"நிறைய அழகாய் ஒரு பெண்ணும் கொஞ்சம் ஆபத்தும்..." ---விஜயநிலா



  அனில்மல்லைய்யாவூக்கு !யமாக இருந்தது.அந்தப் பெண் தற்செயலாக தன் காரில் வந்து விழுந்திருக்கிறாள் என்று நினைத்தார்.தவறு.அவள் வேண்டுமென்றே அந்த சிவப்பு நிற மர்சிடிஸில் விழுந்திருந்தாள்.அடி ஏதும் படவில்லை.இறங்கினார்.அவளை தன் காரில் திணித்தபோது வாசனையாக இருந்தாள்.மெல்ல கிறக்கமாய் பார்த்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
 மென்மையாய் இருந்தாள்.மாடல் அழகி போன்ற உடல்கட்டு.இறகு போல இருந்தாள்.மெல்ல காரை நிறுத்தினார்.
நான் எங்கே இருக்கேன்.நீங்க மிஸ்டர் அனில்தானேஎன்றாள்.
ஒரு சின்ன ஆக்சிடன்ட்.உன்னை எங்கே கொண்டு செல்லட்டும்.ஹாஸ்பிடலுக்கா இல்லை உன் அபார்ட்மன்ட்டுக்கா
உங்களோட இடத்துக்குப் போகலாம்.நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்
பார்டன்
 “உங்க விமான சர்வீஸ் இன்னும் சரியப்போகுது.பெருத்த நஷ்டம் வரப்போகுது
நீ ஏதாவது குறி சொல்ற பொம்பளையா.உனக்கு பணம் ஏதாவது வேணுமா
நான் சொல்லப் போற விஷயத்துக்கு நீங்களே பணம் கொடுப்பிங்க
சொல்லு.எனக்கு கதை கேட்பதில் ஆர்வம் கிடையாது
அனில்மல்லைய்யா ஒரு தொழிலதிபர்.தவறு.பலதொழில்களுக்கு அதிபர்.சமீபத்தில் ஆரம்பித்த சிவில் விமான சர்வீஸ் மட்டும் தள்ளடிக் கொண்டிருக்கிறது.காரணம் புரியவில்லை.ஒபாமா என்றார்கள்.லெஹ்மான் என்றார்கள்.உலகெங்கிலும் வர்த்தகச் சரிவூ,ஜிடிபி இறக்கம் என்றார்கள்.யாரும் சரியான காரணத்தைச் சொல்லவில்லை.சொல்பவர்களுக்கு தன் ராஜ்ஜியத்தில் பாதியை தந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.
இவள் என்ன சொல்லப் போகிறாள் புதிதாக என்ற அலட்சியத்துடன் இருந்தார்.
ஸாரி.கொஞ்சம் களைப்பா இருக்கு.என் ஸ்லிம்மான உடம்பையூம் உயரத்தையூம் பார்த்தாலே தெரியவில்லையா.நான் ஒரு முன்னாள் ஏர்ஹோஸ்டஸ்"
"நான் பொதுவாக பெண்களின் உயரத்தைப் பார்ப்பது கிடையாது"என்றார் அனில்.
"பின்னே"
"தைரியமாக உன் உடலில் ஆங்காங்கே அபாய அறிவிப்பு பலகைகளை வைக்கலாம்"
"பார்டன்"
"ஆபத்தான வளைவூகள் அதிகம் இருக்கின்றன.ஏன் ஏர்ஹோஸ்டஸ் வேலையை விட்டு விட்டாய்.எல்லாரும் உன் உடலையே அதிகம் பார்க்கிறார்கள் என்பதாலா"
"அதில் எனக்கு பெருமைதான்.ஒரு பந்தயம்.ஒரே மைக்ரோ செகன்ட்டில் உங்களை என் முன்னால் மண்டியிட வைக்கட்டுமா.ஒரே ஒரு தடவை என்று உங்களை என்னிடம் கெஞ்ச வைக்கட்டுமா"
"ஹ.நான் நிறைய பார்த்தவன்.என் கிரிக்கெட் டீம் ஐபிஎல் விளையாடும்போது பார்த்திருப்பாயே.நானே ஒரு கிருஷ்ணபரமாத்மா போல வருவேன்"
"ஆனால் நான் வேறு மாதிரி"
"உனக்கு என்ன வேண்டும்.சொல்.அதிகம் பேசாதே."
"எனக்கு ரெஸ்ட் எடுக்கனும்.உங்க அவூட் ஹவூஸ்ல இடம் கிடைக்குமா.ஒரு துhக்கம் போடனும்
ஆல்ரைட்.என் பர்சனல் ஹவூஸ் இருக்கு.நீச்சல்குளத்தோட.அங்க நீ ரெஸ்ட் எடுக்கலாம்.இதில ஏதும் ஜேம்ஸ்ஹாட்லிசேஸ்தனம் கிடையாதே.என் பிஸ்டல் எப்போதும் பசியோட ஜர்கின் பாக்கெட்ல இருக்கு
சேசே.ஐயாம்  என்  இன்னொசன்ட் கர்ள்என்றாள்.
 அவரது பர்சனல் ஹவூசிற்குள் கார் மிதந்தது.உள்ளே வந்ததும் லேசாய கண்சிமிட்டினாள்.அடுத்த அதைமணிநேரத்திற்குள் தன்னை இவள் ஓடிவந்து முத்தமிட்டு  ஏதும் செய்து விடுவாளோ என்று நினைத்தரர்.
 விலகினாள்.
 அரைமணிநேரம் கழித்து என்னை எழுப்பலாம்.அதுவரைக்கும் துhங்கப்போகிறேன் என்ற கதவை சார்த்திக் கொண்டாள்.அனில்மல்லைய்யா தனது அறைக்குப் போய் லாப்டாப்பில் முகத்தைப் பதித்தார்.அவரது நிறுவனங்களில் விற்றுவரவூ புள்ளி விபரம் வரைபடத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
 அரைமணிநேரமானது.
 எழுந்தார்.
 அவளது அறைக்குப் போனபோது அவள் இல்லை.பாத்ரூமில் இருக்கிறாளோ என்று பார்த்தார்.எங்கும் இல்லை.அவள் பெயர் என்ன.சே.யாரவள்.எங்கு போயிருப்பாள்.நம்முடைய இடத்திலிருந்து யாரும் வெளியே போக முடியாதே.வெளியே மின்னணு வேலி இருக்கிறதே.
 யோசித்தார்.
  எங்கு தேடியூம் அவள் கிடைக்கவில்லை.
 தன் அறைக்கு வந்து அமர்ந்து கொண்டார்.லாப்டாப்பில் யாரோ ஒரு பெண் சாட்டிங்கில் வரயா என்றாள்.இது போன்ற வெப்சைட்டுகள் அதிகரித்து விட்டன.இதைப் பற்றி புகார் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே பின்னால் இருந்து தன்னை யாரோ பார்ப்பது போலத் தெரிய லேசாக திரும்பிய அனில்மல்லைய்யா லேசாக திகைத்துப் போனார்.
 அவருக்குப் பின்னால் நுரைமெத்தை சோபாவில் அவள் உட்கார்ந்திருந்தாள்.அதே பெண்தான்.வேறு உடைகள் அணிந்திருந்தாள்.உடைகள் அணிந்திருந்தாள் என்ற வாக்கியம் தவறு.உடைகளை லேசாக உடலில் மேய விட்டிருந்தாள்.மார்பின் ஒரு பக்கத்தை அலட்சியப்படுத்தியிருந்தாள்.நம்மூர் பெண்கள் போல லிப்ஸ்டிக்கை பட்டையாகத் தீற்றாமல் மெல்லியதாக ஷேடு கொடுத்திருந்ததில் உடனடியாக முத்தமிட வேண்டுமென்ற ஆவேசத்தை ஏற்படுத்துபவளாக இருந்தாள்.இரு கால்களையூம் விரித்து அவள் அமர்ந்திருந்த விதத்தில் சற்றே இளவயது ஷாரன்ஸ்டோனையூம் ஏஞ்சலினா ஜூலியையூம் கலந்து க்ளோன் செய்து வைத்த மாதிரி ஹார்மோன்களை அதிர வைத்தாள்.
ஹாய் மிஸ்டர் அனில் சார்.நான்தான்.வந்துட்டேன்
வந்துட்டியா.அப்படியானால் எங்கே போயிருந்தாய்
எங்கேயிருந்து வந்தேனோ.அங்கே போயிருந்தேன்
மாடர்ன் சாமியாரினி போல பேசாதே.தேவையில்லாமல் உடையணிவதில் செக்ஸ்அப்பீலை காட்டாதே.நான் நிறைய பார்த்தவன்
நான் உங்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு உடனே வந்திருக்கிறேன் என்பது ஆச்சர்யமாக இல்லையா.எங்கே சென்று விட்டு வந்திருக்கிறேன் தெரியூமா.நியூயார்க் நகருக்கு சென்று விட்டு பெங்களுருவிற்கு வந்திருக்கிறேன்.நம்ப முடிகிறதா.நவீன ஏர்லைன்ஸ் தாதாவேஎன்றாள்.
என்ன என்ன சொல்கிறாய்.இங்கேயே எங்கோ ஒளிந்து கொண்டிருந்து விட்டு காமடி ஏதும் செய்கிறாயா.என் நேரத்தை வீணாக்காதே.போ
உங்களது நேரத்தின் மதிப்பு எங்களுக்கும் தெரியூம் மிஸ்டர் அனில்மல்லைய்யாஎன்ற குரல் கேட்டது.பென்கிங்ஸ்லி சாயலில் ஒரு மொட்டைத்தலை மனிதர் உற்பத்தியாகியிருந்தார்.
நீ..நீங்கள் யார்.இது ஏதாவது மாஜிக் வேலையா.நான் ஏதாவது ஜகன்மோகினி படத்தில் இருக்கிறேனா.அடுத்து நமீதா கிமீதா யாராவது வருவார்களா. எனக்கு சினரியோ புரியவில்லையேஎன்றார் அனில்மல்லைய்யா.
நான் நிகோலஸ் விட்மன்.ஒரு விஞ்ஞானி.உங்களிடம் வியாபாரம் பேசலாம் என்று வந்திருக்கிறௌம்.இது என் உதவியாளினி யாமினி.டெலிபோர்ட்டிங் தெரியூமில்லையா உங்களுக்குஎன்றார்.
டெலிபோர்ட்டிங்?”என்றார் அனில்.
ஆமாம்.டிரான்ஸ்போர்ட்டிங் என்றால் ஒரு பொருளை அப்படியே இன்னொரு இடத்திற்கு நகர்த்துவது.டெலிபோர்ட்டிங் என்றால் அதே பொருளை இன்னொரு தொலைதுhர இடத்திற்கு கண்ணுக்குத் தெரியாமல் மாலிக்யூல் மாலிக்யூலாக கடத்துவது.இதையூம் தாண்டி நாங்கள் ஆய்வூ செய்தோம்.அதில் கிடைத்த புதிய முயற்சிதான் எச்.மெயில்
எச்.மெயில்?”
ஆமாம்.இமெயில் தெரியூமில்லையா.மின்னணு கடுதாசி.அதை சடுதியில் கணினி வாயிலாக அனுப்புவது போல பொருட்களை மனிதர்களை பிரித்து மோடம் வாயிலாக கணினி உதவி கொண்டு அனுப்பி விடுகிறௌம்.இந்த முறையில் மனிதர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய ஆரம்பித்து விட்டால் உலகிலுள்ள விமான சேவை நிறுவனங்களில் கதி என்ன ஆவூம்.அதனால் நீங்கள் எனது டெக்னாலஜியை வாங்கிக் கொண்டு முடக்கிப் போட விரும்புவீர்கள் என்று நினைத்தோம்
இதை நீயே அரசாங்கதிற்கு விற்று விடலாமே நிகோலஸ்
முதலில் யாரும் நம்ப மாட்டார்கள்.நான் இதை நிருபிப்பதற்கு முன்னால் மற்ற ஏர்லைன்ஸ்காரர்கள் என்னை கொன்று விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்
ஓ.இமெயில் போல உயிருடன் பயணமா.என்று யோசித்தார் அனில்.
அப்படியானால் எஸ்எம்எஸ் போல வசதிகள் உண்டா இதில்
கரெக்ட்டாக யூகிக்கிறீர்கள் அனில்.எஸ்எம்எஸ் போன்ற வசதி இதில் உண்டு.குறும்பயணம் அல்லது குறும்சுகம் என்று நாங்கள் குறிப்பிடுகிறௌம்.உங்களுக்குப் பிடித்த பெண் வேறு ஊரில் இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.இந்த எஸ்எம்எஸ் போன்ற வசதியை நீங்கள் பயன்படுத்தி அவளது உதடுகளை மட்டும் வரழைத்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே முத்தமிட்டுக்கொள்ளலாம்.
நான் நம்புவதாக இல்லை
நீங்களே பயணம் செய்து பாருங்கள்.ஒரு கோடி அமரிக்கன் டாலருக்கு விற்க விரும்புகிறேன்.சல்லிசான விலை
 அந்த கருவி கையடக்கமாக இருந்தது.ஒரு பென்டிரைவ் தனியாகப் பொருத்தப் பட்டிருந்தது.சட்டென்று துப்பாக்கி எடுத்து நிகோலஸை சுட்டார் அனில்மல்லைய்யா.செத்து விழுந்தான் நிகோலஸ்.
 திகைத்த யாமினியை அழைத்துக் கொண்டு-
இயக்கிக்காட்டு இந்த கருவியை.நாம் இப்போது ஜெர்மனி போக வேண்டும்என்றார்.
 இயக்கினாள்.
  அடுத்த நிமிடம் அவர்கள் ஃப்ராங்பர்ட்டில் இருந்தார்கள்.அனில்மல்லைய்யா ஆச்சர்யமானார்.நிசமாகவே இது ஒரு அற்புத கண்டுபிடிப்புதான்.இதை வைத்து நாமே மற்ற ஏர்லைன்ஸ்காரர்களிடம் பணத்தை கறந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே அவர் அருகில் வந்து ஃபர்ப்யூம் விளம்பரப் பெண் மாதிரி இடுப்பை கிரைண்டர் போல ஆட்டினாள்.கண்களை மேலும் கீழுமாக சுழற்றினாள். அவரது கழுத்தில் வாய் வைத்து இரத்தத்தை ஆவேசம் வந்த மாதிரி உறிஞ்ச ஆரம்பித்தாள் யாமினி.
ஏய்.என்னசெய்கிறாய்
தெரியலை.உன்னை கொல்லனும்போல இருக்கு.மைகாட்என்றாள்.
என்ன சொல்லித் தொலை சனியனே
ஹாக்கர்ஸ்என்றாள்.
என்ன?”
மின்னஞ்சல் மாதிரிதானே நாம் பயணித்தோம்.அப்போது எனக்குள் ஏதோ ஒரு வைரஸ் ப்ரோக்ராம் புகுந்து கொண்டதில் என் மனிதஇயல்பு கொஞ்சம் மிருகத்தனமாகி விட்டது.உன்னை கொல்ல வேண்டும் போலிருக்கிறது.இரு கைகளையூம் உன் கழுத்தில் வைத்து ஓசை வர நீ கத்தக் கத்த உன்னை கொ..ல்..ல..வேண்டும்
அனில்மல்லைய்யா இறந்து கொண்டிருந்தார் என்றுதான் எழுதி இந்த கதையை முடிக்க வேண்டும்.ஆனால் அனில்மல்லைய்யா செத்துப் போகவில்லை.நன்றாக உறங்கியவர் போல எழுந்தார்.சோம்பல் முறித்துக் கொண்டார்.
அவள் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
"நீங்கள் சாகவில்லையா.."
"இல்லை.எனக்குள் புதிதாக என்னவோ செய்கிறது.நானும் உன்னைப் போலாகி விட்டேன் போலிருக்கிறது"
"புரியவில்லை.."
"பிரான்சிஸ்போர்டு கப்போலா படத்திலெல்லாம் வருமே.அது போல ட்ரக்யூலா போல மாறிவிட்டோம் போலிருக்கிறது."
"என்ன சொல்கிறீர்கள் அனில்"
"தாகமாக இருக்கிறது"
"தாகமா?"
"ஆமாம்.உடனே சென்னை திரும்ப வேண்டும்.என் விமான கம்பெனி சார்பில் அழகிப்போட்டி நடத்தப் போகிறேன்.வெற்றி பெறும் சூப்பர் பெண்ணை என்னுடன் எச் மெயில் வாயிலாக லவாஸாவிற்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.அங்கே அவள் கழுத்தில் பற்களைப் பதித்து இரத்தத்தை உறிஞ்சப் போகிறேன்.."
அனில்மல்லையாவின் கம்பெனி நடத்திய அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த கல்லுரரி மாணவி ஜெஸிகா வெற்றி பெற அனில்மல்லையா கை குலுக்க ஆரம்பித்தார்...


                                                    ------------------------------
Previous
Next Post »