அனாமிகா என்றால் ஆபத்து...


  திருமண நிகழ்ச்சி.நேற்றே வரவேற்பிற்கு சென்றிருந்ததால் மெல்லச் செல்லலாம் என்று தாமதம்.மாஸ்டர் மகால் பெரிதாக இருந்ததால் பார்க்கிங் இல்லை.காரை வெளியே விட்டு விட்டு உள்ளே சென்றால் சற்றேறக்குறைய மணப்பையனை மாட்டி விட தயாராக அட்சதை சகிதம் அனைவரும் ரெடியாக இருந்தனர்.ஒன்பதரை மணிக்கு டிபன் தேவையா? ஸ்ட்ரைட்டாக பத்தரை மணிக்கு ஃபுல்மீல்ஸ் கொரித்து விடலாம் என்றிருந்தபோது வலுக்கட்டாயமாக டைனிங் ஹாலுக்கு கடத்திச் சென்று விட்டார் ஒரு பெரிய மீசை வைத்த ஆசாமி.
 சின்னச் சின்னதாய் இட்லி.இட்லி சைசுக்கே ஒரு மசால் தோசை.அதே சைசுக்கு ஒரு அடை தோசை.அப்புறம் இனிப்பாய் 'இம்யாப்டிப".இலையின் வலது ஓரத்தில் ஊறுகாய் சைசுக்கு அல்வா.நாம் ஏற்கனவே டயட்டில் இருப்பதால் இவை எவையூம் என் மனதை கைப்பற்றவில்லை.மெல்லமாக எழுந்து அரை கப் காபியை மட்டும் வாங்கிக் கொண்டு கீழே வந்தபோது என்னை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
 இது போன்ற திருமண மண்டபங்களில் என்னை யார் தேடப்போகிறார்கள்.பேசாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று பின்னால் போய் அமர்ந்தபோத அங்கும் என்னை அவர்கள் தேடுகிறார்கள்.நீங்கள் வந்திருக்கிறீர்களா என்று காலையிலேயே கேட்டார்கள் என்று அந்த பெண்களைக் கை காட்டி விட்டு சென்றார் ஒரு பெண்.இவர் திருச்சியில் பள்ளியில் பணிபுரிகிறார்.
 சரி யாரென்று பார்ப்போம் என்று அருகே போய் பார்த்தால் என் பெயரைச் சொல்லி மலர்ந்த முகத்துடன் அந்த நடுத்தர வயதுப் பெண்கள் பேச ஆரம்பித்தனர்.அருகிலிருந்தவர்களிடம் "இவர்தான் விஜயநிலா.தினமலர் வாரமலர்ல எல்லாம் தொடர்கதை எழுதுவார்.நல்லா மொறுமொறுப்பா க்ரைம் கதை எழுதுவார்" என்றார் அந்த அம்மையார்.பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த ஓய்வூ பெற்றவராம்.தொண்ணுரறுகளில் வெளி வந்த எனது கதைகளை ஒன்று விடாமல் வாசித்திருப்பதாகச் சொன்னார்.
 தினமலர் வாரமலரில் வெளிவந்த அந்த தொடர்கதையின் தலைப்பு:
"அனாமிகா என்றால் ஆபத்து" எனது திருமணத்திற்கு சற்று அருகாமையில் வெளிவந்த தொடர்கதை.இதே போல ஒரு மழைமாதத்தில்தான் வெளிவந்தது.அப்போது நான் மூகாம்பிகைப் பொறியியற் கல்லுரரியில் பணி செய்து கொண்டிருந்தேன்.அப்போத வாராவாரம் தொடரும் என்ற வார்த்தைக்கு முன்பாக நான் வைக்கும் சஸ்பென்ஸ் தாங்காமல் சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி..ச்சே..நகரில் உள்ள மற்ற கல்லுரரிகளில் உள்ள மாணவிகள் நான் பணிபுரியூம் கல்லுரிக்கே வந்து அடுத்த வார கதை என்ன சார் என்று கேட்பார்கள்.
 தினமலர் வாரமலரில் அனாமிகா என்றால் ஆபத்து வெளிவருவதற்கு முன்னர் தினமலர் கதைமலரில் விபரீதமாய் ஒரு முத்தம் என்றொரு பத்து வார தொடர்கதை எழுதினேன்.மைக்கள் டக்ளஸின் ஃபடல் அட்ராக்க்ஷன்தனமான கதை அது.இதயபலஹீனமுள்ளவர்கள் இந்த வார அத்தியாத்தை வாசிக்க வேண்டாம் என்று தினமலரில் அறிவிப்பெல்லாம் வெளியிடுவார்கள்.அந்த அளவிற்கு வாரமலர் பொறுப்பாசிரியர் ரமேஷ் சார் அப்போது ஆதரவூ தந்து வந்தார்.அதன்பின் பாக்கெட் நாவலில் ஒரு நாவல் எழுதியபோதும் நல்ல வரவேற்புடன் என் எழுத்துலக பயணம் தொடர்ந்தது.
 அதன்பின் 1995 காலகட்டத்தில் சில சூழ்ச்சிகளால் குறிப்பிட்ட சில பத்திரிகைகளில் தொடர்ந்து எழுத முடியாமலும் பெட்டிக்கடைகளில் வவ்வால்களாகத் தொங்கும் மாதநாவல்களிலும் தொடர்ந்து எழுத முடியாத சூழ்ச்சிகள் தொடர அட போங்கப்பா...என்று எழுத்துலகை விட்டு வெளிநடப்பு செய்தேன்.
 இரண்டு மாதமாகத்தான் மறுபடியூம் எழுதுங்கள் என்ற அன்புக்கட்டளைகள் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது.இன்று கூட மதுரையில் சந்தித்த அந்த வாசகியர் இன்னும் அனாமிகா என்றால் ஆபத்து தொடரை ஞாபகம் வைத்தப் பேசியது மகிழ்ச்சியையூம் என்னையூம் ரீஇன்வன்ட் செய்தால் என்ன என்று யோசிக்க வைத்தது.
 இனி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
 பெரிய நாவலாக ஒரு கதையை எழுதி விடும் உத்தேசம் மனதில் காற்றழுத்த தாழ்வூ மண்டலம் போல உருவாகி இருக்கிறது.
 எனவே எழுத வேண்டும் என்ற தாக்கத்தை மறுபடி எனக்குள் புகுத்திய அத்தனை அன்பர்களுக்கும் நன்றி.
I am come back.
Previous
Next Post »