மார்க்கெட்டிங் பண்ணுகிறார்கள்...



 அப்போதெல்லாம் என்று ஆரம்பித்தாலே வாசிப்பதைப் புறக்கணித்து அடுத்த விஷயத்திற்கு தாவி விடுவார்கள் என்று தெரிந்தே அப்போதெல்லாம் என்று எழுத ஆரம்பிக்கிறேன்.காரணம் இருக்கிறது.

 அப்போதெல்லாம் ஒரு லான்ட் லைன் டெலிஃபோனே காஸ்ட்லியான சமாச்சாரம்.லான்ட் லைன் ஃபோனும் காஸ் கனெக்ஷனும் பெறுவதற்கு எம்பி எம்எல்ஏ கோட்டாக்கள் எல்லாம் கூட உண்டு.ஆனால் யாரும் அப்போது ஃபோன் பேசுவதில்லை.அது காஸ்ட்லியான சமாச்சாரம் என்பதால் அல்ல எதுக்கும் ஒரு எட்டு போய் நேர்ல பார்த்துட்டு வந்துருவமே என்பதுதான் காரணம்.

 இப்போது நிலைமை அப்படியில்லை.

 உட்கார்ந்த இடத்தில் மொபைலை தட்டினால் எல்லாம் கிடைக்கிறது.பிட்ஸா பர்கர் சினிமா டிக்கெட் ஆப்பம் அப்படியே ஒபிஸிட்டியூம்.திருச்சியில் இருந்தபோது ரொட்டீனாக ஞாயிறுகளில் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு கிளம்பி விடுவேன்.திட்டம் எல்லாம் போடுவதில்லை.மனதிலேயே அநிச்சையாக ஒரு டைம்டேபிள் இருக்கும்.எங்கள் வீட்டிற்கும் அது போல ஒருவர் வருவார்.ரயில்வேயில் வேலை பார்த்து வந்தவர். ரயில்வேயில் வேலை இருக்காது.சும்மா ஜங்ஷன் அருகே ஆபீஸ் போய் கான்ட்டீனில் மசால்வடையூம் டீயூம் சாயந்தரம் மைசூர்பாக்குமாக சாப்பிட்டு விட்டு அப்படியே பஸ் பிடித்து மெயின்கார்டு அருகே பிஷப் ஹீபர் பள்ளியில் கால்பந்து மாட்ச் பார்த்து விட்டு ஆற அமர வீட்டுக்கு வருவார்கள்.அந்த ரயில்வே அன்பர் மிக முக்கியமான உறவினர்.ஆள் வந்து ஈசிசேரில் உட்கார்ந்தாரானால் சிரித்துச் சிரித்து வயிறு காணாமல் போய் விடும்.அதகளம் பண்ணுவார்.இந்திராகாந்தி, எம்ஜிஆர் மொரார்ஜியிலிருந்து உறவூக்காரர்கள் அத்தனை பேரையூம் மிமிக்ரி செய்வார்.அவர்களின் அதே உடல் மொழியூடன்.சென்னையில் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் நான் சேரப்போகிறேன் என்று ஒரு தெரிந்ததும் இந்திராகாந்தி, எம்ஜிஆர், மொரார்ஜி யாரையூம் காணோம்.அப்போதெல்லாம் இன்ஸ்ட்டிடியூட்டில் சீட் கிடைப்பதற்கு பலமாக சிபாரிசு வேண்டும்.அப்போது இயக்குநர் அமிர்தம் அங்கே பிரின்ஸ்பாலாக இருந்தார்.ஒரு சீட்தான் தர முடியூம் என்றாராம்.என் மாமாவின் வீட்டுக்கு இந்திராவூம், எம்ஜிஆரும் சென்று விட்டார்கள்.நம்மாளை பத்து நாட்களாக காணவில்லை.அப்புறம் இன்னொரு நாள் மெதுவாக லுரனாவை ஓட்டிக் கொண்டு உள்ளே வந்தார் தன் பையனை (எனக்கு கிடைத்திருந்திருக்க வேண்டிய சீட்) இன்ஸ்ட்டிட்டியூட்டில் சேர்த்து விட்டதாகவூம் நீ இன்னும் ஜமால்தான படிக்கற.அங்கேயே படி.அதுதான் நல்லது என்று ஜமால்முகம்மது கல்லுரரியின் முதல்வர் நைனார் முகம்மது போல மிமிக்ரி பண்ண ஆரம்பித்தார்.

 அப்போதே ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் நான் சேர்ந்திருந்தால் விஜயகாந்தை வைத்து ஒரு ஆக்க்ஷன் படம் டைரக்ட் பண்ணியிருந்திருக்கலாம்.விதி யாரை விட்டது.

 இப்போதும் திருச்சிக்காரர்கள் மொபைல் இருந்தாலும் உறவினர், நண்பர்களை நேரில் சென்று அவ்வப்போது சந்திக்கிறார்களாம்.கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

 நான் சொல்ல வந்த விஷயம் வேறு.அதை விட்டு விட்டு கதை வேறு திசையில் பாய்ந்து விட்டது.நரேந்திரமோடி நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்தபோது நகைப்பாகத்தான் இருந்தது.இப்போது ஜெட்லி.இல்லை.பாய்ந்து அடிக்கும் அந்த ஜெட்லி இல்லை.அருண்ஜெட்லி சிங்கப்பூர் மார்க்கமாகச் சென்று இங்கே வந்து இந்தியாவில் முதலீடு பண்ணுங்கள் என்று 'மார்க்கெட்டிங்' செய்திருக்கிறார்.

 கொஞ்சம் மொபைலையூம் வாட்ஸ்அப்பையூம் புறந்தள்ளி விட்டு தெரிந்தவர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு ஞாயிறுகளில் சென்று பார்த்தால் என்ன.
 உறவூகளையூம், நட்பையூம் அவ்வப்போது மார்க்கெட்டிங் செய்து துடிப்பாக வைத்திருப்பதும் அவசியம்.
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
September 22, 2015 at 3:22 PM ×

tiruchy is amazing

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar