'பூக்களுக்குத் தெரியூம்
எப்போது மலர்வது என்று
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
அவை மலர்கின்றன'

'வாஷிங்மெஷின் கூட
குஷியாகச் சுற்றுகிறது
உள்ளே போடப்பட்டது
உன் உடைகளாக இருப்பதால்'

'தபால்நிலையங்கள்
அழுதுவடிகின்றவாம்
வாட்ஸ்அப் வந்தபின்
இப்போதெல்லாம்
நீ கடிதங்களே அனுப்புவதில்லையாம்
எச்சில் தொட்டு ஸ்டாம்ப்
ஒட்டி என்று'

'மற்றவர்களெல்லாம்
சில்லரையையூம் ஸ்டாம்ப்பையூம்
சேகரித்துக் கொண்டிருப்பதுபோல
நான்
உன் புன்னகையை
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
யாரும் அறியாமல்
ஏன் நீயே அறியாமல்'

'இங்கே
காத்திருப்பது நான் மட்டுமல்ல
நீயூம்தான்
சற்றே அருகே வந்து பார்
எனக்குள்'

'உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
நேரமும் காத்திருக்கத்தான் செய்கிறது
உனக்காக
கடிகார முட்களும்
மெல்லச் சுற்றுகின்றனவே'

'நான்
கவிதை ஏதும் எழுதாதபோதெல்லாம்
நீ எழுதிவிடுகிறாய்
கண்களாலும் உடல்மொழியாலும்'

'அட யார் சொன்னது
மருதாணி நன்றாக பிடித்திருக்கிறதென்று
உன்னைக் கண்ட வெட்கத்தில்
சிவந்திருக்கிறது
மருதாணி'
'எல்லாருமே
உன்னை பின்தொடர்வதால்
இந்த தெருவே
ஒன்வேயாகிப் போனது’
Previous
Next Post »

2 comments

Click here for comments