"சிலுக்குவார்பட்டி சிங்கீலா" -விஜயநிலா




ஷார்ட் ஃபிலிமிற்கான கதை திரைக்கதை வசனம்:

                  ஸீன்-1
   (போலீஸ் மைதானத்தின் அருகே உள்ள மரத்தடி.அப்பாச்சியூம் பல்சர்களும் நிற்க அருகில் நம்ம ஹீரோக்கள் அமர்ந்திருக்கிறார்கள்)

 ரவி: என்ன வாழ்க்கைடா?கொஞ்சம் கூட திரிஷாவே இல்ல..ச்சே.. த்ரில்லே இல்லே
அமர்:என்னாச்சுடா..நாலாவது ப்ளோர் அஞ்சலாவை அடைகாத்திட்டு இருந்தியே.லிஃப்ட்ல வைச்சு லிப் லிப் டு லிப் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப்போறேன்னே.என்ன ஆச்சுதா?
திலீப்:இவன் சுத்த ஜெய்டா.வெட்கப்பட்டு திரும்பியிருப்பான்
 ரவி:இல்லேடா டப்பர்வேர்வாயா.ஒருநா தனியா லிஃப்ட்ல மாட்டினா.கிட்டக்க வந்தா.அடிச்சதுடா அதிர்ஷ்டம்னு நினைச்சா சர்ரக்னு ஒரு பென் டிரைவ்வை எடுத்து நீட்டி இதுல என் ப்ராஜக்ட் ஃபைல் இருக்கு.இதை அலைன் பண்ணித்தர்றிங்களான்னு இறங்கிட்டா
திலீப்:இதுக்குதான்டா..அனாமத்தா டிடிபி சென்டர்ல போய் உட்காரதன்னு சொன்னம்.கேட்டியா.. இப்ப பாரு கதையை திருடி படமெடுத்தவன் திருட்டி விசிடிகாரன்கிட்ட மாட்டி மாதிரி ஜங்க் ஆயிட்டான்
ரவி:அங்க ஒரு மலையாள சகீலா இருந்தளேன்னு முண்டகன்னி அம்மனுக்கு நேர்ந்துகிட்டு டிடிபி சென்டர்ல போய் சகீலாவை உஷார் பண்ணலாம்னு போனேன்.எவனோ உன்னிகிருஷ்ணன்னு ஒரு சப்பைப் பய வந்து சகீலாவை தள்ளிட்டுப் போயிட்டான்(அனைவரும் சிரிக்க ரவி காண்டாகிறான்).
(அப்போது ஒரு தொத்தல் மோபெட்டில் வெங்கிடு வருகிறான்.செயின் ஸ்மோக்கர் மாதிரி அவன் மோபெட் புகை கக்குகிறது.ஓகேஓகே பார்த்தா சாயலில் இருக்கும் வெங்கிடு ஏதோ சுலோகத்தை முணுமுணுத்து விட்டு அமர்கிறான்)
திலீப்:வாடா..அக்ரஹாரத்து அராத்து.இன்னிக்கி எந்த மாமி குளிச்சதை எட்டியிருந்து பார்த்தே..
வெங்:போங்கடா..அதெல்லாம் அடாசு காரியம்.இன்னிக்கி ஃபேஸ்புக்ல சாட்ல வந்த கிரிஸ்டி எப்ப பார்த்தாலும் நீயூம் உன் ஃப்ரன்ட்ஸ்ஸூம் அத்துவூட்ட ஈமு கோழிங்க மாதிரியே இருக்கிங்களேடா.உங்க லைஃப்ல எந்த அட்வெஞ்சருமே கிடையாதான்னு கேட்டு மானத்தை வாங்கிட்டா.அப்படியே கோடி ஆத்து கோமளா மாமியை பார்த்துட்டு துரக்கு மாட்டிக்கலாம்னு நினைச்சேன்
திலீப்:பார்ரா..மாமி 'மனசை'ப் பார்த்ததும் மனசு மாறிட்டான் போல..இரு..இரு..என்ன சொன்னே
வெங்:அட்வெஞ்சர்.அதாவது வீரதீர சாகசம்.
ரவி:அதெல்லாம் விஜய், விஜயகாந்த் டிபார்ட்மன்ட்டுடா.நாம வந்தமா நாலு உரிச்ச கோழிங்களை பார்த்தமான்னு போய்கிட்டே இருக்கனும்
அமர்:இருங்கடா.இவன் சொல்றதுல மேட்டர் இருக்கு
திலீப்;நாமளும் ஏதாவது பண்ணனும்டா.நாமல்லாம் நல்லா வரவேணாமா?
வெங்:என்ன பண்ணப்போறேள்?ஏதும் கிட்நாப் கிட்நாப் பண்ணலையே.
அமர்:பார்ரா.அம்பி என்னமா ப்ளான் தர்றான்.நாம கிட்நாப்பே பண்ணுவம்டா..
ரவி:நான் கூட ஒரு இங்க்லீஷ் நாவல்ல படிச்சிருக்கேன்டா."ஃபேன் க்ளப்"னு புக்.அதில ஒரு நடிகையை அவளோட ரசிகங்களே சேர்ந்து கடத்திடறதா வரும்..
திலீப்:அதான் சூர்யா செஞ்சு முடிச்சி கல்யாணமும் பண்ணிட்டாரேடா.
அமர்:நாம ஒரு நடிகையைத்தான் கடத்தனும்.வீரதீரசாகமும் ஆச்சு.கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்பும் ஆச்சு.
ரவி:நிசமாவே கிட்நாப் பண்ணப்போறமா.எந்த நடிகையைடா..
                  
                               

 ஸீன்-2
(அறுத பழசான மெக்கானிக் ஷாப்.பிரித்துப் போடப்பட்ட புல்லட்டின் அருகே நம்ம ஹீரோக்கள் அமர்ந்திருக்கிறார்கள்)
திலீப்:என்னடா நாம மட்டும்தான் இருக்கம்.இந்த வெங்கிடு பயலைக் காணம்.இன்னிக்கி யாராவது மாமி மாட்டிட்டாளா..
(வெங்கிடு நடந்து வருகிறான்.நடை ஒரு மாதிரி ஈமு கோழி மாதிரி இருக்கிறது)
அமர்:என்னடா ஆச்சு.நடை சரியில்லையே.எங்கேயூம் ஓவரா உஷார் படுத்திட்டியா(சிரிக்கிறார்கள்.)
வெங்:இல்லைடா.ப்ளான் யோசிச்சிட்டு வந்தேன்.
திலீப்:அது சரி.உன்னோட வண்டி எங்கேடா.ஓணான் மாதிரி ஓட்டிட்டு வருவியே..
வெங்:கார்ப்பரேஷன்ல கொசுமருந்து அடிக்கற கான்ட்ராக்ட்டுக்கு கேட்டாங்க.கொடுத்திட்டேன்.சரி நீங்க ஏதும் ப்ளான் பண்ணினேளா.எந்த நடிகையை கடத்தறம்..ஏதும் ஆபத்து இல்லையே..
அமர்:இல்லைடா.அப்படியே மாட்டிக்கிட்டாலும் ஜனாதிபதி விருது கிடைச்சாலும் கிடைக்கும்.டில்லி போறதுன்னு எதுக்கும் யாராவது சப்பை ஃபிகரை உஷார் படுத்தி வை.
வெங்:நான் போறேன்.நீங்கள்லாம் கேலி பண்றேன்.உங்க கூட எல்லாம் சேரக்கூடாதுன்னு கோமளா மாமி சொல்லியிருக்கா.
ரவி:இத பார்றா..நான் முடிவூ பண்ணிட்டேன்.நம்ம கடத்தப் போறது நடிகைதான்.ஆனா சினிமா நடிகை இல்லே.
திலீப்:பின்னே யார்ரா..டிவி நடிகையா.எவளாவது ஊருக்கு வெளியில பிளாட் விற்கற விளம்பரத்துக்கு வந்தா அப்படியே அள்ளிட்டு வந்திரலாமா..
வெங்:வேணாம்..
அமர்:ஏன்டா..
வெங்:அப்புறம் டெல்லிகணேஷ் மாமா, நிழல்கள் ரவியெல்லாம் கோச்சுப்பா.
ரவி:அறுக்காம சொல்றதை கேளுடா.சினிமா நடிகையை கடத்தினா வெறும் பப்ளிசிட்டிதான் கிடைக்கும்.அதுவே உள்ளுர்ல ஃபேமசா இருக்கற ஆட்டக்காரிங்க எவளையாவது இட்டாந்துட்டம்னா..கிளுகிளுப்பா கடத்தலாம்.பணமும் கிடைக்கும்.
அமர்:அப்படி யார்ரா இருக்கா?
ரவி:இருக்கா.
திலீப்,அமர்,வெங்கிடு:யாருடா..சொல்லு யாருடா..
ரவி: சிலுக்குவார்பட்டி சிங்கீலா.
(வெங்கிடு வெட்கத்தில் பூரித்துப் போகிறான்."கடங்காரா.அபிஸ்து.அவளோட எல்லாம் சேராதேன்னு சொல்லியிருக்கேனோல்லியோ..."என்ற கோமளா மாமியின் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது)

                       ஸீன் -3
  சிலுக்குவார்பட்டி கிராமம்.அங்கே சிலுக்குவார்பட்டி என்ற மைல்கல் அகற்றப்பட்டு சிலுக்குவார்பட்டி சிங்கீலா என்று பெயர் பொறித்த மைல் கல்லை சிலர் நட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சிலுக்குவார்பட்டி சிங்கீலாவூக்கு பால்காவடி எடுத்த சில பக்தர்கள்(!) பயபக்தியூடன் நடந்து வருகிறார்கள்.ஒரு மரத்தடியில் சில பெரிசுகள் சிலுக்குவார்பட்டி சிங்கீலா என்ற பெயரை மார்பில் பச்சை குத்திக் கொள்ள வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்.சினிமா ஆக்டர் மிர்ச்சி சிவா போன்ற ஒருவர் தான் இப்போதுதான் யூஎஸ்ஸிலிருந்து சிலுக்கு சிங்கீலாவை பார்ப்பதற்காக வருவதாக ஒரு டீக்கடையில் பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.நம்ம ஹீரோக்கள் பஸ்ஸிலிருந்து இறங்குகிறார்கள்.லா..லா..லா..லா..என்ற பின்னணி குரல் கேட்கிறது.இறங்கி நடக்கிறார்கள்)

ரவி:பார்த்தியா சிங்கீலாவோட மகிமையை..இவளைத்தான் கடத்தப்போறம்..
அமர்:இத்தினி பேர் அவ மேல வெறியோட இருக்கறச்ச எப்படிடா கடத்த முடியூம்.வெட்டிரப்போறானுங்க..
திலீப்:அதுக்கெல்லாம் ப்ளான் இருக்குடா..கரகாகட்டக்காரன் படத்தை ரீமேக் பண்ணப்போறம்னு சொல்லி ரிகர்சலுக்குன்னு இட்டாந்துரப்போறம்
வெங்:கொஞ்சம் இருங்கோ.அவளைக்கடத்தினா யாரு பணம் தருவா.அவளே கிராமத்துல ஆடின்டு இருக்கறவோ
அமர்:மாப்ளை..ஒரு சினிமா நடிகைன்னா நாலைஞ்சு தொழிலதிபர் சாமியாருங்கன்னு தொடர்பு இருக்கும்ல..
வெங்:ஆமா..
அமர்:அதுவே கிராமத்துக் கட்டைன்னா சுத்து பத்து பதினெட்டு பட்டி மிராசுதாருங்களுக்கும் பழக்கம் இருக்கும்ல.அவனுங்க எல்லாம் கதறிட்டு வந்து பணத்தை கொட்டுவானுங்கடா..
ரவி:இதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கத்தான் செய்யூம்.ஏன்னா கிராமத்து மிராசுதாருங்களோட ஆளை கடத்தறம்.எவனாவது வேல்கம்பு கத்தி கப்படான்னு வந்தா சமாளிச்சித்தான் ஆகனும்..
("கடங்காரா..அபிஸ்து..நாசமாப் போறவனே.நான்தான் அப்பவே சொன்னேன்ல இவாளை நம்பாத.நம்மாத்துலயே தாயக்கட்டம் ஆடின்டு இருக்கலாம்னு"-என்ற கோமளா மாமியின் மைன்ட் வாய்ஸ் கேட்க வெங்கிடு பேஸ்த் அடித்த மாதிரி முழிக்கிறான்)
அவர்கள் சிங்கீலாவின் வீடு தேடி போகிறார்கள்.வீட்டுக்கு வெளியே வேப்பமரத்து நிழலில் சிலுக்குவார்பட்டி சிங்கீலா கரகாட்டத்துக்கு பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கிறாள்.அருகில் சண்முகசுந்தரம் போன்ற ஒரு ஆள் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.
சண்:யாரது..தம்பிகளைப் பார்த்தா நல்ல ஆட்டக்காரங்க மாதிரி தெரியூதே..(என்று ஆச்சர்யமாகப் பார்க்கிறார்)
சிங்கீலா வெட்கப்பட்டுக் கொண்டு உள்ளே ஓடுகிறாள்.நாலைந்து பெரிசுகள் கொல்லைப்புற வழியாக ஒளிந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரவி:நாங்க உங்க பொண்ணை...
சண்:என்னது..
திலீப்:உங்க பொண்ணை சினிமால நடிக்க வைக்கலாம்னு வந்திருக்கம்.
சண்:சினிமான்னா என்ன படம்.எங்களுக்கு என்ன நடிக்க தெரியூம்.ஏதோ ஊர்திருவிழாவில ஆடிப்பொழக்கறவங்க நாங்க..
அமர்:அப்படி சொல்லக்கூடாது.நாங்க கரகாட்டக்காரனை ரீமேக் பண்ணி படம் எடுக்கப் போறதா இருக்கம்.
திலீப்:அட..அப்படியா..உட்காருங்க.அம்மாடி சிங்கி..பாய் எடுத்து விரிச்சுப்போடு.தம்பிங்க உட்காரட்டும்.அப்படியே மோர் கொண்டுவா..ஏந்தம்பி படத்துல வெளியூர் ஆட்டக்காரனை உள்ளுர் ஆட்டக்காரன் மதிக்கற மாதிரி ஸீன் இருக்குள்ள.எதுக்கு சொல்றேன்னா அப்பதான் ஆத்தா மனசு குளிர்ந்து மழை மனசாரப் பெய்யூம்..
வெங்:அதெல்லாம் உண்டுங்க..
சண்:யாரிந்த தம்பி..மைசூர்மகாராஜா வைச்சிருந்த காருக்கு பஞ்சர் ஒட்ட வந்த பையன் மாதிரி இருக்கு..
ரவி:சரி பேமன்ட் பத்திப் பேசிடலாமா..
சண்:காசு என்ன தம்பி காசு.மோர் சாப்பிடுங்க..நம்ம பாப்பா புகழ் உலகமெல்லாம் பரவற மாதிரி படமெடுங்க போதும்..
திலீப்:அதெல்லாம் பரவிடுங்க..நாளைக்கே நாங்க வந்து அட்வான்ஸ் கொடுத்துடறம்.முதல்ல ஃபோட்டோ ஷூட் எடுக்கனும் பத்திரிகைகளுக்கு கொடுக்க.அதுக்காக பாப்பாவை..ச்சே சிங்கீலாவை குட்லாடம்பட்டிக்கு அழைச்சிட்டுப் போகனும்.
சண்:தாராளமா..ஒரு டெம்போ வைச்சிக்கிட்டுப் போனா போச்சு.எங்க கரகாட்ட டெம்போவே இருக்கு.
வெங்:(மெதுவாக)என்னங்கடா..டெம்போன்னெல்லாம் சொல்றான்.டெம்போ வைச்சா கடத்தறதுன்னுதானே அர்த்தம்.அப்படித்தானே தானைத்தலைவன் கவூண்டமணி படத்துல செய்வார்..
திலிப்:சும்மா இருடா..சார்.நீங்க உங்க டெம்போவையை பயன்படுத்திக்கலாம்.அதுக்கு தனியா பேட்டா உண்டு.
சண்:செருப்பெல்லாம் வேணாம் தம்பி.சிங்கீ வெறுங்காலோடயே நல்லா ஆடும்.
வெங்:பேட்டாங்கறது செருப்பு இல்லை பெரீவரே..படி..
சண்:போங்க தம்பி இந்த வயசில எதுக்கு படிக்கனும்.படத்துல வந்த ராமராஜனே அந்த படத்துல படிக்காத மேதையாதானே வந்துச்சி..
ரவி:சரி..நாங்க நாளைக்கு வர்றம்..(அப்போது சிலுக்குவார்பட்டி சிங்கீலா திலீப்பை தனியாக அறைக்குள் வருவாறு சைகை செய்கிறாள்)
சண்:என்ன தம்பி.அவளுக்கு யாரை ரொம்ப பிடிக்குதோ அவரைத்தான் தனியா கூப்பிட்டு பேசுவா.போங்க போய் பேசிட்டு வாங்க.இதுக்கு இந்நேரம் மிட்டா மிராசுங்க இருந்தா பெரிய ரகளையாகியிருக்கும்.

                                 ஸீன் 3

  (தனியறையில் சிங்கீலாவூடன் திலீப் தேன்குடித்த நரி மாதிரி விழித்துக் கொண்டிருக்க அவன் கைகளைப் பற்றிக்கொள்கிறாள்.முதலிவூக்கு வந்த அந்தக்கால மனைவிகள் மாதிரி திலீப் நாணுகிறான்)
சிங்கி:உண்மைய சொல்லோனும்.நீங்க அங்கன இருந்து என்னைய சைட் அடிச்சிங்கதான..
திலீப்:அ..அது வந்து..
சிங்கி:எனக்கு தெரியூம் முதலாளி.உங்க டீமுக்கு நீங்கதான் தலைவர்னு.சினிமா படம் புடிக்கறதுக்கு ஒத்திகை எல்லாம் பார்ப்பிகதான.நீங்கதான் எனக்கு நடிப்பு சொல்லித்தரனும்..
திலீப்:ம்..
சிங்கி:ஒரு ஆங்கிள்ல உங்களைப் பார்த்தா தல மாதிரி ஸ்டைலா இருக்கிங்க.ஏன் நீங்களே ஈரோவா நடிக்கக் கூடாது. இப்பதான் பிச்சிப் போட்ட பரோட்டா மாதிரி இருக்கற பிஸ்கோத்துங்கல்லாம் ஈரோவா நடிக்குதுங்களே..சினிமால இல்லைன்னாலும் ஏதாவது ஈமு கோழி விளம்பரத்துலயாவது நடிக்கலாம்ல..
திலீப்:சிங்கீலா..நீ கூட என்னை ஓட்டற பாரு..உனக்காகவே நான் ஜிம்முக்குப் போய் உடம்பைத் தேத்தி...
சிங்கி:வேணாம் ராசா.இந்த உடம்புதான் கரெக்ட்டா இருக்கு.அதுவூம் இந்த மீசைதான் எடுப்பா இருக்கு..போய்ட்டு வாங்க..உங்க நண்பர்கள் எல்லாம் இந்நேரம் உங்க மேல காண்டாயிருப்பாங்க..
(வெளியில் வந்ததும் ரவி புரியாமல் பார்க்க அமர் வயிற்றெரிச்சலோடு பார்க்கிறான்.ஊருக்கு வெளியே செல்லும் பாதையில் நடக்கிறார்கள்.அப்போது திலீப்பின் கையைப் பிடிக்கும் ரவியை தட்டி விடுகிறான்)
ரவி:ஏன்டா..
திலீப்:அந்த கையைப் பிடிக்காதடா.அது சிங்கீலா ஆசையா தொட்ட கை.
வெங்:பாவி.உருப்படுவேளா..நீ மட்டும் தனியா போய் சிங்கீலாவோட ஜாயின்ட் அடிச்சிட்டு என்னைய கோமளா மாமியோட சேர்த்து வைச்சி பேசறேளே..
ரவி:சும்மா இருங்கடா..நாம டெம்போ வேன் கொண்டு வரலாம்னா இந்த சண்முகசுந்தரம் விடமாட்டேங்கறான்டா..
அமர்:என்ன ஆகுதுன்னு பார்க்கலாம் மாப்ளை நாளைக்கு.சிங்கீலாவை கடத்தினதும்..
வெங்:என்னடா செய்யப் போறிங்க..
அமர்:தனியா அவளை ஒரு ஆட்டம் ஆடச் சொல்லனும்.

                             ஸீன்- 4

  (சிலுக்குவார்பட்டி கிராமம்.சிங்கீலா வீட்டு வாசலில் சண்முகசுந்தரம் அவர்களை வரவேற்கிறார்)
சண்:எல்லாலாலாருக்கும் வணக்கம்.ஆத்தா மனசு குளிர்ந்துட்டா போல.பாருங்க மழைகாத்து வரும்போலருக்கு.உள்ள சிங்கீ ரெடியா இருக்கா.எல்லாரும் என்ன சாப்பிடறிங்க.மோர் கொண்டு வரட்டா..
ரவி:அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.உங்க பேச்சை நம்பி நாங்க வேன் கொண்டு வரலை..வேன் இருக்கா.கால்டாக்சி கூப்பிட்டுக்கலாமா..
சண்:வண்டி ரெடியா இருக்கு.நம்ம நத்தத்துகிட்ட இருக்கற கொலைகாரன்பட்டி கோடாங்கிதான் டிரைவர்.சும்மா ஜெட் மாதிரி ஓட்டுவான்(என்று உள்ளே போகிறார்)
("கடங்காரா.அபிஸ்து.அப்பவே சொன்னேனே கேட்டியா..இப்ப பாரு கொலைகாரன்பட்டி கோடாங்கின்னு டிரைவராம்.எங்கேடும் கெட்டுப் போ.இனி தாயக்கட்டை ஆட இந்தாத்துப் பக்கம் வந்தேன்னா பாரு" என்று கோமளா மாமியின் மைன்ட் வாய்ஸ் கேட்க வெங்கிடு பயத்தில் வெடவெடக்கிறான்)
அமர்:என்னடா இது.கொலைகாரன்பட்டி கோடாங்கியா..பேரே ஒரு தினுசா இருக்கு
ரவி:கொலைகாரன்பட்டிங்கறது ஒரு ஊர் பேரு.மதுரையில இருந்து நத்தம் வழியா திண்டுக்கல் போற ரூட்ல இருக்கு.கோடாங்கிங்கறது அவன் குலசாமி பேரா இருக்கும்.நமக்கு அதுவா முக்கியம்.சிங்கீலாவை கடத்தறதுதான் முக்கியம்..
சண்:என்ன தம்பி என்னவோ கடத்தறதுன்னு பேச்சு அடிபடுது..
அமர்:வந்துட்டான்டா உள்ளுர் ஆட்டக்காரன் ஒட்டு கேட்டுட்டு..
ரவி:நேரத்தை கடத்தறது எப்படின்னு பேசிட்டு இருந்தம்.
சண்:பாப்பா வந்து ஆடினா பொழுதே போவாது பாருங்க.ஆமா.டான்ஸ் மாஸ்டர் யாரு.பிரபுதேவாவா? ஷோபியா? இல்லே லாரன்ஸ் மாஸ்டரா..
திலீப்:அவங்க எல்லாம் தெரியூமா உங்களுக்கு..
சண்:எங்கே தம்பி.டிவியில ஆட்ட ப்ரோக்ராம் பார்ப்போம்ல அதுல தெரியூம்.சரி கிளம்புங்க..தம்பி திலீப்பு.பாப்பா உங்களை தனியா கூப்பிடுது.போய்ட்டு சீக்கிரம் வந்துருங்க..
அமர்:மச்சம்டா என்று வெறுக்கிறான்.
                             
                                                          ஸீன்-4

 (தனியறை.சிலுக்குவார்பட்டி சிங்கீலா சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள்.திலீப்பின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் சிமிட்டுகிறாள்)
சிங்:என்ன த்ரில்லிங்கா இருக்கா.நான் யாரு கையைப்பிடிச்சாலும் அதான் சொல்வாக..
திலீப்:வெளிய போலாமா.டயமாச்சு.
சிங்:எல்லாரும் உள்ள போலாமா டயமாச்சுன்னுதான் சொல்வாக.நீங்க வித்தியாசமா சொல்றிங்க.சரி கிளம்பலாம்.கோடாங்கி அப்பல இருந்து காத்துகிட்டிருக்கான்.கொலைகாரன்பட்டி கோடாங்கி(அவள் முந்தானை நழுவி விழ அதிர்ச்சியில் கால் வழுக்கி கீழே விழுகிறான் திலீப்) காலில் அடி பட நொண்டிக்கொண்டே வெளியே வருகிறான்.
வெங்:அன்னிக்கி என்னைய கலாய்ச்சில்ல.இப்ப பாரு.உனக்கே நடக்க முடியலை..சும்மா பார்த்ததுக்கே இப்படியாமா..
சண்:ம்..எல்லாரும் கிளம்புங்க.ஆத்தா மேல பாரத்தைப் போட்டுட்டு வண்டியில ஏறுங்க..
அமர்:ஏன் சார் உங்க ஆத்தாவூக்கு வலிக்கவே வலிக்காதா..
சண்:என்ன தம்பி சொல்றிங்க..
அமர்:ஆ..ஊன்னா ஆள் ஆளுக்கு ஆத்தா மேல பாரத்தை துரக்கிப் போட்டுர்றிங்களே.ஆத்தாவூக்கு வலிக்காதான்னு கேட்டேன்..
சண்:(கொதித்துப் போகிறார்)..ஆ..என்ன பேச்சு இது.வெளியூர் ஆட்டக்காரனை உள்ளுர் ஆட்டக்காரன் மதிக்கனுமேன்னுதான் பேசாம இருக்கேன்.இல்லேன்னா இந்த கேள்விக்கு ஆத்தாவூக்கு பொலி போட்ருவாங்க நம்ம பயலுக..
(அப்போது சிங்கீலா எல்லாருக்கும் ஸ்பெஷல் ஜிகர்தண்டா கொண்டு வந்து சொம்பு நிறைய கொடுக்கிறாள்.நம்ம ஹீரோக்கள் ஜிகர்தண்டாவை குடித்து விட்டு வேனில் ஏறுகிறார்கள்.கொடுவா மீசையூடன் கோடாங்கி வண்டி ஓட்டுகிறான்.வேன் ஆமை வேகத்தில் பயணிக்கிறது.பழைய மட்டாடர் வேன்.நடமாடும் ஃபாஸ்ட்புட் காரன் எவனோ சிங்கீலாவிடம் மாட்டிக்கொண்டு விட்டுச் சென்ற வேன் போலிருக்கிறது)
சிங்:அவர இங்கன வாரச் சொல்லுங்களேன்.
ரவி:யாரை..வாத்தியார்தான் வரலைன்னுட்டாரே..
அமர்:நல்லவேளை உள்ளுர் ஆட்டக்காரன் வராம இருந்திட்டான்.வந்தா பழமொழி பேசியே கொன்னிருப்பான்.
சிங்:அவூகளை திட்டாதிய.திலீப்பு இங்கன வாங்களேன்.நாம கதை பேசிட்டே போவம்.குட்லாடம்பட்டிக்குதான போறம்.அங்க ஃபால்ஸ் இருக்காமே.நாம சேர்ந்து குளிப்பமா..
திலீப்:அதெல்லாம் இந்த பாவிங்க விடமாட்டானுங்க..சரி உன் பக்கத்துல வர்றேன்.(என்று போய் அமர்ந்த போது சுருக்கென்கிறது.சிங்கீலா ஈஈஈஈ என்று சிரிக்கிறாள்பற்களில் மஞ்சள் கறை தெரிகிறது)

                     ஸீன்- 5
   (ஒரு டஞ்சனான அறை.உடைகளற்ற நிலையில் நம்ம ஹீரோக்கள் அடைபட்டிருக்கிறார்கள்.கண்விழித்த வெங்கிடு அலறுகிறான்)
வெங்:டேய்ய்ய்..எந்திரிங்கடா..ஜட்டி முதக்கொண்டு உருவிட்டாங்கடா.நல்லவேளை அந்த கொலைகாரன்பட்டி கோடாங்கி வெட்டாம விட்டானே..(கடங்காரா..சொன்னேன்ல.நன்னா மாட்டின்டுட்டியா என்ற கோமளா மாமியின் மைன்ட் வாய்ஸ் கேட்க வெங்கிடு முழிக்கிறான்)
ரவி;என்னடா ஆச்சு.நாம எப்படி இங்க வந்தம்.ஆக்சுவலா நாமதான சிலுக்குவார்பட்டி சிங்கீலாவை கடத்தறதா ஸ்கிரீன்ப்ளேல இருந்துச்சி..
(அப்போது சண்முகசுந்தரமும், சிங்கீலாவூம் ஆஜர்)
சண்:ஆமடா..நீங்க கடத்துவிங்க.நாங்க மாட்டிப்பமா..அம்மாடி சிங்கி..நம்ம ப்ளானை பயபுள்ளைங்களுக்கு சொல்லும்மா..
சிங்:நாங்களும் எத்தனிநாளைக்குதான் கரகாட்டம் ஆடிட்டு கிராமத்துல ஆடு, மாடு மேய்ச்சி பொழுதைக்கழிக்கறது.எங்களுக்கும் அட்வெஞ்சர் வேணாமா.சுவாரசியமா பொழுது போக வேண்டாமா..அதான் சும்மா ஒரு கிட்நாப்பிங் பண்ணம்..
திலீப்:அடிப்பாவி எங்களையே கிட்நாப்பிங் பண்ணிட்டியா..
     அப்ப என் கையைப் பிடிச்சது.கிளுகிளுன்னு இடுப்புல கிள்ளினது.முச்முச்சுனு முந்தானையில இடிச்சது எல்லாமே நடிப்பா..
சிங்:கிளுகிளுப்பா.நாங்க யாரையாச்சும் கடத்தலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப நீங்களா வந்து விழுந்திங்க.ஜிகர்தன்டால மயக்கமருந்து கலந்திருந்தம்.சும்மா கடத்தலை தம்பிங்களா..உங்களோட கிட்னியை உருவிவிட்டிருக்கம்.சல்லிசான விலைக்கு போச்சு.கடத்தலுக்கு கடத்தல்.பிசினசுக்கு பிசினஸ்.என்ன பண்றது மாமு.இப்பல்லாம் எங்க தொழிலும் டல்லு.சைடு பிசினசா இப்படி இறங்கிட்டம்.எலேய் கோடாங்கி இவிங்களை கொண்டு போய் குப்பை லாரியில வீசியெறிஞ்சிட்டு வா.
                                       (முற்றும்)
Previous
Next Post »

2 comments

Click here for comments