சிறுகதை: "காத்திரு...வருவேன்..." -விஜயநிலா





       ஜென்ஸி அப்படிச் சொன்னபோது அவள் கண்களில் மின்னல் ஏதும் தென்படவில்லை.செல்வராஜூக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவூம்,ஆனந்தமாகவூம் இருந்தது. பர்ஃப்யூம் விளம்பரங்களில் படையெடுத்து வரும் பெண்களுக்கு மத்தியில் ஜென்ஸி வித்தியாசமானவள் என்று நினைத்திருந்தாள்.தவறு.
என்ன அப்படி பார்க்கற செல்வா
இது நிசம்தானே.ஏதும் வர்ச்சுவல் ரியாலிடி காட்சி மாதிரி இல்லையே ஜென்
நிசம்தான்.ஆனா நான் என்ன நினைக்கறேன் தெரியூமா செல்வா.நம்ம வாழ்க்கை முழுக்கவே அம்மாவோட வயித்துக்குள்ள நான் கருவா இருக்கறப்பவே காணற கனவோன்னு நினைக்கறேன்.கருவில இருக்கற குழந்தைக்கு கனவூ காணத் தெரியூமான்னு தெரியலை.ஆனா நானா அப்படி நினைச்சுக்கறேன். எரிக்கா ஜாங் எழுதின 'ஆரா" கவிதையில வர்ற மாதிரியே இருக்கு.நான் நான்தானா இல்லை வேற என்னவோவா எந்த ஜென்மத்துலயோ இருந்து இறந்திருக்கேனான்னு புரியலை.எல்லாமே இல்யூஷன் போல இருக்குஉன்னை முதமுத பார்த்தது.நீ கிறுக்குப் பிடிச்சவன் மாதிரி என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தது.நான் உன்னை முதல்ல வெறுத்து திட்டினது.நீ மனசு உடைஞ்சு போனாலும் மறுபடி என்னை துரத்திட்டே வந்து லவ்யூ சொன்னது.ஒரு கட்டத்துல உன்னை தவிர்க்க முடியாம சரிடா வா.வந்து லவ் பண்ணுனு ஏத்துக்கிட்டது எல்லாமே கனவூ மாதிரிதான் இருக்கு.ஸீன் ஸீனா ஞாபகம் வருதுஎன்றாள் ஜென்ஸி.
  மடித்து விடப்பட்ட கோடு போட்ட காட்டன் சட்டையூம்,ஜீன்ஸூம் அணிந்திருந்தாள்.தலையை திரிதிரியாக கலைத்திருந்தாள்.கைப்பையில் சாக்லேட் பட்டையூம்,எரிக்ஸீகலும் வைத்திருந்தாள்.
அப்புறம்என்றான் செல்வராஜ் அவளது கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு.எழுந்து விட்டாள்.சினிப்ளக்ஸிலிருந்து வெளியே வந்த ஜென்ஸி மறுபடி உள்ளே திரும்பி-ஒரே ஒரு ஐஸ்க்ரிம் மட்டும் கடிச்சிக்கவாடாஎன்றாள்.கஸாட்டா வாங்கி வந்தான்.அவள் அதை கடித்து சாப்பிடுவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்றான்.
என்னடா
நீ சொன்னதை நினைச்சிக்கிட்டிருந்தேன்.நான் கருவில இருந்தபோது உன்னை நினைச்சிருப்பேனோ.சே.உன் கூட லுhஸூ மாதிரி நினைக்கத் தோணுது
எங்கே போகனும் ஜென்
கன்னிமாரா போ.ஒரு புக் எடுக்கனும்.ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்என்றாள்.பைக்கில் அவன் முதுகில் சிலந்தி மாதிரி படர்ந்தாள்.
ஜென்
என்ன
நிசமாதான் சொன்னியா
என்ன
நீ நேத்து சொன்னியே அது
ஆமா.அதுக்கென்ன.இப்பவே போகனும்னு இருக்கா
இல்லை.தப்பில்லையா அது
எது
ஜென்.தெரியாத மாதிரி பேசாத.நீதான அந்த டாபிக்கை ஆரம்பிச்சே.
எல்லாமே மாறிக்கிட்டிருக்கு செல்வா.கல்யாணம்.அதுக்கப்புறம்தான் அதுங்கறது டிரமாடிக்கா தோணுது எனக்கு.வா லெட்ஸ் ஹவ் எ டேட்டிங்
எங்க போகலாம்என்றான் செல்வராஜ் பைக்கை மெதுவான வேகத்தில் செலுத்தியபடி.
ஏதாவது ஒரு கிராமத்து பக்கம் போகலாம்.பச்சைப்பசேல்னு ஒரு கிராமம்.அய்யனார் சிலை.சலசலக்கற நீரோடை.வயல்வெளிகள்.டிராக்டர் ஓடிட்டு இருக்கற கிராமமா பாரு
இதெல்லாம் வேணும்னா பழைய பாரதிராஜா படத்தை டிவிடியில போட்டாதான் பார்க்க முடியூம்.இப்ப கிராமத்துலயூம்,செல்லு,ஜீன்ஸ்,டிஷ்டிவின்னு கலாச்சாரம் மாறிடுச்சி ஜென்.உன்னைப் போல சிந்தனை உள்ள ஆட்களைக் கூட அங்கே பார்க்கலாம்னு நினைக்கறேன்
நான் அலையறேன்னு சொல்லாம சொல்றியா செல்வா
“:சேசே.குற்றாலம் போயிரலாமா.அது டுரிஸ்ட் ஸ்பாட்டுங்கறதால நம்மளை யாரும் கண்டுக்க மாட்டாங்க.நிசமான கிராமத்துக்குப் போக முடியாது.அப்பயே போனாலும் நக்சலைட்னு சந்தேகப்படப்போறாங்க
சாp.நாளைக்கு குற்றாலம் போறம்
ஆஹா இப்பவே நான் ரெடி
அலையாதடா.நாளைக்கு எல்லாம் ரெடி பண்ணிடு
பிரிந்தார்கள்.
 இப்போது ஜென்ஸி,செல்வராஜ் பற்றி.செல்வராஜ் இன்ஜினியரிங் முடித்து விட்டு பிபிஓ நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்..ஜென்ஸி ஹாஸ்டலில் தங்கி ஃபாஷன் டிசைனிங் படிக்கிறாள்.பிரபலமான பிசினஸ் குடும்பம் அவளுடையது.அவள் என்ன படிக்க வேண்டும்.எப்போது படிப்பை முடிக்க வேண்டும்.எப்போது யாருக்கு கழுத்தை நீட்ட வேண்டும்.எப்போது குழந்தை பெற வேண்டும்.குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது உட்பட பஞ்சரா ஹில்ஸில் உள்ள அவளது வீட்டு பெரியவர்கள் தீர்மாணித்து வைத்தருக்கிறார்கள்.
 செல்வாவின் காதலை தான் ஒப்புக் கொண்டபோதே அவளுக்கு நிச்சயமாகத் தெரியூம் இந்த காதல் நிறைவேறப்போவதில்லை என்று.உட்கார்ந்து நிதானமாகப் பேசியபோது ஒன்று சரியாகப் புரிந்தது.இரண்டு பேருக்குமே ஆங்கிலம் உச்சரிப்பதில் இருந்து,டைனிங் டேபிளில் ஸ்பூன் எடுத்து சாப்பிடுவது வரை வேறுபாடு இருக்கிறது.தன்னுடைய வீட்டில் செல்வாவை துர எறிந்து விடுவார்கள்.தனக்காக பிசினஸ் மானேஜ்மன்ட் படித்த பற்களுக்கிடையே ஆங்கிலம் கடித்துத் துப்புகிற ஒரு கணவான் எங்கேயோ பத்திரமாக கால்ஃ.ப் ஆடிக்கொண்டிருக்கிறான்.அவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு, வெல்வெட் தேவதையாக வேண்டுமானால் உலா வரலாம்.
அப்போதுதான் அந்த யோசனையை சொன்னாள் ஜென்ஸி.
செல்வா
என்னம்மா
நான் எங்க வீட்டுல பார்க்கறவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தப்போறேன்
நிசமாவா சொல்ற.தண்டவாளத்துல தலையை வைச்சிடுவேன்
ஆமா.பெத்தவங்களுக்காக இந்த வாழ்க்கையை வாழறதுனு முடிவூ பண்ணினப்புறம் எனக்காகவூம் தனியா ஒரு நாள் வாழ்க்கையயை வாழனும்னு தோணுதுப்பா
பார்டன்
ஒருநாள்.ஜஸ்ட் ஒரே ஒரு நாள் எனக்குப் பிடிச்ச மாதிரி எனக்குப் பிடிச்ச செல்வா கூட ஒருநாள் வாழப்போறேன்.அஃப்கோர்ஸ் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா ஒருநாள்
ஜென்.இது தப்பில்லையா.துரோகம் இல்லையா
இல்லை.நான் என்னோட பணக்கார சிறைக்குப் போறதுக்குள்ள ஒருநாள் என் இஷ்டம் போல வாழனும்.என்னைக் கட்டிக்கப் போற கணவான் வர்ஜினிடி எல்லாம் கேட்க மாட்டான்.உண்மையைச் சொல்லப் போனா என்னோட முதலிரவில கரன்ஸியூம்,கரன்ஸியூம்தான் கட்டிப்பிடிச்சுக்கப்போவூதுங்கஎன்று அவன் கைகளைப் பிடித்தபடி அவன் கண்களுக்குள் உற்றுப் பார்த்தாள்.
 குற்றாலம் அருகே அந்த அந்த கிராமம் இருந்தது.சிறிய ஊர்.ஆனாலும் மொபிலியோக்களும், க்ரீட்டாக்களும் அந்த ஊரை உரசிக்கொண்டு சென்றன.செல்ஃபோன் டவர்கள் அந்த ஊரையூம் விட்டு வைக்கவில்லை.மழை பெய்திருந்ததில் ஊர் முழுக்க சேரும்,சகதியூம் காபி நிறத்தில் தெரிந்தன.காரைப் பார்த்து யாரும் பின்னால் ஓடி வரவில்லை.சைக்கிளில் கடையில் பைக்கிற்கு பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிகரட்டை இழுத்துக் கொண்டிருந்த ஒருத்தன் அலட்சியமாகத் திரும்பிப்பார்த்தான்.
உடனடியாக தங்குவதற்கு ஒரு வீடு தேவை என்றதும் யாரையோ திரும்பி அழைத்தான்.இன்னொருவன் வந்து கீழ்ப்பார்வையாக தள்ளிக்கொண்டு வந்திருக்கிறௌமோஎன்பது போல பார்த்தான்.காரில் வந்து ஏறிக்கொண்டான்
இந்த பக்கம் போலீஸ் ரோந்து அடிக்கடி வருது.நக்சலைட்டுங்க யாரும் வர்றாங்களோன்னு கடையாண்ட தப்பா நினைச்சுட்டாங்கவே.என்றான்.
உன் பேரென்னப்பா
முத்துங்க.எல்லா சோலியூம் தெரியூம்.எத்தினிநாளு தங்கறதுக்கு வீடு வேணும்.நீங்க ஏதும் சினிமா காரங்களா
ஏன்
இல்ல ஜீன்ஸ் போட்ட பொம்பளையாளு பக்கத்துல இருக்காகளேஎன்றான்.
வீடு கிடைத்தது.பழைய காரைக்கட்டிடம்.ஆங்காங்கே பெயர்ந்து இருந்தது.பின்புறம் நிறைய தவளைகள் கிடந்தன.சன்னல் அருகே கறிவேப்பலை மரம் இருந்தது.ஒரு குயில் பக்கத்தில் தொடர்ந்து கூவியது.ஜீன்ஸிலிருந்து ஜென்ஸி இப்போது தழைய தழைய புடவைக்கு மாறியிருந்தாள்.நடுவகிடு எடுத்து பொட்டு இட்டிருந்தாள்.அப்படியே அவளை கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
ஜென்.நிசமாவே நீதானா.தேவதைகள்னு சொல்றதெல்லாம் அடாசு வார்த்தைனு நினைச்சிட்டு இருந்தேன்.நீ நிசமாவே தேவதை போலத்தான் இருக்கே
இன்னிக்கி நானே சமைக்கப்போறேன்.மைக்ரோஓவன் கொண்டு வந்திருக்கேன்.அரிசி காய்கறி எல்லாம் நேத்தே வாங்கி கொண்டு வந்திட்டேன்.சுமாராதான் சமைப்பேன்.நீ சாப்பிட்டுதான் ஆகனும்
உத்தரவூ
நல்லா சாப்பிடு.இன்னும் கொஞ்சம் பொரியல் வைக்கவா.
சாப்பிட்டு முடிஞ்சதும் வெளியில போகலாமாஎன்றாள்.
எங்கே
எங்கேயாவது.சும்மா ஹைவேஸ்ல மெதுவா காரை ஓட்டிட்டுப் போகலாம்.நான் ஓட்டறேன்.நீ பேசிட்டே வா
எனக்குப் பேசப்பிடிக்கலை ஜென்ஸி.ஒருநாள்தான எனக்கு கிடைச்சிருக்கு.உன்னை சும்மா பார்த்துட்டு இருக்கனும்னு தோணுது
சரி.நான் பேசறேன்.எங்கேயூம் வெளியில போக வேண்டாம்.என் மடியில படுத்துக்க.இல்லை.நான் உன் மடியில படுத்துக்கறேன்.மருதாணி செடி இந்த வீட்டுக்குப் பின்னால இருந்தது.எடுத்து அரைச்சி வைக்கப்போறேன்.என் கையில மருதாணி போட்டு விடறியா செல்வா
சரி
அவன் மருதாணி இட்டுக் கொண்டே வர அவள் அவன் மடியில் படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.அவள் பேசப் பேச அவளது முகத்தையூம்,அசையூம் விழிகளையூம் பார்த்துக் கொண்டே இருந்தான்.
இரவூ.
என்ன சாப்பிடலாமாஎன்றாள்.
நான் உன்னை சாப்பிடட்டுமா
அப்ப நான் உன்னை சாப்பிட்டுடுவேன்என்றாள்.
சீக்கிரம் வா.ஒருநாள் வாழ்க்கை.ஈசல் போல ஒருநாள் வாழ்க்கை.என்னை உனக்குள்ள ரோஜாசெடி மாதிரி பதியன் போடனும்.ஆனா ஊர் திரும்பிப்போனா இந்த ஒருநாள் வாழ்க்கையை மறந்திரனும்.நீபாட்டுக்கு ஏதாவது ஒரு பார்த்டே பார்ட்டியில என்னை பார்த்துக்கிட்டே பியானோ வாசிச்சிக்கிட்டு பாட்டு பாடக்கூடாது.டீக் ஹைஎன்றாள்.
ஜென்ஸி
என்ன செல்வா
இந்த ஒருநாளோட உலகம் முடிஞ்சிரக்கூடாதா.சுனாமி வந்த மாதிரி புதுசா ஏதாவது வந்து இந்த ஒருநாளோட உலகத்தை முடிச்சிரக் கூடாதான்னு இருக்கு
டோன்ட் இமாஜின்.வாஎன்றாள் தேவதை போல இரு கைகளையூம் அகல விரித்தபடி.
சட்டென்று விலகினான் செல்வா.
புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள் ஜென்ஸி.
என்னடா ஆச்சு
வேண்டாம்என்றான்
பார்டன்
மறுபடி யோசிச்சிப் பாரு ஜென்ஸி.கிடைச்ச பொருளை விட கிடைக்காத பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்.நமக்கு நல்லாவே தெரியூம்.நாம வாழ்க்கையில ஒண்ணு சேர முடியாதுன்னு.அனா லவ் பண்ணிட்டம்.நிசத்தை ஏத்துக்கிட்டு பிரியலாமே
அதெப்படி.இத்தனை துhரம் யோசிச்சி திட்டமிட்டு வந்துட்டு இப்ப ட்ராக் மாறுகிறாயே செல்வா.பயம் வந்துடுச்சா.எங்கப்பா ஏதும் சூட்கேஸ்ல பணத்தை அள்ளி விட்டாரா உனக்கு.சினிமால எல்லாம் அப்படித்தானே காண்பிக்கறாங்க
சேசே.இதுதான் சரியா இருக்கும்.இந்த ஒருநாள் வாழ்க்கை அப்புறம் நமக்கு ஆயூசு முழுக்க குற்ற உணர்வை கொடுத்துக்கிட்டே இருக்கும்என்றான்.
நீ ஏதும் என் கண்களை திறந்து விடலை.உன்னோட ஸ்கூல் ஆஃப் தாட் வேறன்னு புரியூது.ஓகே.இந்த ஒருநாள் வாழ்க்கை வேணாம்.ஊருக்கு கிளம்பலாமா
காலைல கிளம்பிக்கலாம்.நீ படுத்து துhங்கு
ஓகே.குட்நைட்
அவள் அருகில் அமர்ந்து அவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் செல்வா.சினிமாக்களில் காண்பிப்பது போல ஒரே பாடல்காட்சியில் பிசினஸ் ஆரம்பித்து பெரும்பணக்காரனாகி இந்த ஜென்ஸியை கரம் பிடிப்பதெல்லாம் நிசத்தில் நடக்காது.ஆனால் உழைத்தால் ஏழெட்டு வருடங்களில் பெரும் பணக்காரனாகி விடலாம்.அப்போது வேறு ஏதாவது ஒரு ஜென்ஸி நிச்சயம் கிடைப்பாள் என்று புரிய மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
காலையில் எழுந்ததும் கேட்டாள்.
"நீ ஏன் நேத்து என்னை எடுத்துக்கலை"
"யூமீன் செக்ஸ்?"
"ம்"
"நான் உன்னை லவ் பண்ணிட்டிருந்தேன் ஜெனி.உன்னை இந்த ஒருநாள் வாழ்க்கைக்காக தீண்டறதுல இஷ்டமில்லை எனக்கு"
"ஓ..சரி கிளம்பலாமா.."
ஜென்ஸி பழையபடி ஜீன்ஸிற்கு மாறினாள்.நேற்றைக்கு இருந்தவள் இவள் இல்லை போலிருந்தாள்.காரில் ஏறினதும் ஏதும் பேசாமல் வந்தாள்.தன் மேல் சாய்ந்து கொள்வாள் என எதிர்பார்த்தாள்.மௌனமாக சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
"ஜெனி.."
"என்ன செல்வா"
அவ்ளவ்தான்"
"ஆமா.."
"பிரியப்போறம்"
"ஆமா.."
"இனி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கற முடியாது"
என்றபோது அவனை மெலிதாகப் பார்த்தவள் சட்டென்று அவன் கையை எடுத்து தன் மார்பில் அழுத்தமாய் வைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொடுக்கலாம் போல குனிந்தபோதுதான் அந்த எஸ் வடிவ திருப்பத்தில் ஒரு லாரி எருமை போல வந்து காரின் முன்னால் மோதியது.இரண்டு பேரையூம் இரக்கமில்லாமல் வீசி எறிந்தது.
கண்விழித்துப் பார்த்த செல்வராஜ் நிறைய அடிபட்டிருந்தாலும் எழுந்து நடக்க முடிந்தது.அவனுக்கு சற்று தொலைவில் கிடந்தாள் ஜென்ஸி.
 உறக்கத்தில் இருப்பது மாதிரி இருந்தது முகம்.
 உடலில் அகோரமான அடி ஏதும் இல்லை.பின்னந்தலையில் அடிபட்டு இரத்தம் கோடாக மண்ணில் ஓடியிருந்தது.சீட் பெல்ட் போடாதது தவறு.
 ஜென்ஸி செத்துப் போயிருந்தாள்.
 அதன்பின் யாரோ ஓடி வந்தார்கள்.108 ஆம்புலன்சிற்கு தகவல் சொல்ல தென்காசிக்கு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.எந்த பிரயோசனமும் இல்லை.அவள் ஏற்கனவே இறந்து விட்டாள் என்று சொல்ல முயன்று தோற்றான்.ஆம்புலன்சில் இறந்து போய் கிடந்த ஜென்ஸியின் அருகே அமர்ந்தவாறு பயணம் செய்துதான் கொடுமையாக இருந்தது.அதன்பின் காட்சிகள் வேகமாக மாறின.தகவல் அறிந்து அவள் உடலை வாங்கிக்கொள்ள அவள் வீட்டிலிருந்து யாரோ வந்தார்கள்.அவள் அப்பா வழக்கம் போல வெளிநாட்டில் கான்ஃப்ரன்சில் இருந்தார் என்றார்கள்.அவள் அம்மா மேக்அப் கலையாமல் சின்னதாய் கண்ணீர் சிந்தினார்.செல்வா கிளம்பினான்.
 அவள் வீட்டுப் பக்கம் செல்ல முடியாது போலிருந்தது.நண்பர்களை அழைத்துக் கொண்டு அவள் இறுதி ஊர்வலத்தைப் பார்த்து விடலாம் என்று முடிவூ செய்தான்.
 இறுதி ஊர்வலாம் எல்லாம் அவர்கள் நடத்தவில்லை.ஒரு கறுப்பு பிஎம்டபிள்யூ வேனில் ஜென்ஸியின் உடலை வைத்து சத்தமில்லாமல் மின்மயானத்திற்கு கொண்டு சென்றார்கள்.அங்கே போய் நின்று வேடிக்கை பார்த்தபோது ஜென்ஸியின் முகத்தில் அசைவூ தென்பட்டது போலிருந்தது.பிரமை.அவள் சுத்தமாய் செத்துப் போய் விட்டிருந்தாள்.
 ஜென்ஸி தனக்காக மட்டும் பேசியது போலிருந்தது.
If I go back,back,back
riding the blume of smoke
I find I died
in childbirth in another life
died by fire in the life before that
died by water twice or more...
-என்று எரிக்கா ஜாங் கவிதையை அவள் உதடுகள் முணுமுணுப்பது போலிருந்தது.ஜென்ஸியை எரிதழலில் உள்ளே தள்ளி கதவை மூடத் தொடங்கினார்கள்.
....
Oh explosion at the body’s edge
I live on a ledge of time
gazing
at the infinite...
காத்திரு கனவில் வருவேன் எப்போதாவது என்றாள் ஜென்ஸி எங்கிருந்தோ.

                                          ---------------------------------
Previous
Next Post »