வெள்ளை நிறத்தில் நித்யாமேனன் மாதிரி


என்னுடைய ஏஸஸ் (ASUS) லாப்டாப்பிற்கு காஞ்சனா பிடித்திருக்கிறது.அதாவது பேய்! லாப்டாப்பை ஆன் செய்து விட்டு சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஆக மறுக்கிறது.லாப்டாப்பை ஆஃப் செய்து விட்டு சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஆகிறது.மைக்ரோசாப்ட் ஏபிஐ பவர் எல்லாம் டிஸேபிள் செய்து பார்த்து விட்டேன்.லாப்பில் வைரஸ் ஏதுமில்லை.
ஏஸஸ் சர்வீஸ் சென்டரில் இரண்டு முறை கொண்டு போய் காண்பித்தால் அவர்களிடம் உள்ள எல்லா ப்ளக் பாயின்ட்டுகளிலும் லாப் நன்றாக சார்ஜ் ஆகிறது.இது போன்ற ஒரு பிரச்சனை வர வாய்ப்பே இல்லை என்று ஹன்சிகா மீது சத்தியம் செய்கிறார்கள்.
 இந்த பிரச்சனைக்காக எலக்ட்ரீஷியனை வரவழைத்து எல்லா ப்ளக் பாயின்ட்டையூம் துருவிப்பார்த்தாகி விட்டது.லெஹ்ரான்ட் பிரான்ட் நன்றாக இருக்குமென்றுதான் ஃபினோலெக்ஸை புறக்கணித்து இதனைப் போட்டிருந்தேன்.இந்த பிரச்சனைக்கு தீர்வூ கிடைக்காமல் சொந்த வீட்டைக் கூட விட்டு வெளியேறி வா.வீ.யில் இருக்கிறேன்.
 ஆனால் இங்கேயூம் பிரச்சனை திடீரென வந்து விட்டது.
 ஐ ரீபீட்.
 லாப்டாப்பை அணைத்து விட்டு சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஆகிறது.லாப்டாப் ஆன் செய்து விட்டு சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஆக மறுக்கிறது.இது பற்றி நம்முடைய காரியதரிசி கூகுள் அம்மையாரிடம் கேட்டால் அது ஒரு தந்திரம் சொன்னது.
 லாப்டாப்கின் கடைசி சொட்டு சார்ஜ் தீருகிற வரைக்கும் கன்னாபின்னாவென்று உபயோகப்படுத்தி விட்டு சார்ஜ் தீரும்போது டிவைஸ் மேனேஜர் போய் மைக்ரோசாப்ட் ஏபிஐ பவர்ஐ டிஸ்ஏபிள் செய்து விட்டு லாப்டாப் ஷட்டவூன் ஆனதும் மறுபடி ஆன் செய்வதற்கான பொத்தானை கமல்ஹாசன் படங்களில் எல்லாம் முத்தமிடுவதைப் போல சிற்சில வினாடிகள் அழுத்திக் கொண்டே இருந்து விட்டு அப்புறம் ஆன்செய்தால் சரியாகப் போய் விடும் என்று.
 இதையூம் செய்து பார்த்து விட்டேன்.
 கம்ப்யூட்டர் விற்கிற கடைகளில் கொண்டு போய் காட்டினால் அங்கே நன்றாக சார்ஜ் ஆகிறது.மற்றவர்கள் வீடுகளிலும் சார்ஜ் ஆகிறது.இங்கே மட்டும் ஏதாவது இட்சினி கிட்சினி இருக்கிறதா என்று வேப்பிலை அடித்துப் பார்த்து விடலாமா என்று தோன்றுகிறது.
 இல்லையென்றால் லாப்டாப்பில் சுயேச்சை எம்எல்ஏ, தலைவா போன்ற படங்களை மீடியா ப்ளேயரில் போட்டு விட்டால் இம்சை தாங்காமல் லாப்டாப் சரியாகி விடும் என்றும் தோன்றுகிறது.
 ரொம்பச் சின்னதாக வெள்ளை நிறத்தில் நித்யாமேனன் மாதிரி இருக்கிறதே என்றுதான் இந்த ஏஸஸ் லாப்டாப் வாங்கினேன்.பக்கத்தில் ஹன்சிகா மாதிரி ஒரு 17 இன்ச் லாப்டாப்பும் வைத்திருக்கிறேன்.ஆனால் அவ்வப்போது இந்த காம்பாக் லாப்டாப் மூச்சிறைக்கிற மாதிரி ஹாங் ஆகி விடுகிறது.
 இந்த லாப்டாப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
 நினைத்த நேரத்தில் எதையூம் எழுத முடியவில்லை.
 இந்த பிரச்சனையை தீரக்கும் விதத்தில் சரியான மற்றும் எளிதாக தீர்வை  நீங்கள் சொல்லி விட்டால் உங்களது அடுத்த விமானப் பயணத்தில் உங்களது பக்கத்து இருக்கைகளில் லியா ஸெய்டாக்ஸூம் மோனிக்கா ஃபெலுரச்சியூம் அமர்வார்களாக.
Previous
Next Post »

3 comments

Click here for comments
SAT
admin
November 23, 2015 at 6:15 PM ×

Sir
.remove the battery and place it again. Or replace the battery

Reply
avatar
November 24, 2015 at 9:03 PM ×

the battery can not be removed from this model.It is inbuilt with lap.

Reply
avatar
November 24, 2015 at 9:04 PM ×

the battery can not be removed from this model.It is inbuilt with lap.

Reply
avatar