தல அஜீத்தும் தாயூமானவரும்



       இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட செய்திகளே திரும்பத் திரும்ப வருவதால்(உதாரணமாக: ... டீஸரை ஏஆர்ஆர்ரே எதற்காக முந்திக் கொண்டு வெளியிட வேண்டும்.அப்புறம் கோவில்களில் லெக்கின் மற்றும் ஜீன்ஸ்.பீப்.பீப்பிற்கு ஆப்போசிட் சைடிலிருந்து மறுபடி பீப் போன்றவை) இன்றைக்கு செய்தித்தாள்களை படிப்பதில்லை.செய்திச் சேனல்களைப் பார்ப்பதுமில்லை என்ற முடிவோடு கணினியில் அமர்ந்திருந்தபோது மேசைக்கடியில் ஒரு புத்தகம் தென்பட்டது.சிலவேளைகளில் லாட்டரலாக எதையாவது படிக்கப்போய் சுவாரஸ்யமாக ஏதாவது மாட்டும்.

    தாயூமானவர் பற்றிய புத்தகம்.அந்த காலத்திலேயே (17ம்நுhற்றாண்டு) ஒரு காதல்கோட்டைத்தனமான லவ் இருந்திருக்கிறது.கா.கோ.படத்தில் தன்கம்பெனியில் வேலை பார்க்கும் அஜித்தை அந்த கம்பெனி எம்.டி.யான ஹீரா அதிரடியாக காதலித்து அவரை டிஸ்க்ளோஸர்தனமாக(மைக்கள் டக்ளஸை அவரது பெண் பாஸ் மடக்கும்இந்த படத்திற்கான கதையை எழுதியவர் ஜூராசிக் பார்க் கதையை எழுதிய மைக்கல் க்ரைக்டன்) தொந்தரவூ செய்ததைப் போன்ற அனுபவம் தாயூமானவருக்கும் நேர்ந்திருக்கிறது.

    தாயூமானவர் முதலில் ஒரு கவிஞர்.இறைவன் மேல் பல பாடல்களை பாடியவர் என்பதுதான் நாம் இதுவரை அறிந்துள்ள செய்தி.ஆனால் அவர் ஒரு அக்கவூன்டன்ட் ஆக இருந்திருக்கிறார்.வேதாரண்யத்தை சொந்த ஊராகக் கொண்ட வேதாரணியப்பிள்ளைக்கு திருச்சியில் மகனாகப் பிறந்திருக்கிறார்.அந்நாளைய வழக்கப்படி இலக்கியம் பயின்றுள்ளார்.அவரது தந்தை மன்னர் விசயரங்க சொக்கநாதரிடம் அக்கவூண்டன்ட்டாக பணியாற்றி வந்தபோது அவர் மரணடைந்ததான் கம்பாஸனேட் அப்பாயின்ட்மன்ட்டில் அரசாங்க வேலை பெற்றிருக்கிறார்.அங்கேதான் இந்த அதிரடி காதல் அவர் மீது தாக்குதல் நிகழ்ந்தியது.

 மன்னர் சொக்கநாதர் இறந்து போகிறார்.அதன்பின் ஆட்சிப்பொறுப்பேற்கிறார் ராணியாக இருந்த மீனாட்சி.இந்த மீனாட்சிதான் தாயூமானவர் மீது காதல் கொண்டு அவருக்கு இம்சை கொடுத்திருக்கிறார்.இது ஆவறதில்லை என்று கிளம்பி விராலிமலைக்கு வந்து தன் உறவூக்கார நண்பருடன் தங்கியிருந்திருக்கிறார்.அங்கே சில சித்தர் சாமிகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.அதன்பின் இந்த ஊரெல்லாம் நமக்கு சரிப்படாது என்று இராமேஸ்வரத்திற்கு வந்திருக்கிறார்.வந்து பார்த்தால் அங்கு மழையே இல்லையாம்.வருமா வராதா என்று சொல்ல ரமணன் போன்ற ஆட்களோ சாடிலைட் டிவிக்களோ இல்லாத காலம்.சரி மழை வரவழைத்துப் பார்ப்போம் கீழ்வருமாறு ஒரு வெண்பா பாடினாராம்.
'சைவ சமய' சமயமெனில் அச்சமயத்
தெய்வம் பிறை சூடும் தெய்வமெனில் - ஐவரைவென்று
ஆனந்த இன்பில் அழுந்துவது முக்தி எனில்
வானங்காண் பெய்ம்மின் மழை'
பாடி முடித்ததும் சண்டைக்காட்சிகளிலோ காதல் காட்சிகளிலோ சினிமாக்களில் மழை வருவது போல வந்து கொட்டியிருக்கிறது.அதைப் பார்த்த சிவசிதம்பரம்பிள்ளை என்பவர் பார்ரா வித்தையை என்று ஆச்சர்யப்பட்டுப் போய் தன் பெண்ணை கட்டி வைத்திருக்கிறார்.மட்டுமார்குழலி என்ற அந்த அம்மையாரை மணந்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தியிருக்கிறார் தாயூமானவர்.ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே தான் துறவறம் பெற வேண்டுமென்று மலைக்கோட்டையிலுள்ள மௌனமடத்தின் மௌனகுரு சாமிகளைப் பார்த்து பலமுறை கேட்டிருக்கிறார்.அவர்தான் இவரது குரு.கல்யாணம் செய்து சிலகாலம் இருந்து விட்டு துறவறத்திற்கு வா என்றிருக்கிறார்.அவர்.கல்யாணம் செய்து கொண்டால் தானே போதுமடா சாமி என்று விலகி வந்து விடுவான் என்று எண்ணினாரோ என்னவோ.பக்கத்தில் மனைவி இருக்கும்போது இவர் இறைவன் மீது பாடல் பாடுகிறார் பாருங்கள்.வீட்டில் பெண்டாட்டியை தேமே என்று டிவி முன்னால் உட்கார வைத்து விட்டு சில கணவான்கள் ஆபீசில் விரட்டி விரட்டி வேலை செய்து ப்ரமோஷன் ப்ரமோஷன் என்று  மேலதிகாரிகளே கதி என்று கிடப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
"என்னை விட்டு விட்டு எங்கு சென்றாய்?"
'சொல்லற்கு அரிய பரம்பொருளே
   சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே
 வெல்லற் கரிய மயலில்எனை
   விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன்
 கல்லிற் பசிய நார்உரித்து
   கடுகில் பெரிய கடலடைக்கும்
 அல்லிற் கரிய அந்தகனார்க்கு
   ஆளாக் கினையோ அறியேனே'

 இதை இவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.சொல்வதற்கு அரிய மேலான பொருளே!பேரின்பக் கடலே!பேரௌpக்கொழுந்தே! நீங்குவதற்கு அரிய மயக்கத்தில் என்னை ஆழ்த்தி விட்டு நீ எங்கு ஒளிந்தாய்? கல்லிலிருந்து பசுமையான நாரை உரித்து கடுகிலே பெரிய கடலை அடைப்பதில் வல்லவரான இருளை விட கருமையான எமனார்க்கு பலியாகும்படி செய்துவிட்டாயோ என்னவோ.எனக்கு தெரியவில்லை என்கிறார்.

 அவர் நினைத்தது போலவே பின்னர் ஆகிற்று.அவரது துணைவியார் மட்டுவார் குழலி ஒரு பையனைப் பெற்றுக் கொடுத்து விட்டு சிலவருடங்களில் போதுமடா சாமி என்று செத்துப் போனார்.அதன்பின்னர் ரொம்ப வசதியாகப் போயிற்று என்று தன் குருவிடம் வந்த தாயூமானவர் துறவறம் பூண்டு விட்டாராம்.அதன்பின் அதற்கு அடுத்த கிரேடான நிர்வாண தீட்சையூம் இவர் பெற்றதாக செய்திகள் இருக்கின்றன.அக்கால வழக்கப்படி பற்பல ஊர்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வந்திருக்கிறார்.இவர் எழுதிய இன்னொரு பாடலில் இறைவனைப் பற்றி எழுதியிருந்தாலும் இறைவனுக்குப் பதிலாக காதலனையோ அல்லது காதலியையோ போட்டுப் படித்தாலும் பாடல் சுவையாகத்தான் இருக்கிறது.
"நின்னைப் பிரியாதிருக்க வேண்டும்!"
'
அறிவிற் கறிவூ தாரகம் என்று
   அறிந்தே அறிவோ டறியாமை
நெறியணிற் புகுதா தோர்படித்தாய்
   நின்ற நிலையூம் தெரியாது
குறியற் றகண்டா தீதமயக்
   கோதில் அமுதே நினைக்குறுகிப்
பிரிவற் றிருக்க வேண்டாவோ
   பேயேற் கினிநீ பேசாயே?'

  இதன் பொருளை ஒரே வரியில் சுருக்கினோமானால்: உன்னையே நினைத்து நினைத்து உன்னை அடைய முடியாமல் பிசாசுப் பயலாக திரிகிறேனே.உன்னை அடைவதற்கு எனக்கொரு வழி சொல்ல மாட்டாயா என்பதுதான்.இன்னொரு இடத்தில் சற்றுக் குறும்பாக் சொல்கிறார்-
"நீ வா என்று அழை!" என்று.அந்த பாடல் இதுதான்.
'
கூறா நின்ற இடர்க்கவலைக்
  குடும்பக் கூத்துள் துளைந்துதடு
மாறா நின்ற பாவியைநீ
  வாஎன் றழைத்தால் ஆகாதோ?
நீறார் மேனி முக்கணுடை
  நிமலா அடியார் நினைவினிடை
ஆறாய்ப் பெருகும் பெருங்கருணை
  அரசே என்னை யாள்வானே!'

  இதற்கும் ஒரே அர்த்தம்தான் வருகிறது.இத்தனை தடுமாற்றத்துடன் குடும்பக்கூட்டுக்குள் சிக்கித் தவிக்கிறேனே.என்னை வா என்று அழைக்க மாட்டாயா என்று இறைவனைப் பாடுகிறார்.இதே கேள்வியை .இவர் தன் மனைவியை பார்த்து அன்பாகக் கேட்டிருந்தால் அத்தனை சின்ன வயதில்அந்த அம்மா செத்துப் போயிருக்காமல் இருந்திருப்பார் என்று சொன்னால் தமிழ்படித்த பண்டிதர்கள் என்னை வசைபாடுவார்கள்.


   கடைசியில் இந்த தாயூமானவர் இராமநாதபுரம் அருகே காட்டூரணி என்ற பகுதியில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்திருக்கிறார்.அங்கேயூம் அவர் மீது ஒரு பெண் அன்பு கொண்டிருந்திருக்கிறார்.இந்த அன்பு காதலல்ல.பரிவூம் அக்கறையூம் மதிப்பும் கூடிய அன்பு.அவருக்காக நீர்நிலைகள் உணவருந்தும் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.தாயூமானவர் தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க அவர் செத்துப் போய் விட்டார் என்று நம்ம ஆசாமிகள் அவரை அப்படியே உட்கார்ந்தவாக்கில் சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டிவிட்டார்கள்.கண்விழித்துப் பார்த்திருக்கிறார்.உடனே புஷ்பக் விமானத்தில் சிவபெருமானோ வேறு பெயருடைய கடவூளோ வந்து அவரை காப்பாற்றி மேலே உள்ள உலகத்திற்கெல்லாம் கொண்டு போகவில்லை.கண்விழித்த தாயூமானவருக்கு விபரீதம் உறைத்திருக்கிறது.ஆகா.பசங்க நம்மை உசிரோட கொளுத்திட்டாங்கய்யா என்று உணர்ந்ததும் அட போங்கப்பா நீங்களும் உங்க உலகமும் என்று மறுபடி கண்களை மூடிக்கொண்டு அந்த தீயிலேயே உயிரோடு வெந்து போனாராம். நல்லவேளை.அவர் காலத்தில் சீக்ரெட் சர்க்கஸோ ராபர்ட்டோ கவாலியோ  எஸ்கடா மற்றும் டால்ஸி கபானா வகையறாக்களோ இருந்திருக்கவில்லை.இருந்திருந்தால் அவரை கோவில்களின் உள்ளேயே விட்டிருந்திருக்க மாட்டார்கள்.நமக்கும் எளிமையான பாடல்களும் கிடைத்திருக்காது.
Previous
Next Post »