சிறுகதை : "கடவூள்..." - விஜயநிலா




   பியர் கிண்ணத்தில் தங்க திரவத்தை எடுத்து ஒருவிரற்கடை அளவூக்கு வாயில் ஊற்றிக் கொண்டு கணினித்திரையை கவனித்தேன். 'தி கிரான்ட் டிசைன்' புத்தகத்தை டவூன்லோடு செய்து படித்துக் கொண்டிருந்தேன்.ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்! கடவூள் என்ற ஒரு வஸ்து இருந்திருக்கவே முடியாது என்பதை முந்தைய ஸ்டிரிங் தியரியின் அடுத்த சிந்தனையான எம்-தியரி வாயிலாக சொல்லிக்கொண்டே வருகிறார்.அதை வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு ஒரு மெயில் வந்திருப்பதாக கூகுள் தலையைக் காட்டிச் சொன்னது.
அன்புள்ள ரிஷி.
எனது சொத்துக்கள் அனைத்தையூம் உனக்குத் தர விரும்புகிறேன்.அதை விட உலகின் மிக உயர்ந்த பதவியூம் உனக்காக காத்திருக்கிறது.இதை விளையாட்டாக எண்ணாதே.உடனே என்னை தொடர்பு கொள்
                                   ஆசிகளுடன்,
                                   .............................
 கீழே பெயர் எதுவூமில்லை.எவனோ கிறுக்கன் என்று அலட்சியப்படுத்தினேன்.இன்டர்காமில் தொடர்பு கொண்டு அனிதா.உனக்கு ஏதாவது சொத்து எழுதி வைக்கறதா மெயில் வந்திருக்கா.ஏதாவது ஸ்பேம் வைரஸா இருக்கப் போவூதுஎன்றேன்.
 அனிதா என் ஆபீசில் இருப்பவள்.என்னை காதலிக்கலாம் போல பார்ப்பவள்.நான் எங்கு சென்றாலும் நிழலாக வருவாள்.ஒருதரம் சர்வர்அறையில் லினக்ஸை நிரடிக்கொண்டிருந்தபோது அனிதா என்னருகே குனிந்து என் முகத்தருகே வந்து, மார்பிள் தரையை பாலீஷ் செய்வது போல அவள் உதடுகளில் என் உதடுகளை..வேண்டாம்.அதற்கு மேல் சொன்னால் கதை வேறு பக்கம் திரும்பி விடும்....
 சே.இப்போத அந்த நினைப்பு வேண்டாம்.என் மாதிரி பிபிஓ ஆசாமிகளுக்கு எல்லாம் இந்த மாதிரி நைட் ஷிப்ட்டில் எந்த நாட்டிலிருந்து எந்த புண்ணியவான் ஃபோன் போட்டு எந்த விபரம் கேட்பான் என்று தெரியாமல் ரெடிமேட் புன்னகையையூம்,அமரிக்க ஆங்கிலமும் கலந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதில் அலுப்பாகி விடுகிறது.
 ட்விட்டரில் துழாவிக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது மறுபடியூம் அதே போன்றதொரு மின்னஞ்சல்.என்னைக் கட்டிக்கிறயா கண்ணு.நான் பிஈ படித்த சிவந்ததோல் பொண்ணுஎன்று ஒருத்தி மாட்ரிமோனியல் விளம்பர பேனருடன் குறுக்கே வந்ததைப் புறக்கணித்து மின்னஞ்சலை வாசித்தேன்.
 மறுபடியூம் அதே நபர்தான்.
அன்புள்ள ஷி!
 இன்னுமா நீ என்னை நம்பவில்லை.உலகின் மிகப்பரிய பதவி உனக்காக காத்திருக்கிறது.நீ உடனே கிளம்பி வா.அல்லது என்னை தொடர்பு கொள்
                                      ஆசிகளுடன்,
                                      ....................................
 எவனோ பைத்தியக்காரன் என்று அலட்சியப்படுத்தும்போதுதான் மின்னஞ்சல் முகவரியை கவனித்தேன்.
the god@god.com என்றிருந்தது.அடப்பாவி கடவூள் என்ற பெயரில் எவனோ வெப்சைட் ஆரம்பித்து வைத்து அம்பித்தனம்பண்ணுகிறானா?இதைப் புறக்கணிப்போம்.வெகுநாட்களாக அனிதா ஃப்ரஞ்ச்ஆஃப்பாயில்டு கிஸ் கேட்கிறாள்.கொஞ்சம் கொடுத்து விட்டு வருவோம் என்று அவளது கேபினுக்குள் நுழையலாம் என்று எழுந்த போது என் மானிட்டர் திரையில் சாட்டில் யாரோ அழைத்தார்கள்.தென்அமரிக்க நாட்டிலிருந்து ஒருத்தி எப்போதும் என்னை அழைப்பாள்.அது போன்ற சங்கதிகளாக பேசுவாள்.அயர்லாந்திலிருந்து ஒருத்தி அழைப்பாள்.எனர்ஜிகாக்டெயில் பற்றி சந்தேகம் கேட்பாள்.அதில் யாராவது ஒருத்தியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அழைத்தவார் பெயர் எனக்குள் திகைப்பூட்டியது.
கடவூள் உன்னை அழைக்கிறார்என்றிருந்தது.
ரிஷி.நலமா.மின்னஞ்சல் படித்தாயா.
நீங்கள் நிசமாகவே யார்
நான் கடவூள்
நான் அந்தப் படம் பார்க்கவில்லை.ஒரே கோரம்
இல்லை.நான் நிசமாகவே கடவூள்.
கடவூளா?’
ஆம்.உடனே என்னை வந்து பார்
எங்கே இருக்கிறீர்கள்.இமயமலையிலா?’
இல்லை.உனக்கு அருகாமையிலேயே
சட்டென்று திரும்பினேன்.என் அருகில் யாரோ எட்டிப் பார்த்தமாதிரி இருந்தது.சாம்பிராணியூம்,ரெட்ஒயினும் கலந்த வாசனை வீசியது.சே.பிரமை.
எ..எங்கே இருக்கிறீர்கள் மிஸ்டர் கடவூள்
இன்றிரவூ நீ என்னை சந்திக்கலாம்.நாம் சுருக்கமாகப் பேச வேண்டியிருக்கிறது.இது மிக முக்கியமான விஷயம்.யாருக்கும் சொல்லாதே.சொன்னாலும் நம்ப மாட்டார்கள்
அதன்பின் பதிலில்லை.அப்புறம் எந்த தகவலும் இல்லை.அனிதா ஒரு கோப்பை தங்க திரவத்தை கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.நுனியில் அரை எலுமிச்சை சொருகியிருந்தாள்.என் முகத்தருகே தன் முகத்தைக்கொண்டு வந்து அப்பாவித்தனமாகப் பாத்தாள்.கண்களில் மட்டும் யூ இருந்தது.
வருகிறாயா ரிஷி.கொஞ்சம் நியூஇயர் ஷாப்பிங் செய்ய வேண்டும்
இல்லை.எனக்கு வேறு அசைன்மன்ட் இருக்கிறது
ஏன் எவளாவது உன் கர்ள் ஃப்ரன்ட் ஒரு பாதியை தருகிறேன் என்று சொல்லி விட்டாளா.நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைவாயே நீ
சே.அப்பட்டமாகப் பேசாதே.நான் அவரைப் பார்க்கப் போகிறேன்
அவர்?யார் நம் பாஸையா.அவர் இந்நேரம் மிதந்து கொண்டிருப்பார் நீச்சல் குளத்தில் வெள்ளைக்கார குட்டிகளுடன்
இல்லை நான் கடவூளைப் பார்க்கப் போகிறேன்
உனக்கு அதிகமாகி விட்டது.ஒரு லெமன் ஜூஸ் கலந்து தரட்டுமா.பதிலுக்குஅந்த மிக்ஸட் ப்ரூட் கிஸ் வேண்டும் எனக்கு
வழி விடு.என்று வெளியே வந்து விட்டேன்.கடற்கரை சாலையில் காரை சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.சில நிமிடங்களில் கார் முனகலுடன் நின்றுபோய் விட்டது.இறங்கினேன்.ஏதாவது பறக்கும் தட்டு மாதிரி எதுவூம் கண்ணுக்கு தட்டுப்படுகிறதா என்று தொலைவில் பார்த்தேன்.கடற்கரை மணலில் நடந்தேன்.
வந்து விட்டாயா மகனே என்று மார்கன்ஃப்ரிமன் மாதிரி தோற்றமளிக்கவில்லை.சாதாரணமாக சபாரி அணிந்த செக்யூரிட்டி ஆசாமி போலத்தான் இருந்தார்.ஜெயராஜ் வரையூம் படங்களில் வரும் ஆண்கள் போல தேமேஎன்றிருந்தார்.
அப்படிப் பார்க்காதே.வா.உட்கார்ந்து பேசலாம்.உன் மனதில் என்னைப் பற்றிய சந்தேகம் இருக்கிறது. டக்ளஸ் ஆடம்ஸ் எழுதின ஹிச்ஹைக்கர்ஸ் கைடு டு காலக்ஸி போன்ற எதையாவது படித்து மனதை குழப்பிக்கொண்டிருக்கிறாயா என் ஸ்மார்ட் கார்டு காட்டட்டுமா.இல்லை என்றால் உங்களது புராணங்களில் எல்லாம் வருவது மாதிரி விஸ்வரூப தரிசனம் காட்டட்டுமா?”
நீங்கள்தான் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய ஆளா
கடவூள் என்று ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்.அஞ்சல் அனுப்பியது நான்தான்
உங்களது பெயரென்ன சொன்னீர்கள்
கடவூள்.ஜீஓடி.உங்களை எல்லாம் கட்டி மேய்ப்பவன்என்றார் அசத்தலான உச்சரிப்புடன்.
கடவூள் என்றால் எங்கே குடியிருக்கிறிர்கள்.இதற்கு முன்னால் எங்கே இருந்திர்கள்
இங்கேதான்.யூகங்களாக இங்கேதான் இருக்கிறேன்.மூன்று விதமான வேலைகளையூம் கலந்து கட்டி தினப்படி தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன்.ஆனாலும் எங்களுக்கள் பலத்தப் போட்டி.ஆனாலும் அதையூம் நான் தனி ஆளாக கவனித்துக் கொண்டிருந்தேன்
வெயிட் எ மினிட்.கடவூள்களுக்குள் போட்டியா.கடவூள் ஒரு ஆள்தானே
அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறிர்கள்.இந்த ஸோலார் சிஸ்டத்தில் உள்ள பூமிக்கு நான் கடவூள்.ஸோலார் சிஸ்டம் போலவே வேறுபல கிரகக்கூட்டங்களும் இருக்கின்றன.ஒவ்வொன்றிற்கும் ஒரு கடவூள்.அது மாதிரி பற்பல கடவூளர்கள் உண்டு
நீ ஏதாவது நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாயாஎன்றேன்.
இல்லை.இந்த உலகத்தை நான் படைத்தேன்.அதனால் நான் இங்கு கடவூள்.அந்தந்த உலகத்தை அவர்கள் படைத்தார்கள்.அதனால் அவர்கள் அங்கு கடவூளர்களாக இருக்கிறார்கள்.
யெஸ் மிஸ்டர் கடவூள்.நீங்கள் விஷயத்திற்கு வரலாம்.எனக்கு என்ன சொத்துக்களை எழுதி வைப்பதாக குறிப்பிட்டீர்கள்.எனக்கு ஏதோ உயர்ந்த பதவி கிடைக்க இருக்கிறீர்களே.அது என்ன.என் கம்பெனியில் வைஸ்பிரசிடன்ட் பதவி கிடைக்குமா.அந்தபதவியை வைத்துக் கொண்டுதான் அந்த கும்பகோணத்துக்காரன் அத்தனை பெண்களையூம் காலி பண்ணுகிறான்.பை த வே இதையெல்லாம் எனக்கு ஏன் நீங்கள் செய்ய வேண்டும்
உன்னை எனக்குப் பிடித்திருப்பதால்தான்.பூர்வசென்மத்தில் நீ நிறைய புண்ணியம் செய்திருக்கிறாய்.அதெல்லாம் என் டேட்டாபேஸில் இருக்கிறது.எனக்கு பதிலாக உன்னை கடவூளாக்க விரும்புகிறேன்
என்ன உளறுகிறீர்கள்.சோப் சீரியல் போல இருக்கிறது.என்னை எப்படி கடவூளாக்க முடியூம்
அதான் சொன்னேனே.நானே கடவூள் என்று.மற்ற உலகங்களில் உள்ள கடவூள்கள் யாரிடமாவது அப்படியே அவூட்ரைட்டாக விற்று விட்டு கடவூள் பதவியிலிருந்து விலகி விடலாமா என்று கூட அசட்டுத்தனமாக யோசித்தேன்.ஆனால் எல்லா உலகங்களிலும்கடவூள்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது.ரெசஸஷன் அங்கேயூம் வந்து விட்டது.தவிர இந்த ஒரே வேலையை யூகம் யூகமாக செய்து சலித்துப் போய் விட்டது எனக்கு.அதனால் மாற்று ஏற்பாடாக யாரையாவது என் பதவியில் நியமித்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு.நீ சரிப்படுவாய் என நினைக்கிறேன்.என்ன ஒன்று.யாராவது ஒரு பொண்ணை அடிக்கடி முத்தமிடப்போய் விடுகிறாய்.அதை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும்என்றார்.
நான் அசட்டுத்தனமாக நின்று கொண்டிருந்தேன்.யாரோ கடவூள் அழைக்கிறாராம்.தன் பதவியை எனக்குத் தருவாராம்.அபத்தமாக இல்லை.சட்டென்று ஓடிப்போய் விடலாமா.இந்த ஆள் சட்டென்று ஜெட்டிக்ஸில் எல்லாம் வருகிற மாதிரி இயந்திர மனிதனாக மாறி லேசர் துப்பாக்கியை எடுத்து சுட்டுத் தொலைந்து விட்டால்?
சரி நான் வருகிறேன்
நில்
நின்று விட்டேன்.
என்னை நீ நம்ப மறுக்கிறாய்.என் மனதில் எப்போது பதவி விலக வேண்டுமென்று தோன்றுகிறதோ அதிலிருந்து 24மணிநேரத்திற்குள் நான் மாற்று ஏற்பாடு செய்து வைத்து விட வேண்டும்.அதாவது இன்னொரு ஆளை என் இடத்தில் நியமனம் செய்து விட வேண்டும்.இல்லையென்றால் விபரிதமான விளைவூகள் ஏற்பட்டு விடும்
ஸாரி.இந்த கதையை எல்லாம் நான் நம்புகிற மாதிரி இல்லை.நான் வருகிறேன்.வந்தனம்என்று திரும்பி நடந்தேன்.
போகாதே.உன்னை கட்டுப்படுத்த என்னிடம் இப்போது வலு இல்லை
குட்பை மிஸ்டர் கடவூள்
போகாதே நில்
போய்யா
விபரிதம் நிகழ்ந்து விடும்.சில மணிநேரத்தில் பார்.
அலட்சியப்படுத்தி விட்டு வந்து கால்டாக்சியை அழைத்து என் அபார்ட்மன்ட்டிற்கு வந்தேன்.வழியெங்கும் உற்சாகமான முகத்துடன் ஜனங்கள்.பட்டாசு வெடிக்க,பலுhன்கள் பறக்க விட,பரஸ்பரம் முத்தங்கள் பறிமாறிக்கொள்ள காத்திருந்தார்கள்.
 கடிகாரத்தைப் பார்த்தேன்.
 இரவூ.11.54 என்றது.
புத்தாண்டு கொண்டாட வெளியே கிளம்ப வேண்டும்.அதற்குள் கிழவனார் கடவூள் வந்து மூடைக் கெடுத்து விட்டார்.எ..என்ன சொன்னார் அந்தாள்.
 விபரிதம் நிகழ்ந்து விடும்.சில மணிநேரத்தில் பார்.
 அப்படியென்றால்..
 அரைமணிநேரமாக(சே.அரைமணிநேரம்தான் என்று எப்படி தெரியூம்.)தேமே என்று உட்கார்ந்திருந்தேன்.மணி 12.00 ஆகவில்லை.அப்போது எதிர் ப்ளாட் ஆராவமுதன் கதவைத் தட்டி குழப்பமான முகத்துடன்-
ரிஷி என்னவோ தப்பாயிடுத்துப்பா.எங்காத்து சுவர்க்கடிகாரத்துல 12க்க பதிலா 13 மணியடிக்கறது.ஜெர்மன்காரன் வைச்சிருந்த கடிகாரம்.எங்க தோப்பனார் வைச்சிண்டிருந்தது..
அப்போதுதான் கவனித்தேன்.ஐந்து நிமிட தாமதத்தில் சுற்றிக்கொண்டிருந்த எனது கடிகாரமும் இப்போது 12க்கு பதிலாக 13 முறை கணீரென்று அடித்தது.தற்செயலாக என் ரிஸ்ட் வாட்ச்சை கவனித்தேன்.12க்கும் 1க்கும் இடையே 13 என்று புதிதாக ஒரு எண் முளைத்திருந்தது.டைட்டன் சர்வீஸ் சென்டரில் கொண்டு போய் கொடுத்தால் நம்புவார்களா?வாட்ச்சை உதறினேன்.13 அசராமல் உட்கார்ந்திருந்தது.
 ஒரு எண் கூடுதலாகி விட்டிருக்கிறது.
 இதிலென்ன விபரீதம் இருக்கப் போகிறது என்று அசட்டையாக நினைத்த சமயத்தில் மேல்ஃப்ளாட் சுந்தரேசனின் மாமியார் ஓடிவந்தாள்.
"இந்த அதிசயத்தை கேட்டிங்களா ஆராவமுதன்.என் பொண்ணுக்கு ஸ்கேன் பண்ணிட்டு ரெட்டைக்குழந்தைன்னுதான் சொன்னாங்க.ஆனால இப்ப வீட்ல சோபாவூலயே பிரசவம் ஆயிருச்சி. 2 இல்லை 3 பிள்ளைங்க பிறந்திருக்கு.என்னவோ தப்புதானே"
அப்படியே உள்ளே வந்து படுத்துக் கொண்டேன்.டிவியை அணைக்க வில்லை.நியூஸ் சானலில் அவசர செய்தி வந்து கொண்டிருந்தது.சிரிக்கமாட்டாத புன்னகையூடன் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் சொன்னது இதுதான்.
நகரிலுள்ள எல்லா பிரசவ ஹாஸ்பிடலிலும் அத்தனையூம் இரட்டைக்குழந்தைகளாம்.சிற்சிற மூன்று குழந்தை பிறப்பும் உண்டாம்.
எனக்குத்தான் சூழ்நிலையின் விபரீதம் உறைத்தது.பிறந்திருக்க வேண்டியதெல்லாம் ஒற்றைக்குழந்தைகள்தான்.கூடுதலாக ஒன்று சேர்ந்து ட்வின்ஸ் ஆகியிருக்கிறது.அதே போல இரட்டைக்கு பதிலாக 3.
என்ன செய்வது?இன்னும் ஏதாவது விபரீதம் நேர்ந்து விடுமா?
கருமாத்துரர் பக்கம் கிராமத்தில் ஒரு பெண்ணின் அருகில் படுத்திருந்த புருஷனின் அருகில் இன்னொருத்தன் படுத்திருந்தான் என்று அவனை விரட்டினாள் என்று செய்தி ஸ்க்ரோளிங் ஓடியது.அது கள்ளக்காதலன் இல்லை.ஒரு புருஷனுக்கு பதிலாக கூடுதலாக இன்னொரு புருஷன் என்று புரிய-
பயந்து போய் லாப்டாப் திறந்து அந்த கடவூளின் சாட் மெசேஜூக்கு பதிலனுப்பினேன்.
"ஒப்புக் கொள்கிறாயா.இனி நீதான் கடவூள்.ஐம் எ ஃப்ரீபேர்டு.நீ டூட்டியை ஒப்புக்கொள்வதற்கு முன் பொண்ணுங்களுக்கு அந்த ஃப்ரூட்கிஸ் எப்படி தருகிறாய் என்று சொல்லி விட்டுப் போ"என்று சிரித்தார்.
 நான் முறைப்படி என் பிபிஓ வேலையை ராஜினாமா செய்து விட்டு 'புதிய வேலை'யில் சேர்ந்தேன்.
 மறுநாள்-
 சாலையை கடக்கும்போது கருப்புச்சட்டைக்காரர்கள் கோஷம் போட்படி ஊர்வலமாக வந்தார்கள்.
'கடவூள் இல்லை.கடவூளை படைத்தவன் காட்டுமிராண்டி.."
எனக்கு ஸ்டீபன் ஹாக்கிங்ஸூம் எம்-தியரியூம் ஞாபகம் வர அந்த கூட்டத்தில் அநிச்சையாக நானும் சேர்ந்து கொண்டேன்.

 கடவூள் இல்லை.இல்லவே இல்லை.
                               ------------------------------
Previous
Next Post »