கவிதை


'எழுதுகிறாய்..."

'நான்
கவிதை ஏதும் எழுதாதபோதெல்லாம்
நீ எழுதிவிடுகிறாய்
கண்களாலும் உடல்மொழியாலும்'


-------------------------------------------------------------

"யோசிக்கிறாய்"

'வேலைமுடிந்து
அலுவலகத்திலிருந்து கிளம்பியதும்
வழக்கம்போல
எங்கு செல்வதென யோசிக்கிறாய்
உனக்குள்ளே நானிருப்பதால்
உன் வீட்டுக்கு செல்வதா
என் வீட்டுக்கு செல்வதா
என்று'


------------------------------------------------------------

"வெட்கம்"

'அட யார் சொன்னது
மருதாணி நன்றாக பிடித்திருக்கிறதென்று
உன்னைக் கண்ட வெட்கத்தில்
சிவந்திருக்கிறது
மருதாணி'

--------------------------------------------------------------------







 "கண்கள்"

'கண்களை
பார்க்கும்போதெல்லாம்
நாங்க இருக்கோம் என்று
சொல்லும் ஐகேர்காரர்கள்
உன் கண்களை
பார்த்ததுமே
நாங்க இருக்கமாட்டோம்
என்று பதறுகிறார்களாம்
அத்தனை
வசீகரம் உன் கண்கள்'

--------------------------------------------------

"ஏன்?"

'என்றௌ
ஒரு முறை மட்டுமே
ரயில் பயணத்தில்
வசீகரிக்கும் பெண்ணாக
நீ இருந்து விட்டுப் போயிருக்கலாமே
எதற்காக
மறுபடி மறுபடி
கண்ணில்படுகிறாய்
நான் பாதைகளை
மாற்றிக்கொண்டே இருந்தபோதும்'


Previous
Next Post »