ஷார்ட் ஃபிலிமிற்கான கதை திரைக்கதை, வசனம்: தி இன்சிடன்ட்... -விஜயநிலா



                                                     
                                                    காட்சி-1
 (மாலை வேளை.மஞ்சள் வெயில் காணாமல் போய் மேகம் கருக்கிறது.ப்ரகாஷ்.தலை கலைந்த இளைஞன்.பைக்கோடு பிறந்தவன்.ஒரு வளைவில் பைக் சீறிக்கொண்டு வரும்போது செல் பேசியபடியே வந்த சொப்னா...சுதாரித்து திரும்பும் முன்...)
சொப்:ஏய்ய்ய்ய்ய்...பார்த்து மேன்.காட்டான் மாதிரி வர்றியே..உனக்கென்ன ஜஸ்டின் ஃபைபர்னு நினைப்பா..

ப்ர:இல்லை. Show Me the Way 

Baby, I Love Your Way பீட்டர் ஃப்ராம்டன்.நீ பார்த்து விழுந்திரப்போற(என்றபடியே ஸ்கிட் ஆகி விழுகிறான்.கால்களில் அடி.பதறிப்போன சொப்னா ஸ்கூட்டியை கைவிட்டு விட்டு அவனிடம் வருகிறாள்)

ப்ர:ஆர் ஃப்ரம் வீனஸ்..நீ ஏதாவது தேவதையா.இல்லைன்னா உலக அழகிப் போட்டியில பாதிலயே கோவிச்சிட்டு வந்திட்டியா..ஷ்..ஆ..வலி உயிர் போவூது..
சொப்:போவட்டும்.உன்னை கொண்டு போய் பெசன்ட் நகர்ல போட்டுர்றேன்.ஐ மீன் மின்மயானத்துல
ப்ர:அடிப்பாவி.கொஞ்சம் கை கொடு..அட..அப்படியெல்லாம் சாயாதே.வளைவூகள்னாலே எனக்கு ஆகாது.அது ரோடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும்..
சொப்:யூ..யூ..டபுள் மீனிங் பேசறியா..நான் போறேம்பா.வேணும்னா 108க்கு ஃபோன் பண்ணி நீயே போய் ஏறிக்க..
ப்ர:சாhpம்மா.கொஞ்சம் ஹெல்ப் பண்ணு..நடக்க முடியலை..
சொப்:எப்படியாவது கிட.நான் போறேன்.
ப்ர:சரி அப்ப ஒரு ஐ லவ்யூவாவது சொல்லிட்டுப் போ..
சொப்:நான் எதுக்கு சொல்லனும்.
ப்ர:அப்ப நான் சொல்றேன்.ஐ லவ்யூ.
சொப்:வ்வாட்..?
ப்ர:சொன்னேனே.கேட்கலையா..ஐ லவ்வூ.ஐலவ்யூடி..(முறைக்கிறாள்)
(கட் செய்து நர்சிங் ஹோமில் காட்டினால் அவனுக்கு கட்டு போட்டு விடும் லேடி டாக்டரை பார்த்தபடி புன்னகைக்கிற ப்ரகாஷ்-)
ப்ர:டாக்டர்.விரும்பினது கிடைக்கலைன்னா கிடைச்சதை விரும்பறது நல்ல பாலிசிதானே..
டாக்:ஆமாம்.அதுக்கென்ன இப்ப..
ப்ர:இல்லே..இவ என்னை லவ் பண்ணமாட்டேங்கறா..நீங்க கூட நல்லா க்யூட்டா இருக்கிங்க..அதனால..
சொப்:பாவி.வெளியில வாடா.ஆள் வைச்சி அடிக்கறேன்(என்று அவனைக் கிள்ளுகிறாள் சொப்னா)
                                                             காட்சி -2

(ஒரு நெரிசலான பஸ்.அதில் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.சொப்னா அவனைக் கிள்ளுகிறாள்)
சொப்:என்னதான் லாட்டரல் திங்க்கிங்னாலும் இப்படியா ஒரு கூட்டமான பஸ்ல உட்கார்ந்து லவ் பண்றது.எவன் சொன்னான் இப்படி ஒரு ஐடியாவை உன்கிட்ட..
ப்ர:மத்த இடங்கள்ல எல்லாம் வழக்கமான காதலர்கள் இருப்பாங்க.இந்த பஸ்ல பாரு.விலைவாசி உயர்வூல அவனவன் சொந்தக்கவலையில வா;றான்.நம்மை யாரும் கவனிக்கவே மாட்டாங்க.தவிரவூம் இத்தனை கூட்டத்துல நீ என்மேல பிஸ்ஸாவூக்கு நடுவில வைச்ச சமாச்சாரம் மாதிரி ஒட்டிட்டு வர்றியே இது எத்தனை புதுசா அம்சமா இருக்கு..
சொப்:பாவி..நீ ரொம்ப கெட்டுப் போயிட்டே.கண்டக்டர்.பஸ்ஸை நிறுத்துங்க.ஒருத்தன் காதல்ங்கற பேர்ல ஈவ் டீசிங் பண்றான்..
(அனைவரும் அவனை வடிவேலு கணக்காக போட்டு மொத்த அவள் ரசித்து சிரிக்கிறாள்)
                                                            காட்சி-2

(அதே நர்சிங் ஹோம்.அதே லேடி டாக்டர்.அவன் கைகளில் கட்டு போட்டவாறே)
டாக்:இப்ப எங்கப்பா விழுந்தே.ரோட்லயா..
ப்ர:அவ மனசிலதாங்க விழுந்தேன்.ஆனா அடிபட்டுடுச்சி.
டாக்:புரியலையே.மனசில விழுந்தா எப்படி மேன் அடிபடும்.
ப்ர:அவதான் கல்மனசுக்காரியாச்சே..
சொப்:டாக்டர் அவன் இப்படித்தான் அறுப்பான்.பேசாம அவனை கல்யாணம் பண்ணிக்கப்போறேன்.அப்பதான் அவனோட பேச்சலர் திமிர் போவூம்..(கல்யாணம் என்றதும் சட்டென்று ப்ரகாஷின் முகபாவம் மாறுகிறது.தளர்வாக வெளியே வருகிறான்)
(புரியாமல் அவன் பின்னால் வருகிறாள் சொப்னா.காரிடாரில் நடக்கிறார்கள்)
சொப்:ஏன்..என்னாச்சு ப்ரகாஷ்
ப்ர:எ..என்ன சொன்ன என்ன சொன்ன..(தொலைவில் வெற்றுப் பார்வை பார்த்தவாறு பேசுகிறான்)
சொப்:கல்யாணம் பண்ணிக்கலாம்னு..
ப்ர:க..ல்..யா..ண..ம் கல்யாணம்(என்று முணுமுணுக்கிறான்)
      (அப்போது ப்ளாஷ்பேக் காட்சிகள் விரிகின்றன)
                                                     

                                                
                                                         காட்சி-3

(லைப்ரரியில் ரெஃபரென்ஸ் செக்ஷனில் ஜான் லீ கேர் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கிறான்.அப்போது ஒரு பெண்அவனைக் கடந்து போகிறாள்.கையில் டி.எச்.லாரன்ஸின் ' எ மாடர்ன் லவ்வர்' புத்தகத்தை அணைத்தபடி கடந்து போகிறாள்.போகும்போது அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு செல்கிறாள்.வெளியில் வந்து தனது காரை எடுக்கும்போது அங்கு வரும் ப்ரகாஷைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்)
அவள்:ஹலோ..நீங்க அவினாஷ்தானே..
ப்ர:இல்லை.ஏன்
அவள்:நீங்க அவினாஷ் இல்லைன்னு தெரியூம்.உங்க பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா..
ப்ர:ஏன்..ஏதாவது டிவி கிவியில இருந்து வர்றிங்களா..இது ஏதாவது கேன்டிட் ஷோன்னா சொல்லிருங்க.நான் ஒண்ணும் எஸ்.ஜே.சூர்யா இல்லை.உங்கபின்னாடி அலையறதுக்கு
அவள்:ஹலோ..ஹலோ...லைப்ரரியில வந்து அப்பிராணி மாதிரி புக் படிச்சிட்டு இருந்திங்களே.இந்த காலத்துல இப்படி ஒரு பையான்னு கேட்கத் தோணிச்சி.அதான்..
ப்ர:பின்ன என்ன பண்ணச் சொல்றிங்க லைப்ரரியில
அவள்:இத்தனை அழகா ஒருத்தி உங்களை கடந்து போறா.திரும்பிக் கூட பார்க்கலையே.லைப்ரரியில எல்லாரும் என்னையே பார்த்தாங்க தெரியூமா..
ப்ர:ஓ..
அவள்:என்ன ஓ.ஆன்னுட்டு..நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்..
ப்ர:பேசுங்க..
அவள்:பார்த்திட்டே இருங்க என்னி ஒரு மாசத்துல நீங்க என்னை லவ் பண்ணப் போறிங்க..
ப்ர:யார் சொன்னா
அவள்:ம்...மன்மதன்.கரும்பு எல்லாம் வைச்சிருப்பாரே.அந்தாள்தான் லைப்ரரியில வந்து என்கிட்ட சொன்னார்.போனாப்போவூது சின்னப் பையனாச்சேன்னு வந்து பேசினேன்.வர்றட்டா..(காரை கிளப்பிக் கொண்டு போகிறாள்)
                                                                 காட்சி -3

(இன்னொரு தினம்.நசநசவென மழை.ஷாப்பிங் மாலில் இருந்து ப்ரகாஷ் திரும்பினால் கார் பார்க்கிங் அருகே அவள்-)
அவள்:ஹாய் சின்னப்பையா.நான்தான் நிஷா.எங்கே இந்தப் பக்கம்.
ப்ர:ஓ..நீயா..எதுக்கு என்னை துரத்தற..
நிஷா:ம்..லவ் பண்ணத்தான்.இல்லைன்னா கலர் கலரா புடவை எல்லாம் கட்டி ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் சாவகாசமா கூட லவ் பண்ண நான் ரெடி
ப்ர:அதுக்கு வேற ஆளைப்பாரு.
நிஷா:மேடி கூட என்னை துரத்தலாமான்னு பார்க்கறான்.பட் என் கண்கள் உன்னைத்தானே விரும்புது பையா..
ப்ர:அதுக்கு..
(அப்போது அங்குள்ள பெண்கள் கத்துகிறார்கள்):சார் அதான் இவ்வளவூ இறங்கி வந்து கெஞ்சாளே.லவ் பண்ணிருங்க சார்..
(அங்குள்ள இளைஞர்கள் சிலரும் மாமா தாத்தாக்கள் சிலரும்):நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க.நாங்க லவ் பண்ணறம்.எங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி..
ப்ர:சரி வந்து தொலை..(அப்படி துவங்கிய காதல் அதன்பின் கல்யாண பத்திரிகை தரும் தருணத்திற்கு வருகிறது)

                                                          காட்சி -3பி

 (ப்ரகாஷ் நிஷா இருவரும் கல்யாண பத்திரிகை கொடுக்க பைக்கில் செல்லும்போது ஆர்யா படத்தில் வருவது போல ஒரு மாஞ்சா தடவிய பட்டம் பறந்து வந்து குறுக்கே செல்ல அதில் அவள் கழுத்து சிக்கிக்கொள்ளக் கூடாதே என்று பைக்கை நிறுத்தி விட்டு இறங்குகிறான்)
ப்ர:காட்..தப்பிச்சோம்.இல்லைன்னா நானும் தாடி வளர்த்துட்டு உன் இதயத்தை எவனுக்கு வைச்சாங்களோ அவன் பின்னாடி கருப்பு ஸ்விப்ட்ல சுத்திட்டு இருக்கனும்(என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் நகர்ந்து நின்று சூரிதார் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு துடைக்க ஒரு தண்ணீர் லாரி தறிகெட்ட வேகத்தில் வருகிறது.சிகப்பாய் கீழே ரத்தம்.நிஷா செத்துப் போய் கிடக்கிறாள்)


                                                          காட்சி -4
சொப்னா:மைகாட்.இதான் உங்க பயமா.அப்படி எல்லாம் ஏதும் நடக்காது.எனக்கு ஆயூசு கெட்டி.தைரியமா நம்ம லவ்வை கன்டினியூ+வ் பண்ணலாம்.வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா ஒரு லவ் டூயட் பாடிட்டு வந்திரலாமா..ரொம்ப இம்சை பண்ணக் கூடாது.மழையில எல்லாம் நனைய மாட்டேன்..(என்று அவனை இழுத்து மடியில் சரித்துக் கொள்கிறாள்)
ப்ர:இல்லை சொப்னா.நிஷா மட்டுமில்ல..சொன்னா நீ நம்பமாட்டே.எனக்கு ஏன் இப்படி ஆகுதுன்னே தெரியலை.நந்தினி கூட என்னை பிடிவாதமாதான் லவ் பண்ணினாள்.
சொப்:ஹை.நம்மாளு ஒரு காதல் மன்னன் போல.அதுக்கு முன்ன ஒரு லவ் கதை இருக்கா.சொல்லுங்க சொல்லுங்க.எனக்கு மில்ஸ்அன்ட் பூன் படிச்சி போரடிச்சிப் போச்சு.
ப்ர:ந.ந்.தி.னி..(என்று முணுமுணுக்கிறான்.அந்த காட்சிகள் விரிகின்றன)

                                                         காட்சி -4

(ப்ரகாஷ் லிப்டினுள் செல்லும்போது உள்ளே இருந்த அந்தப் பெண் லேசாய் கண்சிமிட்டுகிறாள்.திகைக்கிறான் ப்ரகாஷ்)
ப்ர:(தனக்குள்) ஆளப்பாரு.கிளம்பறாளுக பாரு நமக்குன்னு.இன்னைக்கு ஆபீஸ்ல தலைக்கு மேல வேலைங்க இருக்கப் போவூது..இதுங்க வேற நடுவூல வந்து டிஸ்ட்ராக்ட் பண்ணிக்கிட்டு..
அவள்:மிஸ்டர்..நீங்க ஏன் என்னை சைட் அடிச்சிட்டே இருக்கிங்க..
ப்ர:மைன்ட் யூர் வர்ட்ஸ்.நான் சைட் அடிக்கறேனா.அதுவூம் உன்னையா..குட் ஜோக்.
அவள்:ஐம் நந்தினி.ஸ்டெல்லாமாரிஸ்.போன இயர் பாட்ச்.லவ் மாரேஜ்தான் பண்ணிக்கனுமட்னு இருந்தேன்.
ப்ர:போய் பண்ணிக்க வேண்டியதுதானே..
அவள்:அதான் நீங்க வந்து கெடுத்திட்டிங்களே..
ப்ர:வ்வாட்..நான் கெடுத்திட்டேனா.
நந்:என் காதல் கல்யாண ஆசையில மண்ணைப் போட்டுட்டிங்களே..
ப்ர:கதை வசனம் புரியலை.நீ யார்னே தெரியாது எனக்கு.என்னை டீரயில் பண்ண முடியாது.
நந்:நாளைக்கு என்னை தேடி நீங்களே வருவிங்க.அப்ப தெரியூம் உங்களுக்கு
ப்ர:உளராத.நீ யார்னே தெரியாது எனக்கு
நந்:அதனாலதான் சொல்றேன்
(லிப்ட் திறந்து கொள்ள கடுப்புடன் வெளியேறுகிறான்.)

                                                         காட்சி - 4பி

 (வீட்டிற்கு வந்தால் அம்மா காபி ஆற்றிக்கொண்டே சொல்கிறாள்)
அம்:தபார்றா.இதான் அந்த பொண்ணோட ஃபோட்டோ.நாளைக்கு நாம பொண்ணு பார்க்கப் போறம்.அவ பேரு நந்தினியாம்.
ப்ர:என்னம்மா சொன்னே.ந..நந்தினியா..அவளா..(புகைப்படத்தை வாங்கிப் பார்த்தால் அதே நந்தினிதான்)..ஓ..அதான் அந்த குட்டி அப்படி சொல்லியிருக்காளா...
அம்:இன்னும் பொண்ணே பார்க்கலை.குட்டி கிட்டின்னெல்லாம் சொல்லாதடா.அப்புறம் கல்யாணமானதும் நீ தனியா இருக்கும்போது அவளை குட்டின்னு கூப்பிடு.இல்ல வெல்லக்கட்டின்னு கூப்பிடு.யார் தடுக்கப்போறா..(என்று உள்ளே போகிறாள்)
                                                          காட்சி-4சி
 (அதன்பின் கல்யாண பத்திரிகை கொடுக்க கால்டாக்சியில் நந்தினியூடன் போகும்போது கோபித்துக் கொள்கிறாள்)
ப்ர:என்ன கோபம் உனக்கு.
நந்:பின்ன.முதமுத அஃபிஷியலா உங்க கையைப் பிடிச்சிட்டு வெளியில இன்விடேஷன் கொடுக்கப் போறேன்.ஒரு பைக்ல கட்டிப்பிடிச்சிட்டுப் போகலாம்னு பார்த்தா இப்படி கால்டாக்சியில போகலாம்கறிங்களே.எனக்கு சுத்தமா பிடிக்கலை..
ப்ர:பைக்கை எடுக்க பயமா இருக்கு.காலைல பைக்கை உதைச்சதுமே ஸ்டார்ட் ஆகலை.சென்டிமென்ட்டா என்னமோ உறுத்துது.
(சிக்னலில் கார் நிற்கிறது.சட்டென்று இறங்கிய நந்தினி அங்கே நிற்கும் குடுமி வைத்த புரோகிதரிடம் பைக்கை கேட்கிறாள்)
நந்:மாமா..எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆயிடுத்து.இன்வி கொடுக்க போகனும்.உங்க பைக்கை சித்த தரேளா.பத்திரமா கொண்டாந்து கொடுத்திர்றேன்.இல்லைன்னா புது பைக்கே வாங்கித்தர்றேன்.ப்ளீஸ்..(அய்யர் சிhpத்துக் கொண்டே கொடுக்க பைக்கை வாங்கி ப்ரகாஷை அழைக்க இருவரும் பைக்கில் போகும்போது)
அய்யர்:ரெண்டு பேரும் நன்னா பசை போட்டு ஒட்டின மாதிரி ஒட்டிண்டு போங்கோ.நேக்குதான் அந்த கொடுப்பினை இல்லை.ஆத்துக்காரி கிட்டவே அண்ட விடமாட்டா.எம்ஜியார் படம் போட்ட பனியன் போட்டுண்டு கிட்ட போறப்ப மட்டும் விதிவிலக்கா அனுமதிப்பா..(பைக் சீறுகிறது.ஒரு திருப்பத்தில் ஒரு கன்ட்டெயினர் லாரி வ..ரு..கி..ற..து..)
(சடுதியில்அந்த விபத்து.நந்தினி ரங்கோலி கோலமாக சிகப்பாக தரையில் பரவூகிறாள்.ஆள் ஸ்பாட் அவூட்)


                 
                                                                   காட்சி - 5

சொப்:ஓ..இது முன்ன நடந்த கதையா.இதுக்கா பயந்திங்க..வாங்க இப்பவே ஒரு ஜோசியர்ட்ட போய் என் ஜாதகத்தைக் கேட்டுரலாம்.
ப்ர:வேணாம்.கல்யாணத்தை ட்ராப் பண்ணிரலாம் சொப்னா.உன்னை இழந்திருவேனோன்னு பயமா இருக்கு..
சொப்:நானே பயப்படலை.முதல்ல உங்களை உதடுகளாலயே அடிக்கனும்.எனக்கு அப்புறம் மூடு கீடு வந்துச்சுன்னா நான் நானா இருக்க மாட்டேன்.தமிழ்ப்படங்கள்ல வா;ற ஹீரோயின் கணக்கா சிக்கன உடையில ஆட ஆரம்பிச்சிருவேன் பார்த்துக்கங்க..
ப்ர:ஆல்ரைட்.உனக்கு பயமில்லைன்னா சரி.என் மனசில உறுத்தல் இருந்திட்டேதான் இருக்கு.
சொப்:அதுக்கு ஒரு மருந்து இருக்கு.
ப்ர:என்ன ஏதாவது மயக்க மருந்தா.மாத்திரையா..
சொப்:இல்லை.ரெண்டு கண்ணையூம் மூடிக்கனும்.ஒரு காலை பின்னாடி பாதி வரை துரக்கிக்கனும்.முகத்தை ரெண்டு கையாலயூம் இறுகப்பிடிச்சிக்கனும்.உதட்டை மெல்லமா திறந்து அப்புறம்..
ப்ர:ச்சே..உதை படுவே.ஓடு.எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்னு ஆம்பிளை நான் சொல்ல வேண்டியிருக்கு பாரு.(சிரிக்கிறாள்)
                  
                                                  காட்சி- 5


(திருமண அழைப்பிதழ் கொடுக்க இரண்டு பேரும்  பைக்கில் செல்கிறார்கள்.பசை போட்ட மாதிரி அவன் முதுகில் ஒட்டிக் கொண்டுள்ளாள் சொப்னா)
சொப்:பயமா இருக்கா ப்ரகாஷ்
ப்ர:இருக்காதா பின்னே.ரெண்டு தடவை பறிகொடுத்திருக்கேன்.அதுவூம் இன்வி கொடுக்கும்போதுதான் அந்த விபத்துக்கள் நடந்தன
சொப்:ப்ளீஸ் வண்டியை நிறுத்துங்க.அங்க இளநி கடை இருக்கு பாருங்க.ஒரு இளநி வாங்கி ஸ்ட்ரா போட்டு ரெண்டு பேரும் குடிக்கனும்(பைக்கை நிறுத்துகிறான்.இளநி கடையில் போய் விலை கேட்கிறான்.அப்போது சொப்னா சொல்கிறாள்)
சொப்:அந்த கடையில வேணாம்.இதோ ரோட்டுக்கு எதிர்ல இருக்கற கடையில இளநி நல்லா இருக்கு.(அவள் சாலையை கிராஸ் செய்கிறாள்)
ப்ர:(பதறுகிறான்)வேண்டாம்.இது நேஷனல் ஹைவேஸ்.லாரிங்க எல்லாம் வேகமா வரும்.நானே வர்றேன் இரு..(என்று அவனும் சாலையை கிராஸ் செய்ய ஒரு லாரி அவன் சொன்னது போலவே சிறீக்கொண்டு பாய்ந்து வருகிறது.இரத்தம் கீழே தெறிக்கிறது.)
                 
                                                        காட்சி-5பி



 (இப்போது கண்களை மூடிக்கொண்டிருந்த சொப்னா கண்களை திறந்ததும் திடுக்கிடுகிறாள்.அவளுக்கு எதுவூம் நேராமல் அவள் நன்றாக நின்று கொண்டிருக்க லாரியில் முழுதாய் அடிபட்டு செத்துப் போயிருக்கிறான் ப்ரகாஷ்.சாலையெங்கும் கல்யாண அழைப்பிதழ்கள் சிதறிக்கிடக்கின்றன)

                                                                         (முற்றும்)
Previous
Next Post »