'நிலா
நீ வானம் காற்று மழை
என்று
வண்டி ஸ்டான்டில் நிற்கும்
குதிரை போல
சேரன் டைப்பில்
முகத்தை உதறிக்கொண்டு
சோகப்பாட்டு பாடுவதெல்லாம்
நமக்கு
சரிப்பட்டு வராது
ஒற்றை வார்த்தையில் சொல்கிறேன்
புரிகிறதா என்று பார்
நீ
வேறு யாருமல்ல

நான்தான்'

'இன்னும் மழைவரவில்லை
நீ
குடை விரிக்கட்டுமென்று
காத்திருக்கின்றன மேகங்கள்'

'அதெப்படி
முறைக்கும்போதே
புன்னகைக்கவூம் செய்கிறாய்
முகத்தில் விழும்
மழையின் முதல்துளிபோல்'

'நீ
குடை விரித்ததும்
ஆடத் தொடங்கி விடுகின்றன
மயில்கள்
மழை வந்ததும் ஆடுவதாக
இன்னமும் தப்பிதமாய்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
மற்றவர்கள்'

'புயல்
மழை
காற்று
சூறாவளி
இவை எதற்குமே
எச்சரிக்கை எண் ஏற்றாத வானம்
ஏற்றியிருக்கிறது
வானவில்லில்
தேவதைகளின் தேவதையாக
நீ
வந்து கொண்டே இருக்கிறாய்
என்று'

'நாளைக்கும்
மழை வருமா என்று
யாரையூம் கேட்க வேண்டாம்
நீ வந்தால் போதும்
வருகிறாய் என்றே
சன்னலில் அருகே
சாரல் வந்து
சொல்லிவிட்டுப் போகும்'
Previous
Next Post »