கல்யாணம்..கச்சேரி..கொண்டாட்டம் எல்லாமே...



  நேற்று முன்தினம் ஒரு திருமணம்.பொதுவாக மதுரையில் நடக்கிற திருமணம் விருந்து விசேஷங்களுக்கு செல்வதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாக வைத்திருக்கிறேன்.காரணம் மதுரை மக்கள் பாசக்கார மக்கள்தான்.கல்யாணத்திற்கு அழைக்கும்போது வருந்தி வருந்தி நெடுஞ்சாண்கிடையாக கால்களில் விழுகிற மாதிரி அத்தனை அன்போடு அழைப்பார்கள்.சரி அழைக்கிறார்களே என்று கல்யாணத்திற்கு போனால் வேற்று கிரகத்தில் வந்தவனைப் பார்ப்பது போல பார்ப்பார்கள்.அவர்கள் பாட்டுக்கு மாற்றி மாற்றி டபக் டபக்கென்று ஃபோட்டோ பிடித்துக் கொண்டிருப்பார்கள்.எதற்கடா வந்தோம் என்றாகி விடும்.அதனால் மதுரையில் விசேஷம் என்றால் ஒதுங்கி விடுவேன்.
 இந்த முறையூம் ஒரு திருமணம் மதுரையில்.ஒரு உள்ளுரர் வாத்தியார் வீட்டு திருமணம்.கல்லுரரி வாத்தியார்தான்.அந்த கல்லுரரியின் பெயரில் கமல்ஹாசன் கூட ஒரு படம் நடித்திருக்கிறார்.மணப்பெண்ணின் அப்பாதான் அந்த வா! போகலாங்க.போகலாங்க என்று வீட்டில் ஒரே தொணத்தல்.சரி என்று கிளம்பினோம்.
 இவர்களும் வருந்தி வருந்திதான் அழைத்திருந்தார்கள்.
 பார் நீ ஏமாறப் போற.ஒரு பயலும் உன்னை கவனிக்க மாட்டான்.சரக் சரக்குனு ஃபோட்டோ புடிச்சிட்டு நிப்பானுங்க என்று சொல்லியிருந்தேன்.வீட்டில் அவர்கள் வீட்டு உறவூ சனம் என்பதால் முதல்நாள் வரவேற்பிற்கும் செல்ல வேண்டுமென்று பிடிவாதம்.
 சரி சனி யாரை விட்டது.
 முதலில் ரிசப்ஷனுக்கு சென்றிருந்தோம்.நான் சொன்ன மாதிரிதான் மண்டபத்தின் வாசலில் வந்தவர்களை வரவேற்க யாரையூம் காணோம்.ஒரு பொம்மை மட்டும் நின்று பன்னீர் என்ற பெயரில் தண்ணீரை தௌpத்துக் கொண்டிருந்தது.
 உள்ளே போனால் என்னாச்சர்யம்.பெண்வீட்டுக்காரர்கள் ஒரு டீம் போலவூம் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்னொரு டீம் போலவூம் தனித்தனியாக அமர்ந்திருந்தார்கள்.பெண்வீட்டுக்கார்கள் அனாமத்தாக கிடந்தார்கள்.பெண்ணின் தந்தையோ தாயோ அவர்தம் வீட்டு அன்பர்களோ வந்தவர்கள் யாரையூம் வா என்று கேட்கவில்லை.சாப்பிடப் போகிறீர்களா என்றும் கேட்கவில்லை.பெண் வீட்டுக்காரர்கள் மதுரைக்காரர்கள்.
 மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் திருச்சிக்காரர்கள்.எப்போதுமே திருச்சிக்காரர்கள் புரோட்டோக்காலில்(protocall) செம ஸ்மார்ட்டான ஆட்கள்.மதுரைக்கார்கள் எப்போதுமே புரோட்டாவூம் ஆட்டுக்காலிலும் வெளுத்துக் கட்டுவார்கள் என்பது எப்போதும் தெரிந்ததுதான்.
 மாப்பிள்ளையின் அப்பா திருச்சியில் பெரிய லாயர்.அம்மா டாக்டர்.மாப்பிள்ளை மேடையில் பழமாக சிரித்தபடி தேமே என்றிருந்தார்.மணப்பையனின் அப்பாவூம் அவரது ஆட்களும் கீழே இறங்கி வந்து வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரையூம் கைகளைக் குவித்து மிக்க மரியாதையாக வரவேற்றார்.அப்போதும் பெண்ணின் அப்பாவை பார்க்க வேண்டுமே பரிட்சை ஹாலில் பிட்டடிக்கிற பையன் போல பம்மிக் கொண்டிருந்தார்.பெண்ணின் தாத்தா பாட்டிகளைக் கூட அவர் வரவேற்கவில்லை.அவர்களை சாப்பிட்டீர்களா என்றும் கேட்கவில்லை.என் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் தாத்தா இப்படியே விட்டால் இன்னும் கொஞ்ச நேரத்தில் டிக்கெட் வாங்கி விடும் உத்தேசத்தில் கண்கள் செருகிக் கொண்டிருந்தார்.இன்னொரு ஒண்ணு விட்ட தாத்தா ஆல்ரெடி டிக்கெட் ஆர்ஏசியில் கன்ஃபர்ம் ஆகி விடும் போல தலை தொங்கி விடும் போலிருந்தார்.
 பார்த்தியா.திருச்சிக்காரங்க திருச்சிக்காரங்கதான் என்றேன்.
 சும்மா தொணத்தொணக்காம படத்தை பாருங்க என்றாள் ரெடிமேட் டயலாக்குடன்.
 அப்புறம் வந்தர்கள் அத்தனை பேரும் சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டி விட அப்புறமாக இதற்கு மேலும் காத்திருந்தால் நாலைந்து தாத்தாக்களையாவது 108 வரவழைத்து அனுப்ப வேண்டியிருக்கும் என்று மேலே போய் சாப்பிடச் சென்றௌம்.
 மறுநாள் கல்யாணத்திற்கு அவசியம் வர வேண்டுமா?
 பார்த்தியா உன் மதுரைக்காரங்களோட கலாச்சாரத்தை என்றேன்.மறுநாளும் வந்தே ஆகனும்.உறவூ சனத்தையெல்லாம் பார்க்கனும்.முக்கியமான ஆட்கள் சில பேர் நாளைக்கு வர்றாங்க என்றாள்.
காளவாசல் மாஸ்டர் மகாலில் கல்யாணம்.பக்கத்தில் குரு தியேட்டர் அருகே நம்ம மூகாம்பிகை இன்ஜினியரிங் கல்லுரரி மாணவக் கதாநாயகன் பாண்டியராஜன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்.அப்படியே அதனையூம் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருவோமே என்று மறுநாள் கல்யாணத்திற்குச் செல்ல ஒப்புக் கொண்டேன்.
 மறுநாள்-
 அதே மாஸ்டர் மஹால்.அதே மாதிரியான வரவேற்பு.
  உள்ளுர் வாத்தியிடம் ஏதாவது மாற்றம் இன்றைக்காவது இருக்குமா?வந்தவர்களை வரவேற்றிருப்பாரா என்று பார்த்தால் அவரிடம் காஸ்ட்யூமில் மட்டுமே மாறுதல்.வேட்டி சட்டையில் அதே போல மணமேடையில் பம்மிக் கொண்டிருந்தார்.திருச்சிக்கார மணப்பையனின் அப்பாதான் வழக்கம் போல இன்முகத்துடன் வந்தவர்களை பெண்வீட்டுக்காரர்களையூம் சேர்த்து வரவேற்றுக் கொண்டிருந்தார்.
 பார்த்தியா உங்க உள்ளுர் வாத்தி பண்றதை.வெளியூர் ஆட்டக்காரனை உள்ளுர் ஆட்டக்காரன் மதிக்கறதுதான காலங்காலமாக இருக்கற கலாச்சாரம்.
 நீங்களும் ஒரு காலத்தில வாத்திதான என்றாள்.
 பெண்வீட்டுக்காரர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள்.பையன் வீட்டுக்காரர்கள் மிக மரியாதையானவர்களாகவூம் பண்பாடு தெரிந்தவர்களாகவூம் இருந்தார்கள்.
 இப்போதும் உள்ளுர் வாத்தி தன் உறவூ சனங்களை வா என்று கேட்கவில்லை.காபி டிபன் சாப்பிடுகிறீர்களா என்று கேட்கவில்லை.மத்தியான சாப்பாடு சாப்பிடுகிறீர்களா என்றும் கேட்கவில்லை.அவ்வளவூ ஏன் வந்தவர்களுக்கு தாம்பூலப் பை கூட கொடுக்கவில்லை.
 இதுக்கு மேலும் அங்கே இருக்க வேண்டுமா என்று பார்வையைத் திருப்பினேன்.
 நாம என்ன கல்யாணத்துக்கா வந்தோம்.ஏதோ நாலு உறவூசனத்தை பார்க்கலாம்னுதான வந்திருக்கோம்.
 அதுக்காக இப்படி அலும்பு பண்றானே அந்த வாத்தி.பேசாம பக்கத்துலதான் என் தம்பி வீடு இருக்கு.அங்கேயாவது போயிருக்கலாம் என்றதற்கு மறுபடியூம் முறைத்தாள்.
 ஒருவாறாக கிளம்பினோம்.
 கிளம்பும்போது மண்டபத்தில் ஒருவர் வந்தார்.மதுரைக்கார ஆசாமி.கையில் மஞ்சப்பையூம் பத்திரிகைகளும் வைத்திருந்தார்.
"அடுத்த மாசம் கல்யாணம் வைச்சிருக்கோம்.மதுரையிலதான் கல்யாணம்.நீங்க அவசியம் குடும்பத்தோட வரனும்.உங்க பேர் சொல்லுங்க.பத்திரிகையில எழுதனும்" என்றார்.
"எழுதிக்கங்க.அய்யம்பேட்டை அறிவூடைநம்பி கலியபெருமாள் சந்திரன்.இல்லைன்னா இந்திரன்னு போட்டுக்கங்க.அப்படியே மானே தேனே பொன்மானே எல்லாம் கூட போட்டுக்கிட்டாலும் ஆட்சேபனை இல்லை" என்று திரும்பிப்பாராமல் அங்கிருந்து வெளியே வந்து விட்டேன்.
 மதுரையில் கல்யாணம் என்று யாராவது வந்தீர்களானால்  நானும் ரவூடிதான் என்று காட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.ஸாரி.
Previous
Next Post »