
என்ன சொன்னேன் கண்மணி?”
நாம நண்பர்களா பிரியலாம்னு சொன்னிங்களே.நான் உங்களோட நண்பராதான் பிரிஞ்சேன்.உங்களோட நண்பர் ஸ்தானத்துல இருந்துதான் பணிவிடை செய்தேன்.இப்பவூம் நாம நண்பர்கள்தான்.ஆனா தம்பதிகள் இல்லை.வர்றேன்.ஏதாவது தேவைன்னா செல்லுல கூப்பிடுங்கஎன்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
தவித்துப் போன காமராஜ் கேட்டான்.
கண்மணி இதுதான் உன் முடிவா?”
முடிவூ இல்லை.புரிதல்.அன்னிக்கே சொன்னேனே காதலின் இன்னொரு பெயர் புரிதல்.என்னோட காதல் எனக்கு ஒரு புரிதலைக் கொடுத்திருக்கு.ஆனா நானும் பிழைக்கனுமே.வாழனுமே.அதுக்கு ஏதாவது வேலை செய்யனுமில்லே?அதான் கிளம்பறேன்.இப்ப உங்க மனசுல இருக்கறது குற்றஉணர்ச்சி.அத்துடன் கொஞ்சமே கொஞ்சம் நன்றியூணர்ச்சி இருக்கு.ஆனா புரிதல் உங்க மனசில இல்லே.என்னிக்காவது புரிதல் உங்க மனசுல தோணுதான்னு பார்ப்போம்.அதுக்குள்ள எனக்கு வேற யார் கூடவாவது புரிதல் ஏற்பட்டுடுச்சின்னா உங்களையூம் இன்வைட் பண்ணுவேன்.வந்து வாழ்த்தனும் நீங்கஎன்ற வார்த்தைகளில்  அன்பே கனிந்திருந்தது.

                                                   ----------------
keywords;marketing automation,softwares,digital business
Previous
Next Post »