சிறுகதை: "அது..." -விஜயநிலா


 

      இன்றைக்கு ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமாச்சாரங்கள் எதற்கும் செல்லவேண்டாம் என்று நேற்றிரவூ கனவில் வந்து மார்போடு அணைத்து கொஞ்சமே கொஞ்சம் முத்தமிட அனுமதித்த ஸ்ரேயாவிடம் மிட்நைட் கனவிலேயே சத்தியம் செய்திருந்தான் சங்கர்.
 வொர்க்அவூட் செய்து விட்டு கழற்றிப்போட்ட உடைகளை எடுத்து மேசை மேல் வைத்தான்.இருபதுக்குள் வயது.பார்ப்பதற்கு 25 போல இருப்பான்.பத்து வருடத்திற்கு முந்தைய அந்தக் காலத்து ஸ்டீவ் மக்வீன் போல இருப்பான்.பியர் தவிர வேறு கெட்டப் பழக்கங்கள் கிடையாது.யாராவது லைப்ரரி வாசலில் எக்குத்தப்பாக மாட்டினால் கொஞ்சூண்டு லிப்ஸ்டிக்கை மட்டும் நிரடிக்கொண்டு வந்து விடுவான்.பெரும்பாலும் டில்லி மும்பை பெண்கள் அவனிடம் மாட்டுவதுண்டு.அதற்கு மேல் அவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. இரண்டாம் ஆண்டு படிக்கிறாரன்.இல்லை.மூன்று முட்டாள்களில் வந்தது போல அத்தனை கெடுபிடியாக இன்ஸ்டிட்டியூட் இருப்பதில்லை.ஒன்றிரண்டு மூலக்கடுப்பு புரொபசர்களைத் தவிர யாரும் அவனை தொந்தரவூ செய்ததில்லை.
"என்ன ஆச்சு.இன்னிக்கும் ஸ்ரேயா வந்து மார்போட அணைச்சிக்கிட்டாளா"என்று அறைக்குள் வந்தான் சுவாமிநாதன்.மெக்கானிக்கலில் என்னவோ குடைந்து கொண்டிருப்பவன்.அதிகம் புரொபசர்களிடம் மாட்டாது தப்பிப்பவன்.பார்த்து மாப்ளை.கொஞ்சம் சரக்கு இருக்கற மாதிரி காட்டிட்டினா அவ்ளவ்தான்தொலைஞ்சே.அவனுங்க ஜர்னல்ல பேப்பர் எழுதறதுக்காக நம்மை லாப்ல மாட்டிவிட்டு ரீடிங் ரிசல்ட்டை உள்ள கையை விட்டு உருவிட்டுதான் விடுவானுங்க.அதனால எதிலயூம் மேம்போக்கா இரு என்பதுதான்அவன் வேதவாக்கு.


"ஆமா.ஆனா அவ  தர மாட்டேங்கறா"என்று கண்ணடித்தான் சங்கர்.
அன்றைக்கு காலையில் பெரிதாக வகுப்புகள் ஏதும் கிடையாது.வழக்கம்போல புரொபசர் ரஹோத்தமன் அவர்கள் வகுப்பில் வந்து அட்டன்டன்ஸ் எடுத்து விட்டு டாபிக் சொல்லி விட்டு குவார்ட்டர்சிற்குப் போய் விடுவார்.லொங்கு லொங்கென்று லைப்ரரிக்குப் போய் நமீதா சைஸ் புத்தகங்களின் வயிற்றைப் பிளந்து பார்த்து அசைன்மன்ட் எழுதி எடுத்து வந்து அந்தாள் மேசை மேல் வைத்து விட்டு ஹாஸ்டல் போய் லன்ச் சாப்பிட வேண்டும்.தினப்படி இந்த ரெக்கர்ஷன் வெறுப்படித்தது.
"இன்னைக்கு நான் லைப்ரரி போகப்போறதில்லை நண்பா"என்றான் சங்கர்.
"அதான் நானும் சொல்ல வந்தேன்.செல்வா நம்மை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கான்"
"எங்கடா..எனக்கு தண்ணி காபரே எல்லாம் ஆகாது.நானே ஐடி வேலைக்கு போகாம ஏதாவது ஃபவூன்டேஷன்ல போய் வொர்க் பண்ணலாம்னு இருக்கேன்"என்றான் ஸ்ரேயா முழுவதுமாக தராத வெறுப்பிலிருந்த சங்கர்.
"அதெல்லாம் படிப்பு முடிஞ்சு கல்யாணம் பண்ணி பத்த வைச்சி வெல்டு பண்ணிட்டம்னா சரியாயிடும்டா.முழுசா கிடைக்கும்.என்ன ஒண்ணு கிரடிட் கார்டை கொடுத்திரனும்.அழகா இருக்கேடின்னு தினப்படி பொய் சொல்லனும்.தீபாவளி பொங்கல்னு டிரஸ் வாங்கி அழுவனும்.சரி வா செல்வாவைப் போய் பார்ப்போம்"
"என்ன விஷயம்டா"
"ஒரு ஆளுக்கு இருபதாயிரம் ரூபாய் கிடைக்குமாம்.நிமிஷ நேர வேலைதான்"
"புரியலையே"என்றான் சங்கர் உடைகளை மாட்டிக்கொண்டு கிளம்பியவாறே.


  தொலைவில் புரொபசர் ரஹோத்தமன் மாணவர்களை திரட்டிக்கொண்டு லைப்ரரிக்கு தள்ளிக்கொண்டிருந்தார்.
கிரிஸ்டல்க்ரோத் லாப் அருகே பெரிய மரத்தின் அருகே நின்றிருந்த செல்வராஜ் சிரித்தான்.அவன் கண்களில் கள்ளத்தனம் தெரிந்தது.
"செல்..என்ன சொல்லப்போற நீ.எவளாவது சரின்னுட்டாளா.ஐம் நாட் இன்ட்ரஸ்டட்.எல்லாம் கழட்டிப் பிரிச்ச செட்டு.பழைய செல்ஃபோன் ஹான்ட்செட் மாதிரி"
"இது புதுசுடா.சென்னைக்கே புதுசு.ஏன் நம்ம நாட்டுக்கே புதுசு.நாமதான் முத ஆளுங்க.ஆளுக்கு இருபதாயிரம் ரூபா தராங்களாம்.நிமிஷநேர வேலை.வேலைன்னு கூட சொல்லமுடியாது.நாம போய் சும்மா நின்னா போதும்.அவங்களே எடுத்துப்பாங்க"
"என்னடா சொல்றான். மாதவன் மாதிரி புரிஞ்சு புரியாத மாதிரி பேசறான்"என்று அறுத்துக் கொண்டு திரும்ப ஆரம்பித்த சங்கரிடம் சுவாமிநாதன் கண்சிமிட்டி விட்டு சொன்னான்.
"நெட்ல ஒரு க்ளாஸிஃபைட் விளம்பரத்துல வந்திருந்ததுடா.சென்னையில ஒரு கப்பிள்தான் விளம்பரம்தந்திருக்காங்க. டாப் லெவல் இன்ஸ்டிட்டியூட் மாணவர்களோட ஸ்பர்ம் வேணுமாம்.நல்ல புத்திசாலித்தனமான குழந்தைங்களை உருவாக்கறதுக்கு.நாம போய் பிஸ்அடிக்கற மாதிரி தந்துட்டு இருபதாயிரத்தை வாங்கிட்டு வந்திரலாம்.எப்படியூம் ஸ்ரேயா கனவில வந்தா உனக்கு வீணாகத்தான போகப்போகுது.இருபதாயிரம் மாமு.வா.கமுக்கமா போயிட்டு வந்து அசைன்மன்ட்டை எழுதிரலாம்"
அந்த இடம் வேளச்சேரி அருகே ஒரு லக்ஸரி அபர்மட்ன்ட்.அங்கே போனபோது அபசகுனமாக கூர்க்கா தடுத்தான்.பெயர் சொல்லி கேட்டபோது ஆறாவது ப்ளோர் என்றான்.
"யெஸ் கம்மின்"என்றாள் ஒரு பெண்.1980களில் வந்திருந்த ஜூலியன்மூர் போல தோற்றமளித்தாள்.நாற்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பவள் போல இருந்தாலும் மேக்அப்பின் உதவியால் அவள் தனது வயதை தோற்கடித்திருந்தாள். ஒரு பக்க மார்பை காற்றாட வெளியே உலாவ விட்டிருந்தாள்.அவள் மார்புகள் கனவில் வந்த ஸ்ரேயாவை ஞாபகப்படுத்த சங்கர் மட்டும் எச்சில் கூட்டி விழுங்கினான்.
"நீங்க விளம்பரத்தை சரியா படிச்சிங்களா.சும்மா டொனேட் பண்ணினா போதும்.உங்க பேர் விபரமெல்லாம் வெளியில சொல்ல மாட்டம்."
"தட்ஸ் ரைட்.ஆனா இருபதாயிரம்கறது இன்னைய இன்ஃ;ப்ளேஷன்ல கொசு மாதிரி.நாங்க ஹெல்த்தியா ஜிம்பாய் மாதிரி இருக்கம் பாருங்க"
"ஆல்ரைட்.நான் சார்கிட்ட சொல்றேன்.ரெண்டு லட்சம் கொடுத்தா ஓகேவா"
"மூணுபேருக்கும் சேர்த்து ரெண்டு லட்சமா"
"ந்நோநோ.ஆளுக்கு ரெண்டு லட்சம் ஹாட்கேஸ்.புதுப்பொண்ணு தொடை மாதிரி சலவைத்தாளா தரச்சொல்றேன்"என்று செல் எடுத்து யாரோ ஒரு சாரிடம் பேசினாள்.
அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு கறுப்புநிற பஜோராவில் கிளம்பினாள் அவள்.தன் பெயரை சொல்வதை தவிர்த்தாள்.அப்போது செல்வராஜூக்கு அந்த யோசனை வந்தது.
கிசுகிசுத்தான்.
"இவ என்ன கேட்டாலும் சரிங்கறாடா.எதுக்காக நாம சும்மா ஸ்பர்ம் மட்டும் தந்துட்டு வரனும்.நேச்சுரலாவே யாருக்கு விந்து தரனுமோ அந்த பொம்பளையை அனுபவிச்சிட்டே வந்துரலாம்"
"அதாவது எதுக்கு ஊறுகாயை தொட்டுக்கனும் ஃபுல்மீல்ஸே அடிச்சிட்டு வரலாம்கற.இவ ஒத்துக்குவாளா.இவளே அதில ஒரு ஆளா இருக்கப்போறா."
"டேய்.ஒரு வேளை அவளுக கொஞ்சம் வயசானவளா இருந்துட்டா சாமான் நசுங்கிடப்போறது'என்றான் சுவாமிநாதன்.
"அதெல்லாம் பயப்படாதிங்கடா.கேட்டுப்பார்ப்பம்"என்ற செல்வராஜ்-
"மேடம் ஒரு ரிக்வெஸ்ட்.."என்று ஆரம்பித்தான்.
காரப்பாக்கம் தாண்டி ஒரு அனாமத்து பங்களாவில் போய் கார் நின்றது.
உள்ளே அழைத்துச் சென்றாள்.அது வீடா இல்லை மர்மபங்களாவா என்று புரியாமல் சங்கர் மிரண்டான்.உள்ளேயிருந்து ஒரு வயதான மனிதர் வந்தார்.வாக்கிங் ஸ்டிக்கை உதறியபடி அமர்ந்தார்.
"உங்க ஆர்வம் புரியூது.விளம்பரத்தை நல்லா படிச்சிப்பார்த்துட்டுதான வந்திருக்கிங்க.நாங்க வெறும் ஸ்பர்ம்தான் கேட்கறம்.நீங்களாதான் முழுமையான செக்ஸூக்கு ரெடின்னு சொல்றிங்க.திஸ் இஸ் லைக் எ டிஸ்க்ளைமர் யூந்நோ"என்று உலகமகா ஜோக் போல சிரித்தார்.
"ஆல்ரைட் சார்.நாங்க ரெடி"என்றான் செல்வராஜ்.
அதன்பின் ஏதோ ஜூஸ் கொடுத்தார்கள்.அதில் மயக்க மருந்தெல்லாம் ஏதும் இல்லை.அப்புறம் ஆள் ஆளுக்கு தனித்தனி அறைக்குள் உள்ளே தள்ளி கதவைத் தாளிட்டு விட-
சங்கர் ஸ்ரேயாவை நினைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தபோது
ஓஓஓ என்று கத்த வேண்டும் போலிருந்தது.அதற்குள் காரியம் முடிந்திருந்தது.
அடுத்தடுத்த அறைகளிலும் ஓஓஓ கேட்டது.
வெளியே அந்த ஓல்டுமேன் அந்த பெண்ணிடம் சிரித்துக் கொண்டே சொன்னார்.
"ரெண்டு என்ன நாலு லட்சம் கூட கொடுக்கலாம்.நாம கேட்டது ஸ்பர்ம்தான்.அதுவூம் பெண் கொரில்லாவூக்குக் கொடுத்து மியூட்டேட் செய்யற ஆராய்ச்சிக்கு. புதுசா புத்தியில்லாத மனுஷங்களை தயாரிச்சி அவங்களை கடினமாக வேலைகளுக்கும் ராணுவத்திற்கும் ரோபோ டைப்ல பயன்படுத்தலாம்னுதான்  கொரில்லாவை வைச்சி ப்ளான் பண்ணினம்.ஆனா இவனுங்க  கொரில்லா கூட செக்ஸ் வைச்சிக்கறேன்னு போயிருக்காங்க.  ஏதாவது தப்பு இருக்குமோ போன தடவையே இது போல உள்ள போன ஏழு பசங்களும் சாமான்செட்டு கிழிஞ்சி போய் செத்தாங்க.இப்ப இவனுங்க.நாம என்ன பண்ண முடியூம்.."
"நம்ம விளம்பரம்தாங்க காரணம்.நெட்ல ஸ்பர்ம் டொனேட் தரச் சொல்லி கேட்ட விளம்பரத்துக்கு அடியிலயே நம்ம விளம்பரமும் வந்ததுல பசங்க கன்ஃப்யூஸ் ஆகி இங்க வந்துட்டாங்க.தோட்டக்காரனை வந்து பாடியை எடுத்துப் போடச் சொல்லுங்க.."என்றாள்.

                 -----------------------------------------
Previous
Next Post »