'இதழ்களின்
அயல்மகரந்த சேர்க்கை
முத்தம்'

'இதழ்கள்
படுத்துறங்கும் குட்டி ஸோபா
முத்தம்'

'பட்டதும்பற்றிக்கொள்ளும்
ஈரமான தீ
முத்தம்'

'கொடுப்பவரே
வட்டி கட்டும் கந்துவட்டி
முத்தம்'

'இமைகளை
மூடச்செய்யூம் ரிமோட்கன்ட்ரோல்
முத்தம்'

'காரணமில்லாத
கடையடைப்பு காலைவரை
முத்தம்'

'விரும்பி
ஏற்றுக்கொள்ளப்படும் வன்முறை
முத்தம்'

'புவியீர்ப்புவிசை
புலம்பெயர்ந்து போகுமிடம்
முத்தம்'

'எல்லாமொழிகளுக்கும்
ஒரே மொழிபெயர்ப்பு
முத்தம்'

'கதவூகளே
கதவை திறந்துகொள்ளும் சாவி
முத்தம்'

'விரல்களில்லாமலே
கைகுலுக்கல்
முத்தம்'

'கடிகாரங்கள்
எப்போதுமே பழுதாகிப்போகுமிடம்
முத்தம்'
Previous
Next Post »