'கார்த்திகை
கடந்தபின்னும் தீபங்கள்
அவள் கண்கள்

தப்பி வந்து விட்டது
நிலவூ
இருட்டி விட்டதோ என்று
அவள்
மையிட்ட விழிகளைப் பார்த்ததும்

இதழ்களில்
இனிப்பை யார் வைத்தது
அவள் இதழருகே செல்லும்
காற்றும் கூட
இனிக்கிறதாம்

ஆச்சர்யமாய்
அவள் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம்
பூமியூம்
சற்றே திரும்பி விடுகிறதாம்
மாலை முடிந்து
மதியம் வந்து விட்டது

அவள்
கைகளில் தெரிவது
ரேகையென்று யார் சொன்னது
அது
எனக்கும் அவளுக்குமான
காதல்கிராஃப்

பனித்துளிக்குள்
படுத்துக்கொண்டது போலிருக்கும்
அவள்
மடி மட்டும் கிடைத்தால்

அப்புறம்...
என்று சொல்லும்போதெல்லாம்
விடைபெறப்போகிறாளோ
என்றெண்ணிப் பார்த்தால்
கண்களால் இறுக்கிக்கொள்கிறாள்
கண்களை
என்பது
வழக்கம் போல்
அப்புறமாகத்தான் புரிகிறது

அவள்
வந்தமரும் போதெல்லாம்
கடிகார முட்கள்
மூர்ச்சையாகி விடுகின்றன'
Previous
Next Post »