“சிகப்புரோஜாக்கள்” --விஜயநிலா

ஷார்ட்ஃபிலிமிற்கான
கதை,திரைக்கதை, வசனம்:


                  
                                                                      காட்சி- 1
                                                              டாக்டரின் பங்களா- இரவூ
 இரவூ.சாம்பல் பூசின மாதிரி வெளிச்சம்.நசநசவென்று மழை துரறிக்கொண்டிருக்கிறது.தொலைவில் சின்னச்சின்னதாக கார்களின் ஹெட்லைட் வெளிச்சம் வளைவான சாலையில் துரரத்தில் தெரிகின்றன.மரங்கள் அடர்ந்த பங்களாவின் உள்ளே டாப்ஆங்கிளில் காமரா நுழைகிறது.
 மின்னல் வெட்டுகிறது. சேற்றில் புதைந்த ஒரு ஸ்போர்ட் மாடல் ஹார்லே டேவிட்சன்  மழையில் கிடக்கிறது.கார் ஷெட்டில் ஒரு நாயோ,ஓநாயோ கண்கள் பளீரிட ஒளிந்து ஓடுகிறது.
 இடி இடிக்கிறது.காமரா உள்ளே காரிடாரில் நுழைகிறது.உள்ளே மழை பெய்வதே தெரியாத பங்களா.கடைசி அறையில் ஒரு சாய்வூ நாற்காலி தானாக ஆடிக் கொண்டிருக்கிறது.
 துரரத்தில் வந்து கொண்டிருந்த கார்களின் சேறு படிந்த கருப்பு நிற டயர்கள் இப்போது சற்று அருகாமையில் தெரிகிறது.அவை போலீஸ் கார்கள் போல தெரிகின்றன.
 மின்னல் இப்போது சன்னல் வழியாக நுழைந்து சுவரில் இருக்கிற கடிகாரத்தின் கண்ணாடியில் பட்டுத் தெரிக்கிறது.
 உள்ளே-
 அந்த மனிதரின் கரங்கள் சிகரட் பற்ற வைத்துக் கொள்கின்றன.இன்னொரு கையால் நெற்றியையூம்,கண்களையூம் அழுத்தமாக மூடியவாறு இருக்கும் அந்த மனிதர் காமராவைப் பார்க்கிறார்.
 பேச வேண்டும் போல கண்களால் ஊடுறுகிறார்.
 பேசுகிறார்.
கிருஷ்ணகுமார்: ஹாய்.நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கலாம்.நான் டாக்டர் கிருஷ்ணகுமார்.சைக்யாட்ரிஸ்ட்.எனக்கு மழை பிடிக்கும்.ஆனால் நனையப் பிடிக்காது.அதனால்தான் உள்ளேயே அடைந்து கிடக்கறேன்.ஹேய் லுக் அட் தி க்ளாக்.மெல்ல ஓடிட்டு இருக்கற அந்த வினாடி முள்ளு மாதிரிதான் என்னோட டைமும் ஓடிட்டு இருக்கு.அதுக்குள்ள நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?கதை~கதை!
(எழுந்து நடக்கிறார்.அவர் பின்னால் காமரா நடக்கிறது.)
 இன்ஃபாக்ட் என்னோட பேஷன்ட்ஸ் பத்தி நான் வெளிய சொல்றதில்லை.ஆனா திலீப் பத்தி சொல்லித்தான் ஆகனும். திலீப். ஹான்ஸமான இளைஞன்.அவனோட கிடார் வாசிப்பிலயூம்,பைக் ரைடிங்கிலயூம் நிறைய பொண்ணுங்க தன்னை அவன்கிட்ட இழக்க விரும்பியிருக்காங்க.சச் எ லக்கி ஃபெல்லோ.ஆனா ட்ராக் எங்கேயோ மாறிப்போயிடுச்சி.சொல்லட்டுமா அந்தப் பயலைப் பத்தி..

                                                                       காட்சி -2
                                        இரவூ- கனவூ அதன்பின் திலீப்பின்அறை
  (இன்னொரு இரவூ..இங்கேயூம் நசநசவென்ற மழை.குடைமனிதர்கள் சாலையில் நடக்கிறார்கள்.கார்கள் தண்ணீரை பீய்ச்சியடித்துச் செல்கின்றன.திலீப் காரை பார்க் செய்து விட்டு நடக்கிறான்.சூயிங்கம் மென்று கொண்டே தலைமுடியை கோதி விட்டுக் கொண்டே அந்த ஷாப்பிங் மால் உள்ளே போய் லிப்ட்டிற்கு காத்திருக்கும்போது அவனருகே அந்தப் பெண் வந்து கண்கள் நிறைய புன்னகைக்கிறாள்.
அவள்: லிப்ட்டுக்கு காத்திருந்தா வயசாயிரும்.ஷல் வீ கோ பை ஸ்டெப்ஸ்
திலீப்: ஓ.யா!
 நடக்கிறார்கள்.படிக்கட்டில் ஏறும்போது சன்னமான மார்புகள் அவனை உரசின மாதிரி வருகிறாள்.அடிக்கடி திரும்பி பக்கவாட்டில் அவன் முகத்தைப் பார்க்கிறாள்.அவன் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.திலீப் மெல்ல சிரித்துக் கொள்கிறான்.
:அவள்: என்ன திலீப் சிரிக்கற?
திலீப்: குளிருதா?
அவள்:ஆமா.நீ ஜெர்கின் போட்டிருக்கே.நான் மினிஸ்கர்ட்தானே போட்டிருக்கேன்
திலிப்:கழட்டிக் குடுத்திரவா?
அவள்:எதை.இதயத்தையா.நான்ரெடி.வா.என்னை பார்ட் பார்ட்டா கழட்டி மாட்டிடு
திலீப்:மொட்டை மாடிக்குப் போவமா?
அவள்:மழையில நனைஞ்சிட்டே என்னை கிஸ் பண்ணப் போறியா
திலீப்:வந்துதான் பாரேன்
( மொட்டை மாடிக்கு வருகிறார்கள்.அவளை மெல்ல பின்னாலிருந்து அணைக்கிறான்.அவள் கிறங்குகிறாள்.கழுத்தை மெல்ல நெறிக்கிறான்.திகைத்து அலறுகிறாள்.
 சட்டென்று விழித்துக் கொள்கிறாள். அத்தனையூம் கனவூ.)
 எழுந்து பார்த்தால் அவள் அருகில் திலீப் அமர்ந்திருக்கிறான்.அது அவனது இடம்;.
அவள்:ஓ..காட்.என்னை இங்க வரச்சொல்லிட்டு நீ வரவே இல்லை.அதான் அப்படியே படுத்து துhங்கிட்டேனா.நீ என்னை கொலை செய்யறாப்ல கனா..
 சோம்பல் முறிக்கிறாள்.அவளருகே குளோஸ்அப்பில் அவன் கண்களில் கொலை வெறி தெரிய,அவன் கையில் கத்தி.அவள் மெல்ல வீறிடத் துவங்க இரத்தம் சுவற்றில் தெரிக்கிறது.அந்த இரத்தத்தில் மின்னல் வெட்டுகிறது.
 இப்போது காட்சி மாறுகிறது.டாக்டர் கிருஷ்ணகுமாரிடம் உட்கார்ந்திருக்கிறான் திலீப்.


                                                                   காட்சி -3
                                                             டாக்டரின் அறை- இரவூ
 இருவரையூம் மிக மெதுவான வேகத்தில் காமரா சுற்றிக் கொண்டிருக்கிறது.இப்போதும் வெளியே நசநசவென்று மழை.சாம்புல் பூசின இருட்டு.கிருஷ்ணகுமார் அவன் முகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறார்.
திலீப்: அதுதான் டாக்டர் முதல் சம்பவம்.என்ன நெஞ்சழுத்தம் பாருங்க டாக்டர் அவளுக்கு.அடுத்த மாசம் அவளுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்காஙூக.என்னை யார்ர்ர்னே அவளுக்கு தெரியாது.ஷாப்பிங் மால்ல எதேச்சையா பாத்தவ அடுத்த அரை மணியில டெக்ஸ்ட் தட்டிவிட்டு செக்ஸ் வைச்சிக்க கூப்பிடறா.தப்பு இல்லே?அதான் அவளை என் இடத்துக்கு வரச் சொல்லி..நான் யோசிக்கக் கூட இல்லை..(அவளின் அலறல் சன்னமான ஒலியில் இப்போது கேட்கிறது)
கிருஷ்:அப்பறம்..
திலீப்:அதுக்கப்புறம் இதே வழக்கமா போச்சி.இந்த சிட்டிக்கு நான் வந்தபோது என்ன என்னவோ நினைச்சேன்.அழகானப் பொண்ணுங்களைப் பாத்தா நானும் ஒர அழகானப் பொண்ணைப் பாத்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகனும்னு சேவற்கொடி செந்தில் அளவூக்கு ப்ளாக்அன்ட் வொயிட்ல கனா எல்லாம் காணுவேன்.ஆனா எல்லாம் தப்பா போச்சு.அடுத்ததா வந்தவ அனிதா.
கிருஷ்:அனிதா?
திலீப்:ஆமா.அழகானவ.ஸ்விம்மிங் பூல்ல வைச்சி பாத்தேன்.பாத்த பத்தாவது நிமிடம் லவ்யூ சொன்னா.கவிதை எழுதலாமான்னு யோசிச்சபோது தண்ணியில தள்ளி என்னை விளையாட்டு பொம்மையாக்கிட்டா.நான் எங்கே கூப்பிட்டாலும் வருவேன்னா.நரகத்துக்கு வருவியான்னே.வரேனேன்னு மறுபடியூம் தண்ணியில தள்ளி வெளியில மழை பெய்யூது.என்னை தண்ணியில தள்ளி அதுக்கு மேல சொல்றது அநாகாரிகம்.நான் வரச்சொன்னபடி வந்தா.
கிருஷ்:அப்பறம்.
திலீப்:அதேதான்.அவளை படுக்கையில் வைச்சி கிட்ட வாசனை பாக்கற மாதிரி முகத்துக்கு அருகே முகத்தைக் கொண்டு போய்,ஒரு மைக்ரோ செகன்ட்ல அவ கழுத்துல கத்தியை வைச்சி-
( இந்த காட்சியை டாப் ஆங்கிளில் காட்டும் போது சிதறும் இரத்தம் மாடர்ன் ஆர்ட் மாதிரி சுவற்றில் பதிய அதில் மின்னல் வெட்டுகிறது.செத்துப் போன அந்த பெண்ணின் கண்கள் மட்டும் குளோஸ்அப்பில் தெரிகிறது.அதில் உயிர்பயம் அப்படியே உறைந்து போய் கிடக்கிறது.)
 திலிப் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கிறான்.டாக்டர் எழுந்து நடக்கிறார்.அவனுக்கு மதுவை கோப்பையில் வார்த்து கொண்டு வந்து தருகிறார்.வாங்கிக் கொண்டு யோசிக்கிறான்.
கிருஷ்: என்னாச்சு திலீப்.இன்னொரு சம்பவமா?
திலீப்:ஆமா.நான் வேலை பாத்த பிபிஓ கம்பெனியில சனிக்கிழழைகள்ல பார்ட்டி இருக்கும்.இதே போலத்தான் ராஷ்மி மதுக்கிண்ணத்தோட என்கிட்ட வந்து உட்காந்து கிட்டா.
கிருஷ்:அவளும் தப்பா நடந்துகிட்டாளா
திலீப்:எல்லாப் பொண்ணுங்களுமே தப்பானவங்கதான்னு தோணுது 
கிருஷ்:சே.டோன்ட் பி ரப்பிஷ்.உன் பாதையில் குறுக்கிட்ட பொண்ணுங்க சிலபேரு அப்படி தப்பானவங்களா இருந்திருக்கலாம்.எல்லாரையூம் சொல்லாத
திலீப்:டாக்டர்.மொத்தம் பத்தொன்பது பொண்ணுங்க.எல்லாருமே தப்பாதான் நடந்துகிட்டாங்க.யூ ஸீ நானென்லாம் கிராமத்துல இருந்து வந்தவன். அதிக பட்சம் தனுஷ் படம் பார்க்கறது.மாரியம்மன் கோவில்ல கூழ் ஊத்தி எல்லார்ஈஸ்வரி பாட்டு போட்டா அங்க வர்ற பொண்ணுங்களுக்கு பேப்பர் ராக்கெட் விடறது கிணத்துல குளிக்கற பொண்ணுங்க எட்டிப் பார்த்துட்டு பயந்து போய் ஓடிப்போய் மூணுநாளைக்கு ஊர்ப்பக்கமே தலைவைச்சிப் படுக்காம இருக்கறது.பஸ் நிக்கற மோட்டல்கள்ல ஸ்டேப்ளர் பின் அடிச்சி வைச்சி விக்கற பழுப்பு நிற தாள்கள்ல விக்கற புத்தகத்தை வாங்கினதுக்கே உடம்பு சூடாகி மந்திரிச்சி தாயத்து வாங்கிக் கட்டிக்கறதுன்னு பொண்ணுங்கன்னா சைட் அடிக்கறது,லெட்டர் கொடுக்கறது,அதிகபட்சமா கிஸ் அடிக்கறதுன்னுதான் தெரியூம்.இங்க முதல் நாளே ..சே.அசிங்கம்.அதனாலதான் நான் அப்படி பண்ணினேன்.
கிருஷ்: என்னப்பா பண்ணினே
திலீப்: மொத்தம் பத்தொன்பது பேரு டாக்டர்.எல்லாருமே தப்பிதமான பொண்ணுங்க.முதல்ல ஜஸ்ட் கத்தியில குத்திக் கொன்னுரலாம்னுதான் அழைச்சிட்டுப் போனேன்.அங்க போனதும் மனசு மாறிட்டேன்.
கிருஷ்:பார்டன்.என்ன பண்ணின
திலீப்:டாக்டர்.நீங்க ஏதும் என்னை போலீஸ்ல மாட்டி விடலாம்னு யோசிக்கலையே
கிருஷ்:சேசே. என்ற டாக்டர் கீழே குனிகிறார்.அவர் காலடியில் ஒரு சுத்தியல்.டாக்டர்கள் முழங்காலில் தட்டுவதற்கு வைத்திருக்கிற சுத்தியல்.அதை எடுக்கிறார்.ஒரு இடி அசுரத்தனமாக இடித்து விட்டுப் போகிறது.


                                                                   காட்சி -4
                                                           டாக்டரின் பங்களா- இரவூ
   இப்போது அந்த போலீஸ் வாகனங்கள் மெல்ல பங்களாவின் காம்பவூன்ட்டை நெருங்கி விட்டன.மழை இன்னும் நசநசத்துக் கொண்டிருக்கிறது.அந்த நாயோ,ஓநாயோ இப்போது வாகனங்களை வெறித்துப் பார்த்து விட்டு ஓடி ஒளிகிறது.
 டாக்டர் கிருஷ்ணகுமார் எழுந்து நடக்கிறார்.கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு உலாத்துகிறார்.திலீப் அங்கு இல்லை.தன்னுடைய நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டு காமராவை பார்க்கிறார்.அவரது கண்கள் மட்டும் குளோஸ்அப்பில் தெரிகிறது.அதன் கருவிழியில் ஒரு ஜோடி மின்னல்கீற்று தெரிகிறது.காமராவைப் பார்த்து பேச ஆரம்பிக்கிறார்.
கிருஷ்:ஹாரிபிள்.மொத்தம் பத்தொன்பது பொண்ணுங்க.எல்லாருக்கும் ஏறக்குறைய பத்தொன்பது வயசு.இந்த பய அவங்களை கடத்திட்டுப் போய் இப்படி ஒரு தப்பை பண்ணியிருக்கான்.இவன் முதல்லயே என்கிட்ட வந்திருக்கக் கூடாது?.
  அப்படி என்னதான் பண்ணியிருக்காங்கறிங்களா.பத்தொன்பது பொண்ணுங்களையூம் கொன்னுருக்கான்.கொலை பண்ணியிருக்கான்.அது கூட பரவாயில்லை.அத்தனைப் பொண்ணுங்களையூம் அவன்..அவன்..என்ன பண்ணினான் தெரியூமா...
 (மழை இப்போது வலுக்கிறது.இடி ரிதம் போல இடித்துக் கொண்டுப் போகிறது.மின்னல்கள் ஒளிக்கோலங்களாகத் தெரிகின்றன.போலீஸ் வாகனங்கள் போர்டிகோ அருகே நிற்க-அதிலிருந்து வெளியே வரும் கமிஷனர் துப்பாக்கியை உயர்த்துகிறார்.)
  ஓரு கறுப்பு நிற பூனை நின்று அதை உற்றுப் பார்த்து விட்டு நடக்கிறது.காற்று உஸ் உஸ் என்று வீசுகிறது.உள்ளே திரைச்சீலைகள் காற்றில் ஆடுகின்றன.
 அவன் பண்ணினதை நினைச்சா எனக்கே ஒரே பதட்டமா இருக்கு.அத்தனை பொண்ணுங்களையூம் அவன் கொன்னது மட்டுமில்லை.அவங்களை அவன் தின்னிருக்கான்.
 ஐ ரிபீட் தின்னிருக்கான்.
 ஒரு கானிபல் மாதிரி பார்ட் பார்ட்டா அந்த பொண்களை அவன் தின்னதை என்கிட்டேயே விதம் விதமா வர்ணிச்சான் பாருங்க எனக்கு கோவம் வந்துடுச்சி.என்ன மாபாதகம் பாருங்க.அவனை சும்மா விடலாமா?
 அதனால..அதனால...
 அவனை ஒரே அடியில அடிச்சி கொன்னுட்டேன்.
 ஸாரி தின்னுட்டேன்’ (என்று டாக்டர் சொன்னதும் துப்பாக்கி வெடித்து தோட்டா அவர் மார்பில் பாய சரிகிறார்.)
 மழை நின்று விட்டது.ஆனால் சொட்டுச் சொட்டாக சன்னல் வழியாக நீர்த்தாரை விழுந்து கொண்டிருக்கிறது.ஸ்ட்ரெச்சரில் டாக்டரின் உடலையூம்,அங்கே சிதறிக் கிடந்த திலீப்பின் எலும்புகளையூம் அள்ளிக் கொண்டு ஆம்புலன்ஸ் நிதானமாக விரைகிறது.

                                                                                                                      (முற்றும்)
Previous
Next Post »

3 comments

Click here for comments