தொடர்கதை: "அவள்-இவள்..." -விஜயநிலா


                                                                              (4)
 அன்றைக்கு மிகவூம் உற்சாகமாக இருந்தாள் அஞ்சலி.காலையில் எழுந்தரிக்கும்போதே வீட்டில் எதிரலிருந்த ஆரஞ்சு வண்ணப்பூக்கள் சூழ்ந்திருந்த மரத்தில் ஒரு அணில் அவளைப் பார்த்து சந்தோஷமாகக் கூவியிருந்தது.ஒரு இரட்டைவால் குருவி வேறு அவளைப் பார்த்து வாலை ஆட்டியபடி கத்திவிட்டுப் பறந்தது.
ஷவரைத் திருகி விட்டு வெகுநேரம் ஜில்லிட்ட நீரில் நனைந்தபடி நின்றாள்.மெல்லிய குரலால் ஏதோ ஒரு பாடலை பாடினாள்.அப்புறம் வெளியே வந்தாள்.
 வருண் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான்.அருகே போய் எழுப்பினாள்.
"என்ன நீங்க இன்னும் எழுந்தரிக்காக இருக்கிங்க.பெங்களுர் போகனும்னு சொன்னிங்களே"
"அப்படியா சொன்னேன்.இல்லே.அந்த ப்ரோக்ராம் கான்சலாயிக்கும்.ஒண்ணும் கடைசிநேரத்துல கன்ஃபர்மேஷன் வரலை"
"சரி.விடுங்க.நாம ஒரு டூர் போயிட்டு வந்தா என்னங்க"
"ஆபீஸ்ல வேலை இருக்கே.ஓ..ஸாரி.புதுப்பெண்டாட்டிகிட்ட ஆபீஸ் வேலை பத்தி சொல்லக் கூடாது.நான் ரெடி.எங்க போலாம்.அதே பெங்களுர் போவமா இல்லை வேற எங்கேயாச்சும்"
"எங்க வேணா போலாம்"என்றாள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு.
"ஓகே.இன்னிக்கி வேணாம்.நீயே எங்க போலாம்னு ஒரு ஐடியா பண்ணி வை.நாளைக்கு கிளம்பலாம்.ஒன்வீக்தான்.அப்புறம் ஆபீஸ் வேலைங்க கழுத்தை நெறிக்கும்"
"சரிங்க"என்று உள்ளே போனாள்.
அவன் அலுவலகத்திற்கு கிளம்பியதும் கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.அவன் போனதும் அந்த கருப்பு நிற ஸொனாட்டா கார் வந்து நின்றது.காம்பவூன்ட் சுவரை எதிர்ப்பக்கம் உரசின மாதிரி நின்றது.அதைப் பார்த்ததும் லேசாக மிரண்டாள் அஞ்சலி.
அதிலிருந்து இறங்கிய மனிதர்கள் மூன்று பேரும் ஒரே மாதிரி கருப்பு நிற சூட் அணிந்திருந்தார்கள்.கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள்.கருப்பு குளிர்கண்ணாடி வேறு அணிந்திருந்தார்கள்.தலையில் கருப்பு நிற தொப்பி வைத்திருந்தார்கள்.உள்ளே வந்து சோபாவில் அமர்ந்ததும்-
"எப்படிம்மா இருக்கே.பய உன்னை நம்பிட்டானா"என்றான் ஒருத்தன்.
"அ..அது வந்து.எனக்கு பயமா இருக்கு.என்னை அழைச்சிட்டுப் போயிருங்க"
"உன்னை அழைச்சிட்டுப் போயிட்டா அவன் தன் பெண்டாட்டியை தேட மாட்டானா அஞ்சலி.உன் கணவன் புத்திசாலிதான்.டிடெக்டிவ் ஏஜென்சி வரைக்கும் போயிருக்கான்.அரக்கோணத்துல உன் கல்யாணம் நடந்தது வரைக்கும் டீடெய்ல்ஸ் கலக்ட் பண்ணிட்டான்"
"வேண்டாம் தோழரே.இவள் பயப்படுகிறாள்.இவளை அழைத்துக் கொண்டு சென்று விடுவோம்"
"அதுதான் சரி"
"என்ன அஞ்சலி போலாமா"என்றான் அவன்.
அஞ்சலி யோசித்தாள்.அவள் உடல் வெடவெடவென்று நடுங்கத் தொடங்கியது.
"மறுபடியூம் அங்கேயா"
"ஆமா.பயப்படாத.இந்த தரம் எல்லாம் பக்கவா இருக்கும்.வா.போலாம்"
அஞ்சலி எழுந்து அவர்களுடன் நடந்தாள்.அவர்கள் கருப்புநிற காரில் ஏறிக்கொண்டதும் கார் சீறிக்கொண்டு புறப்பட்ட அதே நேரத்தில் வருண் கான்ஃபரன்ஸ் ஹாலில் தனியாக அமர்ந்திருந்தான்.
உள்ளே எட்டிப் பார்த்து விட்டு அங்கே வந்த தாமரை-
"சார் உள்ள வரலாமா"என்றாள்.
"வா"என்றான்.
"என்ன சார் தனியா உட்கார்ந்திருக்கிங்க"
"திடீர்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு தாமரை"
"என்ன அப்படி சந்தேகம்.புது ஆர்டர்ஸ்லயா"
"இல்லே.இவ என் அஞ்சலிதானான்னு.சில சமயத்துல நார்மலா இருக்கா.சில சமயத்துல அவ பேசறது அவளுக்கே மறந்து போயிருது"
"இல்லை.நீங்களா கற்பனை பண்ணிக்கறிங்க போல சார்"
"இல்லை.சந்தேகம் வந்திருச்சி.நான் உடனே கிளம்பி வீட்டுக்குப் போகப் போறேன்.அவ என்னை திடீர்னு பார்த்தா திகைச்சுப் போயிருவாதானே"
"இப்ப உடனே போகனுமா சார்"
"ஏன் தாமரை.ஏதாவது வேலை இருக்கா"
"ஃபாரின் டெலிகேட்ஸ் உங்களை சந்திக்க வர்றாங்க.ஏற்கனவே நாமதான் அப்பாயின்ட்மன்ட் கொடுத்திருந்தம்"
"அதை கேன்சல் பண்ணிரலாம்.இல்லைன்னா சிலமணிநேரங்கள் தள்ளி வைச்சிரலாம்.நான் உடனே வீட்டுக்குப் போகனும்"
அவன் வேகமாக கிளம்பிப் செல்வதைப் பார்த்த தாமரை தனது செல்பேசியை எடுத்தாள்.
"நான்தான் பேசறேன்.வருண் கிளம்பி வீட்டுக்குப் போறான்.தன் பெண்டாட்டியை உடனே பார்க்கனுமாம்"
செல்பேசியை வைத்து விட்டு எழுந்து நடந்தாள்.
 காம்பவூன்ட் அருகே கார் சப்தம் கேட்டதும் அஞ்சலி சன்னல் வழியாகவோ சிட்அவூட் வழியாகவோ வந்து பார்ப்பாள் என்று நினைத்தான் வருண்.யாரும் அங்கிருந்து எட்டிப்பார்க்கவில்லை.
காரை நிறுத்தி விட்டு கதவை தட்ட முற்பட்டபோது தானாகவே திறந்து கொண்டது.புருவத்தை உயர்த்தியபடியே நின்றபோது-
"ஹை.சீக்கிரம் வந்துட்டிங்க"என்றபடி நின்று கொண்டிருந்தாள் அஞ்சலி.
"என்னாச்சுங்க.ஏன் அப்படி பார்க்கறிங்க"என்றாள்.
"ஓண்ணுமில்ல.சும்மா திடீர்னு உன்னைப் பார்க்கனும்னு தோணிச்சி.;அதான் வந்தேன்.காபி போட்டுக் குடேன்"என்றபடி டையை கழற்றியபடி அமர்ந்தான்.
"இதோ வந்திர்றேன்.ஆனா உங்க கண்ல பொய் லேசா தெரியூது"
"என்ன பொய்"
"நான் இருக்கேனா இல்லையான்னு வேவூ பார்க்க வந்திங்களோன்னு நினைச்சேன்"
'சே.ரிடிகுலஸ்.நான் ஏன் உன்னை சந்தேகப்படப்போறேன்"
"அப்புறம் எதுக்கு இப்ப வந்திங்களாம்"
"அது..வந்து சும்மா.."
"சரி சரி வழியாதிங்க.இந்தாங்க காபி"
காபியை அருந்தி விட்டு கிளம்பினான் வருண்.ஏமாற்றமடைந்த முகத்துடன் நின்றிருந்த அஞ்சலி கேட்டாள்.
"என்னங்க.உடனே கிளம்பறிங்க.சாப்பாடு ரெடி பண்ணிர்றேன்.சாப்பிட்டதும் ரெஸ்ட் எடுத்துட்டுப் போங்களேன்'
"வேண்டாம் அஞ்சலி.ஃபாரின் டெலிகேட்ஸ் வந்துட்டு இருக்காங்க.அவங்களோட ஒரு டிஸ்கஷன் இருக்கு"என்று கிளம்பிய வருண் கதவருகில் போய் சட்டென்று திரும்பினான்.
"அஞ்சலி.இங்க வா"
"என்னங்க இது.என்ன பண்ணப் போறிங்க என்னை.அதுவூம் பட்டப்பகல்ல வாசல்ல வைச்சி"
"சே.சே.டோன்ட் இமாஜின்.உன் கையைக் கொடு.உன் கையில என்ன ஆச்சு"
"அ..அது வ..வந்து..ஒண்ணுமில்லையே.."
"இல்லையே என்னமோ இருக்கு.உன் வலது கையில ரேகைகளே இல்லையே.இப்பதான் நான் கவனிக்கறேனா.இல்ல எப்பவூமே உனக்கு கையில ரேகை இல்லாமத்தான் இருக்குமா.அதெப்படி ஒருத்தருக்கு கையில ரேசை இல்லாம இருக்கும்"
"இடது கையில பாருங்க.சரியாதான் இருக்கு.ரேகை இருக்கு"
"அப்ப வலது உள்ளங்கையை சரியா காட்டு.சன்லைட் படற மாதிரி வெளியி வந்து காட்டு.."
"நானே இப்பதாங்க பார்க்கறேன்.இது மட்டும் எப்படி வராமப் போச்சு"
"என்ன சொன்னே.என்ன சொன்னே நீ.எங்கே மறுபடி சொல்லு"
'இல்லை..வாஷிங் மெஷின்ல டிடர்ஜென்ட் பவூடரை கொட்டும்போது என் கையில பட்டது.அதனால ரேகை அழிஞ்சிடுமாங்க"
"தெரியலை.வா.டாக்டரை பார்ப்போம்.லெட்ஸ் கன்சல்ட் எ டெர்மடாலஜிஸ்ட்.இல்லைன்னா இது ஏதாவது டாக்ஸிக் ப்ராப்ளமா இருக்கப் போவூது"என்று பரபரத்தான்.
"இல்லைங்க.நீங்க கிளம்புங்க.நானே டாக்டரை போய் பார்த்துட்டு உங்க ஆபீஸூக்கு ஃபோன் பண்றேன்'என்றாள்.அரைமனதாக வெளியில் கிளம்பினான் வருண்.
அந்த மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனையில் முன்அனுமதி பெற்றுக்கொண்டு அமர்ந்திருந்தாள் அஞ்சலி.ஹாஸ்பிடல் முழுக்கவே சுத்தமாக இருந்தது.பணக்காரர்களுக்கான மருத்துவமனை.அவளது முறை வந்ததும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.அந்த அறை சற்று பெரியதாக இருந்தது.ஏசியின் குளிர் உறுத்தவில்லை.அவள் கைகளைக் காட்டும்படி சொன்னார் டாக்டர் பிரதாப்.அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்த டாக்டர் பிரதாப் டெர்மடாலஜியில் பிரபலமானவர்.நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாட்டில் சுற்றுவார்.கைகளைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார்.
"ஓண்ணும் இன்ஃபக்ஷன் ஆகியிருக்கிற மாதிரி தெரியலையே.உள்ளங்கைகள் நல்லாத்தானே இருக்கு.எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்திரலாம்"என்றார்.
"நானும் கவனிக்கலை டாக்டர்.அவர்தான் பார்த்துட்டு சொன்னார்.என் ஹஸ்பன்ட்.என் வலது கைல மட்டும் ரேகை தானாக அழிஞ்சிடுமா"
"அப்படியெல்லாம் ஆகாது.ஆனா ஒரு விஷயம் ஒரு தடவை சயன்ஸ் ஜர்னல்ல படிச்சிருக்கேன்.சேசே.அப்படியெல்லாம் இருக்காது.அதெல்லாம் வெறும் கற்பனை"
"என்ன டாக்டர் அது"
"சூப்பர்நோவா"
"என்ன நோவா"
"சூப்பர் நோவா அப்படின்னா இப்ப இந்த 'எக்ஸ்மன்' அப்படின்னு தமிழ்பேசற இங்கிலீஷ் படமெல்லாம் வருதுல்ல.அது போல விஷேச சக்தி இருக்கற மனுஷங்களுக்கு திடீர்னு  உடல்ல ஏதாவது மாற்றம் வந்திருமாம்.இதை உணர்ந்த மற்ற அதே போல விஷேச சக்தியூள்ள மனுஷங்க அவங்களை தானாகவே வந்து தொடர்பு கொள்ளுவாங்களாம்.எதுக்கும் நீ உன் ஹஸ்பன்ட்கிட்ட செக்ஸ் வைச்சிக்காதம்மா கொஞ்சநாளைக்கு"
"இப்பதான் டாக்டர் எங்களுக்கு புதுசா கல்யாணமாகியிருக்கு"
"உன் ஹஸ்பன்ட்டுக்கு ஏதும் ஆபத்து வந்திடக்கூடாதேன்னு சொல்றேன்.விஷேச சக்தியூள்ள மனிதர்கள் சாதாரண மனிதர்களோட செக்ஸ் வைச்சிக்கிட்டா அந்த வீரியத்தை தாங்கிக்க முடியாம சாதாரண மனிதர்கள் செத்துப் போறதுக்கு வாய்ப்பு இருக்கு"
"டாக்டர் ஒண்ணும் பயமில்லையே.ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரட்டும்.பயப்ஸி ஏதும் தேவைப்படாதுன்னு நினைக்கறேன்.யூல்பி ஆல்ரைட்.ஒரு பயமும் வேண்டாம்"
வெளியே வந்தாள்.அப்போது அவளது செல்பேசி ஒலித்தது.பேசினாள்.
"சொல்லு அஞ்சலி.டாக்டர் என்ன சொன்னார்"
"அவர் சொன்னதை கேட்டா நீங்க கொஞ்சம் கவலைப்படுவிங்க"
"என்ன ஏதாவது சீரியஸா"
"சீரியஸ்.இல்லை கொஞ்சம் 'சிரி'யஸ்.கையில இன்ஃபக்ஷன் ஏதும் இல்லையாம்.ப்ளட் டெஸ்ட் எடுத்திருக்காங்க.ஆனா கொஞ்சநாளைக்கு உங்களை படுக்கையில கிட்டேயே சேர்க்க வேண்டாமாம்"
"அவ்வளவூதானா.நான் பயந்தே போயிட்டேன்.சரி நீ வீட்டுக்குப் போயிரு.எனக்கு ஃபாரின் டெலிகேட்ஸ் மீட்டிங் இன்னும் முடியலை.நைட் ஆகிடும் போல.நான் வந்து பார்க்கறேன்.துரக்கம் வந்தா படுத்து துரங்கிடு.எனக்காக காத்திருக்காத.முழிச்சிட்டு இருந்துட்டு உடம்பை கெடுத்துக்காத"
"சரிங்க.பத்திரமாக வந்திடுங்க"
"என்ன திடீர்னு அக்கறை"
"எல்லாமே திடீர் திடீர்னுதான நடக்குது"
"அட.திடீர்னு கீதாச்சாரம் மாதிரி பேச ஆரம்பிடாத.நான் வைச்சிடறேன்"என்றவன் அங்கே 'தாமரை கம்ஹ்யர்' என்றதும் சுருக்கென்றது.தாமரை இல்லாமல் எதுவூம் ஆபீசில் நடக்காதா என்று ஒரு மைக்ரோ சைஸ் பொறாமை வந்து உட்கார்ந்து கொண்டது அவள் மனதில். காரிடாரில் நடந்து கொண்டிருக்கும்போதே அஞ்சலிக்கு தலைசுற்றல் போல வந்து மயக்கம் வந்தது.அப்படியே வெட்டப்பட்ட கொடி போல சரிந்..தாள்.யாரோ ஓடி வந்து பிடித்துக் கொண்டார்கள்.
அப்புறம்...
கண்விழித்துப் பார்த்தபோது அவளை ஒரு அறையில் படுக்க வைத்திருந்தார்கள்.அந்த இடம் சிசியூ வார்டு போலிருந்தது.சுற்றிலும் யாருமில்லை.அவளுக்கு இடது புறம் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.அஞ்சலியின் இரத்த சாம்பிளை வைத்து அவள் என்னவோ கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்.அந்த இடத்தில் ஊதா நிறத்தில் விளக்குகள் சன்னமாக பாசாங்கான வெளித்தத்தை தந்து கொண்டிருந்தன.சுற்றும் முற்றும் பார்த்த அஞ்சலிக்கு பயமாக இருந்தது.உடல் லேசாக ஜில்லிட்டது.
சற்று புரண்டு படுத்தாள்.அவள் புரண்டு படுப்பதை பார்த்த அந்த பெண் எழுந்தாள்.புன்னகைத்தாள்.அஞ்சலியின் அருகில் வந்தாள்.அஞ்சலியின் கண்களை அருகாமையில் குனிந்து பார்த்தவாறே அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு ஒரு சிரிஞ்சை எடுத்து அஞ்சலியின் வலது புஜத்தில் செலுத்தினாள்.
அப்போதுதான் அதை கவனித்தாள் அஞ்சலி.
அந்த பெண்..அவள் வலது உள்ளங்கையில் ரேகைகளே இல்லை.
சுத்தமாக வெள்ளை வெளேரென்று பளிங்கு மாதிரி இருந்தது அந்த கை.

அஞ்சலி மயக்கத்திற்கு போனபோது அவள் உடல் ஒரு முறை துரக்கிப் போட்டது.அவள் வாயோரத்தில் இரத்தம் கசிய ஆரம்பித்தது.(தொடரும்)
Previous
Next Post »