கவிதை மழை

'திரும்பிய
பக்கமெல்லாம் பெண்கள்
யாரும்
உன்னைப் போல் இல்லையென்பதால்
திரும்புவதே இல்லை
திரும்பித்தான் பாரேன்
இங்கே கொஞ்சம்'

'அவள்
கண்களை திறந்தாள்
கூடவே
என் இதயத்தையூம்'

'எதையோ
மறந்தது போல்
தலை குனிந்து
சொடக்கு போட்டு யோசிப்பாள்
மறந்தது
என்னையென்று அறியாமல்'

'வீட்டை விட்டு
கிளம்பும்போது
பூட்டிய பூட்டை
இரண்டொரு தரம்
இழுத்துப் பார்ப்பாள்
இன்னொரு கையை
நெஞ்சில் வைத்து
உள்ளே
பூட்டி வைத்த
என்னை
பத்திரமாக வைத்திருக்கிறாளா
என்று'

'கரும்புச்சாறௌ இளநியோ
எது குடித்தாலும்
தேடுவாள் என்னை
வந்திருந்தால்
அவள்
சாப்பிடுவதை
பார்த்துக் கொண்டேயிருப்பேனே
பரிவாக என்று'


Previous
Next Post »