" 36வருஷம்..." --விஜயநிலா

   

  அந்த பெரியவர் கார்ப்பரேட் மனிதர் போலிருந்தார்.என் கையிலிருந்த ஓஷோவின் புத்தகத்தைப் பார்த்து விட்டு கேட்டார்.
"நீ ஓஷோ எல்லாம் படிப்பாயா.அதுவூம் இந்த இளவயதில்"
"ஓஷோ மட்டுமல்ல.உட்ஹவூஸூம் படிப்பேன்.ஃப்ரெடெரிக்ஃபார்சைத்தும் படிப்பேன்.என் ரசனை இன்னதென்று சொல்ல இயலாதது"
"நீட்ஷே சொல்வதைத்தான் ஓஷோவூம் சொல்கிறார்.காட் இஸ் டெட்.மேன் இஸ் ஃப்ரீ இதை நீட்ஷே சொன்னதை இவரும் சொல்கிறார்.படித்திருக்கிறாயா"
இதை அவர் சொன்ன சமயம் முக்கியமானது.இரண்டு நாட்களுக்கு முன்தான் சத்யசாய்பாபா இறந்து போயிருந்தார்.கடவூள் இறந்தான்.மனிதன் விடுதலை பெற்றான்.என்ன ஒரு வாக்கியம்.இவரிடம் ஏதோ சுவாரஸ்யம் இருக்கிறது என்பது புரிந்து அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
.அவரெதிரில் அமர்ந்திருந்த இளைஞன் உயரமாய் விஷால் போலிருந்தான். ஆனால் மாறுகண்ணோ, 6பேக்கோ இல்லை.
ஐம் பரத்.ஸாரி என் பேரு வசந்தராஜ்என்றான்.
அப்போ பரத்ங்கறது?”
அதுவூம் என் பேர்தான்
 அவர் சிகரட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டார்.எகனாமிக் டைம்ஸை புறக்கணித்து விட்டு அவரையே பார்த்தான்.
இட்சினி சொல்றது சரியா இருந்தா நீங்க எதையே சொல்ல விரும்பறிங்கஎன்றான்.
ஆமா.இப்பதான் நடந்த மாதிரி இருக்கு.நான் சுந்தரவதனன்.சுருக்கமா சுந்தர்.உன்கிட்ட சொல்ல விரும்பறேன்.என்னைப் பார்த்தா என்ன தோணுது உனக்கு?”
ஏதாவது ஒரு கார்ப்பரேட் கம்பெனியில சிஎம்டி ரேங்க்ல இருக்கிங்க.சரியா சார்?”
ஜெயில்ல இருந்தேன்.32 வருஷம்.36வருஷ தண்டனை.நன்னடத்தைக்காக குறைச்சாங்க.
காட்..36வருஷ தண்டனையா சார்?”
ஆமா.ஒரு கொலைக்குற்றத்துக்காக
எனக்கு துhக்குன்னே நினைச்சேன்.ஆனா கடுங்காவல்னு தீர்ப்பானதும் இதுதான் வாழ்க்கைன்னு தேத்திக்கிட்டேன்
இத்தனை சாதுவான நீங்களா ஒரு கொலை..
"கொலை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்பதை முதலில் நான் தினத்தந்திகளில்தான் பார்த்தேன்.இப்போது மாதிரி அப்போது இன்டர்நெட்டெல்லாம் கிடையாது.என் காலேஜ் லைப்ரரியில் பழைய ஆங்கில செய்தித்தாள்களை ஒரு ஸ்டோர்ரூமில் போட்டு வைத்திருப்பார்கள்.அங்கேதான் 1947ல் நடந்தது அந்த கொலை.எலிசபத்ஷார்ட் என்ற அழகான 22 வயது பெண்.அவளை முழுநிர்வாணமாக்கி போட்டிருந்தார்கள்.ஒரு கூரான சர்ஜிக்கல் கத்தியால் அவளை இடுப்பருகில் இரண்டாகப் பிளந்து இரண்டு பாகங்களாக அவள் உடலை பிரித்திருந்தான் அந்த கொலைகாரன்.வெள்ளைக்காரப் பெண்களுக்கு இருப்பது போல கோல்டன் ப்ரவூன் நிற கூந்தல் கிடையாது அவளுக்கு.கருப்பு நிற கூந்தல்.அவள் விரும்பி அணிவதும் கருப்புநிற உடைகள்தான்.ஹாலிவூட்டில் நடிகையாக விரும்பி வந்த அந்த எலிசபத் அவளை 'ப்ளாக் டாலியா' என்றழைப்பார்கள்.அவளை என்னமாய் ரசித்து கொலை செய்திருந்தான் அந்த கொலைகாரன் தெரியூமா"
"ரசித்து கொலை செய்தானா"
"ஆமாம்.அதன்பின் இன்னொரு கொலை செய்யப்போவதாகவூம் அவன் சவால் விட்டான்.அந்த கொலைகாரனை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.என்னைப் பிடிக்க முடியாமல் போன மாதிரி.நானும் ரசித்துதான் கொலை செய்தேன்"
"ரசித்து செய்தீர்களா.நீட்ஷே எல்லாம் படிக்கிற ஆள் நீங்கள்..."
சுலபமாக அந்த கொலையை செய்தேன்.நானா செய்தேன்னு என்னாலேயே நம்ப முடியலை.காலேஜ்ல நான் ஒரு ஹீரோ.புரொபசர்ஸ் கூட எனக்கு சல்யூட் பண்ணுவாங்க.ஒரு தொப்பிக்குள்ள குடுமி வைச்ச பக்கிப்பார்ப்பான் மட்டும் வேணும்னே இன்டனர்ல்ல ஃபெயில் போட்டான்.அவனை வெட்டனும்னு நினைச்சேன்.அதுக்குள்ள செந்தில்னு ஒரு பையன்.பார்க்க போஸ்டர் திங்கற பசு மாதிரி இருப்பான்.அவன் என்னை மதிக்காதது ஒரு வெறியை கிளப்பி விட்ருச்சி.
அதுக்காக கொலை வரை துணியனுமா சார்
இயல்பாகவே எனக்குள்ள ஒரு வக்கிர புத்தி இருந்துச்சி.ஒருநாள் செந்தில் கான்ட்டீன்ல விஷ் பண்ணமப் போயிட்டான்.என் கை ரெண்டும் ஜில்லுனு ஆயிருச்சி.அவனை வரச்சொல்லி ராக் பண்ணணும்னு ஆள் விட்டனுப்பினேன்
வந்தானா?”
முறைப்பா இருந்தான்.ரூம் கதவை சார்த்தினேன்.பிரின்சிகிட்ட சொல்வேன்னான்.அவங்கப்பா யூனிவர்சிட்டியில பெரிய ஆள்னான்.போதாதா.ஒரு அறை நுhலறுந்த பட்டம் மாதிரி சாய்ந்துட்டான்.அப்ப வேற ஒரு ஆசை வந்துச்சி.அவனை பார்ட் பார்ட்டா பழைய ஸ்கூட்டர் மாதிரி கழட்டிரலாமான்னு.எப்பவோ லாப்ல இருந்து தேத்திட்டு வந்த சர்ஜிக்கல் கத்தி வைச்சி முத காரியமா அவன் தலையை துண்டிச்சேன்.அது ஒரு பிராந்தா பிரான்டட் சர்ஜிக்கல் கத்தி.ஆறேமுக்கால் இன்ச் நீளமானது.கையில வாகா பிடிச்சிக்கலாம்.இரக்கமில்லாம எலும்பையூம் வெட்டும்.
மைகாட்.நீங்க ஏதும் பொய் சொல்லலையே சார்.இது நிசமாவே நடந்ததா
பார்ட் பார்ட்டா புனே,நோய்டால எல்லாம் கொல்வான்களே அது போல கழட்டிட்டேன்.தலையை வேணும்னே ஹாஸ்டலுக்குப் பின்னாடி உள்ள வாய்க்கால்ல வீசிட்டேன்.ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன்.ஒவ்வொரு ஸ்டேஷன்லயூம் ரயில் தாண்டும்போதும் ஒரு பார்ட்டை வீசினேன்.சென்னைக்குப் போய் ஒரு டவூன் பஸ்ல முண்டத்தை மட்டும் வைச்சிட்டு திரும்பிட்டேன்.நானே முத ஆளா அவனை காம்பஸ்ல தேடினேன்
அப்புறம் எப்டி சார் மாட்டினிங்க?”
மாட்டலை சரணடைஞ்சேன்.இரண்டு நாள் தைரியமா இருந்தேன்.ஒரு நாய் அந்த தலையை என் வராந்தா பக்கத்துல போட்டதும்தான் கிலி பிடிச்சிப்போய் ஒரு வக்கீலைப் பார்த்து சரணடைஞ்சேன்.அப்புறம் பத்திரிகைகள்ல எல்லாம் என்னை சைக்கோ வில்லன்னு போட்டானுவ.
தப்ப செய்துட்டமேன்னு உறுத்தலே இல்லையா சார் உங்களுக்கு?”
இல்லை.ஒரு ஹீரோ மிதப்புல இருந்தேன் அப்ப.போலீசால முண்டத்தை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிஞ்சது.ரெண்டு வருஷம் நடந்தது கேஸ்.கடைசியா 36வருஷம்னாங்க.கோர்ட்ல உட்கார்ந்து அழுதேன்.யார் கிட்டேயூம் பேசாம இருந்தேன்.செந்திலோட முகமில்லாத உடல் மட்டும் கனவில வரும்.நான் எதுக்காக அவனைக் கொன்னேன்னு புரியலை.எத்தனை காலம் ஆயிருச்சி.இதே போல ஒரு ரயில்ல வைச்சிதான் நான் அந்த செந்திலோட உடல்பாகங்களை வெளிய வீசினேன்.இதே போல ஒரு ரயில்லதான் நான் செந்திலோட முண்டத்தை சூட்கேஸ்ல வைச்சி பிரயாணம் பண்ணிட்டு இருந்தேன்
ஆமா சார்என்றான் அவன்.
என் சொல்ற பரத்என்றார் சிகரட் பாக்கெட்டில் தேடியவாறே.
எத்தனை காலம் ஆயிருச்சி சார்என்றான் அவன்.
பார்டன்
இதே போல ஒரு ரயில்லதான் நான் தலையில்லாம முண்டமா,வெட்டப்பட்ட கை,கால்களோட சூட்கேஸ்ல திணிக்கப்பட்டு பயணமானேன்.32வருஷம் என்ன சுலபமா போயிருச்சி இல்லே?”என்றான் சற்று கரகரத்த குரலில்.
நீ.நீ..நீ..
அவர் குழப்பமாக அவனைப் பார்த்தபோது அவன் விஷால்தனமாக தலையை இருபுறமும் ஆட்டியாறே குதிக்கிற மாதிரி நடந்தான்.
முன்னே செந்தில்.இப்ப பரத்என்று சொன்னபடி அவன் அவரை அணுகி கைகளைத் திறந்தான்.உள்ளே ஒரு கூரான கத்தி.சர்ஜிக்கல் கத்தி.டிசக்க்ஷன் செய்வதற்கான கத்தி.அதை அவர் கழுத்தில் வைக்க ஆரம்பித்தான்.
"இதுவூம் சர்ஜிக்கல் கத்திதான்.'ரிபெல்' பிரான்டட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை விடவூம் கொடூரமான கார்பன் ஸ்டீல் கத்தி.பத்து இன்ச் கத்தி.ஒரு இழுப்பு பொதும்.உன் கழுத்தை வெட்டி தலையை பவூன்ஸ் பண்ணலாம்.."


ஒரு பின்கதை:
நீ மறுபிறவியா.செந்தில்தானே நீ.என்னை விட்ருஎன்றார் கதறலாக.
மவனே மறுபிறவியெல்லாம் சினிமாலதான்டா வரும்.நான் யார் தெரியூமா?”
உன்னை துhக்கில போடாம 36வருஷம்னு தீர்ப்பு சொல்றது லட்சக்கணக்கில பணத்தை வாங்கிட்டு போன ஜட்ஜோட மகன்.எங்கப்பா தப்பான தீர்ப்பு கொடுத்துட்டான்.நான் உனக்கு வழங்கறேன்டா.சரியான தீர்ப்பு மரண தண்டனைன்னுஎன்று சிரித்தான்.
அப்புறம்...
 32 வருடங்கள் கழித்து ஓடும் ரயிலில்மடியில் வைத்து மின்புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் காதோரம் வெளுத்திருந்த பரத்.ஒரு இளைஞன் ஏறி உள்ளே வந்தான்.

தன் பெயர் 'சுந்தரவதனன்' என்றான்.
Previous
Next Post »

2 comments

Click here for comments