"நடுநிசி” -விஜயநிலா


ஷார்ட் ஃபிலிமிற்கான கதை,திரைக்கதை, வசனம்:

                


                                                              காட்சி – 1

                                                        அனன்யாவின் வீடு- இரவூ
 அனன்யா படுக்கையில் தன் கணவன் ரவியின் முன்னால் ஒரு மதுக்கிண்ணத்தை நீட்டுகிறாள்.அலட்சியமாக வாங்கி அருந்துகிறான்.மீண்டும் மீண்டும் மதுக்கிண்ணம் கொடுக்கப்படுவது மட்டும் க்ளோஸ்அப்பில் தெரிகிறது.ரவி இப்போது மெல்ல சுயநினைவூ இழக்கிறான்.அனன்யா திருப்தியாகப் புன்னகைக்கிறாள்.அவனது கைகளை கட்டிலோடு இணைத்துக் கட்டுகிறாள்.கால்களையூம் கட்டுகிறாள்.அவன் மேலேறி அமர்ந்து கொண்டு அவன் கன்னத்தை கைளால் சப் சப்பென்று அறைகிறாள்.பழம் நறுக்கும் கத்தி எடுத்து அவன் கன்னத்தில் கோடு போடுகிறாள்.
அனன்யா: செத்துப் போடா நாயே.எத்தனை நாள் நீ என்னை இழுத்துப் போட்டு அடிச்சிருப்பே.இன்னிக்கி என்னோட டர்ன்.செத்துப் போ.உன்னைப் போய் நான் லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடி வந்தேன் பாரு.உன்னை கொல்லாம விடமாட்டேன்டா(என்று கத்தியை அவன் நடுமார்பில் குத்துகிறாள்)
                                                            காட்சி -1
                                                  அனன்யாவின் வீடு- அதே இரவூ
 அனன்யா பாத்ருமிற்கு வந்து கத்தியையூம்,முகத்தையூம் கழுவூகிறாள்.ஷவரை திறந்து விட்டு புடவையோடு தண்ணீரில் நிற்கிறாள்.அழுகிறாள்.வெளியே வருகிறாள்.நடை தடுமாறுகிறது.ஹாலுக்கு வருகிறாள்.மணி 12 அடிக்கிறது.காற்றில் திரைச்சீலைகள் ஆடுகின்றன.தொலைபேசியை எடுக்கிறாள்.
அனன்யா: ஹலோ.போலீஸ் ஸ்டேஷனா?
(மறுமுனையில் காவல் நிலையத்தில் ஒரு எஸ்.ஐ எடுத்து பேசுகிறார்)
எஸ்.ஐ: என்னம்மா.யாரு அது?
அனன்யா: சார் இங்க ஒரு கொலை நடந்துடுச்சி சார்.இல்லை.நான்தான் கொலை செய்தேன் சார்.செத்துப் போனது என் ஹஸ்பன்ட்.மிஸ்டர் ரவின்னு ஒரு பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட்
எஸ்.ஐ:கொலையா.இரும்மா.பதட்டப்படாம சொல்லுங்க.எந்த ஏரியா.அட்ரஸ் சொல்லுங்க (அருகில் திரும்பி மெல்லமாக- கால் டிரேஸ் பண்ணுய்யா ஏதோ சாவூகிராக்கி.கொலையாம் என்கிறார்)
அனன்யா:இத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினான்.இப்ப கொன்னுட்டேன்.சீக்கிரம் வாங்க இல்லைன்னா நானும் துhக்கு மாட்டி செத்துப் போயிருவேன்(ஃபோனை வைத்து விட்டு சரிந்து விழுகிறாள்.கட்டிலில் ரவியின் பிணம் கிடக்கிறது)


                                                            காட்சி – 2
                                                    அனன்யாவின் வீடு- இரவூ
மேலேயிருந்து எஸ்.ஐ.சண்முகநாதன் பைக்கில் வந்து நிற்பது தெரிகிறது.அவருடன் ஒரு கான்ஸ்டபிள் வந்திருக்கிறார்.சண்முகநாதன் விரைப்பாக எல்லாம் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்.காலிங் பெல்லை அழுத்தி விட்டு கதவூ திறந்தேதான் இருப்பதைப் புரிந்து கொண்டு உள்ளே வருகிறார்.அப்போது அவரை எதிர்கொண்டு வரவேற்பது அனன்யாவின் கணவன் ரவி.அதிர்ச்சியாக இருக்கிறது அவருக்கு.
ரவி:வாங்க ஆபீசர்.உள்ள வாங்க.என் மனைவி உள்ளதான் இருக்கா
சண்:நீங்க செத்துப் போயிட்டதா சொன்னாங்களே (சோபாவின் அமர்கிறார்)
ரவி:என்னைக் கொலை பண்ணிட்டதாகவூம் சொல்லியிருப்பாளே.ஸாரி சார்.அவளுக்கு ஷிட்சோஃபெரினியா வியாதி.தானாகவே எதையூம் கற்பனை பண்ணிக்கிற பழக்கம் இருக்கு.ஒரு கற்பனையான உலகத்துல அடிக்கடி சஞ்சாரம் செய்ய ஆரம்பிச்சிடுவா.ட்ரிட்மன்ட் எடுத்துகிட்டுதான் இருக்கம்
அனன்யா அப்போது அங்கே வருகிறாள்.இயல்பாகப் பேசுகிறாள்.
அனன்யா:ரவி.சார் எதுக்கு வந்திருக்காரு.ஏதாவது பிரச்சனையா.
ரவி:இல்லை.இந்த பக்கமா நைட் பட்ரோலுக்கு வந்திருக்கார்.நம்ம காம்பவூன்ட்கிடட என்னமோ சத்தம் கேட்குதுன்னு பார்த்துட்டு போக வந்திருக்காரு
சண்:ஓகே.நான் கிளம்பறேன்.காலையில வந்து என்னைப் பாருங்க மிஸ்டர் ரவி.கொஞ்சம் பேசனும்(என்று கிளம்பிப் போகிறார்)
அவர் போனதும் விருட்டென்று திரும்பி அனன்யாவின் கன்னத்தில் அறைகிறான் ரவி.
ரவி:நான் அவ்வளவூ சுலபத்துல சாக மாட்டேன்டி.என்னையா நீ கொலை பண்ணுவ.மவளே.நான் உன்னை உயிரோடு போஸ்ட்மார்ட்டம் பண்ணிருவேன் தெரியூமா கீழே விழுகிறாள் அனன்யா.



                                                             காட்சி -3
                                                         மருத்துவமனை-பகல்
மனநல டாக்டரிடம் வருகிறார்கள் ரவியூம்,அனன்யாவூம்.டாக்டரின் அறைக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.அப்போது அனன்யா அவன் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள்.கலக்கமாக அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
ரவி:ஒண்ணும் இல்லைடா.இது சாதாரண வியாதிதான்.உடம்புக்கு முடியாமப் போகுமில்லை அது போல மனசுக்கு முடியாமப் போயிருக்கு.யூர் ஆல்ரைட்
அனன்யா:எனக்கென்னவோ பயமா இருக்குங்க.நான் உங்களை கத்தியால குத்த முயற்சி பண்ணியிருக்கேன்.
ரவி:எனக்கு தெரியூம் அனன்யா.நீ கத்தியால குத்தினபோது நான் மூச்சை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு உடம்பைக் கல்லு மாதிரியாக்கிட்டேன்.நான் பாடிபில்டிங் போட்டியில எல்லாம் கலந்துகிட்ட அனுபவம் அப்ப எனக்கு கை கொடுத்துச்சி.தவிர நீ என்னை குத்தி கொன்னாலும் நான் சந்தோஷமா செத்துப் போவேன்.பிகாஸ் ஐ லவ்வூ யூ'
அனன்யா:ச்சீப் போங்க என்று சொல்லும்போதே நர்ஸ் வந்து அவர்களை அழைக்கிறாள்.
உள்ளே போகிறார்கள்.டாக்டர் மாயவன் என்று பெயர்பலகை இருக்கிறது.ஏசி குளிர் தாங்காமல் புடவை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள் அனன்யா.
அவளை உரசின மாதிரி அமர்ந்து கொள்கிறான் ரவி.
மாய: ரவி உங்களைப் பத்தி சொன்னாரும்மா.உனக்கு ஒண்ணும் இல்லை.உன் மனசு கொஞ்சம் களைப்பா இருக்கு.இந்த சூப்பர் ஃபாஸ்ட் நகர வாழ்க்கையில சில வேளைகளில் இது மாதிரி ஆகும்.வேணும்னா எங்கயாவது வெளியில ஹில்ஸ்டேஷன் போயிட்டு வாங்களேன்
ரவி:அனன்யாவூக்காக நான் நரகத்துக்குக் கூட போக ரெடியா இருக்கேன் டாக்டர்.
மாய:பார்த்திங்களா சச் எ நைஸ் ஹஸ்பன்ட்.சின்னதா இன்னொரு முறை ஒரு ஹனிமூன் கொண்டாடிட்டு வந்திருங்களேன்
அனன்யா:அப்ப மருந்து மாத்திரை எல்லாம் வேண்டாமா
மாய:வேண்டாம்.


அனன்யா:காட்.பயந்துட்டே வந்தேன்.என் தலையில எலக்ரோடு எல்லாம் வைச்சி கரன்ட் ஷாக் கொடுக்கப் போறிங்களோன்னு
மாய: அந்த ஓல்டு மெத்தட் எல்லாம் போயாச்சும்மா.போயிட்டு வாங்க.மருந்து மாத்திரை எதுவூம் தேவையில்லை
அவர்கள் நன்றி சொல்லி கை குவித்து விடைபெற்றுச் சென்றதும் தொலை பேசி எடுத்து பேசுகிறார் டாக்டர்
மாய:ஹலோ போலீஸ் ஸ்டேஷனா?நான் டாக்டர் மாயவன் பேசறேன் இன்ஸ்பெக்டர்.அந்த பொண்ணு அனன்யா வந்திருந்தா.முதல்ல அவ கணவனை கொலை செய்ய முயற்சி செய்துகிட்டிருந்தவ இப்ப குற்றஉணர்வூ காரணமா தன்னைத்தானே தண்டிச்சிக்கறதுக்காக துhக்கு மாட்டி ஸூசைட் பண்ணிக்க முயற்சி பண்ணியிருக்கா.எனக்கென்னவோ அந்தப் பொண்ணு தற்கொலை செய்துக்க வாய்ப்பு அதிகம் இருக்குன்னுதான் நினைக்கறேன்
தொலைபேசியை வைத்து விட்டு கர்ச்சீஃப் எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொள்கிறார்.




                                                              காட்சி – 4
                                                         மலைப்பிரதேசம்- பகல்
ஏரியில் படகு சவாரியில் அனன்யாவூம் ரவியூம் உற்சாகமாக இருக்கிறார்கள்.அப்போது ரவியின் முகம் மாறுகிறது.
அனன்யா:என்ன ரவி.தலை வலிக்குதா.என்னாச்சி
ரவி:இந்த இடத்துலதான் அனன்யா மூன்று முடிச்சி படம் எடுத்தாங்க முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால
அனன்யா:அதனால மூடு அவூட் ஆகிட்டிங்களா.சியர் அப்.நைட் நல்லா கவனிச்சிக்கறேன்.நான் என்ன உங்களை இப்ப தண்ணியில தள்ளி விடவா போறேன்.எனக்குதான் மனவியாதி குணமாகிடுச்சாமே.டாக்டர் சொல்றார் (என்று சிரிக்கிறாள்.துப்பட்டாவை சரி செய்கிறாள்)
ரவி:இல்லை.நீ தள்ளி விடமாட்டே.உன் மனநிலை காரணமா நீ ஏன் தற்கொலை செய்துக்க முயற்சி செய்யக் கூடாது
அனன்யா:என்னங்க சொல்றிங்க
ரவி:நீ போயிட்டா எனக்கு உன் சொத்து கிடைக்குமே.நான் லவ் பண்ற அனிதாவூம் கிடைப்பாளே
அனன்யா:ரவி..நான் உங்களை உயிருக்குயிரா லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடி வந்தவ.


ரவி:எதுவூமே ஒரு காலகட்டத்துல அலுத்துப் போயிரும்டி என் செல்லம்.நீ இப்ப எனக்கு அலுத்துட்டே.அதனாலதான் நான் உன்னை கொடுமைப் படுத்தினது தாங்காம நீ என்னை கொலை பண்ணிடலாம்கற முயற்சியில ஈடுபட நினைச்ச நிமிடம் வரைக்கும் பொறுமையா இருந்து சீன் ஆஃப் க்ரைம்ல சம்பந்தப்படாம இருந்தேன்.எப்ப நீ கத்தியை துhக்கிட்டியோ அது எனக்கு வசதியாப் போச்சி.சீனை பத்த வைச்சேன்.இன்ஸ்பெக்டருக்கு நீ தகவல் கொடுத்ததும் இன்னும் சீன்ல ரியலிசம் வந்துடுச்சி.அந்த டாக்டர் மாயவன் காசு கொடுத்தா குரைப்பவன்.உன் மனநிலை காரணமா நீ தற்கொலை செய்துக்கப் போறதா போலீசுக்கு தகவல் போயிருச்சி.ஸோ தண்ணியில குதிச்சிடு செத்துப் போயிரு
அனன்யா தான் மாட்டிக் கொண்டதை உணர்கிறாள்.இத்தனை நாள் நடந்ததெல்லாம் பொய்யல்ல.தன் கணவன் கெட்டவன் என்றுதான் கொல்லப் போனோம்.அதை வைத்து அவன் குற்றவலை பின்னியிருக்கிறான் என்பது புரிய மெல்ல பேசுகிறாள்.


ரவி:ம்.சீக்கிரம்.குதிச்சிரு.இந்த இடத்துல ஆழம் அதிகம் (பாடுகிறான்) வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்..
அனன்யா:ஆல்ரைட்.நான் முடிவூ பண்ணிட்டேன்.குட்பை என் கணவனே(என்று கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து துப்பட்டாவால் அவன் கழுத்தில் சுருக்கிட்டு விடாப்பிடியாக அழுத்துகிறாள்.போராடும் ரவி ஏற்கனவே போதையில் இருந்ததால் தாக்குபிடிக்க முடியாமல் இறந்து போகிறான்.செல் எடுத்த அனன்யா டாக்டரிடம் பேசுகிறாள்-
அனன்யா:டாக்டர்.சாப்டர் க்ளோஸ்.எனக்கும் கொஞ்சூண்டு சட்டம் தெரியூம்.மனநிலை சரியில்லாதவங்க செய்த கொலைக்கு தண்டனை கிடையாது.பை த வே மிஸ்டர் ரவி இஸ் நோ மோர் (என்று சிரிக்கிறாள் நார்மலாக) மெல்ல எதிரில் போய் உட்கார்ந்து கொண்டு முழங்காலில் கைகளைக் கட்டிக் கொண்டு மெதுவாகப் பாடுகிறாள் - வசந்தகால நதிகளிலே..வைரமணி நீரலைகள்...

                                                 (முற்றும்)
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
October 2, 2015 at 7:20 AM ×

nice

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar