பாலாம்பிகா



      கொஞ்ச காலத்திற்கு முன்பு யாரைப் பற்றியாவது பேசும்போது அந்தாளோட ஆட்டிட்டியூட் சரியில்லை என்பார்கள்.பாசிட்டிவ்வாக எதையூம் அவர் பேச மாட்டார்.எந்த ஒரு பிசினஸ் ப்ளானை அவரிடம் கொண்டு சென்றாலும் இது நடக்காது.இது விளங்காது.இது முடியாது என்று ஆயிரம் காரணங்களைச் சொல்வார் என்பார்கள்.நான் கூட இது போன்ற ஒரு நபரை இருபது வருடங்களுக்கு முன்னர் கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.அந்த நபர் செகரட்டரியேட்டில் ஜாயின்ட் செகரட்டரி அந்தஸ்த்தில் குப்பை கொட்டியவர்.அவர் யாரைப் பார்த்தாலும் வலிய கொக்கி போட்டு பேச்சுக்கு இழுப்பார்.அப்புறம் அடுத்த கொக்கியாக என்ன பண்றே என்பார்.மாட்டிய ஆள் இதைப் படிக்கிறேன்.இன்ன வேலை பார்க்கிறேன் என்று சொல்லி விட்டால் போதும்.இது தேறாது.இதெல்லாம் விளங்காது.உனக்கு எதிர்காலமே இல்லை என்று வறுத்தெடுப்பார்.பேசும்போது கண்களில் ஒரு கேலியூம் உதட்டுக்கோணலில் தான் பத்திரமான உத்யோகத்திலிருக்கிறேன் என்ற அறைஎண் 305ல் கடவூளில் வரும் டெல்லிகணேஷ்தமானப் பேசுவார்.இந்தாள் உறவினராகப் போய் விட்டார்.என்னை விடாமல் துரத்துவார்.

      இவன் என்னமோ கதையெல்லாம் எழுதறான் என்று யாரோ அவரிடம் கதை கட்டி விட்டிருப்பார்கள் போலிருக்கிறது.வலிய அழைத்து இதெல்லாம் வேஸ்ட் என்கிற ரீதியில் என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்.


   என்ன பண்ணுகிறாய் என்றார் ஸ்டேட் கவர்மன்ட் ஆசாமிகளுக்கே உரிய வெத்து கெத்தில்.அதற்கு நான் சொன்ன பதிலில் கந்தசாமி படத்து ஆசிஷ் வித்யார்த்தி போல வாய் கோணிக்கொண்டு ஆடிப்போய் விட்டார்.

   நான் சொன்ன பதில் இதுதான்

   குஷ்புவூக்கும் பாலாம்பிகாவூக்கும் கோவில் கட்டிட்டிருக்கேன்.எதுவூம் டொனெஷன் தர்றிங்களா?
 குஷ்பு தெரியூம்.அது யார் பாலாம்பிகா என்று முனகினார்.பார்ரா குஷ்புவையெல்லாம் இந்த பெரிசுக்கு தெரிந்து வைத்திருக்கிறது என்று சிரிக்காமல் சொன்னேன்.

 மெயின்கார்டு(main God) குஷ்பு.துணை கார்டு பாலாம்பிகா அதாவது உபதெய்வம் பாலாம்பிகா என்றதும் மிரண்டு அரண்டு உள்ளே போனவர் அவனை முதல்ல வெளியில போகச் சொல்லு.அராத்து என்று பினாத்தியது காதில் விழுந்தது.பாலாம்பிகா யாரென்றுதானே கேட்கிறீர்கள்.நடிகன் படத்தில் குஷ்புவூடன் வருவார்.படக்கென்று உடைகளை உருவி கழட்டிப்போடும் இவர் ஒரு பேய்ப்படம் கூட சொந்தமாக எடுத்திருக்கிறார்.இப்போது பிரியமானவளே சீரியலில் அம்மா வேஷத்தில் இருக்கிறார்.
 அதன்பின் வந்த காலகட்டங்களில் ஆட்டிட்டியூட்டுடன் பாடிலாங்வேஜ் என்பார்கள்.கொஞ்சம் இன்னும் முன்னேறிப்போய் மைன்ட்செட் என்று பேச ஆரம்பித்தார்கள்.இந்த மைன்ட் செட் என்பதைப் பற்றி 1940களில் பிறந்த ஒரு அம்மையார் கரோல் ட்வெக் என்று பெயர் ஆராய்ச்சி செய்து புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறார்.

  ஒருவரது மைன்ட்செட்தான் முக்கியம் டிகிரி சர்ட்டிபிகேட்கள் எல்லாம் முக்கியமில்லை என்று சாப்ட்ஸ்கில் பயிற்சி எடுக்க வந்த கனவான்கள் கலக்கிக் கொண்டிருந்த காலம்.அவன் ஏன் அப்படி பண்றான்.மைன்ட் செட் சரியில்லை போல என்று எச்ஆர்கள் ஒரு ஆளைத் துரக்குவதற்கு முன்னர் சொல்லும் வார்த்தையாக இது இருந்தது.

   இப்போது மைன்ட்செட் போய் புதிதாக வந்திருக்கிறது டிஸைன் திங்க்கிங்.
பெரிதாக ஒன்றுமில்லை.மைன்ட்செட் என்பது ஒருவரது சிந்திக்கும் திறன் மற்றும் நம்பிக்கை கலந்தது.அவர் ஒரு விஷயத்தைப் பற்றி பாசிட்டிவ்வாகவூம் யோசிக்கலாம்.நெகட்டிவ்வாகவூம் யோசிக்கலாம்.அதையே  லேசாக நெய் விட்டு வறுத்து டிஸைன் மைன்ட்செட் என்று அழைக்கிறார்கள்.டிஸைன் மைன்ட்செட் என்றால் இந்த வித டி.மை.செட் உள்ள ஆசாமிகள் ஒரு பிரச்சனையைப் பார்த்தால் அந்த பிரச்சனையைப் பற்றியூம் அந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்றும் யோசிக்க மாட்டார்கள்.அதற்கு பதிலாக அந்த பிரச்சனைக்கான தீர்வைக் குறித்து யோசிப்பார்கள்.இது ஒரு கமல்ஹாசத்தனமான சிந்தனைதான்.

  இப்போதெல்லாம் மிகப்பெரிய ஐடி கம்பெனிகள் எல்லாம் வெளிநாட்டில் ஆர்டர் எடுக்கும் முன்பாக எங்களிடம் இத்தனை பிஸ்தாக்கள் இந்தெந்த டொமைன்களில் இருக்கிறார்கள் என்று சரடு விடுவதில்லை.அதற்கு பதிலாக எங்களிடம் இத்தனை ஆயிரம் பேர்கள் (உண்மையில் சில நுரறு பேர்கள்தான் இதில் திறன் பெற்றிருப்பார்கள்) 'டிஸைன் திங்க்கிங்' என்ற யூக்தியில் (சாப்ட்வேர் பாஷையில் சொன்னால் ஸ்ட்ராட்டஜி) டிரைனிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் உங்களுக்கான சாப்ட்வேர் சொல்யூஷனை திறம்பட சிந்தித்து 'முடித்து' விடுவார்கள் என்பதை ஒரு போர்ட்ஃபோலியோவாக முன்வைத்து தட்டேந்துகிறார்கள்.

  ஆக உங்களுக்கு டிஸைன் திங்க்கிங் தெரிந்தால் புலி படத்தில் வேதாளத்தைப் பார்க்கலாமா இல்லை கொஞ்சம்  காத்திருந்து ஸ்ட்ரைட்டாக தீபாவளிக்கு வேதாளத்தையே பார்த்து விடலாமா என்று முடிவெடுத்து விட முடியூம்.
Previous
Next Post »