'வண்ண வண்ணமாய்
பூக்காத மொட்டுக்கள்
அவள் நகப்பூச்சு

நழுவிப் பிரிந்த
கிளைநதிகள்
காதோரம்
அவள் கூந்தல் கீற்று

இரட்டைப் பாம்புகள்
ஆலிங்கனமாய்
அவள் பின்னல்

மரமேதும் இல்லாமல்
போன்சாய் விழுதுகள்
காதோரம்
மீண்டும்
அவள் கூந்தல் கீற்று

வெடிக்காமல்
சிதறச் செய்யூம்
கண்ணி வெடிகள்
அவள் கண்கள்

அதிசய ஆரஞ்சு
முழுவதுமே இரண்டே சுளைதான்
அவள் உதடுகள்


செல்பேசியில்
எப்போதும் நடனம்
அவள் விரல்கள்

அறிவிப்பு பலகை
இல்லாத
அபாய வளைவூகள்
அவள் இடுப்பு

கார்ப்பரேஷனே பிஎஸ்என்எல்லோ
யார் தோண்டி விட்டு போனாலும்
வலிக்கும் பூமிக்கு
இதமான ஒத்தடங்கள்
மெல்ல நடக்கும்

அவள் பாதங்கள்'
Previous
Next Post »