'பூக்காரி கீரைக்காரிகளிடம்
பேரம் பேசும் மிடில்கிளாஸூக்கு
பெட்ரோல் கேஸ்விலையை
இன்னும் கூட ஏற்றலாம்'

'சாலையோர
மரங்கள் வெட்டப்பட
கண்ணீர் விட முடியாமல்
நிற்கின்றன
வெய்யில் மேகங்கள்'

'செய்தித்தாள்கள்
இன்று வரவில்லை
விபத்து கள்ளக்காதல் கொலை
எதுவூம்
நேற்று நள்ளிரவிலிருந்து நடக்காததால்'

'ஊருக்கு வெளியே
சல்லிசாக ப்ளாட் என்றே
டிவி சீரியல் நட்சத்திரங்கள் கூவி விற்க
வேண்டாம்பா
இங்கே இடம் வாங்கினால்
'அழுது'கிட்டேயிருக்கனும்
என்கிறது மனது'


'தாத்தா பராமரித்த
பரம்பரை வீடு
அப்பாவூக்கு அடுத்து
கைக்கு வந்ததும்
கழித்து போடப்பட்ட
தட்டுமுட்டு சாமான்களோடு
தாத்தாவூம் குப்பை வண்டியில்

பயணிக்க ஆரம்பித்தார்'

      
'ஆனந்தவிகடனை
ஆவலுடன் வாங்கினேன்
பழையபுத்தகக்கடையில்
புதியஇதழ்கள் அலுப்புத்தட்டுவதால்'

'வந்திருந்த
இமெயிலை திறந்து படித்ததும்
பக்கத்தில் தபால்காரர் இல்லாத
வெறுமை தென்பட்டது'

'யாரோ
பார்த்துப்பார்த்து
கட்டியவீட்டை
இடித்துக்கொண்டிருக்க
புரிந்தது
பிள்ளைகள் யாரோ
சென்னை பங்களுருவூக்கு செல்ல
பெரிசுகள்
நாடுகடத்தப்படுகிறார்களென்று'


Previous
Next Post »