ஷார்ட்ஃபிலிமிற்கான கதை திரைக்கதை வசனம்: யூவன்சங்கர்ராஜா...- விஜயநிலா:


 முன்குறிப்பு:இந்த கதையை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.ஆனால் யூவன்சங்கர்ராஜா மட்டும் படிக்க வேண்டாம்.
                                                                 காட்சி-1
(சிவா தனது லக்ஸரி காரை அந்த அபார்ட்மன்ட் பார்க்கிங்கில் நிறுத்துகிறான்.காமரா மேலிருந்து ஒரு அபார்மன்ட் சன்னலில் இருந்து அவனைப் பார்க்கிறது.இறங்கி நடக்கிறான்.லிப்டிற்கு வருகிறான்.அப்போது தன் கதையை தானே மைக்கல் டக்ளஸ், கௌதம் மேனன் படங்களில் எல்லாம் வருவது போல தனக்குத் தானே பின்னணியில் சொல்லிக்கொண்டே வருகிறான்)
சிவா:ய்யா.ஐம் சிவா.முழுப்பேர் சிவராஜ்.சொந்த ஊர் நன்னிலம்.ஆமாம்.அந்த ஊரில் கணக்கு வாத்தியாராக இருந்து பின்னாலில் திரைப்படமெல்லாம் இயக்கி தாதாசாகேப் விருது வாங்கினாரே அந்த பாலச்சந்தரின் சொந்த ஊர்தான் எனக்கும்.நீங்கள் முறைப்பது புரிகிறது.சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் நன்னிலம் என்று சுருக்கமாக சொல்வதுதானே என்கிறீர்கள். இப்போது நான் அமிஷாவின் அபார்ட்மென்ட்டுக்கு வருகிறேன்.அமிஷா தெரியூமா அமிஷா(அமிஷாவின் முகம் ஷவரில் முகத்தைத் தண்ணீர் தீற்றல்களுடன் தெரிகிறது) அவளைத்தான் அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் அமிஷா என் மனைவியல்ல.
(கதவருகே வந்து அழைப்பு மணியை அழுத்துகிறான்.அப்போது காரிடாரில் நாய்க்குட்டியூடன் நடந்து செல்லும் டீன்ஏஜ் பெண் ஹாய்ய்ய் என்று கண்ணடித்து விட்டு செல்கிறாள்.ஒரு மிலிட்டரி மேன் போன்ற தோற்றத்துடன் ஒரு தாத்தா கடந்து போகிறார்.கதவூ திறந்த அமிஷா முறைக்கிறாள்)
(உள்ளே போய் சோபாவின் அருகே தரையில் அமர்கிறான் சிவா)
அமி:எதுக்கு வந்திங்க சிவா.லெட்ஸ் அபார்ட் அஸ்.போதும் நாம பழகினது படுத்தது எல்லாம்.எனக்கு உங்களோட வைப்பாட்டியாகற இலட்சியம் எல்லாம் இல்லை.ஐ ஹவ் டீசன்ட் ஆஃபர்ஸ் ப்ரம் மில்லினேர்ஸ்.தெரியூமா(என்று ஃப்ரிட்ஜ் திறந்து கோக் எடுக்கிறாள்.மடக் என்று  குடித்து விட்டு நீட்டுகிறாள்)
(சிவா டிவி ரிமோட்டை எடுத்து சானல்களை மாற்றிக்கொண்டே இருக்கிறான் மியூட் செய்தபடி.பொறுமையிழந்து கேட்கிறாள் அமிஷா)
அமி:என்ன பண்றதா இருக்கிங்க சிவா.ஸ்வப்னா மேல பெவிக்கால் மாதிரி ஒட்டிட்டிங்களா?
சிவா:சே.சே.அவளை சும்மா கழட்டி விட முடியாது.அத்தனை சொத்துக்களும் எனக்கு கிடைக்கனும்.அதே சமயம் அவளை உதறிட்டு உன்னை கல்யாணம் பண்ணனும்.அதுக்கு கொஞ்சமா யோசிச்சா போதும்.ஆனா லாஜிக் இடறாம யோசிக்கனும்.
அமி:நீங்க ஏன் அவளை இபிகோ 302 பண்ணக் கூடாது?ஏன் பயமா இருக்கா?
சிவா:கொலையா?சட்டுனு செய்ய முடியாது அமி.அதுக்கும் டைம் வரனும்
அமி:ஆட்களை வைச்சி பண்ணலாம்ல?
சிவா:அதுக்கும் டைம் வரனும்.இல்லைனா அவனுங்க பண்ணற சின்ன மிஸ்டேக் கூட நம்ம கோட்டையை கலைச்சிடும்.பொறுமையா இரு.
சிவா:அப்ப நீங்களும் பொறுமையா வேற எவகிட்டயாவது போய் அணைச்சிக்கிட்டு வாசனை பார்க்கறதுதான.அதுக்கு மட்டும் என்கிட்டதான் வரனுமா
அமி:உன் கோபம் புரியூது என் மானசீக பெண்டாட்டியே.கொஞ்சம் பொறு.என் பெண்டாட்டி ஸ்வப்னாவை தீர்த்துட்டு உன் மனசை குளிர வைக்கறேன்(என்றதும் அவனை கீழே தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அவன் தலையைக் கலைக்கிறாள்.அவன் சிரிக்க குனிந்து அவனை அவள் முத்தமிட முயலும்போது காட்சி கட்)
                                                             காட்சி -2
(புதிதாய்  ஒரு நெக்லெஸ்ஸை தன் கழுத்தில் சிவா அணிவிப்பது கண்டு திகைக்கிறாள் ஸ்வப்னா.டிரஸ்ஸிங் டேபிளில் அமர்ந்திருந்தவள் எழுந்து அவனை கண்களுக்குள் உற்றுப் பார்க்கிறாள்.சொல்கிறாள்)
ஸ்வ:என்னங்க. கண்ல லவ் தெரியலையே.பொய்தான தெரியூது
சிவா:ஆமா.ஆபீஸ் எல்லார்கிட்டேயூம் ஒரு பிசினஸ் டீலுக்காக யூகே போறதா சொல்லிட்டேன்.அது போய்.ஆனா உன்னை அழைச்சிட்டு இப்ப கோடைக்கானலுக்குப் போகலாம்னு இருக்கேன்.
ஸ்வ:கோடைக்கானல் போர்அங்க நிறைய குப்பைங்க.வேணும்னா ஸ்விஸ் மாதிரி ஊருக்குப் போகலாமா
சிவா:அங்கெல்லாம் போனா நான் எங்க இருக்கேன்னு கெஸ் பண்ணிடுவாங்க.கோடைக்கானல் மாதிரி சின்ன ஊருக்கெல்லாம் நான் போவேன்னு யாரும் நினைக்க மாட்டாங்க.அதனால அங்கயே போவம்
ஸ்வ:எதுக்குங்க இந்த ட்ரிப்.எத்தின நாள் தங்கறம்
சிவா:ம்..நீ என்னையூம் நான் உன்னையூம் பாட்டரி ரீசார்ஜ் செய்துக்கறதுக்குத்தான்.
ஸ்வ:(எல்லா பெண்கள் போலவே ச்சீய் என்று அவன் முதுகில் குத்துகிறாள்)இருங்க.உங்க டிரஸ் ரெண்டு மூணு செட் எடுத்து வைச்சிர்றேன்
சிவா:நானே எடுத்து வைச்சிட்டேன்.நீ வந்தா போதும்.கார் ரெடியா இருக்கு.செல்ப் டிரைவிங்தான்.வா(கார் கிளம்புகிறது.அவன் மேல் பட்டுக்கொண்டே வருகிறாள் ஸ்வப்னா)
                                                     காட்சி -2
(கோடைக்கானல்.ஒரு ஹோட்டலுக்குள் கார் நுழைகிறது.அப்போது ஒரு ரோஜா ஏந்திய கரம் க்ளோஸ்அப்பில் வந்து போகிறது.அறைக்குள் வந்ததும் அவளை லேசாக கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தமிடுகிறான் சிவா)
ஸ்வ:விடுங்க களைப்பா இருக்கு.ஒரு குளியல் போட்டுட்டு வந்திர்றேன்
சிவா:தனியாவா
ஸ்வ:ம்.உதைப்பேன்.நாம என்ன ஹனிமுனா வந்திருக்கம்.பேசாம உட்காருங்க.ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன்
சிவா:எத்தினி நிமிஷத்துல வேணும்னாலும் வா.ஆனா மறுபடி குளிச்சிட்டு வர்றேங்கன்னு சொல்ல வைச்சிருவேன் பாரு
(முறைத்து பாத்ரூமிற்குள் போகிறாள்).
அப்போது அவளது செல்லிற்கு ஒரு போன் வருகிறது.எடுக்கலாமா என்று யோசித்து எடுக்கிறான்-
சிவா:ஹலோ..யாரு..
குரல்:ஸ்வப்னா இருக்காங்களா..
சிவா:ஷீஸ் அவூட் ஆஃப் ஸ்டேஷன்.யார் நீங்க
குரல்:அவ கோடைக்கானல்லதான் இருக்காள்னு தெரியூம் பிரதர்.போனை ஸ்வப்னாகிட்ட கொடுங்க
சிவா:(எரிச்சலாகிறான்) லுக் யார் நீ
குரல்:யூவன்னு சொன்னா அவளுக்கு தெரியூம்.நான் அப்புறமா பார்த்துக்கறேன்.
(போனை வைத்து விட்டு சிவா புரியாமல் பார்க்க அவனுக்கு போன் வருகிறது.எடுத்தால் அது அமிஷா)
சிவா:என்ன அமி இந்த நேரத்துல
அமி:ஏன் மினி ஹனிமூனை நான் டிஸ்டர்ப் பண்றனா.எப்படி இருக்கா உங்க பெண்டாட்டி
சிவா:அமி.இப்ப அவளுக்கு ஒரு போன் வந்துச்சி
அமி:யார் பேசினது ஆணா?பொண்ணா?
சிவா:யாரோ ஒரு பய.யூவன்னு பேர் சொன்னான்
சிவா:அப்ப உட்கார்ந்து யோசிச்சித் தொலைக்க வேண்டியதுதான.நீயா எதிர்பார்க்காம யூவன்னு ஒரு காரக்டர் சரியா வந்து மாட்டுது.சீன் ஆஃப் க்ரைமை யோசிச்சி வை(என்பதற்குள் குளித்து முடித்து ஸ்வப்னா வர அவன் முகம் மாறுகிறது)
ஸ்வ:யாருங்க அது போன்ல..
சிவா:ஒரு ப்ரன்ட்..உனக்கு கூட ஒரு நண்பர் போன் பண்ணினாரு ஸ்வப்னா..
ஸ்வ:என்னங்க நான் உண்மையை சொல்லிர்றேன்.அது நிச்சயம் யூவனாகத்தான் இருக்கும்.யூவன்.அவன்தான் ஃபோன் பண்ணியிருக்கனும்
சிவா:யாரந்த யூவன்?
ஸ்வ:என் கூட காலேஜ்ல படிச்சவன்.நாம கோடைக்கானலுக்கு போலாம்னு நீங்க சொன்னதை அவன் எப்படியோ கண்டு பிடிச்சிட்டான்னு நினைக்கறேன்.நாம ஊர்ல இருந்து கிளம்பறதுக்கு முந்தியே போன் பண்ணியிருந்தான் கோடைக்கானல்ல உன்னை சந்திக்கறேன்னு
சிவா:நான்சென்ஸ்.அவன் எதுக்கு உனக்கு போன் பண்றான்.நான் உன்னை சந்தேகப்படலை ஸ்வப்னா.நீ என் ஏஞ்சல்.அவனை அடிச்சி உதைச்சி அனுப்ப வேண்டாமா?
ஸ்வ:வேணாம் சிவா.நம்ம தனிமை கெட்டுடும்.நாம சந்தோஷமா இருக்கறதுக்கு அவன் இடைஞ்சல் பண்ணினா அப்புறம் போலீஸ்ல அவன் மேல கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்.எனக்கு பசிக்குது.ரெஸ்ட்டாரென்ட் போவமா.ஏதாவது வாங்கிக் கொடுங்க
சிவா:ஆல்ரைட்.வா போலாம்



                                  

                                                    காட்சி-2பி

(ரெஸ்ட்டாரென்ட்டில் மெனுகார்டு எடுத்து மறைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டு எதிர் டேபிளில் ஒருத்தன் உட்கார்ந்திருப்பது பார்த்து கோபமடைந்த சிவா அங்கு செல்கிறான்.அந்த ஆள் சிரிக்கிறான்)
அவன்:ஹலோ.என்ன நான் உங்க வொஃய்ப்பை பார்க்கறேன்னு

 நினைச்சிட்டிங்களா.இன்ஃபாக்ட் நீங்க உட்கார்ந்திருக்கற டேபிள் நான் வழக்கமா ரிசர்வ் பண்ணியிருக்கறது.அதான் இங்க வந்து உட்கார்ந்து யாரது நம்ம டேபிள்ல புதுசான்னு பார்த்தேன்
சிவா:(கூலாகி) ஓ..வெரி சாரி.வாங்களேன் எங்க டேபிள்லயே வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க
அவன்:அப்ப நான்தான் உங்களுக்கு ட்ரீட் தருவேன்.நீங்க அதை மறுக்க கூடாது
சிவா:அதெல்லாம் வேண்டாம்.நீங்க இங்கயே இருங்க.பை(என்று வந்து விடுகிறான்)
(சிவா வந்து அமர்ந்ததும் முகம் மாறிப்போயிருந்த ஸ்வப்னா கிசுகிசுப்பாக அவனிடம் சொல்கிறாள்)
ஸ்வ:என்னங்க..அவன்தான் யூவன்
சிவா:என்ன.என்ன சொல்ற ஸ்வப்னா.போய் அவன் முகரையைப் பேர்த்துரட்டுமா(கைகளை உயர்த்துகிறான்.அப்போது அதை கவனித்து விட்டு எழுந்து அங்கே வருகிறான் யூவன்)
யூவன்:என் மேல உங்களுக்கு கோபம் இருக்கும் சிவா.அது வாஸ்தவம்தான்.ஆனா உங்களுக்கு முன்னாலயே ஸ்வப்னாவை..
சிவா:வ்வாட்..
யூவன்:எனக்கு தெரியூம்னு சொல்ல வந்தேன்.ஸ்வப்னா ரொம்ப நல்லப் பொண்ணு.நான் கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு.ஜாதகம் சரியில்லைன்னுட்டாங்க.எனிவே விஷ்யூ எ ஹாப்பி மேரீட் லைஃப்(என்று சிவாவிடம் கை கொடுத்து புன்னகைக்கிறான்)
ஸ்வ: பை யூவன்.அப்புறம் பார்க்கலாம்
யூவன்: பார்த்திங்களா சிவா சார்.என்னை அப்புறம் வரச்சொல்றாங்க மேடம்.பார்க்கலாம்னா அதுதானே அர்த்தம்.அப்புறமே வரேன் ஸ்வப்னா(என்று போய் விடுகிறான்)
சிவா:என்ன ஸ்வப்னா இது
ஸ்வ:நான் பொதுவாத்தான் சொன்னேங்க.அவன் என்னமோ பத்த வைச்சிட்டுப் போறான்.எனக்கு சாப்பிடவே பிடிக்கலை.நான் ரூமுக்குப் போறேன்(என்று ஸ்வப்னா போகும் திசையையே பார்த்துக் கொண்டிருக்கிற சிவா தனக்குள்:வ்வா.இந்த முன்னாள் காதலன் யூவன் ஸ்வப்னாவை அடைய முயற்சி செய்கிறான்.அந்த போராட்டத்துல அவளை கொல்லப் பார்க்கிறான்.இதுதான் சீன் ஆஃப் க்ரைம்.முடிவில ஸ்வப்னா செத்துர்றா.நான் டிரமாட்டிக்கா போலீஸ்ல அழுது நடிச்சிட்டு ஊருக்குப் போயிருவேன்.ஸ்வப்னாவோட சொத்துக்கள் எனக்கு வந்துரும்..)

                                                            காட்சி-2 சி

(அறைக்கு வரும்போது ஸ்வப்னா கலவர முகத்துடன் நிற்கிறாள்)
சிவா:என்னாச்சு ஸ்வப்னா.தலை வலிக்குதா?
ஸ்வ:இல்லிங்க.அவன் வந்திருந்தான்..
சிவா:யூவனா?
ஸ்வ:ஆமாங்க.அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினான்
சிவா:வா.லெட்ஸ் கோ டு போலீஸ்(தனக்குள்:தானா வந்து மாட்டுதுங்க பாரு.நாளைக்கு ஸ்வப்னாவை நான் தீர்த்துட்டாலும் அந்த யூவன் தானா வந்து மாட்டுவான் போல..)
ஸ்வ:வேணாங்க.அவன் மறுபடி தொந்தரவூ பண்ணினா பார்த்துக்கலாம்
சிவா:ஆரம்பத்துலயே சொல்லிர்றது நல்லது ஸ்வப்னா.அப்புறம் போலீஸ்லயூம் இதைத்தான் சொல்வாங்க..
ஸ்வ:வேணாங்க.ஏதாச்சும் ஆனா பார்த்துக்கலாம்.அப்புறம் அவன் சொல்றான்.நான் அவனுக்கு கிடைக்காததால அவன் உங்களை கொன்னுருவானாம்.
சிவா:என்ன சொல்றடா..
ஸ்வ: இதபாருங்க.அவன் பேசினதை அவனுக்குத் தெரியாம என் செல்லுல வாய்ஸ் ரெக்கார்டர்ல பதிவூ பண்ணி வைச்சிருக்கேன்
சிவா:குட்.இது ஒரு நல்ல விட்னஸ்.பின்னால பார்த்துக்கலாம்.நீ படுத்து துரங்கு.
                   
                                                              காட்சி- 3

(மறுநாள் அவர்கள் வெளியே போகிறார்கள்.ஒரு தனியான இடத்தில் பாறையின் விளிம்பில் உட்கார்ந்திருக்கிறபோது)
சிவா:இன்னும் உன் கண்ல பயம் விலகலை ஸ்வப்னா.நீ இன்னும் அந்த யூவனை நினைச்சிட்டு இருக்கேன்னு நினைக்கறேன்
ஸ்வ:இல்லிங்க.அவன் உங்களை கொலை செய்துவேன்னு மிரட்டினானே.அதை நினைச்சித்தான் பயமா இருக்கு
சிவா:என்னையா.அவனா.அவன் கிடக்கறான் பச்சா.டோன்ட் ஒர்ரி.சந்தோஷமா இந்த தனிமையை அனுபவிப்பம் வா.ஊர் திரும்பிப் போயிட்டம்னா அந்த சிட்டி லைப்ல இதெல்லாம் கிடைக்காது
(அப்போது ஒருத்தன் மங்க்கி குல்லா அணிந்து குளிர் கண்ணாடியை கழற்றிக்கொண்டே கை தட்டியபடி வருகிறான்.பழைய கால படங்களில் எல்லாம் பாக்யராஜ் போல இரு கைகளையூம் டிராபிக் கான்ஸ்டபிள் போல உயர்த்திக் கொண்டு  பேசிக்கொண்டே வருகிறான்)
சிவா:(கோபமாக) யார்யா நீ
அவன்:ஐம் யூவன்.முழுப்பேரு யூவன்சங்கர்ராஜா.ஆனா நான் 'போகாதேதேதேதேன்னு இழுழுழுத்துப் பாட மாட்டேன்.ஏன்னா ஸ்வப்னா என்னை விட்டுட்டு உன்கூட போயிட்டது நல்ல தெரிஞ்சே அந்த கல்யாணத்தை அனுமதிச்சவன்
ஸ்வ:என்னது நீதான் யூவனா..
யூவன்:பின்னே.நேத்து உங்ககிட்ட ரெஸ்ட்டாரென்ட்ல பேசினவன்தான் யூவன்னு நினைச்சிங்களா.நான்தான் அக்மார்க் ஒரிஜினல் யூவன்.
சிவா:யாரு நீ..
யூவன்:உன் பெண்டாட்டியோட டிரைவிங் ஸ்கூல்ல ஒண்ணா ஸ்டியரிங் பிடிச்சவன்.நான் ஸ்டியரிங் பிடிச்சு அவளுக்கு சொல்லிக்கொடுத்தா வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதுன்னு கவித எல்லாம் சொல்வா.அதெல்லாம் ஒரு காலம் பிரதர்..அது ஒரு காலம்..(என்று பாடுகிறான்)
சிவா:லுக்.தனியா இருக்கற எங்ககிட்ட வந்து நீ வம்பு பண்றேன்னு நான் போலீஸ்ல சொல்வேன்.போலீஸ் எதுக்கு போலீஸ்.நானே உன் முகரையைப் பேர்த்து பள்ளத்துல தள்ளிருவேன்.அப்புறம் பொறுக்கினாலும் உன் எலும்பு கிடைக்காது
யூவன்:ஆல்ரைட்.நான் வர்றேன்.ஆனா நோட் பண்ணிக்க பிரதர்.ஸ்வப்னா எனக்குத்தான்(அவன் போனதும் குழப்பமாக கேட்கிறான் அவளிடம் சிவா)
சிவா: இது யாரு ஸ்வப்னா.நேத்து வந்தவன் வேற.இப்ப இன்னொருத்தன் தன் பேரு யூவன்னு கிளம்பியிருக்கான்.என்ன நடக்குது இங்க..
 ஸ்வ: தெரியலைங்க.இவன் யார்னே தெரியலை.யாரோ நம்மகிட்ட விளையாடறாங்கன்னு நினைக்கறேன்.எனக்கு மூடு இல்லை.வாங்க ரூமுக்குப் போலாம்..(போகிறார்கள்)
-அறைக்கதவை திறக்கப் போனபோது கதவூ திறந்தே இருப்பது தெரிய
உள்ளே ஒருத்தன் பர்கர் கடித்துக் கொண்டு டிவியில் ஐபிஎல் பார்த்துக் கொண்டிருக்கிறான்-
ஸ்வ:என்னங்க..இது நம்ம ரூம்தானா..உள்ள ஆள் யாரோ இருக்கற மாதிரி இருக்கு..
அவன்:ஹலோ உள்ள வாங்க.நான்தான் கதவை திறந்துட்டு உள்ள வந்து காத்துகிட்டிருக்கேன்.லாக்கர்ங்களையே ச்சும்மா திறந்துடுவேன்.இது என்ன அறைக்கதவூ பச்சா..(என்று சிரிக்கிறான்)
சிவா:(கடுங்கோபமாக) யார்ரா நீ
அவன்: யூவன்.மை நேம் இஸ் யூவன்.
சிவா:(அதிர்ந்து) என்னது யூவனா..
யூவன்: ஆமா.யூவன்தான் என்னோட பேரு.ஏன் அதிர்ச்சியா இருக்கா.இன்ஃபாக்ட் என்னை ஸ்வப்னா யூவ்வான்னு தான் செல்லமா கூப்பிட்டு தலைல தட்டுவா.நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா..
சிவா:காலேஜ்ல படிச்சிங்களா.இல்லை டிரைவிங் ஸ்கூல்ல படிச்சிங்களா..
யூவன்:சே.சே..ரெண்டு பேரும் ஒண்ணா சோஷல் வொர்க் பண்ணியிருக்கம்.கிராமம் கிராமமா போயி..அப்ப ஒரு கிராமத்துல கூட ரெண்டு பேரும்..நைட்..
சிவா:நிறுத்துரா நாயே..
யூவன்: நைட் பள்ளிக்கூடத்துல பெரிசுங்களுக்கு பாடம் நடத்தியிருக்கம்னு சொல்ல வந்தேன்.நீ ஏதோ நாங்க என்னமோ தப்பு தண்டா பண்ணியிருந்தமோன்னு நினைச்சிக்கிட்டியா.அதெல்லாம் ரொம்ப ஈசி.இப்ப கூப்பிட்டா கூட ஸ்வப்னா வரேன்டா யூவ்வா செல்லம்னு வந்துடுவா.அப்புறம் உன் ஹனிமூன்தான் கெட்டுடும்..
ஸ்வ:டேய் யார்ரா நீ.எத்தினி பேரு இப்படி கிளம்பியிருக்கிங்க என் நிம்மதியை கெடுக்கனும்னு..
ஸ்வ:என்னங்க ஹோட்டல்அத்தாரிட்டிசை கூப்பிடுங்க.இவனை அவங்ககிட்ட ஒப்படைப்பம்(என்பதற்குள் அவன் எழுந்து வெளியே வந்து விடுகிறான்)
யூவன்:உங்களுக்கு அவ்வளவூ சிரமம் வேண்டாம்.நானே போயிர்றேன்.ஆனா ஸ்வப்னா..நாம கிராமம் கிராமமா போனதெல்லாம் மறந்துட்டியா.எல்லாரும் கைவிரல்லதான் மருதாணி போடுவாங்க.ஆனா நான் உனக்கு கால் விரல்கள்ல மருதாணி அரைச்சி போட்டு விட்டு அழகு பார்த்தேனே மறந்துட்டியா..(என்றபடி போய்விடுகிறான்)
சிவா:ஐ ஜஸ்ட் கன்ஃப்யூஸிங் ஸ்வப்னா.என்ன நடக்குது இங்க.எத்தினி பேர் இன்னும் யூவன்னு இருக்காங்க.பேசாம சென்னைக்கு போன்போட்டு யூவன்சங்கர்ராஜாவையே கூப்பிட்டு கேட்டுடவா அந்தாளுக்கும் உன்னைத் தெரியூமான்னு..
ஸ்வ:என்னை நம்புங்க சிவா.இது யாரோ பண்ற சதின்னு புரியூது.ஆனா எதுக்காக என்னை வம்புக்கு இழுக்கறாங்கன்னு தெரியலை..
சிவா:இன்னொரு தரம் எவனாவது யூவன்னு வரட்டும்.மவனே அவன் கழுத்தை நெரிச்சிக் கொன்னுர்றேன்(என்பதற்குள் கதவை தட்டி விட்டு ஒரு கொரியர்காரன் வந்து நிற்கிறான்.அவன் கைகளில் ஒரு பொக்கே)
அவன்:இங்க ஸ்வப்னாங்கறது..மேடம் நீங்கதானா.உங்களுக்கு இந்த பொக்கேயை தரச்சொல்லி ஒரு கஸ்டமர் புக் பண்ணிட்டுப் போனார்.கையெழுத்து போட்டுட்டு வாங்கிக்கங்க..
சிவா:(எரிச்சலாக) யாருப்பா அப்படி ஒரு கஸ்டமர்..
அவன்:தெர்லே சார்.இருங்க அனுப்பிய ஆள் பேரை லிஸ்ட்ல பார்க்கறேன்.இதோ இருக்கு.ம்..யூவன்னு போட்டிருக்கு சார்.முழுப்பேரு என்ன யூவன்சங்கர்ராஜாவா,மேடத்துக்கு மியூசிக் டைரக்டரெல்லாம் பழக்கமா சார்.மேடம் நீங்க சினிமா நடிகையா..
சிவா:இவ சினிமா நடிகையோ இல்லையோ ஆனா சரியான நடிகைன்னு தெரியூது.நீ கொடுத்துட்டுப் போப்பா..
(அவன் 'சினிமாகாரங்க போலருக்கு.அதான் சண்டை போட்டுக்கறாங்க போலருக்கு.நமக்கெதுக்கு பொல்லாப்பு' என்று நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே போய் விடுகிறான்)



                                       காட்சி 3


சிவா:ஸ்வப்னா.திஸ் இஸ் தி லிமிட்.வா போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டு வந்திரலாம்
ஸ்வ:எனக்கும் அதுதாங்க சரின்னு படுது.தெரியாத ஊர்ல எவன் எவனெல்லாமோ யூவன்னு பேரைச் சொல்லிக்கிட்டு வந்து வம்பிழுக்கறான்.கிளம்புங்க நான் ரெடி
(கிளம்புகிறார்கள்)
-கார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்க உள்ளே செல்கிறார்கள்.
அங்கே அவர்களுக்கு முதுகைக்காட்டிக்கொண்டு டேபிளின் மேல் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருக்கிற இன்ஸ்பெக்டர் சைடில் திரும்பிப் பார்த்து கேட்கிறார்-
இன்:வாங்க..என்ன ஏதாவது விபரம் கேட்கனுமா
சிவா:ஒரு கம்ப்ளெயின்ட் கொடுக்கனும்.சிலபேரு என்கூட விளையாடறாங்க..
இன்:என்னது.விளையாடறாங்களா.ஐபிஎல் சீசன்ங்கறதுக்காக விளையாடறாங்கன்னு பொதுவா சொல்லாதிங்க.புரியறாப்ல சொல்லுங்க.
ஸ்வ்: சம்படி ஒரு பேரைச் சொல்லிக்கிட்டு என்னை என் கல்யாணத்துக்கு முன்னாடில இருந்தே தெரியூம்னு சொல்லிட்டு வந்து வம்பிழுக்கறாங்க சார்
இன்:அவங்க யார்னு தெரியூமா.செல்லுல காமரா இருக்குமே.அப்படியே ஒரு ஸ்நாப் எடுத்திருக்கறதுதான..
ஸ்வ:அந்த ஐடியா ஸ்ட்ரைக் ஆகலை.ஆனா அவன் இவரை கொன்னுருவேன்னு மிரட்டினதை மட்டும் ரெக்கார்டு பண்ணியிருக்கேன்.
இன்:அது போதும்.செல்லைக்கொடுங்க.சிஸ்டத்துல வாய்சை அப்லோடு பண்ணினதும் வாங்கிக்கலாம்.என்ன சொல்றான்.யாரு அவன்.எத்தினி பேரு..
(அப்போது அந்த இன்ஸ்பெக்டரை கவனிக்கும் சிவா ஸ்வப்னாவிடம் சொல்கிறான்)
சிவா:வா ஸ்வப்னா போயிருவம்.கம்ப்ளயின்ட் கொடுக்க வேண்டாம்..
ஸ்வ:ஏன்..என்ன ஆச்சுங்க..
சிவா:ஸ்வப்னா.இன்ஸ்பெக்டரோட மார்ல பாரு.என்ன பேர் போட்டிருக்குன்னு..
ஸ்வ:(பார்த்தபடி) யூவன்னு போட்டிருக்கு.யூவன்சங்கர்ராஜான்னு போட்டிருக்கு..
இன்:யெஸ்.என்னோட பேரு அதுதான்.என்னய்யா உனக்குப் போயி பாட்டு பாடறவன் பேரை வைச்சிருக்காங்கன்னு டிபார்ட்மன்ட்ல அடிக்கடி கேட்பாங்க..என் பேரு யூவன்னு இருந்தா உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கா..
சிவா:ஒரு பிரச்சனையூம் இல்லை.நாங்க வர்றௌம் இன்ஸ்பெக்டர்..
இன்:நானும் ஒரு உண்மையை சொல்லிர்றேன்.இத்தினி நேரம் ஸ்வப்னா என்னை தெரியாத மாதிரி நடிக்கறதை பார்த்துட்டு பேசாம இருந்திரலாம்னுதான் நினைச்சேன்.நானும் ஸ்வப்னாவூம் சின்ன வயசில பக்கத்து பக்கத்து வீட்டுல இருந்தம் சேலத்துல.என்ன ஸ்வப்னா உன் கல்யாணத்துக்கு எனக்கு அழைப்பிதழ் தரலையே.ஓ..நான் இந்த ஊர்ல இருக்கறது உனக்கு எப்படி தெரியூம்..
சிவா:இன்ஸ்பெக்டர்.என்னவோ தப்பு.யாரோ என்னமோ பண்றாங்க.யார் உண்மையான யூவன்னு தெரியலை..
இன்:ஏன்?நான்தான் யூவன்.என்ன சந்தேகம்.
சிவா:அப்ப ஹோட்டல் ரூம்ல ரெஸ்டாரென்ட்ல பிக்னிக் ஸ்பாட்லன்னு வந்ததெல்லாம் யூவன் இல்லையா..
ஸ்வ:வாங்க போலாம்.எனக்கு மறுபடி மைக்ரேன் வந்தாச்சு.தலை வலிக்குது..
இன்:ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக்கொடுத்திட்டு போங்க மேடம்.
சிவா:இல்லை.வேண்டாம் சார்..வர்றௌம்..வா ஸ்வப்னா போலாம்.
                                                       காட்சி 3 பி

-அன்றிரவூ:கால்களை கட்டிக்கொண்டு அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஸ்வப்னா மெலிதாய் விசும்புகிறாள்.
சிவா:எனக்கு மறுபடி அங்க போகனும் போல இருக்கு ஸ்வப்னா..
ஸ்வ:எங்க?
சிவா:அந்த இடத்துக்கு.காலைல போயிருந்தமே.சூசைட் கார்னருக்கு பக்கத்துல பாறை விளிம்புல.அங்க கூட உன்னோட ஒரு யூவன் வந்திருந்தாரே..
ஸ்வ: நீங்க என்னை நம்பலைன்னு தெரியூது.படுங்க.காலைல போலாம்.உங்க கண் முன்னாலயே நானே அங்க இருந்து குதிச்சிர்றேன்.
சிவா:இல்லை எனக்கு அந்த போகனும்.அந்த யூவன் நம்பர் இரண்டை அடிச்சி துரக்கி பள்ளத்துல போடனும் போல இருக்கு..
ஸ்வ:வேண்டாம்.படுங்க..
-பாதி ராத்திரியில் எழுந்து பார்க்கிறான்.அருகே ஸ்வப்னா இல்லை.
அவள் பெயரைச் சொல்லி அழைத்துப் பார்க்கிறான்.டாய்லட் திறந்து பார்க்கிறான்.எங்கேயூம் அவள் இல்லை.
எங்கே போய் விட்டாள்?குழப்பமாக இருக்கிறது அவனுக்கு.அவனது உள் மனம் அந்த பிக்னிக் ஸ்பாட்டிற்கே போ அங்கேதான் சூட்சுமம் இருக்கிறது என்று உணர்த்துகிறது.கிளம்புகிறான்.
(வெளியே வருகிறான்.ஒரு டாக்சியை அழைக்கிறான்.ஏறுகிறான்.பாதி வழியில் விசிலடித்த டிரைவர் சொல்கிறான்)
டிரை:சார்.காலைலயே உங்களை ஸ்டேஷன் பக்கத்துல பார்த்தேன்.நீங்க ஸ்வப்னாவோட ஹஸ்பன்ட்தான.நானும் ஸ்வப்னாவூம் ஒரே ஊர்காரங்க.என் பேரு யூவன்!
சிவா:(அதிர்ந்து போய்)என்னது?
டிரை:யூவன்சார்.என்னோட பேரு யூவன்சங்கர்ராஜா.
சிவா: ஐம் நாட் எ ஃபூல் மிஸ்டர்.வண்டியை ஒழுங்கா ஓட்டு.சூசைட் கார்னருக்குப் போ..
டிரை:இந்த நைட் நேரத்துலயா சார் அங்க போகனும்.(என்றவன் 'என்ன ஆளுங்கப்பா.சொந்த பேரைக் கூட சொல்ல விட மாட்டேங்கறாங்க' என்று முணுமுணுக்கிறான்)
-அதற்குள் கார் அந்த படுபாதாள விளிம்பிற்கு வந்திருந்தது.அங்கே சிரித்தபடி வரவேற்கிறாள் ஸ்வப்னா.
சிவா:(இறங்கியபடியே அதிர்ந்து) ஸ்வப்னா..நீ எ.எப்படி இங்க..
ஸ்வ:கதை வசனம் புரியலைல்ல? நான் சொல்றேன்.இந்த திரைக்கதையை நான்தான் எழுதினேன்.எதுக்கு தெரியூமா உன்னை முடிக்க.
சிவா:அடிப்பாவி.என்னை கொல்றதுதான் உன் திட்டமா..இத்தனை பச்சைத் துரோகியா நீ..உன்னைப் போய் அப்பாவின்னு நம்பினேனே..
ஸ்வ:பின்ன.நீங்க மட்டும்.என்னைக் கொல்றதுக்குத்தானே இந்த கோடைக்கானலுக்கு அழைச்சிட்டு வந்திங்க..கொஞ்சநாளாவே உங்க நடவடிக்கை சரியில்லைன்னு ஒரு போஸ்ட்மாரிடல் துப்பறியூம் நிறுவனத்துகிட்ட விசாரிக்கச் சொன்னப்பதான் நீங்க அமிஷாவோட மடியில விழுந்து கிடந்தது தெரிஞ்சது.அமிஷா காசுக்காக எதையூம் தர்றவ.என் சொத்துல பாதியை எழுதித்தர்றதா சொல்லி எழுதியூம் கொடுத்தேன் அவளுக்கு.அதனால அவ என் கட்சிக்கு வந்திட்டா.இன்ஃபாக்ட் இந்த டிராமாவை ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்துதான் எழுதினம்.நீங்க என்னை யூவன்கற ஆளை கொல்வேன்னு பல சந்தர்ப்பங்கள்ல சொன்னதை பலபேரும் பார்த்த சாட்சிகளை ரெடி பண்ணிட்டேன். உங்களை குழப்பறதுக்காகத்தான் அங்கங்க யூவன்சங்கர்ராஜாங்கற பேர்ல சிலரை நடிக்க வைச்சேன்.குழப்பத்துல உங்களோட மர்டர் ப்ளான் ஸ்தம்பிச்சிடுச்சி.என்னோட ப்ளான் வொர்க்அவூட் ஆகிடுச்சு.செத்துடு புருஷா!இப்ப சீன் என்ன தெரியூமா.நீங்க யூவனை கொல்ல முயற்சிக்கும்போது சண்டையில கை நழுவி படுபாதாளத்துல விழுந்து செத்துப் போயிடறிங்க.நண்பா யூவன்சங்கர்ராஜா..வா வந்து சாரை துரக்கி கடாசு பாதாளத்துல பத்திரமா செத்திரட்டும்..
(அந்த யூவன் வந்து சிவாவை பள்ளத்தில் தள்ள சிவா மெல்ல மெல்ல படுபாதாளத்தில் தீனமான அலறலுடன் போய் விழுகிறான்)
ஸ்வப்னா சிரித்துக் கொண்டே டாக்சியில் ஏறுகிறாள்.டாக்சியின் டிவிடி ப்ளேயரில் யூவன்சங்கர்ராஜாவின்   . பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது.

                                                           (முற்றும்)
Previous
Next Post »