'அழுகை..."
'அந்த
குழந்தை அழுதது
பொம்மை தொலைந்து போனதென்று
இந்த
குழந்தை(!) அழுதது
பிள்ளைப்பிராயம் தொலைந்தேபோனதென்று'
--------------------------------------------------------------------------------------


  "வீட்டுப்பாடம்"

'இன்றைக்கும்
வீட்டுப்பாடம் செய்யவில்லை
திட்டட்டுமே
காதைத் திருகி
திட்டும் கிளாஸ் டீச்சர்
அத்தனை அழகு'
------------------------------------------------------

"ஒப்பனை"

'ஒவ்வொருமுறையூம்
யாருக்கும் பிடிக்காமலே
போய்விடுவதால்
இந்த முறை
சுமாராகப் போய் நின்றால்
பொண்ணு சிம்ப்பிளா இருக்கு
பிடிச்சிருக்கு என்றான்
முன்வழுக்கை இளந்தொந்தி
மாப்பிள்ளை'
-------------------------------------------------------------------

"பொம்மை"

'கண்கள் நிறைய
சந்தோஷம்
ஓலைக்குடிசையில்
பொம்மை கிடைத்து விட்டது
உச்சிமுகரும் குழந்தைக்கு
தெரியாது
மலிவூவிலை பொம்மையில்
இருக்கும்
காரீயம்'
--------------------------------------------------------

"மரங்கள்..."

'சாலையில்
விரல்களைப் பார்த்தேன்
வெட்ட வெட்ட முளைக்கும்
நகங்கள்போல்
வெட்ட வெட்ட
மரங்கள் முளைக்காதா
ஏக்கமாய் இருந்தது'

-------------------------------------------------
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
September 17, 2015 at 11:44 AM ×

கவிதைகள்;..கருத்துக்கள்..

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar