'கவித கவித'


'மழைபெய்தால்
சட்டென வந்து கடிக்கும்
கொசுக்களைப்போல
காதல் கவிதைகள்
எங்குபார்த்தாலும்
பரவிக்கிடக்கின்றன
மீசைமுளைக்கப்போகும்
பையன் முதல்
மின்மயானத்தில்
தன் முறைக்காக காத்திருக்கும்
கிழவர் வரை
ஆளுக்கு ஆள்
காதல் கவிதைகளை
எழுதித் தள்ளி விட்டார்கள்
மழைக்காளான்களை
பார்க்கும்போதெல்லாம்
நீ
குடையெடுத்துச் செல்வதே
தோன்றுகிறது
என்று எழுதி முடிப்பதற்குள்
யாராவது எங்காவது
இதை எழுதி விடுகிறார்கள்
யாரும் எழுதாத
கவிதையை
நீ
எப்போதும் எழுதிக்கொண்டே
இருக்கிறாய் கண்களால்
யாருக்கும் புரியாத
கவிதையை
நீ
பொத்தி வைத்துக் கொண்டே
என்னை
தினமும் திண்டாட விடுகிறாய்
அத்தனை கவிதைகளையூம்
விட்டு விட்டு
உன்னை
 தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்
நீ
எழுதிய கவிதையை
வாசிக்கவூம்
கொஞ்சம் யாசிக்கவூம்'
Previous
Next Post »