தொடர்கதை: "அவள்-இவள்..." -விஜயநிலா



                                                      (1)

  ஸ்விட்ச் போட்ட மாதிரி எல்லாம் சட்டென்று கலைந்து போனது.தன் அருகில் படுத்திருந்த அஞ்சலியைப் பார்த்தான் வருண்.
அவள் முகத்தில் இன்னமும் குழந்தைத்தனம் மிச்சமிருந்தது.கண்கள் மூடியிருந்தாலும் அதில் ஒரு அழகான செக்ஸ் அப்பீல் இருந்தது.கன்னங்கள் இரண்டு பக்கமும் விரலை வைத்தால் வழுக்கி விடும்போல வழவழப்பாக இருந்தன.உதடுகளைப் பார்த்ததும் மெல்லமாய் முத்தமிடலாம் போலிருந்தது.எழுந்து கொண்ட வருண் கிட்ட குனிந்து அவள் முகத்தைப் பார்த்தான்.
 கள்ளங்கபடமில்லாத முகம்.
 இன்னும் ஒரு ரவூண்டு காதலிக்கலாம் போன்ற கன்னங்கள்.
 முத்தமிட்டுக் கொண்டே இருக்கலாம் போன்ற உதடுகள்.
 தன் புதுமனைவி அஞ்சலி.
 புத்தம் புதிதான அஞ்சலி.
 தன் உலகையே மாற்ற வந்திருக்கும் இன்ஸ்டன்ட் வானவில் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த வருணின் மனதில் ஒரு நெருடல்.
 இவளா நமக்கு துரோகம் செய்கிறாள்.
 ச்சே!
 நம்ப முடியவில்லை.நம்பாமலும் இருக்க முடியவில்லை.வந்திருந்த ரிப்போர்ட் அப்படி.கல்யாணத்தின்போதே யாரோ ஒரு ஆள் செல்போனில் சொன்னான்.அஞ்சலியை நம்பாதே என்று.ப்ராங் கால் என்று அலட்சியப்படுத்தினால் இப்போது டிடெக்டிவ் ஏஜென்சியினர் தந்துள்ள ரிப்போர்ட் கேலியாக சிரிக்கிறது.
 அஞ்சலியை இத்தனை அவசரத்தில் திருமணம் செய்து கொண்டது தவறௌ என நினைத்தான்.அஞ்சலி இன்னமும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.கால்களை லேசாக அகட்டினாள்.கைகள் உறக்கத்திலேயே பக்கத்தில் படுத்திருந்த வருணை தேடின.அவன் அருகில்தான் படுத்திருக்கிறான் என்ற நினைப்பில் அவனோடு ஒண்டிக்கொண்டு படுத்துக் கொள்ளலாம் என்று புரண்ட அஞ்சலி அருகில் அவனைத் தேடிவிட்டு கண்களைத் திறந்து பார்த்தாள்.
"என்னங்க எழுந்திட்டிங்களா.ஸாரி.நீங்கதான் என்னை நேத்து முழுக்க துரங்க விடலை.லேட்டாயிடுச்சி.அசந்துட்டேன்.இருங்க ஃப்ரஷ்அப் பண்ணிட்டு வந்து காபி போட்டுத் தர்றேன்"என்று இயல்பாக அவன் கன்னத்தை விரலால் லேசாக தட்டி விட்டு பாத்ரூமிற்குள் புகுந்தாள்.
வருண் ஒரு பிசினஸ்மேன்.புதிது புதிதாக எதையாவது ஆரம்பித்துக் கொண்டே இருப்பான்.பொழுதுபோக்காக ஹான்டிகேம் எடுத்துக் கொண்டு காடுகளில் அலைவான்.வைல்டுலைஃப் ஃபோட்டோகிராஃபி அவனது பொழுதுபோக்கு.திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே தோன்றாமல் இருந்தபோது ஒரு நடுத்தரமான டவூனில் ஒரு திருப்பத்தில் தன்னுடைய காரை திருப்பியபோது நடுவே வந்து மிரண்டு போய் நின்றிருந்தாள் அஞ்சலி.காட்டில் புகைப்படம் எடுக்கும்போது நட்டநடுவே வந்து மாட்டிக்கொண்டு விட்டோமோ என்று மிரண்டுபோய் நிற்கும் மான் போல அவள் நின்றிருப்பது தோன்ற அப்படியே காமராவை காரிலிருந்து எடுத்து ஒரு ஃப்ளாஷ் அடித்தான்.
"வண்டியை பார்த்து ஓட்டிட்டு வராம..எதுக்கு என்னைய படம் எடுக்கறிங்க.யார் நீங்க..சினிமாகாரவூங்களா.."என்றாள் அஞ்சலி.அதுதான் அவள் பேசிய முதல் வார்த்தை.அந்த குரலில் மென்மையூம் பெண்மையூம் கொஞ்சிக்கொண்டிருந்தன.அவன் சந்தித்த பிசினஸ் க்ளாஸ் பெண்களின் வாய்ஸ் கொஞ்சம் ஆண்தன்மையூடன் அப்பட்டமாக இருக்கும்.இவள் வித்தியாசமானவளாக இருந்தாள்.அந்த கணமே அவள் அவன் மனதில் புகுந்து கொண்ட மாதிரி இருந்தது.ஹோட்டலுக்கு வந்தவூடன் அவள் படத்தை லாப்டாப்பிற்கு மாற்றி ஃபோட்டோஷாப்பிற்கு கொண்டு போய் பார்த்தான் வருண்.
 அந்த கண்களும் கன்னங்களும் உதடுகளும் ஏதாவது செய் என்றன.அந்த கணமே தீர்மாணித்தான்.
 அப்புறம் அவள் வீட்டை கண்டு பிடித்துப் போய் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொன்னதும் அவள் மிரண்டு போனாள்.அந்த வீட்டில் பெரியவர்கள் என்று யாரும் இல்லை.அவள் மட்டும்தான் இருந்தாள்.தனியாகவா இருக்கிறாய் என்று வியப்புடன் கேட்டான்.
"இருபத்திரெண்டு வருஷமா தனியாதான்இருக்கேன்.அப்பாம்மா கிடையாது.சொந்தக்காரங்களும் யார்னு தெரியாது.எப்டியோ படிச்சு ஒரு வில்லேஜ் கால்சென்டர்ல வொர்க் பண்றேன்"என்றாள்.
 பாத்ரூமிலிருந்து வெளியே வந்த அஞ்சலி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.
"என்ன யோசனை அய்யாவூக்கு"
"உன்னை முதமுத சந்திச்சது பத்தி நினைச்சிட்டு இருந்தேன்"
"யப்பா.நினைக்கவே பயமா இருந்துச்சி எனக்குஅப்ப.உங்களைப் பார்த்தா சினிமால வர்ற வில்லன் மாதிரிதான் இருந்திங்க.உங்களோட பணமும் பகட்டும் எனக்கு பயத்தை கொடுத்துட்டே இருந்திச்சி.எப்படி இருப்பிங்களோ என்னவோன்னு"
"அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட"
"நான் எங்கே ஒத்துக்கிட்டேன்.நீங்கதான் என்னை சம்மதிக்க வைச்சிங்க.நடந்த எல்லாமே கனவூ மாதிரி இருக்கு.ரெண்டு நிமிஷ விளம்பரப்படங்கள்ல வர்ற சின்ன கதை மாதிரி இருக்கு.நிசமாகவே நான் உங்க மனைவி ஆகிட்டேனா.."
"ஆமா.என்ன சந்தேகம்"
"எனக்கொன்னும் சந்தேகமில்ல.நீங்கதான் என்னை சந்தேகமா பார்க்கற மாதிரி இருக்கு"என்றதும் விலகி நின்று அவளைப் பார்த்தான்.
 தன் மனதைப் படித்து விட்டாளோ.
"என்ன ஆச்சுங்க..எப்பவூம் மெக்சிகோ காளை மாதிரி பாய்ஞ்சிருவிங்களே இந்நேரம்"
"யா..எனக்கு ஆபீஸ் ஞாபகம் வந்திருச்சி"
"ஆபீஸ்னதும் எனக்கும் ஒரு ஆசைங்க.என்னை உங்க ஆபீசுக்கு அழைச்சிட்டுப் போவிங்களா.."
"எதுக்கு"
"நான் ஒரு சின்ன கால்சென்டர்லதான் வொர்க் பண்ணியிருக்கேன்.அதுவூம் தமிழ்லயே பேசற கிராம கால்சென்டர்.உங்கள ஆபீஸ் ஒரு கார்ப்பரேட் ஆபீசாச்சே.அதையெல்லாம் நான் ஹிந்திப்படங்கள்லதான் பார்த்திருக்கேன்.நானும் இன்னிக்கி வரட்டுமாங்க"
"சரி வா"என்றான்.
ப்ரக்ஃபாஸ்ட் முடியூம்வரை எதுவூம் பேசாமல் அமர்ந்திருந்த தன் புதுக்கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
 அவன் எழுந்ததும் தட்டுக்களை எடுத்து வாஷரில் போட்டு விட்டு உடைகளை மாற்றிக்கொண்டு வந்தாள்.பிசினஸ் நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த வருணின் கழுத்தைக் கட்டிக்கொள்ளலாம் என்று அருகே வந்தால் அவன் அதற்குள் எழுந்து கொண்டான்.
"என்ன ஆச்சுங்க.நான் ஆபீஸ் வரதுல உங்களுக்கு இஷ்டமில்லையா"
"சேசே..ஏதோ ஞாபகத்துல இருந்துட்டேன்.வா லெட்ஸ் கோ"
 காரை ரிவர்ஸ் எடுத்து அரைவட்டமடித்து கியரை மாற்றி வேகத்தைக் கூட்டினான்.இதமான இசை பின்னால் கசிந்தது.
"என்னங்க.உங்க முகமே முன்ன மாதிரி இல்லே"
"சேசே.ஐம் ஆல்ரைட்.நானே ஆபீசுக்கு போகவேண்டாம்னு பார்த்தேன்"என்றான்.
"ஏன்"
"வீட்ல வேலை இருக்குமேன்னுதான்"என்று கண்ணடித்தான்.
"ச்சீய்"என்று அவன் இடுப்பில் கிள்ளினாள்.அப்புறம் அவன் தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.மௌனமாக காரை செலுத்தினான் வருண்.
 ஆபீஸ் வந்ததும் இறங்கி சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்து காரை பார்க் பண்ணச் சொல்லி விட்டு வந்தான்.அவனுக்கென்று இருக்கும் பிரத்யேக லிப்டில் ஏறிக்கொண்டு அவளை அணைத்தவாறு நின்றான்.அஞ்சலி கனவூ காண்பது போல கண்களை லேசாக அலைபாய விட்டபடி நின்றிருந்தாள்.அவள் கைகள் அவன் கைகளை இறுக்கமாய் பிடித்திருந்தன.
"என்ன ஆச்சு அஞ்சலி"
"எப்பவூம் என் மேல இதே மாதிரி பிரியத்தோட இருப்பிங்களாங்க"
"அப்படின்னா?"
"இல்லே.என்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் என் மேல உள்ள அன்பு மாறாம இருப்பிங்களாங்க"
"என்ன சொல்ற.உன்கிட்ட ஏதாவது தப்பு இருக்கா'
"சே.சே.என் கூட காலேஜ்ல படிச்ச வினோதினி என்னை பழிவாங்கியே தீருவேன்னு சொல்லியிருக்கா.அது முடிஞ்சு போன பகைன்னு நினைச்சேன்.ஆனா..."
"ஆனா.."
"நம்ம கல்யாணத்து அன்னிக்கு எனக்கொரு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தா.என்னை உங்ககிட்டே இருந்து பிரிச்சிடுவேன்னு"
"டோன்ட் வொர்ரிடா..வா உள்ள போவம்"என்று தன் அறைக்கு அழைத்துச்சென்றான்.
அப்போது அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அவனது செகரட்டரி ஸ்டெல்லா மாத்யூ அஞ்சலியைப் பார்த்து சினேகமாக சிரித்தபடி சொன்னாள்.
"வெல்கம் மேடம்.பேசிட்டிருங்க.நான் இன்னிக்கி சாரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்"என்று சொல்லி விட்டு ஒரு ஃபைலை வருணிடம் கொடுத்து விட்டு-
"இதான் சார் அந்த ரிப்போர்ட்.நான் படிச்சிட்டேன்.அவங்க சொல்றது உண்மைன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்றாங்க.இதுதான் உங்க புது மனைவியா.அழகா இருக்காங்க"என்றாள்.
அவளைப்பற்றிய அந்த ரிப்போர்ட் அடங்கிய ஃபைலை தன் மேசை டிராயரில் வைத்தபடி சொன்னான் வருண்.
"உட்காரு அஞ்சலி.நான் தாமரையை வரச்சொல்றேன்.அவ உனக்கு ஆபீசை சுத்திக் காண்பிப்பா"என்று இன்டர்காம் எடுத்து அழைத்தான்.
அடுத்த நிமிடம் உள்ளே வந்த தாமரை உயரமாய் சிகப்பாய் இருந்தாள்.பெரிய கண்கள்.கீழுதடு மேலுதடை விட பெரிதாய் இருந்த விதத்தில் ஒரு செக்ஸ் அப்பீல் மறைந்திருந்தது.புடவையை லோஹிப்பில் வழிய விட்டிருந்தாள்.கழுத்தில் ஒரு பிளாஸ்டிக் முத்துமாலை அணிந்திருந்தாள்.
"வெல்கம் அஞ்சலி.ஐம் தாமரை.."என்றவளைப் பார்த்து அதிர்ந்து போனாள் அஞ்சலி.
இவளா..இவளா தாமரை..இவள் அந்த வினோதினியாயிற்றே.இவள் எப்படி இங்கே?
"என்னங்க..இவ..இது.."
"திஸ் இஸ் தாமரை.நம்ம கம்பெனியிலயே ரொம்ப ஸ்மார்ட் லேடி.தாமரை அஞ்சலியை அழைச்சிட்டுப் போ"என்று சிகரட் பற்ற வைத்துக் கொண்டு வருண் சொல்ல தாமரை அவள் அருகே வந்து அவளது கையைப் பற்றினாள்.

அந்த கை குலுக்கலில் தெரிந்த இறுக்கம் ஒரு விரோதத்தை மறைமுகமாய் காண்பிக்க முதல் முறையாய் அந்த குளிரூட்டும் ஏசியில் அஞ்சலியின் முகம் வியர்த்துப் போனது.வருண் மேசை டிராயரில் வைத்திருந்த ரிப்போர்ட்டை வெளியில் எடுக்க ஆரம்பித்தான்.           (தொடரும்)
Previous
Next Post »