“அவள் இளம் மனைவி” - -விஜயநிலா



 இமெயிலில் அந்த செய்தி வந்திருந்ததைப் படித்தபோது உள்ளுக்குள் குளிராக அதிர்ந்தார் நவநீதன்.கண்ணாடி போட்டு ஒரு முறை படித்தார்.கண்ணாடியைக் கழற்றிவிட்டு ஒரு முறை வாசித்தார்.அந்த செய்தியை அவரால் நம்பமுடியவில்லை.நைஜீரியன் மோசடி போல ஏதாவது இருக்குமோ என்று நினைத்தார்.
 இல்லை.அவர்கள் அவரது பர்சனல் விபரங்களையோ.பாங்க் அக்கவூன்ட் நம்பர்,பாஸ்வர்டு போன்ற சமாச்சாரங்களையோ கேட்கவில்லை.பழைய மனைவியரை வாங்கிக் கொண்டு அதே போன்ற உடல்,அழகு,குணாதியம் கொண்ட புது மனைவியரை பைபேக் முறையில் மாற்றித் தருவதாக டாக்டர்.பைரவன் என்பவர் அந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

 ஒரு கணம் நவநீதனுக்கு தன் மனைவி கமலத்தின் ஞாபகம் வந்தது.கமலம் அழகாகத்தான் இருந்தாள்.முப்பது வருடம் முன்பு கல்யாணத்தின்போது அமிதாப் பச்சன் படங்களில் எல்லாம் டூபீஸில் வருவாளே.ஜீனத் அமனோ என்னவோ பெயர் இருக்குமே அவள் போலத்தான் இருந்தாள்.ஆனால் தற்போது சீரியல் அம்மாக்கள் போல அதிகம் பேசுகிறாள்.அதிகம் பெருத்திருக்கிறாள்.பெட்ரூமிற்கு அழைத்தால் பிள்ளைகள் காலேஜ் போகிறார்கள் என்கிறாள்.போகட்டுமே.அதற்காக நான் என் இச்சைகளை அடக்கி வைத்துக் கொள்வதா.அப்புறம் எவளாவது என் ஆபீசில் வேலை செய்பவள் அந்த ஜீனத் அமன் போல வந்து மடியில் விழுந்து விட்டால் அப்புறம் இவள் நிலைமை என்ன என்று யோசிக்க மாட்டேன் என்கிறாளே.வேறு வழியில்லை.இவளை பைபேக்கில் கொடுத்து விட்டு ஒரு புதுப் பொண்டாட்டி வாங்கிக்கொண்டு மறுபடி முதலிரவைத் துவங்க வேண்டியதுதான் என்று முடிவூ செய்தார்.

 டாக்டர் பைரவன் யார் என்று கூகிளில் சர்ச் செய்தார்.பைரவன் நிசடாக்டர்தான்.க்வாக் இல்லை.நம்பலாம் போலத்தான் தகவல்கள் நெட்டில் கொட்டின.நேரில் போய் பார்த்து விடலாம் என்று முடிவூ செய்தார்.
 கொட்டிவாக்கத்தில் ஒரு நிழலான இடத்தில் டாக்டர் பைரவன் தன் கிளினிக்கை அமைத்திருந்தார்.உள்ளே நிறைய கார்கள்.எல்லாமே இருபது லட்சத்திற்கு மேற்பட்ட உயர்ரக கார்கள்.அவற்றின் நடுவே தன் புது ஐ10ஐ தயக்கத்துடன் நிறுத்தினார்.
யெஸ்.அப்பாயின்ட்மன்ட் இருக்கா ஸார்என்ற அந்த பெண்ணே மிஸ்இந்தியா போலிருந்தாள்.ஸ்லிம்மாக சந்தன சிலை போல இருந்தாள்.மார்புகள் கண்களைக் குத்தின.பார்வையை நாகரிகமாக மாற்றிக் கொண்டார்.

டாக்டரைப் பாக்கனும்.அந்த பைபேக் சமாச்சாரம்
அதுவா.2018 வரை புக்கிங் ஆகிடுச்சே.ஸாரிஎன்றாள்.அவரை கத்தரித்து விட்டு செல்பேசி எடுத்து யாருடனோ காதல் செய்ய ஆரம்பித்தாள்.தயக்கமாக நின்று கொண்டிருந்த நவநீதன் அசட்டுத்தனமாக அந்த கேள்வியை கேட்டார்.
நான் வேணும்னா யாராவது எம்பி,எம்எல்ஏ சிபாரிசு பிடிச்சிட்டு வரட்டுமா.என் மனைவியை நான் மாத்தனும்.இல்லைன்னா நான் செத்துருவேன்.
அவள் சிரித்து விட்டாள்.அருகே வந்து அவரது கைகளைப் பிடித்தபடி உரசினாள்.கன்னத்தை தட்டி விட்டு சொன்னாள்.
அவ்வளவூ அவசரமா.ஆல்ரைட்.உங்களை நான் பிரத்யேகமாக அப்பாயின்ட்மன்ட் இல்லாமல் அனுமதிக்கிறேன்.சீக்கிரம் போய் டாக்டரைப் பாருங்க.டாக்டர் ஒரு கான்பரன்ஸூக்காக மியூனிச் கிளம்பிட்டு இருக்கார்
உள்ளே போனார்.அந்த அறை நீலநிற வெளிச்ச சிதறல்களுடன் இருந்தது.ஏசியின் குளிர் அதிகமோ.உட்கார்ந்தார்.அவரது மேசையில் ராபர்ட் ஃபோர்டின் 'தி அஸாஸினேஷன் ஆஃப் ஜெஸி ஜேம்ஸ்' தலைகீழாகக் கிடந்தது.டாக்டர் பைரவன் குள்ளமாக இருந்தார்.தலைநிறைய கேசம்.கண்களில் லேசாக திருட்டுத்தனம்."ஹ்யூமன் ஸென்டிபீடு" படத்தில் வரும் டாக்டர் ஹெய்ட்டர் போலிருந்தார் பைரவன்.தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டே பேசினார்.
பைபேக் தர்றது அத்தனை சுலபம் இல்லை.நீங்க வேணாம்னு கொடுத்திட்டுப் போற மனைவியை என்ன பண்றம்னு கேட்கக் கூடாது.நியூக்ளியர் சேம்பர்ல வைச்சி மாலிக்யூல் மாலிக்யூலாகப் பிரிச்சி எடுத்திருவம்.அந்த ஆவியிலயே இந்த ஆவி வெந்துரும்.நீங்க எடுத்துட்டுப் போற மனைவியை பத்திரமா வைச்சிக்கனும்.திருப்பி வாங்கிக்க மாட்டம்
பத்திரமா வைச்சுக்கறேன்.கமலத்தை நான் புதுசா பார்க்கனும்
புதுசாவே தர்றம்.நீங்க நல்லாவே அனுபவிக்கலாம்- ஐமீன் வாழ்க்கையைஎன்று சிரித்தார்.உள்ளே நுழைந்த அந்த ரிஷப்சன் பெண் பைரவனின் தலையைக் கோதியவாறு நின்றாள்.ஒரு கான்ட்ராக்ட் படிவத்தை எடுத்துக் கொடுத்து கையொப்பமிடச் சொன்னாள்.ஏறக்குறைய கட்டாயப்படுத்தினாள்.

 கையெழுத்திட்டு நிமிர்ந்தார் நவநீதன்.அவள் சற்று குனிந்தபோது தெரிந்த அவளது மார்புகள் பழைய கமலத்தை ஞாபகப்படுத்தின.முதன் முதலில் முதலிரவில் கமலத்தைத் தொட்டது ஞாபகம் வந்தது.மறுபடி எல்லாவற்றையூம் ஆரம்பிக்க வேண்டும்.இப்போதைய கமலம் தொளதொளவென்று நசுங்கிய வெங்கலப் பாத்திரம் போலிருக்கிறாள்.தேய்ந்த அம்பாசிடர் கார் போல பாதியில் மூச்சிறைக்கிறாள்.
நீங்க உங்க மனைவியை கொண்டு வந்து அட்மிட் பண்ணிருங்க
வெளியே வந்தார்.உற்சாகமாக விசிலடித்தபடியே வீட்டுக்கு வந்தார்.கதவூ திறந்தே கிடந்தது.உள்ளே க..ம..ல..ம் இ..இல்லை.எங்கே போய்விட்டாள்.அம்பாசிடரைக் காணவில்லையே.சே.கமலத்தை காணவில்லையே என்று எல்லா அறைக்கும் போய் பார்த்தபோது பகீரென்றது.ப்ரிட்ஜ் மேல் ஒரு ஸ்லிப் ஒட்டி வைத்து விட்டு போயிருந்தாள்.
என்னை தேட வேண்டாம்.போகிறேன்என்று எதுவூம் எழுதியிருப்பாளோஅப்பாயானால் .எங்கே என்று போய் அவளைத் தேடுவது.அவள் இருந்தால்தானே அவளை பை பேக் செய்ய முடியூம்.வேறு ஏதாவது புது பெண்ணாகப் போய் வாங்கிக் கொள்ளலாமா?அவன் பாட்டுக்கு ஏதாவது ரோபோவை செய்து கொடுத்து விட்டானென்றால் அது பாட்டுக்கு நம் டவூசரை உருவிப் போட்டு விட்டால்...டாக்டர் பைரவனிடம் சொல்லலாமா?

 பைரவனிடம் செல்பேசியில் சொன்னபோது சிரித்தார்.
என்ன டாக்டர் சிரிக்கறிங்க
நாற்பது வயசுல எல்லா பொண்ணுங்களுக்கும் வர்ற இட்ச்தான் இது.விட்டுட்டு ஓடனும்னு தோணும்.நீங்க உங்க மனைவியை நல்லா வைச்சிருந்திருக்கனும்.அவங்க போயிட்டா பரவாயில்லை.அவங்க யூஸ் பண்ணின ஹர்ஆயில்,ஸ்நோ,உள்ளாடைகள் ஏதாவது இருக்கா
எதுக்கு டாக்டர்
அதில அவங்களோட வியர்வை,பாடிஃப்ளுயிடு படிஞ்சிருக்கலாம்.முடிகள் ஹர்ஆயில் பாட்டில்ல ஒட்டிட்டு இருக்கலாம்.அதை வைச்சி ஏதாவது க்ளோன் மாதிரி முயற்சி பண்ணலாம்.ஆனா ஆள் இருந்தாதான் பலன் அதிகம் இருக்கும்
 பதட்டமானார்.அவளது பீரோவைக் குடைந்தபோது அவளது உள்ளாடைகள்,புடவைகள்,அவள் வரைந்த கோட்டுச் சித்திரங்கள்,பழைய கண்ணாடி வளையல்கள் இவற்றுடன் அவளது வாசனையூம் ஒருங்கே கலந்திருந்ததை உணர்ந்தார்.இப்போது திடீரென்று சாமிசீரியல்கள் மாதிரி கமலம் வந்து விட மாட்டாளா என்று நினைத்தபோது பின்னாலிருந்து அவளது குரல் கேட்டது.கமலாவேதான்.வந்துவிட்டாளா.மைகாட்...
என்னங்க பண்ணறிங்க என்ன வேணும்
நீதான் வேணும்என்றார் சம்பந்தமில்லாமல்.
நான் வேணுமா.இளமை திரும்பிடுச்சின்னு நினைப்பாஎன்று கேட்டவாறு அலட்சியமாக அகன்று விட்டாள்.அதன்பின் அவளை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.மதியம் சாப்பாடு பரிமாறும்போது எட்ட நின்றே அவள் பரிமாறியது போல தோன்றியது.சே.நானாக எதையூம் தவறாக நினைத்துக் கொள்கிறேன்.பெயின்ட் விளம்பரங்களில் எல்லாம் வருவது போல ஷீஸ் ஆல்வேஸ் ரைட்என்று முணுமுணுத்தார்.
என்னங்க..என்றாள் மெதுவாக.
என்ன கமலம்
சாயந்தரம் எங்கனாச்சும் வெளில போயிட்டு வரலாமாஎன்றதும் குஷியாகிவிட்டார்.
எக்ஸாட்லி.நானே கேட்கனும்னு இருந்தேன்.ஒரு இடத்துக்கு உன்னை அழைச்சிட்டுப் போகனும்
சரிங்கஎன்றாள்.சாயந்தரம் அவளுக்குப் பிடித்த மயில்கழுத்து நிற புடவையை ஆசையாக கட்டிக் கொண்டாள்.கைகளற்ற ரவிக்கை அணிந்து கொண்டதில் அவள் ஜீனத்அமன் போலத்தான் இருந்தாள்.பின்னாலிருந்து அவளை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையை ஒத்தி வைத்தார்.
  டாக்டர் பைரவனின் கிளினிக் முன்பாக காரை நிறுத்தினதும் மெல்ல புன்னகைத்தாள்.இவள் எதற்கு புன்னகைக்கிறாள்.இருக்கட்டும்.இவளைக் கொண்டு போய் கொடுத்து விட்டுத்தான் புதிய கமலத்தைவாங்கிக் கொண்டு வரப்போகிறேனே என்று விசிலடித்தவாறு உள்ளே நுழைந்த நவநீதனை ரிஷப்சனில் இருந்த பெண் சிரித்தவாறு அருகே வந்து-
வந்துட்டிங்களே.நீங்களா அதுஎன்றாள்.
பார்டன்.என்ன கேட்கற.புரியலையேஎன்றார் நவநீதன்.
இல்லை..வந்து இந்தம்மாவோட கணவர் நீங்கதானா.அன்னிக்கி அவங்க வந்திருந்தபோது உங்க பேரை சொன்னதுமே எனக்கு ஞாபகம் வந்திருக்கனும்.வரலை.நான் ஏதேதோ சொல்றேன்.உள்ள போங்க.முதல்ல உங்களுக்கு இசிஜி,எக்ஸ்ரே,ஸ்கான் எல்லாம் எடுக்கனும்.பிபி,ஷூகர் ஏதும் இல்லைதானே உங்களுக்கு மிஸ்டர் நவநீதன்
எ..என்ன சொல்றா இவ.உனக்கு ஏதாவது புரியூதா கமலம்என்ற நவநீதன் சட்டென்று முகம் மாறினார்.கமலம் கவூன்டரில் போய் பணத்தைக் கட்டினதும் திகைத்தார்.
 “நீ எதுக்கு பணத்தை கட்டற கமலம்.உனக்கே நீ பணம் கட்டறியா.என்னாச்சு எனக்கு.என் கைகளை ஏன் பிடிக்கறிங்கஎன்றார் அந்த தடியர்களிடம்.
 உள்ளே இருந்த பாதாள கொட்டடியில் கிடத்தப்பட்ட நவநீதன் புரியாமல் அமர்ந்திருக்க-
 வெளியே வந்த கமலம் உற்சாகமாக இருந்தாள்.அவளருகே இளமையாய்,ஆஜானுபாகுவாய்,ஷாஹித்கப்பூர்+ராம்சரண்தேஜா+ஜஸ்டின் பைபர்தனமாக புன்னகைத்தபடி அவளுடன் கைகோர்த்தபடி ஒரு புத்தம்புதிய நவநீதன்சென்று கொண்டிருந்தான்.

                                             --------------------------------
Previous
Next Post »