நித்யாமேனன் நலமா?



  என்னுடைய மினி லாப்டாப்பில் சார்ஜிங்கில் பிரச்சனை என்றும் லாப்பை ஆன் செய்தபடி சார்ஜிங்கில் போட்டால் சார்ஜ் ஆகவில்லை என்றும் லாப்பை ஆஃப் செய்து விட்டுப் போட்டால்தான் சார்ஜ் ஆகிறது என்றும் ஒரு பதிவில் தெரிவித்திருந்தேன்.சின்னதாய் வெள்ளையாய் ஹேன்டியாக இருக்கிறதே என்று இந்த ஏஸஸ் (ASUS) லாப்பை வாங்கியிருக்கிறேன் என்றும் அதனை நித்யாமேனன் என்றும் சொல்லியிருக்கிறேன் என்பதை முன்கதைச் சுருக்கமாக நினைவிற்கொள்க.
 இது ஏதோ சார்ஜிங் அடாப்டரில் பிரச்சனை அல்லது வீட்டிலுள்ள ப்ளக் பாயின்ட்டில் பிரச்சனை என்றுதான் இவ்வளவூநாள் யோசித்துக் கொண்டிருந்தேன்.ஏஸஸ் கம்பெனிக்காரர்களும் அங்கே நன்றாக வேலை செய்கிறது என்று ரிபீடட் ஆக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஒரு வேலை சிக்கலாக இருந்தால் அதை அப்படியே போட்டு விட்டு அதற்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் திடீரென ப்ளாஷ் அடிக்கும் என்று எல்லாவற்றையூம் மூட்டை கட்டி வைத்து விட்டு துரங்காவனம் பார்க்க ஆரம்பித்தேன்.
 ஆரம்பக்காட்சிலேயே கமல்ஹாசனின் தனிஆவர்த்தனப்படம் இந்தப் படத்தையெல்லாம் பார்ப்பதற்கு நாம் இன்னும் வயசுக்கு வரவில்லை என்று சடாரென்று படத்தை மாற்றி கத்துக்குட்டி பார்ப்போம் என்று உட்கார்ந்தால் அங்கே சூரி படம் முழுக்க சொறிந்து கொண்டிருந்தார்.விவசாயம், மீத்தேன் என்று கதை கட்டிக்கொண்டிருந்தார்கள்.இதே போலத்தான் 49ஓவில் நம்ம தானைத்தலைவன் நடித்திருந்தாரே வேண்டாம் என்று ஜெயாமேக்ஸை திருப்பினால் நம்ம எவர்கிரீன் தலைவர் நினைத்ததை முடிப்பவன் நான் நான் நாநாநாநாநான் என்று ஆடிக் கொண்டிருக்க சட்டென ப்ளாஷ் அடித்தது.
 எனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டே இருந்தபோது ஒரு குறிப்பிட்ட மி.அ.வில் ஒரு அட்டாச்மன்;ட் வந்திருந்தது.அதனை திறந்து பார்த்து விட்டு மறந்திருந்தேன்.
 பொதுவாக என் பெயர் மெலிஸா.நான் நமீதாவூக்கு தங்கை போல இருப்பேன்.பிரிட்டனின் கோடிக்கணக்கான பவூன்ட்ஸல் சொத்துக்களை விற்ற பணம் இருக்கிறது.அதை இந்தியா கொண்டு வர ஒரு கை கொடுக்கிறீர்களா.இந்தியா வந்ததும் கோவாவூக்கோ, சில்வாஸாவூக்கோ ஒரு டூர் போய் வரலாம் என்கிற ரீதியில் வரும் கடிதங்களை தவிர்த்து விடுவேன்.இது ஒரு பத்திரிகை நண்பரின் பெயரில் வந்திருந்தது.
 அதனை மறுபடி எடுத்துப் பார்த்தால் அது ஒரு அட்டாச்மன்ட் வைத்திருந்தது.திறந்திடு சீஸேம் என்றேன்.
 திறந்து கொண்டு கூகுள் மெயில் உன் ஆயூள் முடிந்து விட்டது என்றது நம்பியார்த்தனமாக.தற்போதென்றால் பிரகாஷ்ராஜ்தனமாக.
 அட.
 இதுதானா விஷயம்.
 நம்ம நித்யாமேனனை இமெயில் வைரஸ் சுரண்டிப் பார்த்திருக்கிறது.ஆனால் லாப்பில் உள்ள ஃபைல்கள் எதையூம் அது அழிக்கவில்லை.ஆனால் பயாஸை லேசாக முத்தமிட்டிருக்கிறது.
 எனது லாப்பின் பயாஸில் பயாஸை ரீகாலிபிரேஷன் செய்யூம் ஆஃப்ஷன் ஏஸஸின் இந்த மாடலில் இல்லை.அதனால் பயாஸ் பற்றி கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து விட்டு பயாஸை ஃபாக்டரி டிஃபால்டுக்கு மாற்றி வைத்து மறுபடி ரீஸ்டார்ட் செய்தேன்.
 என்னாச்சர்யம்.
 சார்ஜிங் பிரச்சனை சரியாகி இப்போது நித்யாமேனனும் நலமாகி விட்டது.
Previous
Next Post »