அந்த மகத்தான நடிகர்



 சென்ற ஞாயிறன்று ஸ்ரீவில்லிப்புத்துரர் சென்றிருந்தோம்.காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.ரொம்பநாளாக தயங்கிக் கொண்டே இருந்த ஒரு விஷயம் இன்று முழுவடிவம் பெற்று விட்டது.
 ஒரு புதிய திரைப்பட நிறுவனத்தை ஸ்ரீஆண்டாள் சந்நிதியில் ஸ்ரீஆண்டாளின் திருப்பாதங்களில் வைத்து ஆண்டாளின் ஆசிகளுடனும் ஸ்ரீரங்கமன்னார் என்ற ஸ்ரீவடபத்ரசாயி ஆசிகளுடன் துவங்கி விட்டோம்.ஆண்டாள் சந்நிதியில் கனவூத் தொழிற்சாலைக்கான முதல் அடியை எடுத்து வைத்து விட்டு பெருமாளின் சந்நிதிக்கு வந்தபோது அவர் குளுகுளுவென்ற ஏசியில் இருந்தார்.அங்கிருந்த பட்டர் பேசிக்கொண்டிருந்தபோது நிர்வாகம் பண்றது மட்டுமில்லை அடுத்து மேக்அப் போடனும் (பெருமாளுக்கு மேக்அப்!) என்றார்.
 இது போன்ற சிக்னல்கள்தான் இறைவனின் குரலாக இருக்கிறது.ரங்கமன்னாருக்கு அங்கே மேக்அப் போட்டு விடுவார்கள்.அலங்காரம் பண்ணுவது என்பதை மிக சந்தோஷத்தோடு பட்டர்கள் மேக்அப் என்பார்கள்.
 அட..பெருமாள் நம்மையூம் மேக்அப் போடு.படங்களை இயக்குவதோடு தயாரிப்பதோடு நின்று விடாதே.நடிக்கவூம் செய் என்று ஆசி வழங்குகிறார் என்று தோன்றியது.
 செல்ஃப் ப்ரமோ இருக்கட்டும்.
 புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர்:Few Frames International.
 முதலில் ஷார்ட் ஃபிலிம்களும் அடுத்து ஃபீச்சர் ஃபிலிம்களும் எடுப்பது என்று முடிவாகிற்று.
 முதலில் 12 ஷார்ட் ஃபிலிம்கள் வெவ்வேறு ஜானரில் எடுக்கப்போகிறௌம். அதையடுத்து ஃபீச்சர் ஃஃபிலிம்கள் எடுக்கப்போகிறௌம்.
 புதிய மேக்கிங்.
 அசத்தலான நரேஷன்.
 என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
 ஆனால் 'செம' என்டர்டெயினராக இருக்க வேண்டும்.
 சொல்லவில்லையே.
 கேமரா முன்பு நிற்க வைத்து என்னை முதன் முதலில் இயக்கியவர் ஒரு பிரபல மகத்தான நடிகர்.
 நந்தனம் ஓல்டு டவர் ப்ளாக்கில் சும்மா சிட் அவூட்டில் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தபோது சரேலென செவ்வக யானை போல அம்பாஸடர் கார்கள் வந்து நின்றன.அதிலிருந்து இறங்கிய அந்த நடிகர் தனது சொந்தப்படத்திற்கு  தானே ஹீரோவாகவூம் டைரக்டராகவூம் இருந்தார்.அன்றைய ஷாட் இதுதான்.
 தனது காதலியைத் தேடி அவளது அபார்ட்மென்ட்டிற்கு அட்ரஸ் தேடிக் கொண்டு வருவார்.லிப்ட் ரிப்பேர் என்று போர்டு போட்டிருக்கும்.உடனே மேலே நிமிர்ந்து பார்த்து சிட் அவூட்டில் நிற்கும் என்னிடம் அட்ரஸ் சரியாதான் இருக்கும்னு நினைக்கறேன் என்று கையசைத்துக் கொண்டே செல்லும் அந்த  ஒரே ஷாட் அப்புறம் நான் சிட் அவூட்டில் நிற்கிற என்னிடம் அட்ரஸ் கேட்கிற அந்த காட்சி மட்டும் எடிட்டிங்கில் காணாமல் போய் விட்டது.
 அதற்குள் படத்துல நடிக்கறான்டா இவன் என்று ஸ்கூலில் செய்தி பரவி தமிழ் ஆசிரியர்கள் எல்லாம் செல்லப்பிள்ளையாக அருகில் உட்கார வைத்துக் கொண்டாலும் கணக்கு வாத்தியார்கள் நறுக்கென்று கிள்ளி குச்சியால் அடிப்பார்கள்.
 சொல்லவில்லையே அந்த மகத்தான நடிகர் யாரென்று.
 நடிகர் நாகேஷ்!
 படத்தின் பெயர் அதிர்ஷ்டக்காரன்.
 இன்னொரு சொல்லவில்லையே....
 எனக்கு விஜயநிலா என்று இந்த கோக்குமாக்கான பெயரை வைத்ததும் ஒரு நடிகர்தான்.ஆனால் வில்லன் நடிகர்.அவரது பெயரும் இப்படித்தான் மேன்லியாக இருக்காது.
 அவர் பெயர் செந்தாமரை.
 மூன்று முகத்தில் எல்லாம் மிரட்டியிருப்பாரே.அதே செந்தாமரைதான்!
 வாரம் முழுக்க பிசினஸ் வேலைகள் அழுத்தம் தருவதால் வீக்என்ட்டில் மட்டும் சினிமா வேலைகளை வைத்துக் கொள்வது என்று நேரத்தை கூறு போட்டு வைத்திருக்கிறேன்.
 சினிமாவில் ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சலில் (vijayanilaa@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள்.தொலைபேசியை தவிருங்கள்.

Previous
Next Post »