சிறுகதை: "திப்பு..." -விஜயநிலா


 சில அதிர்ச்சிகள் திடீரென்றுதான் தாக்க ஆரம்பிக்கின்றன என்று எழுதியிருந்தார் டைரக்டர் தன்னுடைய ஸ்கிரிப்ட்டில்.பென்டிரைவ்வை ஸோனி வயோ பாக்கெட் பிசியில் செருகி ஸ்கிரிப்ட்டை டவூன்லோடு செய்தபின் படித்த முதல் வார்த்தையே அதிர்ச்சி கலந்ததாக இருக்கவூம் பிசியை கீழே வைத்தான் ரிஷி.அருகில் அமர்ந்திருந்து தன் நகப்பூச்சையே பார்த்துக் கொண்டிருந்த நிகிலாவூம் எழுந்தாள்.


போரடிக்குது ரிஷி.நீ இந்த ப்ராஜக்ட்ல அசோசியேட்னு தெரிஞ்சப்புறம்தான் நான் இந்த படத்தையே ஒத்துக்கிட்டேன்.ஆனா டைரக்டர் இன்னும் கதை சொல்லலை எனக்கு.ஆட்டுதாடியை சொறிஞ்சிகிட்டே அக்ரிமன்ட் போட்டதோட சரி.ஒரு ஹாலிவூட் பட வாய்ப்பையே நான் இழந்திருக்கேன் இந்த படத்தால.இது ஒரு பீரியட் படம்னு நிருபருங்க எல்லாம் சத்தாய்க்கறாங்களே.நிசமா
நிமிர்ந்து அவளை நிதானமாகப் பார்த்தான் ரிஷி.கிளியோபாட்ராவின் இந்தியப் பதிப்பு போல இருந்தாள்.கருப்பு நிறம்.ஆனால் ஒவ்வொரு அசைவிலும் மகாசெக்ஸ் இருந்தது.உதடு சுழிப்பில் அத்தனை ஹீரோயின்களையூம் காணாமல் செய்து விடுவாள் போலிருந்தாள்.செயற்கை சாதனங்கள் ஏதுமில்லாமல் வளைவூகள் தாராளமாக இருந்தன.ஆனால் யாரையூம் தொடவிடமாட்டாள்.ரிஷிக்கு மட்டும் சிறப்பு அனுமதி.இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரிஷி இந்த சினிமாவை தின்று விடுவான் என்று அவளுக்குத் தெரியூம்.அவன் பார்க்கிற படங்கள் எல்லாம் ஆர்ட் ஃபிலிம்.சிந்திக்கிற சீன்கள் எல்லாம் பக்கா கமர்ஷியல்.இந்த காம்பினேஷன் இருந்தால் சினிமாவில் உச்சத்திற்கு போகலாம் என்ற விதியை அவள் அறிந்திருந்தாள்.

  “போரடிச்சா வெளிய போய் ஸ்நோபவூலிங் ஆடிட்டு வரலாமா நிகிலா
வேணாம்.இன்டோர் கேம் ஆடலாமா.அஃப்கோர்ஸ்.நீயூம்.நானும் மட்டும்.
நிகி.புரிஞ்சிக்கோ.இது ஒரு அபூர்வமான ப்ராஜக்ட்.கதை கேட்டுட்டு வார்னர் பிரதர்ஸூம்,பாரமவூன்ட்டும் இன்வஸ்ட் பண்றதுக்கு போட்டி போடறான்.இந்த கதை ஒரு பீரியட் படம்தான்.ஆனா அதில சில ட்விஸ்ட் வைச்சிருக்கார் எங்க டைரக்டர்
ஆர்ட்டிஸ்ட் இன்னும் யாரும் ஃபிக்ஸ் பண்ணலைன்னு என்னை மட்டும் தண்டமா புக் பண்ணியிருக்கிங்களே.ஹீரோ யார்
அநேகமா அவர்தான்
அவரா?”
ஆமா.அவர்தான்.ஆனா யார்கிட்டேயூம் சொல்லாத
அவர் கூட நான் ஹீரோயின்கறது கனவூ.அதுவூம் உங்க டைரக்டர் என்னை பக்காவா செதுக்கிருவாரு.ஐம் லக்கிஎன்று அவன் அருகே வந்து கன்னத்தில் முத்தமிட்டாள். அணுமின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது.
ரிஷி
என்னடா
உன்னை ஒரு தரம் மடியில போட்டு கொஞ்சவா.எனக்கே இப்ப லவ் பண்ணனும்போல இருக்கு.உனக்கு அடிக்கடி ஒரு பொண்ணு ஃபோன் பண்றாளே.யாரவ?”
யக்ஷா.விஸ்காம் பண்றா.நான் முதபடம் டைரக்ட் பண்ணதும் கல்யாணம்னு பேசி வைச்சிருக்கம்.ஆனா முத படம் தமிழ்ல பண்றதா இல்லை நான்
ஏன்
புதுப்பசங்க.அஞ்சுபாட்டு,அதுல ரெண்டு குத்து.அப்புறம் மழையில ஹீரோயினை உரிச்சிக் காட்றதல்லாம் எனக்கு அலர்ஜி.வைரஸ் காய்ச்சல் வந்துரும்.நான் பேசாம தெலுங்குப் பக்கம் போயிரலாமான்னு இருக்கேன்
அங்க கலர் கலரா டிரஸ்ஸூம் கூலிங் கிளாசும் போடனும்பாஎன்று அவன் முதுகில் குத்தினாள்.சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட ப்ரிட்ஜ் திறந்து கோக் எடுத்தான்.அப்போது செல் அதட்டியது.
டைரக்டர்என்றான்.
அவர்தான் ஹீரோவான்னு கேளுஎன்றாள் அவன் மேல் சாய்ந்தபடி.அவன் காதுமடல்களைக் கடித்தபடி.
ஸ்கிரிப்ட் பார்த்தியா.நெட்ல கொஞ்சம் தகவல் தேடனும்.காஸ்ட்யூம் டிசைன் பண்ண ஒரு பிரஞ்சு ஆசாமி வர்றார்.எதுக்கு வெளிநாட்டு ஆள்னு யோசிக்கறியா.அவங்களுக்குத்தான் நம்ம நாட்டைப் பத்தி நல்லா தெரியூம்.நமக்கு புகாரியூம்,தெருமுனை பிள்ளையாரையூம் தாண்டி எதுவூம் தெரியாது.லுக்.நாளைக்குள்ள ஸ்கிரிப்ட்டை ட்ரிம் பண்ணனும்.அவ வந்திருக்காளா.
யாரு நிகிலாவா
அவளை அளவோட சாப்பிடு.இல்லைன்னா உன்னை மேய்ஞ்சிருவா.கதை பத்தி கேட்டா எதுவூம் சொல்லாத.வெளியில துப்பிடுவாஎன்று ஃபோனை வைத்தார்.
சரியான அழுத்தக்கார மனுஷன்யா அவன்என்றாள் நிகிலா சிரிப்புடன்.
அவர் ஒரு ஜீனியஸ்.இந்த கதையை அவர் ஏன் இப்ப எடுக்கறார்னு நானே புரியாமத்தான் இருந்தேன்.ஆனா கதையில ஏதாவது ஒரு இடத்துல பெப் வைச்சிருப்பார்
சரி என்ன கதை
நான் சொல்ல மாட்டேன்
சொல்லலைன்னா உன்னை அந்தாள் சொல்ற மாதிரி மேய்ஞ்சிருவேன் சிறுவாஎன்று அவன் உதடுகளைக் கடித்தாள்.


   அவள் சென்ற பிறகு மறுபடி பாக்கெட் பிசியை எடுத்து இன்டர்நெட் இணைப்பு கொடுத்து கூகிளில் தட்டச்சு செய்தான்.

திப்பு சுல்தான்

 அவன் தட்டச்சு செய்ததும் திப்பு சுல்தான் பற்றிய தகவல்கள் வந்து டெக்ஸ்டாப்பில் கொட்டத் துவங்கின.அவற்றை வடிகட்டி எடுத்து சேமித்து வைத்தான்.அதன்பின் அங்கே உள்ள தகவல்களை எடுத்து படித்தபோது கிடைத்த ஒரு தகவல் அவனை ஆச்சர்யப்படுத்தியது.இதைத்தான் டைரக்டர் படத்தில் மறைத்து வைத்திருக்கிறாரா?கேட்கலாமா?
திப்பு சுல்தானின் தளபதி
இப்போது அந்த தளபதி பற்றி தட்டச்சு செய்ததும் அந்தாள் திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்ததும்,அந்த துரோகத்திற்காக அந்த தளபதியின் வம்சத்தையே பூண்டோடு அழிப்பதற்காக திப்பு சுல்தான் ஆவியாக அலைந்து கொண்டிருப்பதாகவூம் தகவல்கள் வந்து கொட்ட திகைத்தான்.
திப்புசுல்தானின் ஆவி அலைகிறதா?சே.ஆவியாவது இருப்பதாவது என்றபோது ர்ர்ர் என்ற சப்தத்துடன் ஓடிக்கொண்டிருந்த ஏசி சட்டென்று நின்றுபோனது.சே.அநாவசியமாக பயப்படுகிறௌம்.பவர்கட்.ஜெனரேட்டரைப் போட வேண்டும் என்று எழுந்தான் ரிஷி.
 வெளியே வந்தான்.சிகரட் பற்ற வைத்துக்கொண்டான்.செல்போன் மெல்லிதாக அழைத்தது.யாரென்று பார்த்தால் அப்பா.கிராமத்திலிருந்து அழைக்கிறார்.பெண் ஏதாவது பார்த்து வைத்திருக்கிறாரா.இல்லை அம்மாவூக்கு ஏதாவது..
ரிஷி.நீ பத்திரமா இருக்கியா
நல்லா இருக்கேன்.புது ப்ராஜக்ட்ல இருக்கேம்பா.டைரக்டர் அடுத்த படம் துவங்கிட்டார்.அநேகமா இது ஆஸ்காரோட மூக்கை தொட்டுட்டு வரும்.அதற்கடுத்த படம் நானே எடுப்பேன்.ரஹ்மான் மாதிரி நானும் ஆஸ்காரோட திரும்புவேன்
அதுக்கில்லைப்பா.நானும் உங்க அம்மாவூம் போனவாரம்..
பொண்ணு பார்த்திங்களா.கல்யாணம் ஒரு சிறை.இப்ப வேணாம்பா.சிந்திக்கமுடியாது.கோவிலுக்கு,சினிமாவூக்கு,சொந்தக்காரங்க வீட்டுக்கு பெண்டாட்டியை அழைச்சிட்டுப் போகனும்.பிள்ளை பெத்துக்கனும்.ரேஷன் கார்டு,வோட்டர்ஸ் ஐடி வாங்கனும்.போரிங்.எனக்கு நிறைய ட்ரிம்ஸ் இருக்கு
நாங்க வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் நாடி பார்த்தம்.அதுல ஒரு அபாயகரமான சேதி கிடைச்சது
எது நான் உங்க பிள்ளை இல்லைன்னா
ஆமாஎன்றதும் ரிஷி அதிர்ந்து போனான்.அவர் கரகரத்த குரலில் பேசத் தொடங்கினார்.
அதான் புரியலை.நீ எங்க பிள்ளை இல்லையாம்.ஹாஸ்பிடல்ல குழந்தை மாறிப்போயிருக்கலாம்.அதுவூமில்லாம நீ திப்புசுல்தானோட தளபதியோட வம்சாவழியாம்
ஹ.இதபார்ராஎன்று விசிலடித்தான்.
சிரிக்காத ரிஷி.நீ யார் பெத்த பிள்ளையா வேணும்னாலும் இருந்திட்டுப் போ.அந்த திப்புசுல்தானோட ஆவி அலைஞ்சிட்டு இருக்காம்.அது உங்க வம்சத்துல வாரிசுகளை வாலிபவயசில கொன்னுட்டு இருக்காம்.இப்ப உன் முறையாம்.உன்னை அந்த ஆவி கொல்லாம விடாதாம்
நான் நம்பலைப்பா.நான் உங்க மகன்தான்.ஆவின்னு ஏதும் கிடையாது.நான் இன்ஜினியரிங் படிச்சவன்.முன்னெல்லாம் கடவூளைக் கூட லேசா நம்பிகிட்டிருந்தேன்.ஆனா  கடவூள் என்பதே இந்த -----------------ங்களோட பிழைப்புக்காக ஏற்பட்ட கற்பனையோன்னு நினைக்க வைச்சிருச்சி.ஆனா ஆவின்னு ஏதும் கிடையாது.ச்சும்மா உடான்ஸ்.எனிவே.இந்த கற்பனை நல்லா இருக்கு.எங்க டைரக்டர்கிட்ட நாளைக்கு டிஸ்கஷன்ல சொல்றேன்.படத்துல டெல்லி ஜெயப்ரகாஷூக்கு  பதிலா வேணும்னா உங்களையே நடிக்க வைச்சிரலாம்னு பார்க்கறேன்என்று சிரித்தான்.
 அவர் அழுத குரலில் ஃபோனை வைத்தார்.

யக்ஷா.நான் ரிஷி.ஒரு அவூட்டிங் போவமா.இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி ஒண்ணு இருக்கு.உன்னோட ஃபைனல் இயர் ப்ராஜக்ட்டுக்கு மினிஃபிலிமா எடுத்துர்றியா.திப்புசுல்தானோட ஆவி உலவூதாம்.என்னை கொல்லப் போகுதாம்
அவன் செல்பேசியில் இந்த தகவலைச் சொன்னதும் ஓடி வந்து விட்டாள் யக்ஷா.அவள் கண்களில் பயமில்லை.ஆர்வம் இருந்தது.இதை படமாக எடுக்கவேண்டும் என நினைத்தாள்.
நீயே ஆக்ட் குடுத்திடேன்.இந்த ந்நாட் நல்லா இருக்கு.திப்புசுல்தானோட ஆவி.காலங்காலமா பழிவாங்குது.ராத்திரி பத்து மணி ஸ்லாட் மாதிரி இருக்கு.செம் நியூஸ் குடுத்திருக்கே.வெளியில போய் பானிபூரி சாப்பிடலாமா
"ஒரு விஷயம் ரிஷி நேத்து லான்ட்மார்க் போனபோது ஒரு புத்தகம் கிடைச்சது.டாக்டர் வால்டர்செம்கிவ் எழுதின ஆரிஜின் ஆஃப் ஸோல்-ங்கற புக்.அதை படிச்சப்ப சில சுவாரஸ்யமான தகவல் கிடைச்சது.போன ஜென்மத்துல ஜவஹர்லால்நேரு இரண்டாம் பகதுரர்ஷாவா இருந்திருக்கார்.ஆனா போன ஜென்மத்துல ஜவஹர்லால் நேருவா இருந்தது புனாசிர்பூட்டோவாம்.ஒரு பட்டியலே தந்திருக்கார்.அதுல ஒரு ஜோக் என்னன்னா போன ஜென்மத்துல திப்புசுல்தானா இருந்தது அப்துல்கலாமாம்.அப்ப கலாம் உன்னைப் பார்த்தா போட்டு தள்ளிருவாரா ரிஷி"என்றாள் யஷா சிரிப்புடன்.
பிரபலங்கள் முற்பிறவியில்… 
பரக் ஒபாமா (அமெரிக்க அதிபர்) லைமென் ட்ரம்பல் (லிங்கன் காலத்தவர்)
வான் ஜோன்ஸ் (அமெரிக்கா) மகாத்மா காந்தி
அப்துல்கலாம் திப்புசுல்தான்
மேனகா காந்தி அன்னிபெசண்ட்
ஷாருக்கான் சாதனா போஸ் (நடிகை, பாடகி)
அமிதாப்பச்சன் எட்வர்ட் பூத் (அமெரிக்க நடிகர்)
ரேகா மேரி  டெவ்லின் (அமெரிக்க நடிகை)
ஜெயா அமிதாப்பச்சன் மேரி மெக் விக்கர்ஸ் (அமெரிக்க நடிகை)
ஹைதர் அலி விக்ரம் சாராபாய்
ஜவஹர்லால் நேரு இரண்டாம் பகதூர்ஷா
பெனசிர் புட்டோ ஜவஹர்லால் நேரு
"இதில ஒரு தப்பு இருக்கு யஷா.ஜவஹர்லால்நேரு சாகறதுக்கு முந்தியே 1953ல பெனாசீர் பூட்டோ பிறந்துட்டாங்க.எனிஹவ் சுவாரஸ்யமா இருக்கு தகவல்கள்"என்றான்.
 பெசன்ட் நகர் கடற்கரை அருகே நின்று பானிபூரி சாப்பிட்டுக் கொண்டு,பேசி விட்டு கிளம்பியபோது அவன் காதருகே ஒரு குதிரை கனைத்த மாதிரி இருந்தது.
குதிரை கத்தினமாதிரி சத்தம் கேட்டதே உனக்கு கேட்டதாஎன்றாள் யக்ஷா.
சே.சே.சத்தம் பத்தி வசந்த்கிட்டதான் கேட்கனும்.அவர்தான் சத்தம் போடாம த்ரில் பண்ணுவார்என்று சொல்லி விட்டு வந்தாலும் தன் காதருகில் குதிரை கனைத்த சப்தம் கேட்டது உண்மை என்று புரிந்து அவனுக்கு.
 இரவூ குதிரையில் திப்புசுல்தான் கனவில் வந்து விரட்டுவான் என்று நினைத்தான்.கனவில் நிகிலா மட்டும்தான் வந்தாள்.தப்பிதமாக ஏதோ செய்தாள்.வேறு த்ரில் கனவூ ஏதும் வரவில்லை.காலையில் எழுந்தபோது பல்துலக்கிக் கொண்டிருந்தபோது மறுபடியூம் குதிரை கனைத்த சப்தம் கேட்டது.சே.பிரமை.
 பென்டிரைவ்வையூம்,பாக்கெட் பிசியையூம் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.அடையாறு தாண்டியபோது ஒரு சேட் கல்யாண ஊர்வலத்தில் போன குதிரை திரும்பிப் பார்த்தது.அது கேலியாக சிரிக்கிற மாதிரி தெரிய அலட்சியப்படுத்தி தன்னுடைய ஹார்லே டேவிட்ஸன் பைக்கை திராட்டிலை உயர்த்தி வேகப்படுத்தினான்.
 அடுத்த சில நிமிடத்தில்தான் அந்த விபத்து நிகழ்ந்தது.
 ஒரு டிராவல்ஸ் இன்னோவா அவன் மேல் மோதிரி சாமர்சால்ட் போல துhக்கி எறிந்தது.டாக்சியின் முகத்தில் சுல்தான் டிராவல்ஸ்என்று மஞ்சள் எழுத்துக்கள் தெரிந்தன.ஏதோ ஒரு காஸ்ட்லியான மருத்துவமனை என்பது அங்கே இருந்த புஷ்டியான கலரான நர்ஸ்களைப் பார்த்தபோது தெரிந்தது.கண்விழித்தபோது-
இரண்டு பயிற்சி டாக்டர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஏய் நான் கண்டுபிடிச்சிட்டேன்.இந்த ஆக்சிரன்ட் கேஸ் ரிஷியை அட்டன்ட் பண்ணப் போற டாக்டர் பேர் என்ன தெரியூமா.திப்பு
ஆபரேஷன் தியேட்டரில் கெச்சலாகப் படுத்திருந்த ரிஷியை கத்தியூடன் அருகே வந்து கோணலாகச் சிரித்தபடி இளித்தார் டாக்டர் திப்பு.

                                                          ---------------------------------
Previous
Next Post »