'சிலவேளைகளில்
எனக்குள் நினைத்துக்கொள்வதுண்டு
சின்னஞ்சிறு வயதிலேயே
நாம் சந்தித்திருக்கலாமே என்று
எங்கேயோ
எப்படியோ
நீ வளர்ந்திருப்பாயே
அதையெல்லாம் பார்க்காது போனேனே
சட்டென்று
எங்கோ திரும்பிப்பார்த்தபோது
எதிர்ப்பட்டாய்
அப்படி பார்க்கும்போதே
குழந்தைத்தனம் மாறாத முகத்துடன்
நீயிருந்தாய்
ரெஸ்டாரென்ட்டில்
பாய்ஃப்ரன்ட்ஸ் புடைசூழ
அந்த ஷாப்பிங் மாலையே
கலர்புல் ஆக்கினாய்
எட்ட இருந்து
பார்த்துக் கொண்டிருந்த
எனக்குள்
ஏனோ இப்படி தோன்றியது
சின்ன வயதிலேயே
உன்னை சந்தித்திருக்கலாமே என்று
பரவாயில்லை
இன்னமும்
மிச்சம் வைத்திருக்கிறாய்
குறும்புத்தனத்தையூம் விளையாட்டுத்தனத்தையூம்
உன் டேபிளுக்கு
அருகே வந்து அமரத்தான் ஆசை
எட்ட இருந்தே
ரசிக்கச் சொல்கிறது மனம்
அத்தனை பசங்களுக்கும்
கைகுலுக்கி விட்டு
எனக்கு மட்டும்
கண்குலுக்கி விட்டு செல்கிறாயே
அட
வெளியேயூம்
மழை கொட்டத் துவங்கி விட்டது
குடை எடுத்து
விரித்து விடாதே
நானும் வந்து விடுகிறேன்

உன்னோடு நனைய...'
Previous
Next Post »