தொடர்கதை: "அவள்-இவள்..." -விஜயநிலா



                                                                    (2)

  அறைக்கு வெளியே வந்ததும் புன்னகைத்தாள் தாமரை.
"ஏய்..நீ வினோதினிதானே"என்றாள் அஞ்சலி.
தாமரை அதற்கும்ரெடிமேடாக ஒரு புன்னகையை தந்தாள்.தன்னை அவள் கேலி செய்கிறாளோ என்று தோன்றியது அஞ்சலிக்கு.இவள் வினோதினிதான்.தன்னுடன் ஒன்றாக காலேஜில் படித்தவள்.இவளைப் பற்றி முதலில் வருணிடம் சொல்ல வேண்டும்.இவள் யாரையூம் சாப்பிட்டு விடுவாள்.அத்தனை சாகசக்காரி.
"நான் தாமரைதான் மேடம்.ஏன் என்னை மாதிரி யாரையாச்சும் வழியல பார்த்திங்களா.ரெண்டு வருஷமா நான் இங்கதான் வேலை செய்யறேன்"
"அப்ப எங்க கல்யாணத்துக்கு நீ வரலையே"
"அந்த சமயத்துல நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன்.ஜான்டிஸ்.பாஸ்தான் என்னை வரவேணாம்னுட்டார்"
"பாஸ்?"
"வருண் சார்தான்.ஒண்ணு தெரியூமா மேடம்.எங்க ஆபீஸ் டூர் போனாலும் நான்தான் அவர் கூட துணைக்குப் போவேன்.ஸ்டெல்லா மாத்யூ ஆபீசுக்குள்ளதான் செகரட்டரி.வெளியில நான்தான் செகரட்டரி.என்ன நான் ரொம்ப சுயபுராணம் பாடிட்டேனா"
"இல்லை"
 அன்று பகல் முழுக்க விருப்பமில்லாமல் அலுவலகத்தை சுற்றிக் காண்பித்தாள்.மதிய லன்ச் இடைவேளையின்போது ஒரு தரம் உள்ளே வந்து ரெடிமேட் சிரிப்பை வீசி விட்டுச் சென்றாள் தாமரை.
"என்னங்க இவ.வந்து.."
"எனக்கு தெரியூம்.ஏற்கனவே ரெண்டு மூணுதடவை இதே மாதிரி தாமரையை வேற யாரோ ஒரு பொண்ணுன்னு நம்ம ஸ்டாப் சொல்லியிருக்காங்க.ஷீஸ் எ பர்ஃபெக்ட் உமன்.ஜெம் ஆஃப் எ லேடி தெரியூமா"என்றான் வருண்.
"ஸாரிங்க.எங்கேயோ பார்த்ததா நினைவூ."
"இட்ஸ்ஆல்ரைட்.நீ வீட்டுக்குப் போயிரு.நானும் தாமரையூம் ஒரு மீட்டிங்கிற்கு கிளம்பறம்.உன்னை வீட்ல கொண்டு போய் விடச் சொல்றேன் டிரைவர்கிட்ட"
"எனக்கு டிரைவிங் தெரியூம்.நானே உங்க காரை எடுத்துட்டுப் போறேன்"என்றாள் அஞ்சலி.
 அவள் போனதும் அன்று மதியம் உள்ளே வந்தாள் தாமரை.வருண் அவளைப் பார்த்ததும் புன்னகைத்தான்.மெதுவாகச் சொன்னான்.
"அவளுக்கு உன்னைப் பார்த்தா பயமா இருக்கும் போல.பட் ஐ ஒன்லி லவ் ஹர்.அது அவளுக்கு இன்னும் புரியலை.உன்னோட அனாடமி எந்த பொண்ணையூம் பயப்படத்தான் செய்யூம்"என்றதும் புடவையை சரி செய்து கொண்டே அவனைப் பார்த்தாள்.
"வருண்"
"என்ன தாமரை"
"என்னைப் பார்த்தா என்ன தோணுது.மோசடி பண்றவ மாதிரி இருக்கா"
"சே.சே"
"அப்ப வீட்டுக்குப் போனதும் அஞ்சலி ஏதாவது சொன்னாங்கன்னா"
"இக்னோர் ஹர்.புவர் கர்ள்.திடீர்னு ஒரு பெரிய பணக்கார வாழ்க்கை வந்ததும் அதை யாரும் தட்டிப் பறிச்சிட்டுப் போயிருவாங்களோன்னு ஒரு பயம் வர்றது இயற்கைதான்.நாம மீட்டிங்கிற்கு கிளம்பலாம்"
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அந்த சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது.ஒரு மல்டிநேஷனல் கம்பெனியின் பிரதிநிதிகள் வந்திருந்தன.வழக்கம் போன்ற அலுப்பான பவர்பாயின்ட் பிரசன்டேஷன்.சின்ன சின்னதாய் பிசினஸ் சொற்பொழிவூகள்.அப்புறம் பரஸ்பர கை குலுக்கல்கள்.அதன்பின் டின்னர் மற்றும் காக்டெயில்.
"தாமரை.நான் கிளம்பறேன்.இன்னிக்கி நான் ஆல்கஹால் எடுத்துக்கப் போறதில்லை"என்று எழுந்தான்.அவன் மேல் பட்ட மாதிரி அமர்ந்து கொண்டிருந்த தாமரை கேட்டாள்.
"என்னாச்சு.வழக்கமா சின்னப் பசங்கதான கல்யாணமானா புதுப்பொண்டாட்டிக்கு பயந்து தண்ணியடிக்க மாட்டாங்க.நீங்களுமா"
"அஞ்சலிக்காக பயப்படலை.அவளைப் பத்தின ரிப்போர்ட்டை நான் வெரிஃபை பண்ணனும்.அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சின்னு டிடெக்டிவ் ஏஜென்சியில ரிப்போர்ட் தந்திருக்காங்க"
"நீங்க அதை நம்பறிங்களா வருண்.அவ நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியறா"
"நல்ல பொண்ணாவே இருந்தாலும் சந்தேகம்னு வந்துட்டா அதை துப்புறவா தீர்த்துடறது நல்லதில்லையா தாமரை"
"சரி.போயிட்டு வாங்க.அஞ்சலி கிட்ட இப்போதைக்கு ஏதும் கேட்க வேணாம்.டென்ஷன் அதிகமாகிடப் போகுது"
"ஆல்ரைட்.வர்றேன்.போரடிச்சா நீயூம் கிளம்பிடு தாமரை எல்லா கிழங்களும் போதை ஏறிடுச்சுன்னா கெட்ட வார்த்தைல ஜோக் சொல்லிட்டே ப்ளாட் ஆயிடும்க."என்று கிளம்பி வெளியே போனதும் அவன் உள்ளே வந்தான்.
 கருப்பாக இருந்தான்.காட்டன் சட்டை பான்ட் அணிந்ந்திருந்தான்.குறுந்தாடி வைத்திருந்தான்.கூலிங் கிளாசை மாட்டாமல் கைகளில் சுழற்றியபடி வைத்திருந்தான்.அவனைப் பார்த்ததும் புன்னகைத்த தாமரை அருகே அமரச்சொன்னாள்.
"வா ரவி.உன்னைத்தான் எதிர்பார்த்துகிட்டிருந்தேன்"
"என்ன சொல்றான் வருண்"
"நத்திங்.என்னை முழுமையா நம்பறார்.ஆனா திடீர்னு அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டதுலதான் ஒரு சிக்கல்"
"என்ன"
"அவர் மனைவி அஞ்சலிக்கு ஒரு சந்தேகம்.நான் அவ கூட காலேஜ்ல படிச்ச வினோதினி மாதிரி இருக்கேனாம்"
"அப்ப நீ வினோதினி இல்லையா"
"இல்லை.நான் தாமரை"
"அதை அவகிட்ட சொல்லிர வேண்டியதுதான"
"சொல்லிரலாம்.மெதுவா சொல்லிரலாம்.இப்போதைக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை"
"உன் பாஸ் என்ன சொல்றான்"
"யார் வருண்தான.அவன் ஒரு பூனைக்குட்டி மாதிரி நான் என்ன சொன்னாலும் கேட்பான்"
"வருணுக்கு உன் மேல ஏதும் சந்தேகம் வரலையே"
"வராது.நான் ஒரு சரியான ஆபீஸ் மனைவி.அதாவது செகரட்டரின்னு சொல்ல வந்தேன்"
"எதுக்கும் அஞ்சலிகிட்ட கொஞ்சம் விலகியே இரு.அவ கொஞ்சம் எமோஷனலான பொண்ணு மாதிரி தெரியூது"
"சரி நீ போ.அந்த கடைசி டேபிள்ல உட்கார்ந்திருக்கற மாமா உன்னையே உத்துப் பார்த்துட்டு இருக்கார்.வருண்கிட்ட போட்டுக் கொடுத்துடப் போறாரு"
அவன் எழுந்து அகன்றதும் வெளியே வந்த அங்கிருந்த ரெஸ்ட்ரூம் சென்று முகத்தைக் கழுவி லைட்டாக டச்அப் செய்து கொண்டு வெளியே வந்தாள்.ஹோட்டலிலிருந்து வெளியே வந்து டாக்சியை அழைத்தாள்.ஏறினாள்.டாக்சி விரைந்தது.அதை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த கிழவர் தன் காமரா செல்போனால் படம் எடுத்து விட்டு கோணலாக சிரித்துக் கொண்டார்.
 டிடெக்டிவ் ஏஜென்சியில் உட்கார்ந்திருந்த வருணிடம் அவர்கள் சொன்ன தகவல் திகைப்பூட்டியது.
"இந்த பொண்ணுதானே உங்க மனைவி"
"ஆமா"
'பேரு அஞ்சலி"
"ஆனா இந்த பொண்ணோட பேரும் அஞ்சலிதான்.இவ பதிவூத் திருமணம் செய்து கொண்டிருக்கறபோது எடுத்திருந்த ஃபோட்டோவோட நகல் இதுஇஇது அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கான சான்றிதழோட காப்பி.இந்த ஆதாரம் போதுமா"
"அவ யாரை கல்யாணம் செய்துகிட்டா.எப்ப.ஏன்"
"முதல் கேள்விக்கு வேணும்னா நாங்க பதில் சொல்லலாம்.அந்த பையன் பேரு ராக்கி.முழுப்பேர் ராதாகிருஷ்ணன்.கேபிள் டிவி நடத்திகிட்டிருந்தான் அரக்கோணம் பக்கத்துல.ரெண்டு பேரும் கோடைக்கானல்போய் பதிவூத் திருமணம் செய்துகிட்டிருக்காங்க.இது ரெண்டு வருஷத்துக்கு முன்னால நடந்தது"
"எதுக்காக அரக்கோணத்துல இருந்து கோடைக்கானல் போய் கல்யாணம் பண்ணிக்கனும்"
"பயமா இருக்கலாம்.யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுன்னு நினைச்சிருக்கலாம்.கல்யாணம் முடிச்ச கையோட சூடா ஹனிமூன் கொண்டாட விரும்பியிருக்கலாம்"
"அந்த ராக்கி இப்ப எங்க இருக்கான்"
"தெரியலை.கல்யாணம் முடிஞ்ச ஒரே வாரத்துல அவன் காணாமப் போயிட்டதா சொல்றாங்க"
"யாரு"
"அவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்கறவங்க.உங்க மனைவிக்கு ஏற்கனவே கல்யாணமானது உண்மைன்னு நிருபணமாகிடுச்சு.இதோட எங்க வேலை முடிஞ்சது.எங்க பீசை அனுப்பிடுங்க."என்றார்கள்.
வெளியே வந்த வருணுக்கு லேசான அதிர்ச்சி.அஞ்சலி பற்றி சந்தேகப்படும்படி குறுஞ்செய்திகளும் மின்னஞ்சலும் வந்திருந்ததால்தான் இப்படி விசாரிக்க நேர்ந்தது.ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கிறது என்கிறார்களே.அஞ்சலியின் கண்களில் பொய் தெரியவில்லையே.அவ்வப்போது பயந்த மாதிரி பேசுகிறாள்.ஆனால் தாமரையைப் பார்த்ததும் ஏன் மிரண்டு போனாள்.தாமரைக்கு அவளது முன் கதை சுருக்கம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்குமா?
தாமரையை கேட்கவேண்டும்.
அவளைக் கூட இவள் பெயர் வினோதினி என்றாளே.தாமரைக்கும் ஒரு முன் கதை இருக்குமா?சே.இந்த பெண்களே இப்படித்தானோ.பேசாமல் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் ஹாயாக இருந்திருக்கலாமா?
அவன் செல்போன் சன்னமான இசையில் அழைத்தது.
எடுத்தான்.அஞ்சலிதான் அழைத்திருக்கிறாள்.
"என்னங்க"
"என்ன அஞ்சலி"
"நான்சொன்னது முழுக்க தப்பு.அது என் ஃப்ரன்ட் வினோதினி இல்லை.இது தாமரைதான்.நான்தான் உங்க ஸ்டாஃபை தப்பா புரிஞ்சிகிட்டேன்"
"என்ன சொல்ற அஞ்சலி.தாமரை ஏதாவது மிரட்டினாளா"
"சேசே.ஸச் எ நைஸ் கர்ள்.அவ ஒண்ணும் சொல்லலை.எனக்குத்தான் ஏதோ ஒரு குழப்பம்.நீங்க எப்ப வீட்டுக்கு வருவிங்க"
"ஏன் கேட்கற"
"உங்க கூட உட்கார்ந்து பேசிட்டிருக்கனும் போலருக்கு"
"வெளியில எங்காவது போலாமா"
"வேணாம்"
"ஏன்டா"
"சும்மா.உங்க பக்கத்துலயே இருக்கனும் போல இருக்கு.சும்மா உங்க முகத்தைப் பார்த்துக்கிட்டு உங்க கைகளைப் பிடிச்சிக்கிட்டு பழைய கதை பேசிக்கிட்டு ஏதாவது ஸ்விட் நத்திங்ஸ் பேசிட்டிருக்கனும் போலருக்குங்க"
"சரி வர்றேன்"
 காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.
போர்ட்டிகோவில் காரை நிறுத்தி விட்டு வந்தான்.இந்நேரம் அஞ்சலி வந்து கதவை திறந்திருப்பாள்.ஆனால் இப்போது வரவில்லை.உள்ளே வேலையாக இருக்கிறாளோ என நினைத்தபடி காலிங் பெல்லில் கையை வைக்கப் போனபோது கதவூ திறந்து கொண்டது.
 உள்ளே வந்தான்.
"அஞ்சலி..."
பதிலில்லை.
என்ன செய்கிறாள்?எங்கே போய் விட்டாள்?
மறுபடியூம்அழைத்துப் பார்த்தான்.படுக்கையறைக்கு வந்தான்.கதவூ திறந்தே கிடந்தது.அவன் பார்த்த காட்சி சற்றே வினோதமாக இருந்தது.அஞ்சலி பத்மாசனத்தில் அமர்ந்தபடி கண்களை மூடிக்கொண்டு கைகள் இரண்டையூம் சின்முத்திரையில் வைத்தபடி யோகா செய்வது போலிருந்தாள்.அருகே போய் பார்த்தான் வருண்.அவள் முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்திருந்தன.ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவள் போல இருந்தாள்.அவளை கலைக்க வேண்டாம் என்று திரும்பி வெளியே வந்தான்.ஹாலில் அமர்ந்து கொண்டு  ஒரு செய்தித்தாளை எடுத்து மேய்ந்தான்.பத்து நிமிடம் ஆனது.அப்போதும் அஞ்சலி வரவில்லை.இந்த மாலை நேரத்திலா யோகா செய்கிறாள்.வினோதமாக இருக்கிறதே என்ற எழுந்து போய் பார்த்தால்-
அஞ்சலி கீழே சரிந்து கிடந்தாள்.கண்கள் மேலே செருகிக்கொண்டிருந்தன.
அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தௌpத்து எழுப்பினான் வருண்.மலங்க மலங்க விழித்தாள்.
"என்னாச்சு அஞ்சலி.நீ யோகா பண்ணிட்டிருந்தியே"என்றான்.
"என்ன சொல்றிங்க..யோகாவா?"
"ஆமா.அதான் நான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு வந்திட்டேன்"
"எனக்கு சுத்தமாக யோகா தியானம் எல்லாம் பழக்கமில்லிங்க.நான் எதுக்கு யோகா பண்ணப் போறேன்.நான் உங்களுக்காக காத்திட்டு இருந்தேன்.திடீர்னு பார்த்தா மயக்கமாகி கீழ விழுந்து கிடக்கறேன்"
வருணுக்கு திரைக்கதையில் குழப்பமாக இருந்தது.கண்ணெதிரே இவள் யோகா செய்வதை பார்த்திருக்கிறௌம்.ஆனா யோகா தெரியாதென்கிறாள்.அப்புறம் ஏன் மயக்மாகிக் கிடந்தாள்.

"என்னைச் சுத்தி என்னவோ நடக்குதுங்க.யாரோ என்னை கன்ட்ரோல் பண்ற மாதிரி இருக்கு"என்ற அஞ்சலியின் கண்களில் பொய் தெரியவில்லை.லேசான திகில் தெரிந்தது.அப்போது சன்னல் வழியே ஒரு தலை தெரிந்தது.அவள் விழிகள் மேலும் திகிலடைய ஆரம்பித்தன.(தொடரும்)
Previous
Next Post »