"மாயம் செய்தாளோ..."

  

'அவ்வப்போது பேசும்
அவள்
கண்களின் மொழியை
கூகுளாலும் டிரான்ஸ்லிட்டரேட்
செய்ய முடியாது
கண்களை முடிக்கொண்டுதான்
அமர்ந்திருப்பாள்
ஆனால்
அவள் பார்வை
இங்கே இதயத்தின்
கடைசி மைக்ரான்வரை
துளைக்கிறதே
அவள்
வளையல் அணிந்திருக்கலாமோ
என்றே நினைக்கத்தோன்றும்
வெறும் கைகளை
பார்க்கும்போதெல்லாம்
வேண்டாம்
வளையல் இல்லாத
அந்த கைகளே
வனிலாஐஸ்க்ரீமால்
செய்த பாலம் போலிருக்கிறதே
அவள்
கீழுதட்டை எப்போதாவது
கடிக்கும்போது
வலிக்குமோ வலிக்குமோ
பதறிப்போவது போல்
அவளும்
பதறிப்போவாளாம்
என் இதயம் வலிக்குமோ
என்று
அவள் செல்போன்ரிங்டோன்
காற்றில் மிதந்து வந்து
சொன்ன சேதி இது
பிள்ளைப்பிராயத்தில்
மந்திரக்கதைகளில் படித்ததுண்டு
பத்துதலை அரக்கனின் உயிர்
ஏழுகடல் ஏழுமலைதாண்டி
இருக்குமென்று
உண்மைதான்
என் உயிரும் கூட
அவள் கண்களில் போய்
மறைந்து கொண்டிருக்கிறது
அதுவூம்
அவளே அறியாமல்
என்ன முட்டாள் நான்
கண்களை மூடிக்கொண்டு
அவள் யோசிக்கும்போதேல்லாம்
புரிந்து கொள்ளவே இல்லை
அவள்கண்களுக்குள்ளே
இருக்கும்
என்னுயிரைத்தான்
இமைகளால் இறுக்கி
அணைத்துக் கொண்டிருக்கிறாளென்று
மெல்ல இதழ் பிளந்து
ஒரு கண் திறந்து
வழக்கம்போல்
பார்க்கத் துவங்கி விட்டாள்
என்ன மாயம்
செய்யப்போகிறாளோ தெரியவில்லை
அடுத்த கவிதையில்
அவசியம் சொல்கிறேன்'
Previous
Next Post »