'அப்பாவோ தாத்தாவோ
இல்லை வேறு யாருமோ
சட்டென்று
ஒரு கணத்தில் போய்விட்டபின்
சரசரவென்று ஆட்கள் கூடி
ஆம்புலன்ஸில்
எடுத்துப் போட்டுவிடுகிறார்கள்
அப்புறம்தான்
வருகிறது அப்படியொரு சலிப்பு
பரண்மீதும் அலமாரிக்குள்ளும்
அவர்கள்
பொத்தி வைத்துச் சென்றிருந்த
பழுப்பு நிறமாகி விட்ட
புத்தகங்களை என்ன செய்வது
தெருவில்
இப்போதெல்லாம் பழையபேப்பர்காரனும்
வருவதில்லை
வீட்டுக்கு வீடு
புத்தகங்கள் மட்டும்
"எடுத்துப் போட" ஆளின்றி
எப்போதுமே அனாதையாய் கிடக்கின்றன'

'ராமனுக்கு
லவ குசா
சிவனுக்கு
விநாயகன் முருகன்
என்ன கொடுமை இது?
ஆண்டவனுக்கு கூட
பெண்பிள்ளையை
பெற்றுக்கொள்ள
விருப்பமில்லை போலிருக்கிறது'

'ரூபாயூம் டாலரும்
குரூடாயிலும் எகிறுவது இருக்கட்டும்
தெருமுனையில்
சாக்குப்பையில் விரித்துக் கிடக்கும்
காய்கறிகள் கூட
முகத்தை திருப்பிக்கொள்கின்றனவே'

'தொலைவில் 
டிராஃபிக் சார்ஜன்ட்
ஹெல்மெட் ஆர்.சி.புக் இன்சூரன்ஸ்
எல்லாம் இருக்கு
கேர்ள்ஃப்ரன்ட் தவிர
சொன்னால் புரியூமா
அவருக்கு?'

'அடுத்த மாசம் 
வாங்கிக்கலாம் 
அப்புறம் பார்த்துக்கலாம்
என்றே தோன்றுகிறது
ஒவ்வொரு
ஷாப்பிங் மாலையூம் பார்க்கும்போதும்
பிளாட்பாரவாசிகளின்
க்ரீமி லேயர்தான்
அபார்ட்மன்ட்வாசிகளோ?'



Previous
Next Post »